எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 22, 2013

கல்லணை - சில காட்சிகள்
திருச்சியை அடுத்த கல்லணை பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த வழியே நேமம் எனும் திருத்தலத்திற்குச் சென்று திரும்பும் போது வண்டியை கல்லணையில் நிறுத்தி அங்கே கொஞ்சம் இளைப்பாறி மதிய உணவினை எடுத்துக் கொண்டோம். அப்போது நல்ல மழை பெய்து காவிரி/கொள்ளிடத்திலும் நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது – சில வருடங்களுக்குப் பிறகு.

சென்ற சில வருடங்களாகவே காய்ந்து போன காவிரியைப் பார்த்த திருச்சி வாசிகளுக்கு இந்த தண்ணீர் வரத்து ஒரு வரப் பிரசாதம். பூமியைக் குளிர வைத்த நிகழ்வு அல்லவா அது.  மீண்டும் தண்ணீர் எப்போது இவ்வளவு வரும் எனச் சொல்ல முடியாது – மழை பெய்வது நம் கையில் இல்லையே? அப்படியே கொஞ்சம் பெய்து விட்டாலும் அடுத்தவர்கள் அணையைத் திறந்து விட்டால் மட்டுமே அல்லவா காவிரி நிரம்பி இருக்கும் அழகைக் காண முடியும்!

அந்த சமயத்தில் கல்லணை பகுதியில் எடுத்த சில படங்கள் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு!


கரைபுரண்டு ஓடும் காவிரித்தாய்......


மாமன்னன் ராஜராஜ சோழன்.


விவசாயி... விவசாயி..... கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி!என்று தொடங்கும் எம்.ஜி.ஆர். பாட்டு உங்கள் காதில் ஒலிக்கிறதோ!


வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து தலையில் சுமந்தபடி வரும் பெண்!


அகத்திய மாமுனிவர் – கமண்டலும் காக்கையும் கண்டீரா?


கல்லிலே கலைவண்ணம் கண்டான்!


EXCUSE ME! எனக்கு எதாவது சாப்பிடத் தாங்க! என நாங்கள் சாப்பிடும்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆடு! சீக்கிரம் அதையே சாப்பிட்டு விடுவார்கள் என்பது புரியாத ஆடு!


வேகவைத்த மக்காச் சோளமும் கடலையும்.... – என்னையும் சாப்பிடலாம்என அழைத்தபடி!


மாங்காவா, பப்பாளியா? எது வேணும்னாலும் எடுத்துக்கலாம்!


கல்லணை கட்டிய சோழமன்னன் கரிகால் பெருவளத்தான்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறு அன்று வேறு சில புகைப்படங்களைப் பார்க்கலாம்.....

வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. கல்லணைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது.
  மீண்டும் உங்கள் பதிவில் கண்டு ரசித்தேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான பதிவு படங்கள் எல்லம் மிக அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. கல்லணை காட்சிகளை வண்ணப் படங்களாகத் தந்தமைக்கு நன்றி! ராஜராஜன் சிலை படம் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கிறதே?

  // ”EXCUSE ME! எனக்கு எதாவது சாப்பிடத் தாங்க!” என நாங்கள் சாப்பிடும்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆடு! சீக்கிரம் அதையே சாப்பிட்டு விடுவார்கள் என்பது புரியாத ஆடு! //

  நன்கு நகைச் சுவையாகச் சொன்னீர்கள்! உங்கள் வரிகளைப் படித்ததும் “ மந்தையில் மேயும் வெள்ளாடு, சந்தைக்கு வந்தால் சாப்பாடு “ என்ற சந்திரபாபு பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

  மீண்டும் சந்திப்போம்!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜ சோழன் சிலை - எனக்கும் வித்தியாசமாகத் தான் இருந்தது - கரிகாலன் கட்டிய கல்லணையில் இராஜராஜசோழன் சிலை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
  2. நான் ராஜராஜனைச் சொல்லவில்லை. படமே வித்தியாசமாக, சிலையில் மன்னனின் முகம் , குதிரையின் முகம், தோற்றம் ஆகியவை கேமராவை ZOOM பண்ணியதால் வித்தியாசமாக இருப்பதனைக் குறிப்பிட்டேன்.

   Delete
  3. ஓ.... எடுத்த கோணமும் காரணமாக இருக்கலாம்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 4. வணக்கம்
  ஐயா

  த.ம.2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரின் படத்தைவிட வேறு எது கவரமுடியும்? அதுதான் டாப்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மிகவும் பிடித்த படம் இது! இன்னும் சில படங்கள் இதே மாதிரி இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவில்லை!

   Delete
 6. இரண்டு வருடங்களுக்கு முன் சென்று வந்தேன்! தெளிவான புகைப்படங்கள்! மனம் கவர்ந்த பதிவு! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 7. கல்லணையும் கரிகாலும் நல்லுழவும் பண்டை வளம் சார்ந்த தமிழகமும் கண்முன்னே நிறுத்தியது நிழற்படங்கள் சீர்தொகுப்பே! இப்படித் தொடர்வதில் இனிமை மிளிர்கிறது! தொடர்க! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.

   Delete
 8. அணையும் சுற்றியுள்ள இடங்களும் அருமையாக வந்திருக்கிறது தங்களது கைவண்ணத்தில்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. தெளிவான புகைப்படங்கள்! அருமையாக வந்திருக்கிறது
  Reply

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. தண்ணீர் வரத்து ஒரு வரப் பிரசாதம். பூமியைக் குளிர வைத்த நிகழ்வு அல்லவா

  கண்களை நிறைத்த கவின் மிகு காட்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. நான்கு வருடங்களுக்கு முன் கல்லணை சென்றோம். மீண்டும் கல்லணை போகும் ஆவலை தூண்டுது உங்கள் படங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_22.html சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. மிகவும் அழகான படங்கள் + காட்சிகள். தாங்கள் திருமணம் ஆனவுடன் முதன் முதலாக ஹனிமூன் போனதும் இந்த கல்லணை என்ற இடமே என எனக்கு என் மனதில் தோன்றுகிறது. அது சரிதானா ?வெங்கட்ஜி ;))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 16. [[[வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து தலையில் சுமந்தபடி வரும் பெண்!]
  அது K.R. விஜயா தானே!
  நல்ல இடுகை.
  +1

  ReplyDelete
  Replies
  1. இல்லை சரோஜா தேவி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி...

   Delete
 17. இன்னிக்கு எங்கே போனாலும் கல்லணையா?? ஹிஹிஹி. படங்களுக்கு நன்றி. நேரிலும் பார்த்தோம். நான் கற்பனை செய்திருந்த அளவுக்கு இல்லாததாலோ என்னமோ தெரியலை, கல்லணை என்னைக் கவரவில்லை. :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 18. ஒவ்வொரு சிலைகளும் மிகவும் தத்ரூபமாக செயப்படுள்ளது .
  தங்களின் புகைப்படம் எடுக்கும் கலையுணர்வு எமது கண்களுக்கும்
  விருந்தளித்துச் சென்றுள்ளது .வாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி
  பகிர்வுகளுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 19. பல முறை கல்லணை சென்றிருக்கிறோம். ராஜராஜன் சிலை அண்மையில் வைக்கப் பட்டதா. ? முன்பு பார்த்தது நினைவில்லை. கல்லணையில் எழுபதுகளில் எடுத்த படங்கள் இருக்கின்றன. இப்பதிவு மீண்டும் அவற்றைப் பார்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 20. ஃபோட்டோஸ் எல்லாம் ஸூப்பர்! அகண்ட காவேரி எனப்படும் காவேரியின் கல்லணையில் இனி எப்போது இது போல நீர் வரத்து இருக்கும்? நம் விவசாயிகள் கர்நாடகாவை நம்பாமல் இருக்க?!! அந்தப் பெண் முமந்து வரும் நெற்கதிர் போல இனி வரும் காலங்களிலும் இது போல பெண்கள் நெற்கதிர் சுமந்து வருவார்களா? ஏனென்றால் அரிசி விலை போகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.!! நன்றி பகிர்தலுக்கு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 21. தண்ணீர் கரை புரண்டோடும் கல்லணை. நான் எனது இளமைக் கால எண்ணங்களுக்கு சென்று விட்டேன். அருமையான போட்டோக்கள். மிக்க நன்றி உங்களுக்கு.
  ந.பரமசிவம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரமசிவம் ஜி!

   Delete
 22. படங்கள் மிக மிக அருமை.
  "//மாங்காவா, பப்பாளியா? எது வேணும்னாலும் எடுத்துக்கலாம்!//" - இப்படி படத்தைப் போட்டு கேட்டா, நாங்க என்ன சொல்றது???

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 23. நான் திருச்சியில் இருந்தபோது ஒரு முறை கல்லணை பார்த்திருக்கிறேன்.
  அப்போ இத்தனை சிலைகள் இல்லை.
  அழகான படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஐயா.

   Delete
 24. கல்லனைப் படங்கள் அனைத்தும்
  கண்கொள்ளா காட்சிகள் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 25. Replies
  1. தமிழ் மணம் பதினான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 27. கல்லணையின் புகைப்படங்கள் - கண்களை நகரவிடாமல் கண்ணணை போட்டு விட்டன. வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 28. முதலில் அவித்த வேர்க்கடலை, சோளம், மாங்காய் எடுத்து சாப்பிட்டுவிட்டு பிறகு வருகிறேன். எத்தனை நாளாச்சு பார்த்து !

  படங்கள் எல்லாம் 'பளிச்'னு அழகா வந்திருக்குங்க‌. கல்லணைக்கு நானும் இரண்டு முறை சென்றிருக்கிறேன். படங்களைப் பார்க்கும்போது நினைவுகள் பின்னோக்கிப் போகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 29. அருமையான இடம். அழகான சிலைகள். சிறப்பான கோணங்களில் படமாக்கியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 30. கல்லணை அருமையான இடம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....