எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 31, 2013

திரும்பிப் பார்க்கிறேன்.......சமீபத்தில் திருப்பாவை பற்றிய ஒரு பிரசங்கம் நண்பரது வீட்டில் இருந்தது. தில்லியில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியர் திருப்பாவையின் பாசுரங்களில் பொதிந்திருந்த அர்த்தங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலான அவரது பிரசங்கத்தில் சொன்ன விஷயங்கள் நிறையவே.  அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் என்னுடைய இப்பகிர்வுக்கு பயன்படுத்த நினைத்திருக்கிறேன். 

 நன்றி: கூகிள்

கடந்த சில வாரங்களாகவே சில வலைப்பூக்களில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் இந்த வருடத்தில் தாங்கள் கடந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது, அதை தொடர் பதிவாகவும் ஆக்க முடிவு செய்து ஐந்து ஐந்து பேராய் அழைத்து இருந்தார்கள்.

முந்தைய தொடர் பதிவுகள் போல ஏனோ இத் தொடர் பதிவுக்கு அத்தனை ஆதரவு இல்லாதது போலத் தோன்றுகிறது.  தொடர்ந்து எழுதிய பதிவர்கள் மிக மிகக் குறைவே என்பது எனது எண்ணம். வலைப்பூவில் எழுதும் பலருக்கும் தொடர்ந்து எழுதும் ஆர்வம் சற்றே குறைந்து விட்டது போலத் தோன்றுகிறது.  தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சில பதிவர்கள் இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

  
நன்றி: கூகிள்

இப்படி இருக்க, நான் கடந்த இரண்டு மாதமாக, அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் தினம் ஒரு பதிவு எழுதி வந்திருக்கிறேன். இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத் தான் தோன்றுகிறது.  எழுத வேண்டிய, எழுத நினைத்திருக்கும் பதிவுகள் நிறையவே இருக்கின்றன, என்றாலும், இந்த புத்தாண்டு முதல், தினம் தினம் பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். 

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓவியக் கவிதைகள் முடிந்த பின் தினம் ஒரு பதிவுகள் வெளிவருவதைக் குறைத்துக் கொண்டு, முன் போலவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பதிவுகள் மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன். எழுதுவதிலும், வலைப்பூக்களைப் படிப்பதிலும் அதிகமாக நேரம் போவது போல தெரிகிறது. செய்ய வேண்டிய வேலைகள் சில செய்ய முடிவதில்லை.

சற்றே திரும்பிப் பார்த்தால், இந்த வருடத்தில் மட்டும் நான் எழுதிய பதிவுகள் 245 – இப்பதிவு உட்பட.  அதாவது வருடத்தின் 365 நாட்களில் 120 நாட்கள் மட்டுமே பதிவுகள் எழுதாது விட்டிருக்கிறேன். இத்தனை பதிவுகள் எழுதி விட்டது மலைப்பாக இருந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது. 

சரி திரும்பிப் பார்க்கிறேன் எனச் சொன்னதும், முதல் பத்தியில் சொன்ன திருப்பாவை விளக்கம் மனதுக்குள் வந்து அதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. 

விலங்குகளில் ஒரே ஒரு விலங்குக்கு மட்டும் தான் இப்படி திரும்பிப் பார்க்கும் வழக்கம் உண்டாம்.  ஒவ்வொரு பத்து அடி நடந்ததும் சற்றே நின்று அப்படியே திரும்பிப் பார்க்குமாம் அவ்விலங்கு. எதற்கு என்றால் தன்னை யாராவது பின்புறத்திலிருந்து தாக்க வருகிறார்களா என்பதைப் பார்க்கவும், தான் பயணித்து வந்த பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் திரும்பிப் பார்க்குமாம் அந்த விலங்கு! அந்த விலங்கு என்ன என்று தானே கேட்கப் போகிறீர்கள்.......  அவ்விலங்கு காட்டின் ராஜா சிங்கம்.  
நன்றி: கூகிள்


அந்தச் சிங்கத்தினைப் போல நான் திரும்பிப் பார்ப்பதாகவோ, என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம்! எனக்குத் தெரிந்து சிங்கம் தவிர வேறு சில மிருகங்களும் திரும்பிப் பார்ப்பதுண்டு...... :)

திரும்பிப் பார்த்தபோது இவ்வருடத்தில் மட்டுமே முன் பத்தியில் சொன்னது போல வெளியிட்ட பதிவுகள் 245, அதில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற தலைப்பில் வெளியிட்ட சபரிமலைப் பயணம் பற்றிய பதிவுகள் – 13, ரத்த பூமி என்ற தலைப்பில் வெளியிட்ட குருக்ஷேத்திரப் பயணம் பற்றிய பதிவுகள் – 10, அலஹாபாத் நகரில் நடைபெற்ற மஹா கும்பமேளா போது அங்கே சென்று வந்த நினைவுகள் பற்றிய பயணக் கட்டுரைகள் – 8 என பயணக் கட்டுரைகள் வெளியிட்டது தவிர சென்ற பயணங்கள் இன்னும் உண்டு.

எனது பதிவுகளில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட் பதிவுகள், அவ்வப்போது வெளியிடும் மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து தொடர்கள், குறும்படங்கள், படித்ததில் பிடித்ததுஎன்ற தலைப்பில் எழுதிய புத்தக வாசிப்பு அனுபவங்கள், சாலைக் காட்சிகள் என சில பகுதிகள் இவ்வருடத்திலும் தொடர்ந்து வரும்.

வருடத்தில் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும் என்னை நிறையவே பாதித்த சில விஷயங்களும் என நிறையவே இருக்கிறது. நல்லதை மட்டும் நினைவில் வைத்திருப்போம் என்ற எண்ணத்துடன் அவ்வப்போது கெட்ட விஷயங்களை மறந்து விடுவது நல்லது. அதனால் அவற்றை அங்கங்கே விட்டு விடுகிறேன்.

செப்டம்பர் மாதத்தில் சென்னை பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த்தில் மகிழ்ச்சி. என்ன ஒரு வருத்தம் – நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில்!  அடுத்த சந்திப்பின் போது படங்கள் எடுப்பதை விட்டு, எல்லோருடனும் பேச வேண்டும்!

வருடம் முழுவதும் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் அவ்வப்போது நன்றி சொல்லி இருந்தாலும், மீண்டும் ஒரு முறை இங்கே வருடத்தின் முடிவில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

இவ்வருடம் முழுவதும் எனைத் தொடர்ந்து படித்து, பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.  புத்தாண்டில் புத்துணர்வோடு சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 comments:

 1. தொடர்ந்து தினம் ஒரு பதிவு தருவதும் ஒரு சாதனைதான் வெங்கட். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் சக வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்......

   Delete
 2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  2014ல் புத்துணர்ச்சியோடு சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 3. MY HEARTFUL WISHES FOR A HAPPY AND PROSPEROUS NEW YEAR TO YOU N YR FAMILY MEMBERS DEAR FRIEND!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. ஒரே செயலை தொடர்ந்து செய்வது சில சமயங்களில் சலிப்பைதரும் . அது போல ஒரே மாதிரி பதிவை தருவதும் சலிப்பைதரும். அதனால் நாம் என்ன செய்தோம் என்று நின்று திரும்பி பார்த்தால் நிறைய புதிய அனுபவங்கள் ஐடியா கிடைக்கும் அதன் பின் சலிப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்.. எனக்கு உங்கள் பதிவுகளில் பரு சாலட்டும் சபரி மலை அனுபவங்களும் மிகவும் பிடித்தவை அது போல வாரம் ஒன்றாவது எழுதி வாருங்கள்


  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டு வருகிறது ஏதோ பேருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு செல்வோம் என்று சொல்லாமல் உண்மையில் மனமாற வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்...வரும் ஆண்டு உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்வில் மிக பிரகாச ஒளி வீசி செல்ல வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   தொடர்ந்து சந்திப்போம்......

   Delete
 5. பதிவுகள் 245 ...! மலைப்பாக இருக்கிறது (என்னைப் பொருத்தவரை) பாராட்டுக்கள்...

  வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 7. // என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம்! // அதான் சூட்சுமமாக சொல்ல வைத்து விட்டீர்களே ஹா ஹா ஹா

  பதிவு எழுதுவதை வெகுவாய் குறைத்து விடாதீர்கள்... தலைநகர் மற்றும் பல பயணக் கட்டுரைகள் அடங்கிய பொக்கிஷம் உங்கள் வலைப்பூ.. நான் வடநாடு சுற்றுப் பயணம் செல்வதாய் இருந்தால் கையேடு உங்கள் வலை தான் என்று என்றோ முடிவு செய்து விட்டேன்


  நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 8. திரும்பிப் பார்க்கும் சிங்கம் பற்றிய தகவலுக்கும், தங்கள் மீளபார்வை பதிவுக்கும் நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 9. ஆஹா ஒரு வருடத்தில் இத்தனை பதிவுகளா ஆச்சர்யமாக இருக்கிறது...! வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 10. நீங்கள் சொல்வது உண்மைதான். பதிவுலகில் ஆரம்பத்தில் தினம் பதிவிட்டு வந்த வலைப்பதிவர்கள் இப்போது அதை குறைத்துக்கொண்டார்கள். சிலர் முகநூல் பக்கத்திற்கும் சென்றுவிட்டார்கள். வலையில் இருப்பதால் மற்ற முக்கியமான பணிகளைக்கூட கவனிக்க முடியாமல் போகிறது என்பதால் நான் கூட வாரம் ஒன்றுதான் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்.

  தங்களது பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. தங்களது பணிக்கு இடையூறு வராத பட்சத்தில் தினம் ஒரு பதிவிடலாம்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. நல்ல பகிர்வு!

  தங்களுக்கும் தங்கள்குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 12. wow 245....super..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 13. நீங்கள் சிங்கம் போல் திரும்பிப்பார்ப்பதில் அர்த்தம் கண்டிப்பாக உள்ளது.... அத்தனைப் பதிவுகள்..பிரமிப்புதான்... உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. நீங்கள் திரும்பிப் பார்த்ததா, அல்லது நான் திரும்பிப் பார்ப்பதா என்று சொல்லும் அளவிற்கு நான் மனதில் நினைத்ததை சொல்லியிருக்கிறீர்கள்.

  வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ எழுதுங்கள் - எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள், ப்ளீஸ்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 15. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  2014ல் புத்துணர்வோடு நிறைய எழுதுங்கள்.
  உங்களுக்கும், ஆதிலக்ஷமி, ரோசணிக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  திரும்பி பார்க்கிறேன் பகிர்வு நன்றாக இருக்கிறது.
  245 பதிவுகள் மலைப்பாய் இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
  subbu thatha.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 17. எழுதுவதில் இரண்டு வகை உண்டு. தனக்குப் பிடித்ததை எழுதுவது. தனக்குப் பிடித்தது பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதுவது. நீங்கள் இரண்டாம் வகை என்று நினைக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 18. 2013ம் ஆண்டு சாதனைகளுக்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி.

  நாளை பிறக்க உள்ள 2014ம் ஆண்டும் அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. சிங்கம் பற்றிய செய்தி எனக்குப் புதிது.இத்தனைப் பதிவுகளா? மலைக்க வைக்கிறீர்களே வெங்கட்ஜி.!
  இது மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 20. முதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்படி தான் உங்களால் தினம் ஒரு பதிவை பதியமுடிகிறது என்று என்று எண்ணி ஆச்சிரியப்பட்டிருக்கிறேன். வாரத்திற்கு மூன்று நான்கு பதிவுகளவாது கண்டிப்பாக எழுதுங்கள். தொடரட்டும் தங்களது பதிவுலகப்பணி .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. /நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில்!/

  அப்படி இருந்தாலும் தங்கள் புகைப்படங்கள் மிக முக்கியமாய் அமைந்தன. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....