[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 11]
முந்தைய பகுதிகள் படிக்க,
சுட்டிகள் கீழே:
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 10]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 9]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 8]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 7]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 6]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 5]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]
[கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]
சபரி மலை பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம். அப்படியே
சபரியை மீண்டும் தரிசித்தோம். ஐயனை தரிசனம் செய்த பிறகு அங்கே இருக்கும் மற்ற
சன்னதிகளையும் மீண்டுமொரு முறை தரிசித்தோம்.
என்ன சன்னதிகள், அங்கே என்ன விசேஷம் என்பதையெல்லாம் அடுத்த பகுதியில்
பார்க்கலாம்!
உங்கள்
நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான்
முடித்திருந்தேன்.
என் அப்பன் ஐயப்பன் என பலரும் சொல்லும் ஐயனை தரிசனம்
செய்தபிறகு சன்னிதானத்தின் அருகே இருக்கும் மற்ற கோவில்களுக்கும் செல்ல
ஆரம்பித்தோம். மனது நிறைந்த அமைதியுடன் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தரிசனம் செய்தோம்.
ஐயனின் சன்னதியின் அருகே இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்து
அம்மன், மஞ்சள் மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவரின்
கதையையும் கொஞ்சம் பார்க்கலாம்.
ஐயப்பனின் அவதார நோக்கமே தேவர்களை துன்புறுத்தி வந்த
மஹிஷியை சம்ஹாரம் செய்வது தான். புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்ற ஐயப்பன்
அங்கே மஹிஷியோடு போர் புரிகிறார். மஹிஷியுடன் போரிட்டு அவளை அப்படியே தூக்கி அலசா
நதியில் [தற்போது அழுதா நதி என அழைக்கப்படுகிறது] எறிந்து விடுகிறார். மஹிஷிக்கு
ஒரு வரம் உண்டு. அப்படியே கீழே விழுந்தாலும், மீண்டும் பலத்தோடு எழுந்து விடுகிற
சக்தி அவளுக்கு உண்டு.
அதனால் அவள் எழா வண்ணம் சபரிகிரிவாசன் அவள் உடல் மீது ஏறி
நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலம், அகங்காரம் போன்றவை நீங்கி,
உயிர் உள்ளும் புறமும் ஊசலாடுகிறது. ஐயனின் திருவடி அவள் மேல் பட்டதும், மஹிஷியாக
இப்பிறவியில் இருந்தாலும், முற்பிறப்பில் தான் யார் என்பது நினைவுக்கு வருகிறது.
ஒரு சமயம் தத்தாத்ரேய ரிஷிக்கும், அவரது மனைவியான
லீலாவதிக்கும் தங்களது பக்தியில் யாருடையது சக்தி வாய்ந்தது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது
சக்தியினால் ஆணவம் கொண்டிருந்த லீலாவதி தனது கணவரையே “நீர் மஹரிஷி அல்ல மஹிஷி!” என திட்டிவிட தத்தாத்ரேயருக்கு கோபம் வந்தது. ரிஷிகளுக்கு
கோபம் வந்தால் உடனே கொடுப்பது சாபம் தானே! உடனே கமண்டலத்திருந்து தண்ணீர் எடுத்து,
சாபம் கொடுத்தார் – ”பிடிவாதம் கொண்ட எருமை போல இருக்கிறாயே,
நீ அசுரகுலத்தில் மஹிஷியாக பிறக்கக் கடவது!” எனச் சபித்து விட்டார்.
ரிஷிபத்னிக்கும் கோபமும் சக்திகளும் உண்டே, அவளும்
தத்தாத்ரேயருக்கு ”நீயும் சுந்தரமஹிஷமாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு
கணவனாகக்கடவது!” என்ற சாபத்தினை அளித்தாள்! இருவரின் சாபமும் பலித்தது!
இந்த நினைவு அவளுக்கு வர, தன்னுடைய தவறுகள் புரிந்தது.
மஹிஷியாக இருந்த உடலிலிருந்து உயிர் ஒளிமயமான பெண் வடிவெடுத்து மஞ்சள் மாதாவாக
ஐயனின் திருப்பாதங்களில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார்.
அதை மறுக்கும் ஐயப்பன், ”என்னுடைய அவதார நோக்கமே மஹிஷி சம்ஹாரம் தான். எனக்கு அதுதவிர தாயின் தலைவலி நீக்க புலிப்பால் கொண்டு செல்ல வேண்டும். அதனால் உடனே செல்கிறேன். உன்னை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது, என்னால் உயிர் பெற்ற காரணத்தினால் நீ எனக்கு சகோதரி
முறையாவாய். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் “மாளிகைப்புரத்து அம்மன்
[மஞ்சள் மாதா] என்ற பெயருடன் அருள் புரிவாயாக!” எனச் சொல்ல, தற்போதும் மாளிகைப்புரத்தம்மன் இங்கே
குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மஞ்சள் மாதா சன்னதிக்கு அருகிலேயே நாகர், நவக்கிரஹங்கள்
ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு. அருகிலேயே
சில கொடுகொட்டி கலைஞர்கள் அமர்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவித வாத்தியத்தினை வாசித்துக் கொண்டு பாடல்
பாடுகிறார்கள். ஜாதக ரீதியாக சனிதோஷம்
உள்ளவர்கள் கொடுகொட்டிகளுக்கு சன்மானம் அளிக்க அவர்கள் வாத்தியத்தினை வாசித்து
பாடல்களை பாடுகிறார்கள். அதில் மகிழ்ந்த மஞ்சமாதாவும் பக்தர்களின் தோஷங்களை
நீக்குவதாக நம்பிக்கை.
தலைப்பில் சொன்ன ஒருவரைப் பார்த்தாயிற்று. அடுத்தவரைப்
பார்ப்போமே.... ஐயப்பன் சன்னதிக்குச்
செல்லும் பதினெட்டு படிகளுக்கு கீழே கிழக்காக வாவருக்கென தனி வழிபாட்டு ஸ்தலம்
இருக்கிறது. இங்கே ஒரு இஸ்லாமியர் வழிபாடுகளைச்
செய்ய உதவுகிறார். வாவருக்கு நெல், நல்மிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய்,
தேங்காய் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்தலாம். வாவரின் வழிபாடு எதற்கு
என்பதற்கான விடை இதோ....
ஐயப்பன் [மணிகண்டன்] இருக்கும் பந்தள தேசத்தை கொள்ளையிடுவதற்காக படைவீரர்களோடு துர்க்கிஸ்தானிலிருந்து வந்த கடல் கொள்ளைக்காரன்
வாவர். அவரிடம் போரிடாது தனது அன்பு
வார்த்தைகளால் கட்டுப்படுத்தி, அவரைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்ட ஐயப்பன்,
தனது தேசத்தில் தங்க வைத்துக் கொண்டார். பந்தள
நாட்டை ஆக்கிரமிக்க வந்த உக்கிரசேனன்/பத்திர சேனன் படைகளை வாவருடன் சேர்ந்து வென்று
பந்தள நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றினாராம்.
தன்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் தனது நல்ல நண்பரான
வாவரையும் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கேயே அவருக்கும் ஒரு வழிபாட்டு
ஸ்தலம் இன்றளவும் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் படித்து நீங்களும்
ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் முடிக்க நினைத்திருக்கிறேன்!
பார்க்கலாம்!
மீண்டும் அடுத்த பதிவில்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நான சபரி மலைக்கு சென்று வந்திருந்தாலும்
பதிலளிநீக்குஇத்தனை விவரங்கள் தெரியாது
இவையனைத்தும் தங்க்கள் பதிவின் மூலமே
தெரிந்து கொண்டேன்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஎப்ப என் சன்னிதிக்கு கன்னிச் சாமிகள் வருவதில்லையோ அப்போ உன்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்ன்னு ஐயப்பன் மகிஷிக்கு வாக்கு கொடுத்ததாகவும், அதுக்காகத்தான் பக்கத்துலயே கோவில் கொண்டு கன்னிசாமிகள் யாரும் வந்துடலியேன்னு ஏக்கமா காத்துக்கிட்டு இருக்குறதாவும் எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க.
பதிலளிநீக்குஇந்த கதையும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
ராஜி அவர்கள் சொன்னது போல் தான் இன்று ரேடியோவிலும் சொல்லக் கேட்டேன்...
நீக்குவருடா வருடம் மகரஜோதியன்று மஞ்சள் மாதா ஆவலுடன் கன்னிச் சாமிகள் யாரும் வரலையேன்னு பார்ப்பதாகவும், மீண்டும் ஏக்கத்துடன் காத்திருப்பதாகவும் தகவல் சொல்லக் கேட்டேன்...
கேட்டிருந்தாலும் இங்கே அதை பகிர நினைக்கவில்லை.....
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.....
த்கவல்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குசபரிமலையில் மீண்டும் ஒரு முறை மஞ்சள் மாதாவையும் வாவரையும் தரிசித்தது போல் இருந்தது தங்கள் பகிர்வு... நன்றி அண்ணா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குமஞ்சள் மாதா தகவல்கள் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குகட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகட்டுரைப்போட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.
அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குPudhiya thagavalgalai indha padhivil arindhukolla mudindhadhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குபடித்தேன். ரசித்தேன். சிறு வயதில் வாவரை பாபருடன் குழப்பிக் கொண்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
மஞ்சள் மாதா பற்றிய தகவல் நன்று தொடருகிறேன் வாழ்த்துக்கள்..ஐயா
கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள இதோ.http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவலுக்கு நன்றி ரூபன். படிக்கிறேன்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மஞ்சள் மாதா பற்றிய தகவல் நன்று தொடருகிறேன் நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குமாளிகைப்புரத்து அம்மன் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குமாளிகைப்புரத்து அம்மன் கதை பலவிதமாக சொல்ல கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குமாளிகைப்புரத்து அம்மன் பகதர்களின் தோஷங்களை நீக்கி நலம்தரட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்குவாபரின் தோழரே சரணம் ஐய்யப்பா என்ற கோஸமும் உண்டு!
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.
ஐயப்பன் கோயில் குறித்த செய்திகளுக்கு நன்றி. போகாமல் விட்ட இடம் சபரிமலை தான். இனிமேல் போக முடியுமானும் தெரியலை. :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு