எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 26, 2013

ஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம்

டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது நான்காம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

முகிலின் பக்கங்கள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திருமதி தமிழ் முகில் அவர்கள் பக்கத்தில் நிறைய கவிதைகள் இருக்கின்றன. வல்லமை இணைய இதழில் அவரது படைப்புகள் பல வெளி வந்திருக்கின்றன. தொடர்ந்து கவிதைகள் படைத்திட எனது வாழ்த்துகள்.

திருமதி தமிழ் முகில் அவர்கள் மேலே கொடுத்த ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

கார் முகிலென நங்கையவள்  குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம்  பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில்  மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி  கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!

-    திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான நான்காம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


60 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரரே !

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. சிறப்பாக இருக்கிறது கவிதை. நானும் அனுப்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரரே !

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன். ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்பி விடுங்கள்.....

   Delete
 3. அருமை
  திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா ....

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 4. நல்லதோர் வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில்.....

   Delete
 5. ஓவியத்திற்கிணையான அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா......

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. கானகத்தே பொழியும் கான மழையில்...முதல் பாடலாக 'கண்களில் வார்த்தைப் புரியாதோ 'பாடல் இருக்குமோ ?
  +1
  +

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் நண்பரே....

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது இரசனைக்கு நன்றிகள் சகோதரரே !

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 9. தமிழ் முகில் அளித்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் தோழி.

   Delete
 10. காதினிலே கானமழை! கார்மேகம் பொழிந்ததென
  கண்ணிமை குடைவிரித்துக் கவிமழையை சுவாசித்தேன்!
  கார்முகில் தந்ததுவோ? காளமேகம் தந்ததுவோ? இல்லை இது
  கவிதமிழ்முகில் நீலமேகம் தந்ததென்றார்! வாழ்க.
  ReplyDelete
  Replies
  1. ஆஹா அண்ணாச்சி... கவிதையிலேயே பின்னூட்டம். ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
  2. கவிதையின் மூலம் அழகிய வாழ்த்தொன்றை வழங்கிய சகோதரருக்கு நன்றிகள் பல.

   Delete
 11. கவிதை நல்லா இருக்கு. எல்லோருக்கும் ஒரேப் பூங்கொத்தா!? பூங்கொத்தை மாத்துங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. மாற்றிடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

   Delete
  2. ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் கருத்துரைக்கு நன்றிகள் தோழி.

   Delete
 12. அழகிய கவி வரிகள்!
  சிறப்பான கவிதை! மிக அருமை!
  தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பகிர்வினுக்கு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
  2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

   Delete
 13. ரசனையான கவிதை. வெட்கத்தில் முகம் சிவப்பதெல்லாம் கவிதையில் மட்டுமே இனி சாத்தியம்! :))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   கவிதையில் மட்டுமே சாத்தியம் ! :))) - உண்மை.

   Delete
  2. தங்களது ரசனைக்கு நன்றிகள் சகோதரரே !!!

   Delete
 14. ஓவியமும் கவிதையும் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
  2. நன்றி சகோதரரே !!!

   Delete
 15. //காதல் மொழி கிளிகள் இரண்டின்
  கானமழை நனைத்திடுமே -
  கானகத்தை காதல் மழையிலே !!!//

  அருமையான வரிகள். ;)))))

  திருமதி பி.தமிழ் முகில் நீலமேகம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
  2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!

   Delete
 16. Nalla kavidhaigal thodarndhu veliyittamaikku parattukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
  2. நல்ல கவிதையென சொல்லி ஊக்கமூட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   Delete
 17. அழகிய காதல் கவிதை. தமிழ் முகிலுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete
 18. கவிதை அருமை... வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் கவிதை ஆசிரியருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
  2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!

   Delete
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

  ReplyDelete
 20. அருமையான ஒரு காதல் கவிதை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
  2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!

   Delete
 21. கா வரிசையில் கவிதை படித்திருக்கும் திறன் பாராட்டுக்குரியது.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

   Delete
  2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....