இந்த
மாதத்தின் ஆரம்பத்தில் “தலைநகரிலிருந்து” தொடரின் பகுதியாக “கோலங்கள்” எனும் தலைப்பில் எனது இல்லத்தின் அருகே இருக்கும் திருமலா திருப்பதி
தேவஸ்தானத்தின் புது தில்லி கோவிலில் இங்கிருக்கும் தமிழ் நண்பர்கள் வாசலில்
போடும் கோலங்கள் பற்றி பகிர்ந்திருந்தேன்.
இந்த ஞாயிறில் இதே இடத்தில் போட்ட இன்னும் சில கோலங்கள் உங்கள்
பார்வைக்கு.......
அச்சு கொண்டு போடப்பட்ட மயில்
இப்போதெல்லாம் அடுக்கு மாடி வீடுகள் முன் போடும்
கோலங்களுக்கு சில கோலத்தட்டுகள் வந்து விட்டன. சல்லடை போல இருக்கும் அதில்
கோலங்களின் வடிவங்கள் இருக்க, அதன் மேல் கோல மாவினை போட்டு பரப்பினால் அழகிய கோலம்
ரெடி! எத்தனை சுலபம் எனச் சொல்ல வைத்துவிட்டார்கள். ஆனாலும் புள்ளி வைத்து கோலம் போடுவது சுலபம்
இல்லை......
”கோலங்கள் என்றதும்
சும்மா ஏதோ நாலு புள்ளி வைத்து இப்படி ஒரு கோடு அப்படி ஒரு கோடு என சாதாரண விஷயம்
தானே – அதில் என்ன பெரியதாய் இருக்கிறது” என மிகச் சுலபமாய் நினைத்து விடாதீர்கள் அருமை
நண்பர்களே – இங்கே தந்திருக்கும் சில கோலங்கள் போட எவ்வளவு நேரம் ஆனது என்பது
தெரிந்தால் உங்கள் நினைவு மாறும்! கோலத்தினால் பல நன்மைகளும் இருக்கின்றனவே.
வீடு/கோவில்களில் போடப்படும் கோலங்கள், ரங்கோலி ஆகியவை
நமது சிந்தனையைத் தூண்டி, கற்பனா சக்தியை வெளிக்கொணர்கிறது என்று சொன்னால் அது
மிகையாகாது. அது மட்டுமா, குனிந்து
நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு சிறப்பான உடற்பயிற்சியும் ஆகிறதே – அதுவும் இப்போதைய
இயந்திரமயமான வாழ்க்கையில் இது போல ஒரு வாய்ப்பு இருந்தால் நல்லது தானே. வெட்ட வெளியில் நின்று பிராண வாயுவினை
சுவாஸிப்பதால் உண்டாகும் நன்மையும் நமக்குக் கிடைக்கிறதே.
ஆதலினால் கோலம் போடுவீர்!
வண்ணம் அதிகம் போடாத படிக்கோலம்......
வாழ்க்கையைப் போலவே இதிலும் எத்தனை நெளிவு
சுளிவுகள்.....
வண்ணம் கொண்ட வெண்ணிலவே.....
குடைக்குள் மழை போல விளக்கினுள் தாமரை!
உங்கள் வாழ்வும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும்......
மாக்கோலம்....
ஆண்டவனுக்கு அளித்தட்ட வண்ணமயமான கழுத்தணி..... வைரங்கள் மின்னும் அணிகளை விட இந்த கழுத்தணி தான்
மிகவும் பிடித்ததாம்......
விஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்றாகப் போற்றப்படும்
சங்கு இங்கேயும்......
அலங்கார விளக்குகள்....
சக்ராயுதம் எனவும் நினைக்கலாம்!
படிக்கோலம்
வண்ண மலர்கள்......
என்ன நண்பர்களே, இந்த வாரம் வெளியிட்ட கோலங்களின்
புகைப்படங்களை ரசித்தீர்களா? இந்தக் கோலங்களில் சில எனது முகப்புத்தகத்தில் ஏற்கனவே
வெளியிட்ட படங்கள் தான் – முகநூலில் எனைத் தொடராத மற்ற வலைப்பதிவர்களின்
பார்வைக்கு இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச்
சந்திக்கிறேன்......
மீண்டும் சந்திப்போம்......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பதிலளிநீக்கு//வீடு/கோவில்களில் போடப்படும் கோலங்கள், ரங்கோலி ஆகியவை நமது சிந்தனையைத் தூண்டி, கற்பனா சக்தியை வெளிக்கொணர்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அது மட்டுமா, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு சிறப்பான உடற்பயிற்சியும் ஆகிறதே.//
அதுமட்டுமல்ல. அந்த காலத்தில் கோலத்தை அரிசி மாவினால்தான் போடுவார்கள். அது எறும்பு போன்ற ஜீவராசிகள் உண்டு வாழ்வதற்காக. தற்போது அரிசி மாவினால் யார் கோலம் போடுகிறார்கள். எல்லாமே கடையில் கிடைக்கும் (கற்களை அரைத்த) பொடிகளையும் வண்ணப் பொடிகளையும் தானே உபயோகிக்கிறார்கள்.
கோலங்கள் படங்கள் அருமை. வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா......
நீக்குஇங்கே அரிசி மாவினால் தான் கோலம் போடுகிறார்கள். கலர் பொடி ரங்கோலி போடும் போது தவிர்க்க முடிவதில்லை.
அருமையான மார்கழி கோலங்கள் .
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குவாசலை அழகு செய்த கோலங்களை
பதிலளிநீக்குஅருமையாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குseason டாபிக் .கோலங்கள் ஒவ்வொண்ணும் கண்ணுல ஒத்திக்கலாம் .
பதிலளிநீக்குகண்ணை அகற்ற முடியல .அட்டகாசம் சகோ
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குஎல்லாக் கோலங்களுமே அழகுங்க. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி தரையில் போடப்பட்ட இவ்வளவு கோலங்களையும் பார்ப்பது சந்தோஷமா இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குஅழகான அற்புதமான கோலங்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅழகான கோலங்களைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குமாவுக் கோலம் போய் ,பொடிக் கோலம் போய் ,டை கோலம் போய் ,இப்போ ஸ்டிக்கர் கோலம் ..எவ்வளவு மாற்றம்?கோலமிட்ட கைகளுக்கு பாராட்டுக்கள் !
பதிலளிநீக்கு+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குகோலம்லாம் அருமையா இருக்கு. பொங்கல் போது போட ரெண்டுக் கோலம் சுட்டுக்கிட்டேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....
நீக்குரொம்ப அழகா இருக்கு எல்லா கோலமும்.... அசாத்த்த்திய பொறுமையும் பயிற்சியும் பளிச்சிடுகிறது சகோ... பாராட்டுக்கள்... கோலமிட்டவர்களுக்கும் பதிவிட்ட தங்களுக்கும்.
பதிலளிநீக்குஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குபோட்டாலும் போடாட்டாலும் எல்லாத்தயும் சுட்டாச்சு:)
பதிலளிநீக்கு:))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நெக்லஸ் பிரமாதம்!
பதிலளிநீக்குமுகப்புத்தகத்தில் பகிர்ந்த போதும் பலருக்கு பிடித்த கோலம் இது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
கோலங்கள் அருமை.
பதிலளிநீக்குதில்லியில் பேரொளி மாத இதழ் அறிமுகமாகியுள்ளது
வாங்கிப் படித்து வளர்த்து வாழ்த்துங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு பிச்சையா அவர்களே.
நீக்குதிருப்பாவை பாசுர தமிழ் சங்க பா மாலை திருவிழா
பதிலளிநீக்கு15ம் நாள் விழா வாசலை தாங்கள் வரைந்த கோலம்
அலங்கரிக்கும்.
வருக தம்பதி சமேதராக
Monday morning 7 a.m.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
நீக்குபடிக் கோலத்தில் வட்டம்? திறமையான கைகள்.
பதிலளிநீக்குவண்ணக் கோலங்களைவிட படிக் கோலமும் மாக்கோலமும் அழகு.
படிக்கோலத்திற்கென்றே ஒரு தனி அழகு உண்டு தான்...... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
TF
பதிலளிநீக்கு:)
நீக்குநன்றி ஸ்ரீராம்.
கோலங்கள் அனைத்தும் அருமை. ரஸித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஉள்ளத்தின் கோலம் உகந்ததாய் ஆக்கிட
பதிலளிநீக்குவெள்ளைமாக் கோலமதை வேண்டு!
எப்படிச் சொல்வது இங்கு நீங்கள் தந்துள்ள கோலங்களின் அழகினை...
கொள்ளை கொள்கிறது மனத்தினை!...
உண்மைதான் சகோதரரே! கோலங்கள் போடுபவருக்கும் பார்ப்பவர்க்கும்
மனதிற்கு நல்ல புத்துணர்ச்சியை தரவல்லவை!
மிக மிக அருமை!
வழமைபோல் சிறந்த படப்பதிவால் எம் சிந்தையைக் கவர்ந்தீர்கள்!
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்கு//கோலங்கள் போடுபவருக்கும் பார்ப்பவர்க்கும் மனதிற்கு நல்ல புத்துணர்ச்சியை தரவல்லவை!//
உண்மை.
மிக மிக அழகானக் கோலங்கள்! வண்ணங்கள் அதிகம் கலக்காத படிக்கோலங்களும், நெக்லஸ் கோலமும் ரொம்பவே அழகு!! தமிழ் நாட்டிலும் பெண்கள் தூள் கிளப்புகின்றார்கள்!! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.
நீக்குஅழகான கோலங்களின் பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குகண்ணைப் பறிக்கும் கோலங்கள் அற்புதம் அதைப் போட்டோ எடுத்துப் போட்டது கண்ணிற்கு விருந்து . நன்றி பகிர்விற்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅழகழகான கோலங்களும் அதற்கேற்ற உங்கள் தலைப்புகளும்
பதிலளிநீக்குஎங்களுக்கெல்லாம் ஓர் அற்புத விருந்து. சிறப்பாக கோலம்
வரைந்த வளைக்கரங்களுக்கும் அதைப் படமாக்கிப் பிரசுரித்த
வலைக்கரங்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குமார்கழி மாத கோலங்களை பார்த்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது, பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குகோலங்கள் அருமை!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்குகண்கொள்ளாக் கோலக்காட்சிகள்..அருமை..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கோலங்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குமார்கழி என்றாலே மனதில் தோன்றுவது கோலங்களும், பனியும், பக்தியும் தான். இவை அனைத்தையும் ஒருசேர தந்தது உங்களது பதிவின் கோலங்கள்....வாசல் அடைக்கும் வண்ண கோலங்களும் கண்ணை பறிக்கும் மாக் கோலங்களும் மனதிற்கு ரம்யம் ஊட்டின... சிறப்பாக இருந்தது தங்கள் பதிவின் பகிர்வு... அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌரி ஹரிஹரன் ஜி!
நீக்குதங்களது முதல் வருகை/முதல் கருத்துரை - மிக்க மகிழ்ச்சி....
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
த.ம 11வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.
நீக்குபொறுமையையும் உழைப்பையும் பாராட்டத்தான் வேண்டும்.
பதிலளிநீக்குமுதுகுவலி வந்திருக்குமோ நிறைய பேருக்கு?
சில கோலங்கள் போட ரொம்பவே நேரம் எடுத்தது - குறிப்பாக கழுத்தணி - மூன்று மணி நேரங்கள் ஆனது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
தொடக்கத்தில் வரும் மயில் அட்டகாசம். 3டி தாக்கம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....
நீக்குஇது போன்ற சிறிய கோலங்களுக்கு அச்சு விற்கிறது.....
Vovoru kolaththayum parththupparththu rasiththen. Azhagana kolangalai veliyittamaikku parattukkal.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குகோலங்கள் அருமை அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குகோலங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.
நீக்குகோலங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குத.ம.12
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குமார்கழி என்றாலே கோலமும் பூசணிப்பூ தான் நினைவுக்கு வருகிறது.பெண்கள் பள்ளிகளில் கோலப்படங்கள் வரைந்து பழகுவது இதற்கு தானே என்று எண்ண தோன்றுகிறது . அருமை !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.
நீக்குஅணி அணியாய் கோலங்கள். அதிலும் அந்த கழுத்தணி கோலம் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குAda nalla Kai vannangal..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குமிக அழகான கோலங்கள். அவற்றை அற்புதமாகப் படமாக்கியுள்ளீர்கள். வாட்டர் மார்க் சிறிய அளவில் பதிந்திருப்பது நன்றாக உள்ளது. ஆலோசனையை செயல்படுத்தியிருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. தெரிந்த அளவு செய்திருக்கிறேன்... :)
நீக்குஇதில் நான் கருத்துச் சொல்லவில்லை. அழகான கோலங்கள், மிகுந்த உழைப்புடன் போடப்பட்டிருக்கின்றன. இப்போதெல்லாம் இப்படிப் போடுபவர்கள் யாரும் இல்லை. கோயில்களில் கூட இப்போப் பெயின்டிங் செய்து விடுகின்றனர். :( ஒரு காலத்தில் மார்கழி மாதம் காலை நான்கு மணிக்கே எழுந்து கோலம் போட்ட நினைவுகள் வருகின்றன.
பதிலளிநீக்குதலைநகர் தில்லி கோவிலிலும் பெயிண்டிங் கோலம் - அதனால் கோலம் போடவில்லை இந்த வருடம் - போடுவதற்கு இங்கே மக்கள் தயாராக இருந்தாலும் டி.டி.டி. நிர்வாகம் பெயிண்டிங் கோலம் போட்டு விட்டது! என்ன சொல்ல.
நீக்குஇன்றைய பதிவின் சுட்டியிலிருந்து இங்கே வந்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
துளசியின் கமென்ட் வந்திருக்கு...நான் எப்படி மிஸ் செய்தேன்னு தெரியலை...
பதிலளிநீக்குகோலங்கள் ரொம்ப அழகாக இருக்கிறது. படிக்கோலங்கள் ரங்கோலி எல்லாமே அழகாக இருக்கின்றன...நீங்க சொல்லிருக்கும் இந்த வரிகளை //வீடு/கோவில்களில் போடப்படும் கோலங்கள், ரங்கோலி ஆகியவை நமது சிந்தனையைத் தூண்டி, கற்பனா சக்தியை வெளிக்கொணர்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அது மட்டுமா, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு சிறப்பான உடற்பயிற்சியும் ஆகிறதே//
அப்படியே டிட்டோ செய்கிறேன்...ஆமாம்...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்கு