வியாழன், 19 டிசம்பர், 2013

மாரீசன்.....

சென்ற வாரம் பார்த்த குறும்படம் – பேரைச் சொல்லவா?இனி இந்த வாரம் என்ன குறும்படம் பார்க்கப் போகிறோம் என்பதைப் பார்க்கலாம்!இந்த வாரம் மாரீசன் எனும் குறும்படம். இராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல உதவ மாய மானாக மாரீசன் வருவார்.  அது போல ஏதாவது இருக்கும் என நினைத்து தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். இரு நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு பெண்ணைக் காதலிப்பது பற்றி சொல்ல அவருக்கு – ‘இந்த கண்ணாடி போட்டுக்கோ, இந்த மாதிரி உடை போட்டுக்கோஎன்றெல்லாம் சொல்லி உதவி செய்கிறார்.அந்தப் பெண் வர, இவர் பெண் பின்னாலேயே செல்கிறார். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் தோல்வி. ஒரு ரோஜா கொடுக்கும் போது அதை வாங்கிக் கீழே போட்டு விட்டு, கன்னத்தில் அரைந்து விடுகிறார். அதன் பிறகு அந்த பெண்ணிற்கு அவளது அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. மறுமுனையில் ஒரு பெண் குரல் – “இன்னிக்கு நீ ஒரு கொலை நடப்பதை பார்க்கப் போகிறாய்!என்று சொல்கிறது. வந்த எண்ணிற்கு இந்த பெண் அழைக்க, அந்த அலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை.அன்று வெளியே போகும்போது அலைபேசியில் பெண் சொன்னதைப் போலவே ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறார். இரண்டாவது முறை அலைபேசியில் அதே பெண் குரல் – “இன்று உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது, உனக்கு பணம் கிடைக்கும்!என்று சொல்ல, அன்று கீழேயிருந்து ஒரு மணிபர்ஸ் பணத்துடன் கிடைக்கிறது.மூன்றாம் முறை அலைபேசியில் அழைப்பு வரும்போது அக்குரல் சொல்வது – “உன்னிடம் ஒருவன் காதலைச் சொல்வான்! அப்படிச் சொல்லி விட்டால் இரண்டு மணி நேரத்திற்குள் நீ இறந்து விடுவாய்!என்று சொல்லி அலைபேசியை வைத்து விட, அதே போல முன்னால் அரை வாங்கிய ஆண் இவள் வீட்டிற்கு வந்து ஒரு ரோஜாவைக் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார்.  இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு என்ன ஆனது, மாரீசன் எங்கே வந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்குள் மிகுந்து விட்டதா?குறும்படத்தினைப் பாருங்களேன்....


என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். குறும்படத்தினை இயக்கியவருக்கும், அதில் நடித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

34 கருத்துகள்:

 1. ஹிஹிஹி... நண்பர்கள் யாராவது பின்னூட்டத்தில் சஸ்பென்சை சொல்லாமலா இருக்கப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. டவுன்லோடு பண்ணி வைத்திருக்கிறேன். பார்த்து விட்டு என் கமென்டை சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 4. இயக்குனர் பிரபாகரனின் கிளைமாக்ஸ் சூப்பர்!
  த.ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. சிறப்பான குறும்படப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 7. பெண்ணினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளின் உச்ச நிலையை
  மிகவும் தத்துரூபமாக நடித்துக் காட்டியுள்ளனர் .இது போன்ற குறும்
  படங்களை சமூகத்திற்கு மத்தியில் பரவலாக வெளியிடப்படுவதன் மூலம்
  விழிப்புணர்வைக் கொண்டு வர முடியும் .திகிலை ஊட்டும் சிறப்பான
  நிழற் படம் ! இதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  இப் படத்தினை உருவாக்கிய அன்பு நெஞ்சங்களுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   எத்தனை பெண்கள் இப்படி ஏமாற்றப் ப்டுகிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தம் மனதுக்குள்.....

   நீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  பதிவு அருமை வாழ்த்துக்கள்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 9. வணக்கம்
  த.ம.4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. உலகத்தில் எப்படி எல்லாம் ஏமாற்று வேலை நடக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 12. படம் பார்த்தேன். படத்தின் கரு என்னைக் கவரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 13. அருமையான குறும்படம்
  ரசித்துப் பார்த்தோம்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 14. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான குறும்பட முயற்சி...
  வாழ்த்துக்கள் குழுவிற்கும்
  உங்கள் பகிர்வுக்கும்..
  மிக கச்சிதமான தலைப்பு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 15. பகிர்வு படித்தாச்சு... படம் இனிதான் பார்க்கணும்...
  எதோ சஸ்பென்ஸ் இருக்கும் போல தெரியுது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 16. நல்லதொரு விழிப்புணர்வு குறும்படம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....