புதன், 25 டிசம்பர், 2013

சுவரொட்டி – குறும்படம்


ஒவ்வொரு புதன் கிழமையும் குறும்படம் ஒன்றை பகிர்ந்து கொள்ளும் ஆசை அதிகரித்து விட்டது. அதற்காகவே YOUTUBE-ல் குறும்படங்களை பார்ப்பதும் அதிகரித்து விட்டது.  ஒரு சில படங்கள் மனதை மிகவும் தொட்டு விடுகிற படங்களாக இருக்கின்றன. சென்ற வார ஞாயிறில் பார்த்ததில் இரண்டு மூன்று குறும்படங்கள் மிகவும் கவர்ந்தன.  அவற்றில் ஒன்று இந்த புதன் கிழமை – மனதினைத் தொட்ட படமாக இங்கே உங்கள் ரசனைக்கு.கலைஞர் தொலைக்காட்சியில் வரும் “நாளைய இயக்குனர்நிகழ்ச்சியில் வெளிவந்து அங்கே விருது பெற்ற குறும்படம் இது என தெரிவித்து இருந்தார்கள். நிச்சயம் விருது பெறக் கூடிய கருத்தினைக் கொண்ட திரைப்படம் தான் சுவரொட்டி.  திரையரங்கில் காட்டும் படங்களுக்கான சுவரொட்டிகளை ஒட்டும் ஒருவருக்கும், பூ விற்கும் ஒரு பெண்ணிற்கும் உண்டாகும் காதல் மிக அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளது இக்குறும்படத்தில்.முதல் முதலில் ஒரு படத்திற்கான சுவரொட்டி ஒட்டப் போகும் இரவு வேளையில் அந்தப் பெண்ணையும் ஒரு இளைஞனையும் சந்திக்கிறார் கதாநாயகன். அந்த இளைஞர் பூ விற்கும் பெண்ணை தொந்தரவு செய்ய, அவரிடமிருந்து காப்பாற்றுகிறார்.  அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுவரொட்டி ஒட்டும் இளைஞருக்கு தான் காப்பாற்றிய பெண்ணின் மேல் காதல் வளர்கிறது – அதை அழகாய் “காதல் படத்தின் 25-வது நாள், 50-ஆவது நாள், 100-வது நாள் சுவரொட்டி ஒட்டிக் காண்பிக்கிறார். நூறாவது நாள் தனது காதலைச் சொல்லப் போகும்போது என்ன நடக்கிறது? படத்தினைப் பாருங்களேன்!என்னைக் கவர்ந்த இக்குறும்படம் உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த அருமையான குறும்படத்தினை இயக்கியவருக்கும், இக்குறும்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இதனை YOUTUBE-ல் இணைத்தவர்களுக்கும் நன்றி. என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த புதன் அன்று வேறு ஒரு குறும்படம் காண தயாராக இருங்கள்.மீண்டும் சந்திக்கும் வரை......நட்புடன்வெங்கட்.

புது தில்லி.30 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. அருமை. அடுத்த வார விறுவிறுப்பான தலைப்பு என்ன நண்பரே.கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 5. அருமையான படம்.
  பகிர்வுக்கு நன்றி.
  அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. இந்த குறும்படத்தை ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் கண்டு இரசித்து இருக்கிறேன். திரும்பவும் பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. இந்த படம் நான் பார்த்து இருக்கிறேன்

  அருமையான படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி

   நீக்கு
 8. பதில்கள்
  1. பார்க்கிறேன் சித்தி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. குறும்படம் மனதை நெகிழச்செய்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 10. படமும் விமரிசனமும் அருமை.
  இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 11. இப்படியெல்லாம் குறும்படம் எடுக்கவும்தான் திரையுலகில் கலக்கறாங்க புதிய இயக்குனர்கள்...கொஞ்சங்கூட தொய்வேயில்லாமல் சூப்பரா இருந்தது குறும்படம் .... தேடிப்பிடித்து பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 12. அருமையான குறும் படம். பகிர்வுக்கு நன்றி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 13. அருமையான படம்.

  அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 14. அருமையான பகிர்வு! படம் அருமை! நன்றி கலைஞர் தொலைக்காட்சியில் கண்டு ரசித்த ஒன்று!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....