எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 18, 2013

ஓவியக் கவிதை – 1 – திரு இ.சே. இராமன்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். ஒரு சில கவிதைகள் இப்போதைக்கு வந்திருக்கின்றன.  அவற்றை எனது பக்கத்தில் தொடர்ந்து வெளியிட எண்ணம். இந்த கவிதை வரிசையில் முதல் கவிதையாக இன்றைக்கு ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு இ.சே. இராமன் அவர்களின் ஒரு கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு இராமன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

கணக்காயன் எனும் புனைப்பெயரில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு இ.சே. இராமன் அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சென்னையில் வசித்து வரும் இவரை நான் முதன் முதலில் சந்தித்தது தில்லியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவில். அவர் வலைப்பூ ஆரம்பித்த கதை பற்றி எனது பக்கத்தில் முன்பே எழுதி இருக்கிறேன். அது - அண்மையில் விரிந்த அருமையான வலைப்பூ.  

கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

பூமணக்கும்                   நற்சோலை,                 உண்கனியீன்    நீள்மரங்கள்,
தூநிழல்சேர்                  மண்டபத்தின்,             சூழலண்மை      நல்லிருக்கை,
மூதன்பின்                    நாயகனின்,                  முன்னமர்ந்த     காரிகையாள்,
ஊட்டமிகு                     கார்குழலில்,                துய்வெண்மை  கந்தமலர்,
சூடிநிற்கும்                  நேரிழையாள்,               உள்ளபடி             நாற்குணமும்,
துய்யதுவாய்க்          கைவளையும்,               காற்சிலம்பும்    நன்கமைந்த,
நுண்ணியநல்              குங்குமத்தாள்,          கச்சீர்க்கும்            பின்னழகால்,
முன்சரியும்              நற்சேலை,             நல்லுவப்பால்              நேர் ஈர்க்கும்,
கார்வண்டும்           தேனீயும் ,                 பூமதுவை                      ஏற்பதனை,
 அன்னவளைக்    கொட்டிடுமோ?  “   என்றவந்தான்              ஓட்டுவதை,
தந்துள்ளீர்               சித்திரமாய் !             ஓவியப்பா                      ஏற்பீரே!

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான முதற்கவிதை இது. கவிதை படைத்த திரு இ.சே. இராமன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

பின் குறிப்பு: இந்த புதன் கிழமை ரசித்த குறும்படம் வெளியிட முடியவில்லை. நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்ததால் வலையில் அதிகம் உலவ முடியவில்லை!

38 comments:

 1. ஓவியத்திற்கு இணையான அற்புதக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும்
  கணக்காயருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. நன்று. முதல் கவிதையை வழங்கிய தமிழாசிரியருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. இவ்வளவு அற்புதமான கவிதைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 5. அருமையான கவிதை ..பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. கணக்காயர் என்றவொரு கவியப்பா!
  தந்ததொரு நல்ல ஓவியப்பா!
  ஓவியப்பா மட்டுமல்ல, அது காவியப்பா!
  கணக்காயர் சேவை தமிழுக்குத் தேவையப்பா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 8. சுதா த்வாரகாநாதன், புது தில்லிDecember 18, 2013 at 10:42 AM

  ஆரம்ப கவிதையே அமர்க்களமாக உள்ளது. தமிழாசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   Delete
 9. transparent backgroundல் கவிதையை படிக்க சிரமமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   மாற்றுகிறேன்.....

   Delete
 10. அருமை... திரு இ.சே. இராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 12. மிக மிக அருமை!

  அற்புதமான வர்ணிப்பும் அழகான சொற்கட்டு
  இதமான வர்ணனையுடன் இசைத்த கவிப்பா
  உளம் நிறைத்தது...

  ஐயா திரு இ.சே. இராமன் அவர்களுக்கும்
  உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. Oviyaththirkup poruththamana kavidhai. Thamizhasiriyarukku vazhththukkal. Mudhal kavidhaye amarkkalam. Matra kavidhaigalai avaludan yedhirparkkirom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 15. அற்புதமான கவிதையை வடித்த ஆசிரியப் பெருந்தகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
  மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 16. கவிதை அருமை ! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 17. கவிதை நன்றாக இருக்கிறது.
  தமிழாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 18. என்னுடைய ஓவியக்கவிதையை தங்களின் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு நன்றி! கவிதையை இரசித்து கருத்துரையளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....

   உங்கள் கவிதையை எனது பக்கத்தில் பகிர்ந்தது எனக்கும் மகிழ்ச்சி.

   Delete
 19. கவிதை அருமை...
  பகிர்வுக்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....