எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, December 7, 2013

கவிதை எழுத வாருங்கள்......கடந்த மார்ச் மாதம் என்னுடைய வலைப்பூவில் ஒரு படம் வெளியிட்டு கவிதை/கதை எழுத நண்பர்களை அழைத்தது நினைவிருக்கலாம். அதன் பின்னர் வேறு சில படங்களுக்கு கவிதை எழுதச் சொல்லி அழைக்கலாம் என நினைத்தாலும் ஏதோ சில தடங்கல்கள்...... 

இப்போது கவிஞர்களுக்கு மீண்டும் ஒரு அழைப்பு.  கீழே கொடுத்துள்ள இந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதி அனுப்பலாம். நீங்கள் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com. நீங்கள் எழுதிய கவிதைகளை அவை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன். 

 ஓவியம்: ராஜன்.....

இன்றைக்கு தேதி 07.12.2013.  வரும் 31.12.2013 வரை உங்களுக்கு நேரமிருக்கிறது. அதுவரை வரும் அனைத்து கவிதைகளும் இங்கே வெளியிடுகிறேன். கவிதை எழுத உங்களுக்கு ஒரு வாய்ப்பு.  உங்கள் கவிதையை வாசிக்க/நேசிக்க எனக்கும் மற்ற வலைப்பூ எழுதுபவர்களுக்கும் ஒரு வாய்ப்பு.

ரசித்த கவிதைகளில் சிறந்த மூன்று கவிதைகளுக்கு பரிசு தர எண்ணம் இருக்கிறது. யாரங்கே! மூன்று பொற்கிழிகளை இப்போதே தயார் செய்து வை!என்று ஆணையிட ஆசை இருந்தாலும், பொற்கிழிகள் தருவது இந்தக் கால வழக்கமில்லையே! :)

எடுங்கள் உங்கள் பேனாக்களை, எழுதுங்கள் ஒரு அருமையான கவிதையை. அல்லது நேரடியாகவே கணினியில் தட்டச்சு செய்து எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்! கவிதை மழை பொழியட்டும்!

கவிதைகளுக்கான காத்திருப்புடன்......

மீண்டும் சந்திப்போம்.  அதுவரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


57 comments:

 1. படம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. படம் முயற்சிக்கத் தூண்டுகிறது
  பொற்கிழி தயாராகட்டும்
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. பொற்கிழி தயாராகிக் கொண்டிருக்கிறது! :) நீங்கள் கவிதையை எழுதி அனுப்புங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. கலந்து கொள்பவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. விருந்து அழைப்பிற்கு மிக்க நன்றி. மூடு வந்தவுடன்
  பங்கு பெறுகிறேன் கட்டாயம். தனிமையான இனிமையான
  மோகனமான படத்தில்
  தலைவனின் அங்கலக்ஷணங்கள் தலைவியை விட
  லாவண்யமாக உள்ளது.இதைபோன்றதொரு கவின் அழைப்புகளால் மனம்
  மகிழ்ச்சியில் துள்ளி கற்பனைப் பறவை வானம் தொடுகிறது.
  உங்களின் ஊக்கமருந்திற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 5. நல்லதொரு முயற்சி. கவிஞர்கள் / கவிதாயினிகள் காட்டில் நல்ல [கவிதை] மழை பொழியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. வணக்கம
  ஐயா
  மிக அழகான படம் சிறப்பான முயற்ச்சி..வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா...
  எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்...இதோ முகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. முயற்சி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. இப்போது பதிவுகளிலெல்லாம் போட்டி காலம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 9. கவிதை மட்டும் தானா?
  சென்றமுறை போலவே இந்த முறையும் பலரும் கலந்து சிறப்பிக்கட்டும். கவிதைகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   கதை/கவிதை என்று சொன்னதால் குழப்பம் வரக் கூடாது என கவிதை மட்டும்! :)

   Delete
 10. அருமையான படம்! பங்கு கொள்ளும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

  இயலுமானால் நானும் முயல்கிறேன்!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்து, கவிதை அனுப்புங்க இளமதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete
 11. படம் அருமையா இருக்கு.
  கவிதை எழுத முயற்சிக்கலாம்...
  எழுத இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 12. Azhagana padam. Panguperappogum anaivarukkum vazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 13. அருமையான படம்!
  tha.ma 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. சிறப்பான அறிவிப்பு .பங்குபெறப் போகும் அனைத்து உள்ளங்களுக்கும்
  வாழ்த்துக்கள் .உங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 15. பொற்கிழி பரிசு இல்லியா... அப்போ தங்க மோதிரம் போட்டுரப் போறியளோ...? நானும்கூட ஏதாச்சும் ட்ரை பண்ணிப் பாக்கணும்னுல்ல தோணுது... சொககா... இது என்ன விபரீதம்?

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்யலாம் கணேஷ். தப்பில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

   Delete
 16. முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் முயற்சி செய்யுங்கள் கும்மாச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. படம் . மிக அருமை. சொக்கன் இந்த முறை, யாருடைய உதவியும் இல்லாமல்,முயற்சி பண்ணலாம் என்று எண்ணுகிறான். ஏதேனும் பிழை இருந்தால், பிழைகளை கழித்து விட்டு பொற்கிழிகளை கொடுத்தருளுங்கள். ஓ! பொற்கிழி தான் இல்லையோ!!, பரவாயில்லை, எந்த பரிசாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறான், கவிதையை தேர்ந்தெடுத்தால்!!!.

  உங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

  போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   கவிதை எழுதி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள்.....

   Delete
 18. மிக்க மகிழ்ச்சி அழகான படம் விரைவில் கவிதை அனுப்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவி நாகா...

   Delete
 19. மிக அழகான காதல் படம். ஆனால் கவிதை மட்டும் தான் என்கிறீர்களே!
  பரவாயில்லை. காதல் கவிதைகளைப் படிக்க தயாராகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 20. கட்டி அணைத்து வருவதெல்லாம்
  வெட்டிப்பேச்சு பேசுவதெல்லாம்
  எட்டி ஒரு கணம் வைத்துவிட்டு,
  சட் புட்டெனு ஒரு காதல் கவிதை

  கணினியிலே டைப் அடித்து
  காசு பணம் இல்லாது
  நேரத்துக்கு நாகராஜுக்கு
  அனுப்பிவை.

  பரிசு வந்தால்
  பார் என்னை

  வராவிடின்
  வாங்கியவனை
  வரச்சொல்

  செல்
  வெல்
  ******************************
  subbu thathaa

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 21. கவிதைஆஆஆஆஆ.... அப்புறம் சார் நல்லா இருக்கீங்களா.. டெல்லி குறில் எப்டி இருக்கு.. இப்படி ஏதாவதுன்னா எழுதலாம்.. கவிதையெல்லாம் எப்படி சார்.... :-)))))))

  ReplyDelete
 22. அடடா..... என்னை மாதிரியே உங்களுக்கும் கவிதை எழுத வராதா! :))))

  டெல்லி குளிர் சென்னை வரைக்கும் குளிருது போல - குறில்!

  ReplyDelete
 23. கவிதை எழுதிடுவேன்!. பின்னாடி வருத்தப்படக் கூடாது.

  ReplyDelete
  Replies
  1. வருத்தப்படாத வாலிபர் சங்கமிது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 25. போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 26. முயற்சி செய்கிறேன் நண்பரே! படம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 27. இனிய வணக்கம் நண்பரே ...
  எழுதத் தூண்டும் அழகான படம் பகிர்வு...
  நிச்சயமாக எழுத முயற்சிக்கிறேன்.
  பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 28. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 29. மாலை நேரம் மரத்தடி நிழலிலே
  மன்னன் அவன் கதை பேசியே
  காதல் மழை பொழிந்தானே
  வீரம் கொண்ட வேங்கையவன்
  விரல்கள் மேனிபட
  வெட்கங்கள் வேகமாய்
  பாய்ந்து வந்ததே
  கன்னியிவள் முகம் சிவக்க
  காவலனவன் கவியும் வடித்தானே
  நளினம் கொண்ட என்தேவதையே
  உன் நளினத்தில் நாணம் சேர்கையில்
  எனது விழிகள் மட்டுமின்றி
  நெஞ்சம்கூட ஏங்குதேடி
  இறுதிவரை உன்னை ரசித்திட...

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....