இந்த வார செய்தி:
பாவனம்மா, ரசியாம்மா, லதிகா மற்றும் திலகா எனும் நால்வர்
அணி பெங்களூரில் இருந்து பூனே செல்லும் வழியில் இருக்கும் திப்பரெட்டி ஆட்டோ நகர்
எனும் இடத்தில் ஒரு உணவகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உணவகத்தினை
ஆரம்பிக்க எந்த வங்கியும் கடன் கொடுக்காத நிலையில் நண்பர்களுடைய உதவி மூலம் உணவகத்தினை
ஆரம்பித்து இருக்கிறார்கள் நால்வரும்.
இன்றைக்கு நாளொன்றுக்கு 7000 ரூபாய் வரை மொத்த விற்பனை
நடக்க, இன்னும் தங்களது உணவகத்தினை விரிவு படுத்த முயற்சித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இவர்களைப் போன்றவர்கள் ரயில்களில் பிச்சை எடுப்பது
போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்க, தங்களாலும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்பதை
நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த நாலவரும் திருநங்கைகள்.
திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் என்பதால் பலர் இங்கே
உணவருந்த தயக்கம் காட்டினாலும், இவர்களது உணவின் சுவை பற்றிய தகவல் தெரிந்து
இப்போது இவர்களுக்கும், இவர்களது உணவகத்திற்கும் ஆதரவு தருகிறார்களாம்.
உணவகம் ஆரம்பித்த சில நாட்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும்
அவற்றை சமாளித்து தொடர்ந்து உணவகத்தினை நடத்தி வரும் இவர்கள், தங்களது சமூகத்தில்
மாதிரிகளாக மதிக்கப்படுவதாக பெருமையுடன் கூறுகிறார்கள். தங்களது உணவகங்களில்
தங்களைப் போன்றவர்களுக்கே வேலை கொடுத்து அவர்களையும் நல்வழிப்படுத்துவதாக
தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நல்ல மனிதர்களுடைய வாழ்க்கை முன்னேற்றப் பாதையில்
தொடர்ந்து சொல்ல வாழ்த்துவோம்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
ஒரு கணவனும் அவரது மனைவியும் காலாற நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். அப்போது தெருவில் கிடந்த கல் ஒன்றில் கணவன் இடித்துக் கொள்ள,
காலில் இருந்து ரத்தமாகக் கொட்டியது. கணவனுக்கு ரத்தம் கொட்டுகிறது என்றால் உடனே
தனது உடையிலிருந்து [சேலை/துப்பட்டா] ஒரு பகுதியைக் கிழித்து கட்டு போடுவது நம்
நாட்டு வழக்கமல்லவா? கணவனும் தன்னுடன்
வந்திருந்த மனைவியைப் பார்த்தார். அதற்கு
அந்த மனைவி சொன்ன பதில்:
..
..
..
..
..
..
..
..
துப்பட்டாவை கிழிச்சு கட்டு போடுவேன்னு நினைச்சுக் கூடப்
பார்க்காதீங்க! நான் போட்டுட்டு இருக்கறது Designer துப்பட்டா!
இந்த வார குறுஞ்செய்தி:
NEVER BLAME ANYONE IN YOUR LIFE. GOOD PEOPLE GIVE YOU
HAPPINESS. BAD PEOPLE GIVE YOU EXPERIENCE. WORST PEOPLE GIVE YOU LESSON. AND
THE BEST PEOPLE GIVE YOU MEMORIES.
இந்த வார புகைப்படம்:
இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது இரண்டு மூன்று மாதங்களுக்கு
முன்னர். தமிழகத்தில் திருச்சி அருகே
இருக்கும் ஒரு கோவிலின் கோபுரம். கோவில் பற்றிய தகவல்களும் மற்ற புகைப்படங்களும்
விரைவில் வரலாம்!
ரசித்த பாடல்:
தலைப்பில் மார்கழி திங்கள் எனப் பார்த்து மார்கழி மாதம்
பற்றி ஏதோ எழுதப் போகிறேன் என நினைத்து விட வேண்டாம். நேற்று யூவில் ஏதோ பாடல்
தேடிக் கொண்டிருக்கும் போது இந்த பாடல் பார்த்தேன். நான் ரசித்த இந்த “மார்கழித்
திங்களல்லவா” பாடல் – சங்கமம் படத்திலிருந்து உங்கள் ரசிப்பிற்கு!
ரசித்த விளம்பரம்:
இந்தியன் ரயில்வே பற்றிய விளம்பரங்கள் நீங்கள் பார்த்ததுண்டா?
இந்த விளம்பரம் பொதுவாக நமது ரயில் நிலையங்களில் நீங்கள் பார்க்கும் விஷயங்களை
அழகாய்ச் சொல்கிறது. கூடவே ஒரு அருமையான அறிவுரையும் சொல்கிறது. பாருங்களேன்.
படித்ததில் பிடித்தது!:
சுடுகின்ற நெருப்புக்கு
சூட்சுமம் தெரியாது!
விடிகின்ற பொழுதுக்கு
விரோதம் தெரியாது!
பொழிகின்ற மழைக்கு
பொறாமை தெரியாது!
இரவுக்கும் பகலுக்கும்
இனபேதம் தெரியாது!
இந்த மனிதனுக்கு மட்டும்தான்
எல்லாமே தெரிந்து தொலைக்கிறது!
வி. செயலட்சுமி.
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ
ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த
வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட்.
புது தில்லி.
எல்லாமே அருமை...
பதிலளிநீக்குமுகப்புத்தக இற்றையை வெகுவே ரசித்தேன்....:))) இப்படியல்லவா இருக்க வேண்டும்....:)))
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி!
நீக்குஅருமையான ஃப்ரூட் சாலட் ! பகிர்விற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குIndhavara fruit salad il anaiththume suvaiyaga irundhadhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குபாராட்டுக்குரிய நால்வர். கோவில் கோபுரம் அழகு. விவரங்களுக்குக் காத்திருக்கிறோம். விளம்பரம் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇந்த மனிதனுக்கு மட்டும்தான்
பதிலளிநீக்குஎல்லாமே தெரிந்து தொலைக்கிறது!
அதனால் சிரமங்கள் கூடுகிறது..!
அருமையான ஃப்ரூட் சாலட் ! பகிர்விற்குப் பாராட்டுக்கள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஅனைத்தும் அருமை... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு#துப்பட்டாவை கிழிச்சு கட்டு போடுவேன்னு நினைச்சுக் கூடப் பார்க்காதீங்க! நான் போட்டுட்டு இருக்கறது Designer துப்பட்டா!#
பதிலளிநீக்குகால் கட்டுக்கு உதவாத மனைவியுடன் 'கால் கட்டு 'போட்டவங்களைத்தான் நொந்துக்கணும்!
+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅனைத்தும் அருமை! நினைத்தாலும் இனிமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....
நீக்குஉழைக்கும் திருநங்கைகளை பாராட்டுவோம்!
பதிலளிநீக்கு//கணவனுக்கு ரத்தம் கொட்டுகிறது என்றால் உடனே தனது உடையிலிருந்து [சேலை/துப்பட்டா] ஒரு பகுதியைக் கிழித்து கட்டு போடுவது நம் நாட்டு வழக்கமல்லவா?//
அப்படியா!!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குநால்வர் அணி உணவகம் மேலும் வளர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!
நீக்குசாலட்டில் மிகவும் நல்ல விஷயம் திருநங்கைகள் உணவகம்தான், வாழ்த்துவோம் அவர்களை, ஆதரவு கரம் கொடுப்போம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குகுறும்படம் மிக அருமை. கண்ணிருந்தும் குருடர்கள் மத்தியில் இப்படியும் ஒரு நல்லவர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஎல்லாமே அருமை. திருனங்கைகளுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநாலவர் அணி முன்னேற்றப்பாதையில் முன்னேறி செல்ல வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதிடுனன்கைகள் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ரயில்வே விளம்பரம் எவ்வளவு தான் செய்தாலும், குப்பைபோடுபவர்கள் போட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்று தான் தனியுமோ எங்கும் குப்பை போடும் பழக்கம். இந்த வார செய்திகள் அனைத்தும் கலக்கல்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குசுவையுடன் இனிமையும்!! அந்த ரயில்வே விளம்பரம் னல்ல கருத்துள்ள தகவல்களைத் தந்தாலும், ந்ம் மக்கள் எப்போது திருந்துவார்கள் என்பது கேள்விக்குறிதான்!! நால்வர் அணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!. இத்துணை நல் உள்ளங்கள் வாழ்த்தும் போது அவர்கள் கண்டிப்பாக வளர்வார்கள்!!
பதிலளிநீக்குஅருமையான, சுவையான ஃப்ரூட் சாலட் விளம்பியதற்கு நன்றி!!
உங்களது முதல் வருகை துளசிதரன்...... மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் நிறைத்தது விளம்பர வீடியோவும் கோவில் கோபுரமும்.
பதிலளிநீக்குஏனையவைகளும் சளைக்கவில்லை. யாவும் சிறப்பே!
வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 9வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஃப்ரூட் சாலட் அருமை
பதிலளிநீக்குஇந்த வார முகப்புத்தக இற்றை மிக அருமை.:குறும்படம் மிக மிக அருமை.
வாழ்த்துக்கள்.
vijay / Delhi
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குஎல்லாத் திருநங்கைகளும் இது போல ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று வழிகாட்டியுள்ள இந்த திருநங்கைகளுக்கு சிறப்புப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅடுத்து மிகவும் கவர்ந்தது கடைசியில் இருக்கும் கவிதை! அருமை!
கோவில் பற்றிய பதிவினைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....
நீக்குஅனைத்தும் அருமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.
நீக்குசிறப்பான பகிர்வு எனது விருப்பப் பாடலுடன் இன்று மலர்ந்துள்ளது .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குப்ரூட் சாலட் சுவை.... திருநங்கைகளுக்கு வாழ்த்துக்கள்... கணவனுக்கு மனைவியின் பதில் இன்றைய நிலையின் வெளிப்பாடு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குதிருநங்கைகள் அவர்கள் பிறந்த வீட்டிலேயே மதிக்கப் பட்டால் திருந்திய நங்கைகள் ஆவார்கள். நீங்கள் நிறையப் படிக்கிறீர்கள் பார்க்கிறீர்கள் பகிர்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குவாழ்க்கையில் எல்லோரும் முன்னேறலாம் என்பகற்கு அந்த திருநங்கைகள் ஒரு எடுத்துக்காட்டு. கோவில் பற்றிய தகவல்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குதாமதம் ஆகப் பார்த்தாலும் இனிமையான பழக்கலவையை உண்ட நிறைவு.. திருநங்கைகள் விவரம் மனதை தொட்டன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.....
நீக்குதிரு நங்கைகள் உணவகத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மற்றவர்கள் ஆதவளித்தால் வாழ்க்கையின் மேல் அவர்களுக்கான நம்பிக்கை கூடும். வாழ்வியலும் மாறும். குறுஞ்செய்தியும், குறும்படமும் ரசித்ததுதான். மீண்டும் ரசித்தேன். கவிதை அருமை என் முக நூலில் பகிர்ந்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்கு