திங்கள், 30 டிசம்பர், 2013

மகளின் புதிய வலைப்பூஅன்பின் நண்பர்களுக்கு,

என்னுடைய மகள் ரோஷ்ணி வரைந்த ஓவியங்களையும், கணினியில் வரைந்த ஓவியங்களையும் அவளுக்கென்று ஒரு தனி வலைப்பூ துவங்கி வெளியிட்டுக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும்.  இன்று காலை செய்த தவறு ஒன்றினால் அவளது வலைப்பூ முழுவதும் கூகிளினால் முடக்கப்பட்டு விட்டது. அதனால், என்னுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாகவே வேறொரு வலைப்பூவினை தொடங்கியிருக்கிறேன்.  அதன் முகவரி www.roshnivenkat2.blogspot.com. 

நேற்றைய வலைச்சரத்தில் திருமதி கோமதி அரசு அவர்கள் என்னுடைய மகளின் வலைப்பூவை [முடக்கப்பட்ட!] அறிமுகம் செய்து அதற்கு அவள் கணினியில் ஒரு படம் வரைவது போல ஒரு ஓவியத்தினையும் வெளியிட்டு இருந்தார்கள்.

அதற்கு நன்றி கூறும் வகையில் நேற்று ரோஷ்ணியும் ஒரு ஓவியம் வரைந்து அதை நான் இன்று காலை அவளது பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன். அதன் பிறகு தான் அப்பக்கம் முடக்கப்பட்டு விட்டது. :( அந்த ஓவியம் மீண்டும் புதிய வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன்.

புதிய வலைப்பூவின் தலைப்பு – வெளிச்சக் கீற்றுகள்
புதிய வலைப்பூவின் முகவரி – www.roshnivenkat2.blogspot.com

தங்கள் தகவலுக்காக!

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இன்று காலையில் ரோஷ்ணி அவர்களின் தளத்தில் கருத்துரை இடுவதற்கு முன் கீழே உள்ளது போல் வந்து விட்டது...

  Blog has been removed

  Sorry, the blog at roshnivenkat.blogspot.com has been removed. This address is not available for new blogs.

  இதை தங்களின் துணைவியாரின் தளத்தில் தெரிவித்து இருந்தேன்... (http://kovai2delhi.blogspot.in/2013/12/blog-post_30.html)

  நீங்கள் கணினியை Ccleaner அல்லது மற்ற software கொண்டு clean செய்யாமல் இருந்தால் :

  1. முதலில் view History

  2. Search "http://roshnivenkat.blogspot.in/"

  3. அனைத்து பதிவுகளின் url-யை குறித்துக் வைத்துக் கொள்ளவும்... (Example : http://roshnivenkat.blogspot.in/2013/12/blog-post.html)

  4. பிறகு இன்னொரு tab-ல் cache:url (குறித்து வைத்துக் கொண்ட ஒவ்வொரு url-யையும் url எனும் இடத்தில் இடவும்... அந்தந்த பதிவு வரும்... அதை அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக word-ல் copy செய்து கொண்டு பிறகு புதிய தளத்தில் பகிரவும்...

  இனிமேல்... தங்களின் 3 தளத்திற்கும் : ஒவ்வொரு பதிவை வெளியிட்ட பின் அல்லது வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டியது :

  Settings ---> Other ---> Export Blog

  இவ்வாறு செய்தால், அந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் சேமிப்பு ஆகும்... இது போல் பிரச்சனை ஏற்படும் போது, உருவாக்கிய புதிய தளத்தில் மீண்டும் Settings ---> Other ---> Import Blog எல்லா பதிவுகளும் வந்து விடும்...!

  மேலும் சந்தேகம் இருந்தால் dindiguldhanabalan@yahoo.com

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்......

   பதிமூன்று வயதுக்குட்பட்டவர்கள் கூகிள் தளத்தில் மின்னஞ்சல் வைத்துக் கொள்ள முடியாது. நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்த போது என்னுடைய பெயரில் தான் ஆரம்பித்தேன். இன்று ஆதி இந்த மின்னஞ்சலை திறக்கும்போது வயது கேட்க, பெண்ணின் வயதை கொடுத்து விட்டார். அதனால் உடனேயே முடக்கப்பட்டு விட்டது. இதை திரும்பப் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் புதியதாக ஒரு வலைப்பூ ஆரம்பித்தேன்.

   நீக்கு
 3. "கூகிளினால் முடக்கப்பட்டு விட்டது" என்பது இதுவரை அறியாத தகவல்... எப்படி என்று உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சிறிது விரிவாக கூறவும்... அல்லது தகவல் அனுப்பவும்...(dindiguldhanabalan@yahoo.com) நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே சொன்ன பதில் பாருங்கள். தனியாக மின்னஞ்சலும் அனுப்புகிறேன்.

   நீக்கு
 4. வெளியான படத்தை ரசித்தேன் ,இதற்காக ஏன் முடக்கினார்கள் என்றுதான் புரியவில்லை .
  மகள் பதினாறு அடி பாய வாழ்த்துக்கள் !
  +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. //அப்பக்கம் முடக்கப்பட்டு விட்டது.//

  OMG... avoid making such mistakes. Also, if you share here by how or what made the 'blockage' of the blog, will be helpful to others, to be careful while editing / changing settings or page..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   சில சமயங்களில் தவறுகள் நேர்ந்து விட வாய்ப்புண்டு...... தனியாக எழுதுகிறேன்.

   நீக்கு
 6. புதிய வலைப்பூ - நல்லதொரு செய்தி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 9. புதிய வலைப்பூ கிடைத்தது மகிழ்ச்சி.
  காலை வாழ்த்தும், தமிழ்மண வாக்கும் கொடுத்தேன்.
  ம்றுமுறை வந்து பார்த்த போது வலை திறக்க வில்லை.
  ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
  உடனே ரோஷ்ணிக்கு வலத்தளம் ஆரம்பித்து கொடுத்ததுக்கு நன்றி.
  ரோஷ்ணி வரைந்த பழைய படங்கள் பார்க்க முடியாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   பழைய படங்களும் என்னிடம் இருக்கிறது. ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்.....

   நீக்கு
 10. புதிய வலைப்பூவின் வெளிச்சக் கீற்றுகள் பிரகாசிக்க வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 11. வாழ்த்துக்கள் புதிய வலைப்பூவிற்கும்,ரோஷினிக்கும்.
  நானும் இது மாதிரி தான் "ஓவியாவின் பக்கங்கள்" என்று ஒன்றை ஆரம்பித்தேன். ஆரம்பித்ததோடு சரி, அதற்கு நேரம் ஒதுக்கி, அவளுடைய ஆக்கங்களை பதியமுடியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 14. புத்தாண்டில் ரோஷ்ணியின் புதிய வலைத்தளம்
  இன்னும் கூடுதல் உயரம் தொட
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 15. மகளின் மனது என்ன பாடுபடும் என்று பெற்றோர் உடனடியாக வலைப்பூவை ஆரம்பித்துக் கொடுத்ததில் இப்போது அவருக்கு கொஞ்சம் சந்தோஷம் வந்திருக்கும். தவறு செய்வது இயல்புதானே !

  புது வலைப்பூவில் கலக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

   நீக்கு
 17. // இன்று காலை செய்த தவறு ஒன்றினால் அவளது வலைப்பூ முழுவதும் கூகிளினால் முடக்கப்பட்டு விட்டது. //

  எல்லாம் நன்மைக்கே! மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு விளக்கப் பாடமாக இருக்கும். எனக்கும் இந்த தகவல் புதிது. பயனுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 18. புது வலைதளத்தில் அசத்த வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 19. Congrats on the inaguration of a new blog (revised) in your name. May you excel in your endeavors and climb himalayan heights.Wish you all a very happy New Year 2014.

  Affly, Patti & Thatha

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்தப்பா....

   நீக்கு
 20. படம் நன்றாக இருக்கிறது , மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   நீக்கு
 21. புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்!

  தங்கள் மகள் ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்!!
  கலக்குங்கள் ரோஷினி தங்கள் படங்களால்!!!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன், கீதா.

   நீக்கு
 22. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 23. வலைப்பூ குடும்பத்தார்க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 24. புத்தாண்டில் தங்கள் மகளின் வலைப்பூவில் புத்தம் புது நறுமணமலர்கள் மலரட்டும்!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....