எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 6, 2013

ஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொன்னது யார்?இந்த வார செய்தி:

ஹிமாச்சல் நகரின் ஷிம்லா பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். சிம்லா ஸ்பெஷல்போன்ற எத்தனை படத்தில் பார்த்திருப்போம்! அங்கே தண்ணீரால் பரவும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குளிர் காலத்தில் நிறையவே பரவி வருகிறது. ஒவ்வொரு வருடமும் குளிர் காலம் வரும்போது கூடவே தண்ணீரால் பரவும் நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறதாம்.  இது அரசாங்கத்தினைக் கொஞ்சம் ஆட்டி வைக்க, என்ன செய்யலாம் என மண்டையைப் போட்டு குழப்பி ஒரு புது வித யோசனையை செய்திருக்கிறார்கள். 

பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்யறான்அப்படின்னு சிலர் சொல்லி கேட்டு இருப்பீங்களே, அந்த பணம் எடுக்க இப்பல்லாம் வங்கிகள் பல இடங்களில் ATM [Any Time Money] அமைத்து அவர்கள் தரும் அடையாள அட்டையைச் சொருகி வேண்டிய பணத்தினை எடுத்துக் கொள்ளும் வசதி தருவது போல தண்ணீரையும் தந்தால்! எப்படி இருக்கும் என யோசித்து, ஷிம்லா மற்றும் சில சுற்றுலா தளங்களிலும், பக்தர்கள் நிறைய வரும் புனிதத் தலங்களிலும் ஏற்பாடு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 முதல் 50 பைசா வரை வசூலித்து தண்ணீரை இயந்திரம் மூலம் தர, முதலில் ஆறு இடங்களில் சோதனை முறையில் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.  இனிமேல் ATM மூலம் பணம் மட்டும் வராது, தண்ணீரும் வர இருக்கிறது! இதற்கான பிரத்யேக தண்ணீர் ATM அமைக்க சில அமைப்புகளிடம் கேட்டிருக்கிறார்கள். 

அவர்கள் இந்த தண்ணீர் ATM அமைப்பது மட்டுமின்றி, தரும் தண்ணீர் சுத்தமானது தானா என்பதை அவ்வப்போது பரிசோதனையும் செய்ய வேண்டும். அரசாங்கமும் தனது பங்கிற்கு சோதனைகளைச் செய்து வரும்.  இப்படி சுத்தமான குடிதண்ணீர் தருவதன் மூலம் எல்லா குளிர் காலங்களிலும் இங்கே வரும் தண்ணீர் மூலம் பரவும் வியாதிகளை நீக்க நினைக்கிறது ஹிமாச்சல பிரதேச அரசாங்கம்.....

முயற்சி வெற்றி பெறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! அந்த இயந்திரம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் காண காத்திருக்கத்தான் வேண்டும்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால் பொய் வாழவிடாது. உண்மை சாகவிடாது – விவேகானந்தர்.

இந்த வார குறுஞ்செய்தி

WHAT LIES BEHIND US AND WHAT LIES BEFORE US ARE TINY MATTERS WHEN COMPARED TO WHAT LIES WITHIN US – RALPH WALDO EMERSON.

இந்த வார புகைப்படம்: 

இந்த புகைப்படமும் நான் எடுத்தது தான். ஃபாரின் சாக்லேட் சாப்பிட்டதும் அதைச் சுற்றிய பேப்பரை தூர எறிந்து விடாது அதில் பொம்மை செய்தார்கள்! அழகாய் இருக்கவே அதைப் படம் பிடித்தேன்.சொன்னது யார்?:

சமீபத்தில் ஒரு பழைய பாடல் கேட்டேன். அதற்கு முன்னர் படத்தின் கதாநாயகர் ஒரு வசனம் பேசுகிறார்..... 

“ஆசையல்ல, வெறி. நான் சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்!

இதைச் சொன்னது யாராக இருக்கும்? சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!


ரசித்த விளம்பரம்:

கோத்ரேஜ் டி.வி.டி. ப்ளேயர் வந்த புதிது. அதற்கான ஒரு விளம்பரம் – மொத்தமே முப்பது நொடிகள் வரும் இந்த விளம்பரத்தினைப் பாருங்கள் – விற்கும் பொருளின் தரத்தை எப்படி விளம்பரம் செய்கிறார்கள் என! படித்ததில் பிடித்தது!:

இந்த வார படித்ததில் பிடித்தது ஹிந்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்தது. பகிர்ந்து கொண்ட தோழிக்கு நன்றி.

கணவனின் பிறந்தநாளுக்கு பரிசு தரவிரும்பிய மனைவி:  உங்களுக்கு பிறந்த நாள் பரிசு தர நினைத்திருக்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்க!

கணவன்: எனக்கு பரிசு வேண்டாம்.

மனைவி: இல்லை சொல்லுங்க என்ன பரிசு வேணும்?

கணவன்: என்னை காதலுடன் பார்; என்னை மதித்து நடந்து கொள், என்னிடம் மரியாதையோடு பேசு. இதைச் செய்தாலே பெரிய பரிசு தான்!

மனைவி: அதெல்லாம் முடியாது! நான் பரிசு தான் தருவேன்!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. ///நான் சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்!”////
  படத்தில் யார் பேசிய வசனம் என்று தெரியவில்ல் ஐயா.ஆனால் இவ்வரிகளைப் பாடலில் எழுதியவர் ஈழக்கவி சச்சிதானந்தன் என்பவராவார்.
  நன்றி ஐயா
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி....

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  பதிவை அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. குளிர் காலம் வரும்போது கூடவே தண்ணீரால் பரவும் நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறதாம்.//உண்மை எல்லா இடத்திலும் தொற்றுநோய் தண்ணீர்மூலம் தான் பரவுகிறதாம்
  மற்ற அனைத்து வகைகளும் இனித்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 4. வணக்கம்
  ஐயா...

  கோலங்கள் பற்றிய விளக்கமும் படங்களும் மிக அருமையாக உள்ளது.... வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. “ஆசையல்ல, வெறி. நான் சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்!” மக்கள் திலகமா....

  யாராக இருந்தால் என்ன? அருமையான வசனம் பேசி இருக்கிறார்.

  கடைசி ஜோக்... கொஞ்ச நாட்களுக்கு முன் என் வீட்டில் நடந்ததை அப்படியே நியாபகப் படுத்தியது.

  இந்த வாரமும் எப்பொழுதும் போல சாலட் சுவையாக இருந்தது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. //கடைசி ஜோக்... கொஞ்ச நாட்களுக்கு முன் என் வீட்டில் நடந்ததை அப்படியே நியாபகப் படுத்தியது.//
   அது உங்க வீட்டில் மட்டும் அல்ல மணமான எல்லார் வீட்டிலும் கணவர்கள் கேட்கும் பரிசும் அதுதான் மனைவி கொடுக்க மறுக்கும் பரிசும் அதுதான்

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்..

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 6. இனிமேல் ATM மூலம் பணம் மட்டும் வராது, தண்ணீரும் வர இருக்கிறது!

  பயனுள்ள முயற்சி ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி....

   Delete
 7. தினமும் தண்டனையும்,வருடம் ஒரு முறை பரிசும் தர நினைக்கும் மனைவி வாழ்க பல்லாண்டு !
  atm என்றால் automated teller machine என்பதே சரி !
  த.ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. பாரதிதாசன் பாடல் வரிகள் -
  நான் சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்.
  என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்!”

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!....

   Delete
 9. ATM தகவல், படித்ததில் பிடித்தது உட்பட அனைத்தும் ரசிக்க வைக்கும் ஃப்ரூட் சாலட்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

   Delete
 10. படித்ததில் மிகவும் பிடித்தது,இறுதியில் வந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

   Delete
 11. ஹிமாச்சல் நகருக்கு போவோட் எல்லாம் பணத்தை தண்ணியா செலவழிப்பவர்கள் போல இருக்குதே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்....

   Delete
 12. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரை தமிழன்.

   Delete
 13. ATM என்பதற்கு Automatic Thaneer Machine என்று பெயர் மாற்றம் செய்துவிடலாமா?
  கோத்ரேஜ் விளம்பரம் நிஜமாகவே funny தான்!
  வசனம் பேசிய நடிகர் யாரென்று தெரியவில்லை; வேறு யாராவது கண்டுபிடிக்கிறாங்களா பார்க்கலாம்.
  சாக்லேட் படங்களையும் போட்டிருக்கலாம்!
  கடைசி ஜோக் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை.... மிக்க மகிழ்ச்சி.

   Delete
 14. Already water ATM is implemented in Rajastan

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா முரளி...

   தகவலுக்கு நன்றி.

   Delete
 15. தண்ணீர் ஏடிஎம்மா!? எப்படியோ நல்ல குடிநீர் கிடைச்சா சரி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....

   Delete
 16. ஃப்ரூட் சாலட் அருமை.

  // இனிமேல் ATM மூலம் பணம் மட்டும் வராது, தண்ணீரும் வர இருக்கிறது! இதற்கான பிரத்யேக தண்ணீர் ATM அமைக்க சில அமைப்புகளிடம் கேட்டிருக்கிறார்கள். //

  எது நடந்தாலும் ஆச்சர்யமே இல்லை. எப்படியோ தண்ணீர் கிடைத்தால் போதும். ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி....

   Delete
 17. ப்ரூட் சாலட் ருசித்தது அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்....

   Delete
 18. //ATM என்பதற்கு Automatic Thaneer Machine என்று பெயர் மாற்றம் செய்துவிடலாமா?//

  :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   Delete
 19. தண்ணீருக்கான ATM அமைப்பு நல்ல விஷயமாக இருக்கிறதே..

  இற்றை நன்றாக இருக்கிறது.

  கேள்விக்கு பதில் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 20. குடி நீர் இப்போது விற்கும் விலையில் பெங்களூர் சிடி ஸ்டேஷனில் சுத்தமான குடிநீரை வெளியில் விற்கும் விலையை விட குறைந்த பணத்தில் (ஒரு ரூபாய்க்கு இரண்டு லிட்டர் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை)நமே பிடித்து எடுத்துக் கொள்ளும் வசதி (any time water.?) இருக்கிறது. மனைவியின் பரிசு ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்....

   Delete
 21. ATM நல்ல விஷயம் .. ஜோக் ரசனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. அந்த சாக்லேட் டான்ஸ் அபாரம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 23. மனைவியின் பரிசு படித்து ரஸித்தேன்atm இல். புது நோட்டுகள் மாதிரிதண்ணீரா? ருசியாக இருக்குமா பார்க்க வேண்டும். சாக்லேட் பேப்பர் பொம்மைகளும் இனிப்பாக இருக்கிறது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.....

   Delete
 24. Chocolate bommaigal azhagaga irundhana. Kadaisi joke arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 25. வசனம் பேசியது சிவாஜி சாரா..ஜோக் அருமை.... நன்றி

  ReplyDelete
  Replies
  1. இல்லை.... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 26. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....