எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 30, 2013

ஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஆறாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.


இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

அம்பாளடியாள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் சாந்தரூபி கந்தசாமி அவர்கள் தனது வலைப்பூவில் தினம் ஒரு கவிதை எழுதி வெளியிடுகிறார். சிறப்பான பல கருத்துகளை இவரது கவிதைகளில் காண முடியும். ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை தனது கவிதையில் வடித்து அவர்களின் துயரத்தினை நம் கண்முன்னே காட்டுவார் இவர்.  தொடர்ந்து பல கவிதைகள் எழுதிட எனது வாழ்த்துகள்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு அம்பாளடியாள் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

வில்லேந்தும் விழியிரண்டில்
மொழிப் பயிற்சி தான் எதற்குக்
கல்லாரும் கற்றவரும்
கண்டு மயங்கும் பேரழகே !....

முல்லைப் பூச் சூடி விட்டேன் என்
முன் அமர்ந்த பாவை உன்னைக்
கண்ணுக்குள் வைத்த நொடி
காதல் நெஞ்சில் பொங்குதடி .....

நாணத்தை விட்டுத் தள்ளு 
நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு 
கானத்தை இசைக்கும் குயில் முன் 
களியாட்டம் ஆடும் மயிலே .......

ஊரெல்லாம் உன் பேச்சு 
உனக்குள் தான் என் மூச்சு 
காதோரம் சொல்வேன் கேள் 
களிப்பான செய்தியொன்று 

மாதவத்தால் வந்தவளே தேன் 
மாங்கனி போல் சுவைப்பவளே
ஈருடலில் ஓருயிராய் நாம் 
இணைந்திடத்தான் சம்மதமா ?.... 

-          அம்பாளடியாள்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான ஆறாம் கவிதை இது. கவிதை படைத்த அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!31-ஆம் தேதி வரை அதாவது நாளை நள்ளிரவு வரை நேரமிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  கவிதை சிறப்பாக உள்ளது சகோதரி சாந்த ரூபிக்கு பாராட்டுக்கள் அதை தொகுத்து வழங்கிய விதமும் அருமை வாழ்த்துக்கள்.ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. வண்க்கம்
  ஐயா.
  த.ம 3வது வாக்கு.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. அருமை.... அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. காதல் ரசத்தில் கன்னல் சாறு என தித்திக்கிறது கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 7. அருமையான கவிதை.
  அம்பாளடியாளுக்கு பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 8. அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ....

   Delete
 9. சூப்பர் சாங் .அம்பாள் அடியாள் கன்க்ராட்ஸ்.

  சுப்பு தாத்தா பாடப்போறார்.

  otherwise, பிசியா இருக்கிறவங்க மைக்கை ஆப் பண்ணிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   பாடி, உங்க பக்கம் வலையேற்றிய பிறகு சொல்லுங்க... இங்கேயும் இணைப்பு கொடுத்துடலாம்!

   Delete
 10. மிகமிக அருமை!
  படைத்த அன்புத்தோழி அம்பாளுக்கும்,
  பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 11. அழகான இனிய கவிதை படைத்துள்ள கவிதாயினி அம்பாள் அடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள் + பாராட்டுக்கள். தங்களுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. அருமை! நான் இளையராஜாவாக இருந்திருந்தால் இசையமைத்திருப்பேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இளையராஜாவாக இல்லாவிலும் இசை அமைக்கலாம் பத்மநாபனாக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. இனிமையான கவிதைக்கு வாழ்த்துகள்

  --
  அன்புடன்,
  ரேவதி.நரசிம்ஹன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 14. காதல் கனி ரசம் பொங்கும் அருமையான ஒரு கவிதை!!

  அம்பாள் அடியாள் அவர்ககுக்கு வாழ்த்துக்கள்!!

  பகிர்ந்த தங்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 15. #நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு #
  ரசிக்கும் படியான ரெட்டை அர்த்தம் !வாழ்த்துக்கள் !
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 16. அழகான கவிதை. அம்பாள் அடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. Nalla kavithai Anne...!

  Naan ezhuthuvathaaka solli irunthen ippothuthaan ninaivirku varukirathu ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 18. இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி நண்பரே! அம்பாள் அடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 19. அம்பாளடியாளின் கவிதை எளிமையாக ரசிக்கும்படி இருக்கிறது. அவருக்கும் கவிதை எழுதத் தூண்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 20. சகோ, சூப்பர்.. ரொம்ப நல்லாயிருக்கு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 21. அருமையான கவிதை. தோழிக்கு இனிய வாழ்த்துகள்.

  பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 22. மிக்க நன்றி உறவுகளே இனிய வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்
  வாழ்த்துக்களுக்கும் .மிக்க நன்றி சகோதரா கவிதைப் பகிர்வுக்கும்
  தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஓவியத்திற்கான கவிதை எழுதி அனுப்பியதற்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....