திங்கள், 9 டிசம்பர், 2013

சபரியின் உழைப்பாளிகள்[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 12]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 11]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 10]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

தன்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் தனது நல்ல நண்பரான வாவரையும் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கேயே அவருக்கும் ஒரு வழிபாட்டு ஸ்தலம் இன்றளவும் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் படித்து நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் முடிக்க நினைத்திருக்கிறேன்! பார்க்கலாம்!

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

இப்படியாக, இந்த சபரிமலைப் பயணத்தில், முதல் நாள் இரவும், அடுத்த நாள் காலையும் சபரிகிரிவாசனின் திவ்ய தரிசனம் கிடைத்தது. கூடவே மாளிகைப்புரத்து அம்மனும், வாவரும், நவக்கிரகங்களும் எங்களுக்கு அருள, மீண்டும் எப்போது வருவோம் என்ற நினைவுகளுடன் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.நாங்கள் மலைமீது ஏறும்போது இரவு. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் இறங்கும் நாள் அன்று தான் அந்த மாதத்தில் கோவில் நடை திறந்திருக்கும் கடைசி நாள். அதனால் மேலே சென்று கொண்டிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.ஏற்றத்தினை விட மலை இறக்கம் இன்னும் கடினமாக இருந்தது! கொஞ்சம் வழுக்கினாலும் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விடும் அபாயம். அதனால் காலை நன்கு பதித்து நடக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் காலை வாரி விட்டு கீழே விழ வைக்கும் நோக்கத்துடன் பாறைகள் இருப்பதாகப் பட்டது!காலை வேளை என்பதால் அங்கே நிறைய பால்கிவாலாக்களைப் பார்க்க முடிந்தது. மலையேற முதியவர்களால் முடியாது என்பதால், ஒரு இருக்கையில் அமரவைத்து அதில் இரண்டு பக்கமும் கட்டி இருக்கும் மரக்கம்புகளை தனது தோளில் சுமந்து இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் பக்தரையும் சுமந்து மலையேறிக் கொண்டிருக்கும் பல உழைப்பாளிகளைக் காண முடிந்தது. இவர்களுக்கான கூலியை தேவஸ்தானமே நிர்ணயித்து வைத்திருக்கிறது.இவர்களை நினைத்தால் பாவமாக இருந்தாலும், இது தான் இவர்களுக்குத் தொழில் என்பதால் முடிந்தவரை அவர்களுக்கு காசு கிடைக்கட்டும் என்ற நினைவுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தோம்.  எங்கே பார்த்தாலும் “ஸ்வாமியே ஐயப்போ!கேட்டுக் கொண்டிருக்க, மனதுக்குள் அமைதி குடி கொண்டிருந்தது. கீழே இறங்கும்போது புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்ததால், கேமராவினை கழுத்தில் மாட்டியபடியே வந்தேன். ஆங்காங்கே சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.வழுக்கும் பாறையில் வரும்போது இப்படி புகைப்படம் எடுப்பது தேவையா என்ற எண்ணமும் அவ்வப்போது வராமல் இல்லை! இப்படி கீழே வந்து கொண்டிருக்கும்போது பல கடைகளை ஆங்காங்கே காண முடிந்தது. கீழே இறங்கி வரும் பக்தர்கள் வேர்க்கடலையும், வெள்ளரிப்பிஞ்சும் வாங்கி உண்டபடி வந்தார்கள். அங்கே வரும்வழியில் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். பத்து ரூபாய்க்கு ஒரு பலூன்.  இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.  அந்தப் பதிவு உங்களுக்கு நினைவிலிருக்கும் என நம்புகிறேன். அதை அப்போது படிக்காதவர்களின் வசதிக்காக அந்தப் பதிவிற்கான சுட்டி இதோ - பலூன் வியாபாரியும் படகோட்டியும்.மேலும் சிலரிடம் பேசியபடியே, சபரியைக் காணச் செல்லும் பக்தர்களை ஊக்கப்படுத்தியபடியே கீழே இறங்கினோம். சுற்றிலும் மலைப்பகுதி என்பதால் இயற்கை எழில் கொஞ்சி விளையாடியது.  காலை எட்டரை மணிக்குள் பம்பா நதியை வந்தடைந்து விட்டோம். கீழே இறங்கி வந்தபிறகு கொஞ்சம் சிரமப் பரிகாரமாக கொஞ்சம் தேநீரோ/காபியோ குடிக்க நினைத்து ஒரு கடையில் ஒதுங்கினோம்.


அங்கே ஏற்கனவே ஒரு தமிழ் குடும்பம் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் நண்பர்களும் கடையில் மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருக்க, அந்த தமிழர் குடும்பத்து பெண்மணி சொன்னது – “இந்த மலையாளிகளுக்குச் சுட்டுப் போட்டாலும் காபி போட வராது!”.  உண்மை தான் என்றாலும் அங்கே சொல்லி இருக்க வேண்டாம்!  கொஞ்சம் தமிழ் தெரிந்த என் நண்பன் அவரை முறைக்க, நானும் என் பங்குக்கு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது! அது உண்மையாகவே இருந்தாலும்!என தமிழில் சொல்ல அவர்கள் சிரித்தபடி, “சாரிங்க, ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது!என்றார்கள்.மறப்போம், மன்னிப்போம் என்று நண்பரிடம் சொல்லி, நாங்களும் காபி குடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.  எங்கள் காரை நிறுத்தியிருந்த அலுவலகத்திற்கு வந்து காரை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். வழியெங்கிலும் ரப்பர் மரங்களும் காடுகளும் தோட்டங்களும், அழகான வீடுகளும் என்னை அப்படியே ஆட்கொண்டது!வரும்போது வந்த வழியாகச் செல்லாது வேறு வழியாக செல்லலாம் என முடிவெடுத்து வந்து கொண்டிருந்தார் நண்பர்.   அப்படி வரும் வழியே ஒரு கிராமத்தில் மிகவும் பழமையான ஒரு பாலத்தினைக் காண்பித்தார்.  ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பாலம் என்றும் இன்றைக்கும் அது சேதமில்லாது அப்படியே இருக்கிறது எனச் சொன்னதால் அங்கே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு விரைந்தோம்.

இந்தப் பகுதியில் முடிக்க நினைத்திருந்தேன்.  இன்னும் சொல்ல வேண்டிய ஒரு சில விஷயங்கள் இருப்பதாலும், பதிவின் நீளம் கருதியும் அடுத்த பகுதி வெளிவந்தாக வேண்டிய கட்டாயம்.  அடுத்த பகுதியில் கண்டிப்பாக நிறைவு பெறும் என்ற உறுதிமொழியோடு! இப்பகுதியை முடிக்கிறேன்!
    
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. பலூன் விற்பவர் பற்றி படித்த நினைவு அவர் படத்தைப் பார்த்ததுமே வந்து விட்டது. நாங்களும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேன் உங்களோடு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. படங்களுடன் படிக்க அருமையாக இருக்கிறது இந்த தொடர் tha.ma 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. படங்கள் யாவும் சும்மா வார்த்து வைத்த மாதிரி அழகு....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 4. புகைப்படமும் அனுபவமும்
  எங்களையும் உங்களுடனேயே கூட்டிச் செல்கிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 5. மீண்டும் எப்போது வருவோம் என்ற நினைவுகளுடன் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.//

  காந்தமலை அல்லவா சபரிமலை ..! ஈர்க்கிறது தரிசனம் ..!
  ஆகவே எத்தனை சிரமப்பட்டாலும் மீண்டும் செல்லவேண்டும் என்னும் எண்ணம் வருகிறது ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 6. படங்கள் அனைத்தும் அருமை. பலூன் வியாபாரியை போல எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களுடன் பேசி அவர்கள் வாழ்வை புரிந்துகொள்ள முயற்ச்சித்ததே இல்லை! இனியாவது செய்ய வேண்டும். சபரி மலை செல்லவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். இறைவன் அருள் இருந்தால் பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது சென்று வாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்துஜி!

   நீக்கு
  2. சிறப்பான படங்களுடன் பகிர்வு மிகவும் அருமை...

   வாழ்த்துக்கள்...

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. சிறப்பான பகிர்வு .படங்கள் மிகவும் கற்சிதமாக பிடிக்கப்பட்டுள்ளது !
  பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தோம். சுவைபட விவரித்தமைக்கும் அதை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   நீக்கு
 10. படங்களும் பகிர்வும் அருமை ஜி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 11. கடைசியாக பதிவில் உள்ள படம் புனலூரில் எடுத்தது போல் தோன்றுகிறது. சரியா. ?நானும் மூன்றுமுறை சபரிமலை சென்றிருக்கிறேன். இரண்டாவது போட்டோ பெரிய பாதஒயில் வருகிறதா.?பெரியபாதைப் பயணம் மேற்கொண்டதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 12. படங்களுடன் நீங்கலேழுதியிருக்கும் விளக்கங்களும் அருமையாக இருக்கிறது. உங்களுடன் படிப்பவர்களையும் மலையிலிருந்து கீழே இறங்க வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. படங்கள் கண்கொள்ளாக் காட்சி ஐயா
  விளங்கங்களும் அருமை
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா....

   நீக்கு
 16. Photos எல்லாமே ரெம்ப நல்லாருக்குஜி ...

  FOOTNOTE அ VP ன்னு சுருக்கி சின்னதா போடுங்க ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.....

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....