எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, December 21, 2013

ஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த பகிர்வில் இரண்டாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு சேஷாத்ரி [காரஞ்சன்] அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு சேஷாத்ரி புதுவையில் வசிப்பவர்.  இந்த கவிதை அழைப்பில் முதல் கவிதையை எழுதிய திரு இ.சே. இராமன் அவர்களின் உறவினர். இதுவரை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் சில சமயங்களில் அலைபேசி மூலம் பேசியது உண்டு. சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான கவிதைகளை அவ்வப்போது தனது பக்கத்தில் வெளியிடுவார். அத்தனையும் சிறப்பான பகிர்வுகள்.  

திரு சேஷாத்ரி ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

    பொங்கிவரும் அன்புடனே
நங்கையவள் கூந்தலிலே
நறுமண மலர்ச்சரத்தை
நாயகன்தான் சூட்டிவிட

எங்கிருந்து வந்தனவோ?
இத்தனை வண்டினங்கள்!
பூவிதழில் தேனருந்த
போட்டியாய் வந்தனவோ?

வலிமைமிகு கரத்தாலே
வண்டினத்தை அவன் விரட்ட
நாணித் தலைசாய்க்கும்
நங்கையவள் கண்ணிரண்டும்
வண்டுகளாய் மாறி
வாலிபனை மொய்ப்பதென்ன?

                                                -காரஞ்சன் (சேஷ்)

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான இரண்டாம் கவிதை இது. கவிதை படைத்த திரு சேஷாத்ரி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. படத்திற்கு பொருத்தமான அருமையான கவிதை.
  திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. ரசித்தேன். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. கவிதையைப் படித்த பின்தான் வண்டினத்தை கவனித்தேன் ...நாயகன் பெயர் வண்டு முருகனாய் இருக்குமோ ?
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. Indha kavidhaiyum padaththirku poruththamaga vulladhu. Vazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 6. கவிதை சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 7. க்ண்களிரண்டும் வண்டினங்களாய் மொய்த்த ....
  அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. என்னுடைய கவிதையை தங்கள் வலைப்பூவில் அறிமுகத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! கவிதையைப் படித்து கருத்துரையிட்ட/இடப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி ஜி!

   Delete
 9. அருமையான கவிதை... காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. //நங்கையவள் கண்ணிரண்டும்
  வண்டுகளாய் மாறி
  வாலிபனை மொய்ப்பதென்ன?//

  அருமையான கற்பனை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. மிகச் சிறப்பாக இருக்கின்றது கவிதை! சகோதரருக்கு வாழ்த்துக்கள்!

  பகிர்வினுக்கு உங்களுக்கு என் நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 12. கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 13. சிறப்பான கவிதைக்கும் கவிதைப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 14. ஓவியத்திற்கேற்ற
  அற்புதமான கவிதை
  மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 16. சபாஷ். சரியான போட்டி. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 17. படத்திற்கு பொருத்தமான அருமையான கவிதை.
  திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 18. கவிதை மிக அருமை - திரு.சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  நானும் யோசிச்சுப்பார்க்கிறேன், என் மர மண்டைக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று!!!!.

  ReplyDelete
  Replies
  1. :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 19. //பூவிதழில் தேனருந்த
  போட்டியாய் வந்தனவோ?//

  அதானே!

  நன்கு ரசித்து எழுதியுள்ள கவிதை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 20. இன்னும் சில வரிகள் எழுதியிருக்கலாமோ? நன்றாக இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....