எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, December 28, 2013

ஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஐந்தாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய கவியாழி கண்ணதாசன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

கவியாழி எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திரு கவியாழி கண்ணதாசன் அவர்கள் தனது வலைப்பூவில் வாரத்திற்கு நான்கைந்து கவிதைகளையாவது வெளியிடுகிறார்.  இவரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற இரண்டாவது பதிவர் சந்திப்பில் தான் முதன் முறையாகச் சந்தித்தேன். சற்று நேரமே பேச முடிந்தாலும் மனதில் நின்றவர்! தொடர்ந்து அவரது தளத்திலும், புத்தகங்களிலும் படைப்புகள் எழுதி புகழ் அடைந்திட எனது வாழ்த்துகள்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

மார்கழிப் பூவை சூடியதால்
மங்கையே மயக்கம் வருகிறதா 
மன்னவன் என்னிடம் ஏன்
மலருக்கே  தயக்கம் வருகிறது

தேனிக்களும் வண்டுகளும்
தேனிசை ராகமாய் பாடுகிறது
மயிலும மானுமே மகிழ்ந்து 
மகிழ்ச்சியாய் இங்கு  ஓடுகிறது

நங்கையே நல்லமுதே சுவையே
நானருந்த உனக்கு  நாணமே
நாழியும் கடப்பதாய் கோபமோ
நல்விருந்து படைக்கிறேன் வா

என் அருகில் நீயும் வா
என் மடியில் சாய்ந்திடவா
நின் இதழ் எனக்குத் தா 
நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா

-          கவியாழி கண்ணதாசன்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான ஐந்தாம் கவிதை இது. கவிதை படைத்த கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

49 comments:

 1. அருமை கவியாழி கண்ணதாசன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அருமை... இனிய நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. மிக்க மகிழ்ச்சி நண்பரே .எனது கவிதைக்கும் இடம் கொடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 4. கவிதை மிகவும் அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில்

   Delete
 5. கவிதை அருமை! பூங்கொத்தை மாத்தீட்டீங்களா!? குட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   பூங்கொத்தை மாத்திட்டீங்களா! - ஆமாம்..... ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பூங்கொத்து!

   Delete
 6. மார்கழிப்பூவாய் மலர்ந்த அருமையான
  கவிதைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. வணக்கம்
  ஐயா.
  மிக அருமையாக உள்ளது கவிதைகள் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 8. கவிதை அருமை !
  அடுத்த மாதம்,படத்திற்கு ஜோக் எழுதச் சொல்வீர்கள் தானே ?
  +1

  ReplyDelete
  Replies
  1. ஜோக் எழுதச் சொல்வீர்கள் தானே? - அட அப்படி ஒரு ஐடியா இருந்தா நீங்க தான் நிறைய எழுதுவீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. கவிஞருக்கு வாழ்த்துக்கள்....
  கவிதையை பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 10. வாவ் ... ஆர்ப்பரிக்கிறது கவிதை வரிகள் .. நெஞ்சம் குளிர்கிறது ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   Delete
 11. nice kavithai ,

  nana than konjam avasara patutenooo :(((((((((((((

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   தங்கள் கவிதையும் நன்றாகவே இருக்கின்றது......

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி

   Delete
 13. மார்கழிப்பூவாய் மலர்ந்த பாடலுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. அருமையான கவிதை
  கவியாழிக்கு வாழ்த்துக்களைத்
  தெரிவியுங்கள்
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 15. அருமையாக உள்ளது கவிவரிகள்!
  கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்!

  பகிர்வினுக்கு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 16. சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க
  நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 17. இன்பம் பொங்கும் திருநாளாய்
  இதயம் மகிழும் ஒரு நாளாய்
  மலரப் போகும் புத்தாண்டில்
  மகிழ்ந்திருக்க
  என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா ....

  ReplyDelete
  Replies
  1. புத்தாண்டுக்கு முதல் வாழ்த்து.....

   மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 18. கவிதை அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே! கவியாழி அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 19. கவியாழியின் கவைதை அருமை! அவரது திறமையைக்கேட்கவும் வேண்டுமா!! படமும் அழகாக உள்ளது!
  த.ம.+

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 20. அருமையான கவிதை. கவியாழி கண்ணதாசனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 21. ஓவியம் கண்டதுமே வயசெல்லாம் குறைவாச்சு!
  கவியாழி கவிதை கண்டு சூழ்நிலையை மறந்தாச்சு!

  வாழ்த்துக்கள்.


  ReplyDelete
  Replies
  1. உங்க கவிதை படிச்சதுமே அண்ணிக்கு ஃபோன் போட்டு சொல்லியாச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 22. அருமையான கவிதை.
  கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 24. கவியாழி சார், காதல் ரசம் சொட்டுகிறது உங்கள் கவிதையில்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 25. விஷ்ணுவின் சங்கு கோலத்திற்கு எத்தனை புள்ளிகள்

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....