எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 11, 2013

பேரைச் சொல்லவா? - குறும்படம்


சென்ற புதன் கிழமை அன்று தாகம் என்ற குறும்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரம் வேறொரு குறும்படம்.

ஒரு கிராமத்து இளைஞர் காட்டு வழியே வந்து கொண்டிருக்கிறார். ஒரு மரத்தின் அருகே வரும்போது காலில் முள் குத்தி விடுகிறது. அதே சமயத்தில் கொலுசு சத்தம் கேட்க, திரும்பிப் பார்க்கிறார். ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறார். காலில் முள் குத்திய வலியினால் அதில் நினைவு செல்ல, அதற்குள் அந்தப் பெண்ணைக் காணவில்லை.

பார்த்தால் அவர் கால் அருகே அமர்ந்து “பார்த்து வரக்கூடாதா? முள் குத்திடுச்சு பாருங்க!என்று முள்ளை எடுத்து விடுகிறார்!பெண்ணின் மேல் ஆசை வந்து அவர் பேரைக் கேட்க, பேரை விடுகதையாகச் சொல்லி விட்டு செல்கிறார் அந்தப் பெண்.  பெயரைக் கண்டுபிடித்தால் என்ன தருவாய்?என பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் முத்தம் தருவதாகச் சொல்ல... ஒரு வித கிறக்கத்திலேயே வருகிறார் அந்த இளைஞர்.

படிக்காத அவர், படித்த அவரது நண்பரிடம் நடந்ததைச் சொல்லி, விடுகதையாகச் சொன்ன பெயர் “தேன்மொழிஎனக் கண்டுபிடித்து அவளிடம் சொல்ல, அடுத்த நாள் அந்த பெண் சந்தித்த இடத்திற்குச் செல்கிறார். அவள் வராது போகவே, அந்தப் பெண்ணின் ஊருக்குச் செல்கிறார். பெண்ணின் வீட்டினைக் கண்டுபிடிக்க முயல, அங்கே என்ன நடக்கிறது, அந்தப் பெண்ணிடம் பேரைச் சொன்னாரா இல்லையா? என்பதை சுவையாகச் சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.....

இதோ நான் ரசித்த அந்த குறும்படம் – பேரைச் சொல்லவா நீங்களும் ரசிக்க ஏதுவாய் இங்கே!
என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? அடுத்த புதன் அன்று வேறொரு குறும்படத்தினைக் காணலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. அந்த வீட்டுக்குச் சென்றால் 'அவள் போன வருடமே இறந்து விட்டாள்' என்று படத்துக்கு மாலை போட்டிருக்கவில்லையே....! :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   முழுசா பாருங்க! :)

   Delete
 2. அருமையானதொரு குறும்பட பகிர்வுக்கு
  நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 3. குறும்படத்துக்கு கூட உங்களோட விமர்சனம் சூப்பர். நானும் ரசித்துப் பார்த்தேன்(ஆபிஸில்!!!) உங்களுடைய வலைப்பூவை படிப்பதற்காக திறந்தேன். நீங்கள் எழுதிய விமர்சனத்தை படித்தவுடன், என்ன நடந்திருக்கும் என்ற ஆர்வத்தில் இந்த படத்தை அலுவலகத்துலேயே பார்த்து விட்டேன்.. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   அட.... அலுவலகத்திலெயே பார்த்துட்டீங்களா?

   Delete
 4. அந்தப் பெண் முத்தம் தருவதாகச் சொல்ல... ஒரு வித கிறக்கத்திலேயே வருகிறார் அந்த இளைஞர்.//இந்த காலத்திலும் இப்படி ஒரு இளைஞர்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.....

   Delete
 5. வணக்கம்
  ஐயா
  அருமையான குறும்படம்... அதற்கான விளக்கமும் நன்று ..வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. கிராமத்துக்காட்சிகள் ரசிக்கவைத்தன..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. ம்ம்.. ஆவியடிச்சு பார்த்திருக்கேன் ஆனா.. ஹஹஹா.. செம்ம காமெடி.

  ReplyDelete
  Replies
  1. ஆவி ரசித்த படம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. அருமையான குறும்படம்... நன்றி...

  விமர்சித்த விதமும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. குறும்படம் நன்றாக இருந்தது. உங்கள் விமர்சனம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. விமர்சனமும் படமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா.

   Delete
 10. அருமையான குறும் படம் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 11. நாமே அந்த கிராமத்திற்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. அருமையான கற்பனை. எதிர்பார்க்க முடியாத முடிவு. காணொளி சிறப்பாகவே ரஸிக்கும் படியாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. கடுகு சிறிது என்றாலும் காரம் உள்ளது! குறும் படம் சாரம் உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. அருமையான குறும்படம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. குறும்படம் மிக அருமையாக இருந்தது. தேன்மொழி பேய் என்றதும் பாண்டியைப் பார்க்க பாவமாய் இருந்தது. இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டும்படி செய்தது உங்கள் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 15. PADAMUM ARUMAI. PADATHIN MUGA VIMARSANAMUM MIGA MIGA ARUMAI. VAAZHTHUKKAL

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபரமணியன்.

   Delete
 16. மோகினி பிசாசு ,மோகினி பிசாசு னு சொல்றாங்களே
  அது இது தானா?டெரர் காமெடி #சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   உங்களது முதல் வருகைக்கு நன்றி.....

   Delete
 17. Kurumbadaththin muduvu yedhirparadha vidhaththil irundhadhu. Giramaththukkatchigal arumayaga padam pidikkappattu irundhana.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....