வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு வதை


இந்த வார செய்தி:எனது நெய்வேலி நண்பர் பாலாஜி ராஜாராமன் அவரது முகப்புத்தகத்தின் முகப்பில் தாஜுதீன் என்பவர் பகிர்ந்த இந்த செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார். அது அப்படியே இங்கே.....

அன்பு நண்பர் திரு பாலாஜி மாதேஸ்வரன் தருமபுரி மருத்துவ கல்லூரியில் ஆண் செவிலியராக பணியாற்றுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் பாலாஜி யை பார்க்க நேர்ந்தது. அவர் பணியாற்றும் இடம் தீவிர சிகிச்சை பிரிவு அதுவும் தற்கொலை முடிவால் விஷம் அருந்தி அபாய கட்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கு இருந்தேன். அப்பொழுது அவரது அர்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது பணியை பார்த்து வியந்து போனேன். ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் சுழன்று சுழன்று அவர் பணியாற்றிய விதம், நோயாளிகளின் மேல் அவர் காட்டிய பரிவு, உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுசரணை, உணர்வற்று கிடக்கும் நோயாளிகளின் செய்கைகளை குறிப்பறிந்து மருத்துவம் அளித்தது, மயக்கம் தெளிந்து அவர்கள் எடுத்த ஒரு நிமிட விபரீத முடிவால் ஒவ்வொரு நிமிடமும் வலி மற்றும் வேதனையுடன் அலறும் கதறும் நோயாளிகளை ஆறுதல் படுத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளித்தது ஒவ்வொரு நிமிடமும் பம்பரமாக அந்த பிரிவு முழுவதும் சுற்றி சுற்றி ஒவ்வொரு நோயாளிகளையும் தனது தாயாக, தந்தையாக,தம்பி, தங்கையாக எண்ணி அவர் ஆற்றிய பணி இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கேட்டேன் இப்படி ஒற்றை ஆளாக ஒரு நிமிட ஓய்வு இல்லாமல் சுற்றுகிறீர்களே சிறிது ஓய்வு எடுத்து கொள்ளலாமே என்று .

அதற்கு நண்பரின் பதில்: நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிர் போவதற்கான வாய்ப்பு அதிகம் அவ்வாறு எனது தாமதத்தால் நடைபெற்றால் அது எனக்கு மிகுந்த மன வேதனை அழித்துவிடும். அதனால் தான் என்னால் முடிந்தவரை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கான அத்தனை முயற்சியும் இருக்கும் சில நேரம் உணவு கூட அருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும் இருப்பினும் உயிரை காப்பாற்றிய மன நிறைவு.

நாம் கேள்விபட்டு இருப்போம் அரசு மருத்துவமனைகளில் மேற்சொன்ன எதுவும் இருக்காது என்று ஆனால் இவரது அர்பணிப்பு, உழைப்பு பார்த்த பிறகு அந்த ஏழை மக்கள், அறியாமையில் உள்ள மக்கள் கஷ்டத்தை உணர்ந்து தனது கடமையை செய்யும் நண்பனை நினைத்து பெருமை கொள்கிறான் பொதுவாக செவிலியர்களை செவிலி தாய் என்று தான் அழைப்பார்கள் உண்மை தான் இவர் ஆண் உருவில் இருந்தாலும் இவரும் ஒரு தாய் தான். உன்னத பணியாம் செவிலிய பணியை பாராட்டுவோம் வாழ்த்துவோம் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க.இந்த வார முகப்புத்தக இற்றை:இருள் என்று தெரிந்தும் கண்ணைத் திறந்து கொண்டு தான் பயணிக்கிறோம். அது போல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டிருப்போம் – வெற்றி காணும் வரை.

 
இந்த வார குறுஞ்செய்திWHEN YOU PRAY FOR OTHERS GOD LISTENS TO YOU AND BLESSES THEM AND SOME TIMES WHEN YOU ARE SAFE AND HAPPY REMEMBER THAT SOMEONE HAS PRAYED FOR YOU……


ரசித்த ஓவியம்: முகப்புத்தகத்தில் அவ்வப்போது உலவும் போது சில படங்களும், ஓவியங்களும் அப்படியே மனதில் பதிந்து விடும். அப்படி பதிந்த ஒரு ஓவியம் தான் இன்றைக்கு இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்தது – அருமையான ஓவியம். வசந்தன் என்பவர் வரைந்துள்ள இந்த ஓவியம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அந்த ஓவியம் இதோ உங்கள் ரசனைக்கு.....
ராஜா காது கழுதைக் காது:நேற்று அலுவலகம் செல்வதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழே ஒரு கணவன் – மனைவி நின்று கொண்டிருக்க, கணவன் கார் கதவினைத் திறக்கும் வரை காத்திருந்தார் மனைவி. அப்போது கணவனுக்கு திடீரென தனது அலைபேசியைக் கொண்டு வராதது நினைவுக்கு வர, மனைவியிடம் “நான் அலைபேசியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டேன்!என்று சொன்ன போது மனைவி சொன்னது –“தினம் உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. ஒரு நாளாவது எல்லாத்தையும் மறக்காம எடுத்து வைச்சுக்கறதில்லை – ஒரு நாள் என்னையே எங்கேயாவது மறந்து விட்டுட்டு வரப் போறீங்க!கணவன் படியில் ஓடியபடியே சொன்னது – மறக்காம விட்டுட்டு வந்துடத் தான் நினைக்கறேன் – முடியல!

ரசித்த விளம்பரம்:பெண் சிசுக் கொலை பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் சில பகுதிகளில் நிறையவே நடக்கின்ற ஒன்று – கருத்தம்மா படத்தில் பாரதிராஜா காண்பித்த மாதிரி. இங்கே பெண் சிசுவதை தடுப்பது பற்றி ஒரு அருமையான விளம்பரம் – நான் பார்த்ததை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 
ஹிந்தி புரியாதவர்களுக்காக: மருத்துவமனையில் தனது கருவைக் கலைப்பதற்காக மாமியார் மற்றும் கணவருடன் வந்திருக்கும் ஒரு கர்ப்பவதி, கலக்கத்துடன் காத்திருக்கிறார். அப்போது ஒரு பெண் சிசுவின் குரல் – அம்மா என்று அழைத்து, “கடவுளே என் கைகளில் ரேகை எழுதுவதற்குள் எனது தலைவிதியை நிர்ணயிக்காதீர்கள். நான் பூமியில் பிறக்க வேண்டும். உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். உணவு உண்டு நீங்கள் இனிப்பு சாப்பிடும் சமயத்தில் பாத்திரங்கள் தேய்த்து தருவேன். எனக்காக படிப்பிற்கு செலவு செய்ய வேண்டாம் – நான் சகோதரனின் புத்தகத்திலேயே படித்துக் கொள்கிறேன். வரதட்சிணை தரவேண்டும் என நினைக்காதீர்கள், நான் கடைசி வரை உங்களுடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன், ப்ளீஸ்மா என்னையும் வாழ விடுங்கள்என்று கெஞ்சுகிறது வயிற்றில் வளரும் அந்த பெண் சிசு. கேட்ட அந்த மாமியார் தனது மனதை மாற்றிக் கொண்டார் என்பதும் காண்பித்திருக்கிறார்கள்.படித்ததில் பிடித்தது!:அவருக்காக...

செவ்வாய் தோஷமும்,
நாகதோஷமும்
தீண்டிப் பார்த்த என் ஜாதகத்தை
நைந்து போகாமல்
ஒட்டவைத்த உன் உறவுக்கு
ஆபீஸ் போக ஸ்கூட்டர்,
கையில் வைர மோதிரம்
என்று லஞ்சம் கொடுத்து
இலட்சியத்தை இலட்சமாக்கி
மறுதலித்துப் பேச முடியாமல்
மௌனமாகி ஊமையாகி
தடித்துப் போன உதடுகளில்
லிப்ஸ்டிக் சிரிப்பை
உதிர்த்துக் கொண்டிருப்பது எல்லாம்
கடமை முடிந்தது என
கண் மூடித் தூங்கும் என் அப்பாவுக்காக!

-   ஜெயந்தி சிவகுமார், ஏற்காடு.  


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரைநட்புடன்

வெங்கட்.
புது தில்லி.30 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 4. இந்த ஃப்ரூட் சாலட் மிகவும் ருசியாக இருக்கிறது. பொதுவாக பெண்கள் தான் அதிகமாக செவிலித்தாய் சேவையில் ஈடுபடுவார்கள். திரு.பாலாஜி மாதேஸ்வரன் அவர்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.
  "ராஜா காது கழுதை காது" - மிகவும் அருமை.
  "பெண் சிசு கொலையை தடுக்கும் விளம்பரம்" - நெஞ்சை பிழிந்தது.
  ஜெயந்தி சிவகுமார் அவர்களின் கவிதை - பெண்களின் இன்றைய நிலமையை எடுத்துரைக்கிறது.

  பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 5. ரசித்த கவிதையும், விளாம்பரமும் நெஞ்சை கனக்க செய்யுது.
  >>
  ஆண் செவிலியருக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 6. அதற்கு நண்பரின் பதில்: நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிர் போவதற்கான வாய்ப்பு அதிகம் அவ்வாறு எனது தாமதத்தால் நடைபெற்றால் அது எனக்கு மிகுந்த மன வேதனை அழித்துவிடும். அதனால் தான் என்னால் முடிந்தவரை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கான அத்தனை முயற்சியும் இருக்கும்

  ungaludaiya nanparku en salute sir, unga nanbarku neraya alula thara kadavula vendikurenga sir,,

  fb photo very very nice

  கணவன் படியில் ஓடியபடியே சொன்னது – ”மறக்காம விட்டுட்டு வந்துடத் தான் நினைக்கறேன் – முடியல!”

  nice
  பெண் சிசுக் கொலை: vethanaikuriyathu

  மௌனமாகி ஊமையாகி
  தடித்துப் போன உதடுகளில்
  லிப்ஸ்டிக் சிரிப்பை
  உதிர்த்துக் கொண்டிருப்பது எல்லாம்
  கடமை முடிந்தது என
  கண் மூடித் தூங்கும் என் அப்பாவுக்காக!

  very nice

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   நீக்கு
 8. பாலாஜி மதேஸ்வரனுக்குப் பாராட்டுகள். அவர்களைப் போல (எனது சகோதரி உட்பட) பலரை நானும் அறிவேன். எல்லாமே ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. திரு பாலாஜி மாதேஸ்வரன் அவர்களுக்கு வணக்கங்கள்!
  ஓவியர் வசந்தனுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 10. அட சாலட் ,colourful,சுவை மட்டுமா ?சத்து (கருத்து)நிறைந்ததாகவும் இருக்கிறதே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 11. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 13. ஓவியம் அருமை! விளம்பரம் கண்களில் நீரை வரவழைத்தது! திரு பாலாஜி மாதேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்! அனைத்துமே அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 14. அருமையான பகிர்வுகள்! எல்லாப் பழங்களுமே இப்படி அருமையாக இருக்கும் போது எதை விடுவது!! எல்லாமே சூப்பர்! பெண்சுசுக் கொலை பற்றிய விளம்பரம் டாப்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....