எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 7, 2011

அண்மையில் விரிந்த அருமையான வலைப்பூ
இரண்டு  வாரங்களுக்கு முன் தில்லியின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இருக்கும் ஒரு சமுதாயக் கூடத்தில் ஒரு கல்யாண வரவேற்பு.  என்னையும் குடும்பத்துடன் அழைத்திருந்தார்கள்.  நானும் இன்னொரு நண்பரும் சென்றிருந்தோம். 

கடற்படை இசைக்குழுவின் இனிமையான இன்னிசையோடு மாலை ரம்மியமாக இருந்தது.  நான் எழுதப்போவது இந்த வரவேற்பில் இருந்த அற்புதமான உணவு பற்றியோ அந்த இடத்தின் பெருமை பற்றியோ இல்லை.  ஆனால் நான் சந்தித்த ஒரு மூத்த ஆசிரியர் பற்றி. 

சென்னையின் பொன்னேரி பகுதியில் ஒரு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மூத்த தமிழாசிரியர் அந்த கல்யாண வரவேற்பிற்கு வந்திருந்தார்.  அவரிடம் என்னை ”இவர் தமிழில் வலைப்பூ வைத்திருக்கிறார், நிறைய எழுதுகிறார்!” என்றெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அறிமுகம் செய்து விட்டு என்னுடைய நண்பர் வேறு வேலையாக சென்று விட அவருடன் அளவளாவிக் கொண்டு இருந்தேன்.

தமிழாசிரியர் என்பதால் நிறைய தமிழில் வார்த்தை விளையாட்டுகளைச் சொல்லி தமிழின் சிறப்பு பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார்.  அவர் சொன்ன ஒரு வார்த்தை விளையாட்டு கீழே:

”பணியில் இருக்கும்போது அவரது பள்ளியை வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்தார்களாம்.  அந்த இடம் Sub-Treasury பக்கத்தில் இருக்கிறது என்று மட்டும் தான் தெரியும், Sub-Treasury-க்கு எப்படிச் செல்வது எனத் தெரியவில்லை என அவருடன் பணிபுரியும் மற்றொருவர் சொல்ல, அது தன்னைத்தானே சுய அறிமுகம் செய்து கொள்ளும், கவலைப்படேல்!” என்று இவர் சொன்னாராம்.  அவருடைய நண்பருக்குப் புரிந்ததோ இல்லையோ, எனக்குப் புரியவில்லை. 

அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் நான் பார்க்க, ”Sub-Treasury-க்கு தமிழில் என்ன?” என்றார்.  நானும் ”சார்நிலைக் கருவூலம்” எனச் சொன்னேன்.  அதிலேயே பதில் இருக்கிறது என்றார்.  “சார், நில், ஐ [I], கருவூலம்” எனப் பிரித்து, பார்தீர்களா, ”சார்” என விளித்து, ”நான் தான் கருவூலம்” என தன்னையே சுய அறிமுகம் செய்து கொள்கிறது என்றாராம்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் நல்ல பாண்டித்வம் பெற்றிருக்கிறார்.  எந்த மொழியாகினும் அதனை ஆழ்ந்து ரசித்தால் மட்டுமே அதனை நன்கு உபயோகிக்க முடியும் இல்லையா?  கல்யாணத்திற்கு அழைத்துப்  போக முடியாமல் போனால் நாம் என்ன சொல்வோம், “கொஞ்சம் வேலையிருந்தது, வெளியூர் போய் விட்டேன்” என்று ஏதாவது சொல்லி சமாளிப்போம். 

அவர் சொன்னார், “எனக்கு உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வரக்கூடாது என்ற “Intention” கிடையாது, “In Tension” வர முடியவில்லை.  எனக்கு சில பிரச்சனைகள், அந்த Tension-ல் வர முடியவில்லை என்பதை அழகாய் இப்படி சொல்லலாமே….”

இது போல நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக்கொண்டு இருந்ததில் கவனித்தேன்.  அவைகளுடன்  கதைகள், கவிதைகளையும் கூட தன் கைப்பட எழுதி வைத்திருக்கிறாராம்.  பல இலக்கிய அமைப்புகளில் இருந்தாலும் வலைப்பூ என்பது தனக்கு புதிது என்றும், அப்படியென்றால் என்ன, அதை எப்படி ஆரம்பிப்பது  என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்க நானும் விளக்கமாகச் சொன்னேன். 

கூடிய விரைவில் தானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து விடுகிறேன் என அவர் சொல்லவும் "சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்" என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.  மூத்த தமிழாசிரியர், நிறைய விஷய ஞானம் உடையவர் என்பதால், இவர் போன்றவர்கள் வலைப்பூக்களில் எழுதினால் நாமும் நல்ல பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணமே இதற்குக் காரணம். 

நேற்று அவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு.  அவரது மகனின் உதவியுடன் ஒரு வலைப்பூ ஆரம்பித்து விட்ட சந்தோஷ செய்தியை சொன்னார்.  அவரது வலைப்பூ முகவரி www.kanakkayan.blogspot.com.  [கணக்காயன் என்பது அவரது புனைப்பெயர்]. ஆரம்பித்த உடனேயே, தன்னுடைய கவிதைகள், அறிமுகம் என்று மள மளவென்று 15 இடுகைகளை இட்டு விட்டார்.  வலையுலக நண்பர்களே, அவரது பக்கத்திற்குச் சென்று படித்து கருத்துரைகளை வழங்கி வரவேற்கும் படி விண்ணப்பிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.
புது தில்லி.


76 comments:

 1. மணம் வீசி மலர்ந்து விகசித்திருக்கும்
  பொன் மலர் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. நல்லதொரு வலைப்பதிவை அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. @ வே. சுப்ரமணியன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகம். நன்றி

  ReplyDelete
 6. அட... நல்லதொரு வலைப் பதிவரை அடையாளம் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி...

  ReplyDelete
 7. :))
  இப்படித்தான் பிடிச்சுப்போடனும் எல்லாரையும் உள்ள..

  ReplyDelete
 8. அன்புள்ள வெங்கட்,

  நல்லதொரு, நகைச்சுவையாகப்பேசும் தமிழ் ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவருக்கு அறிமுகமாக என் பின்னூட்டம் கொடுத்துள்ளேன். அவர் வலைப்பூவில் என்னை FOLLOWER ஆக்கிக்கொண்டுள்ளேன்.

  vgk

  ReplyDelete
 9. அறிமுகத்திற்கு நன்றி! :-)

  ReplyDelete
 10. அப்படியா.இதோ போறேன் அங்கும்.

  ReplyDelete
 11. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. ””அவர் சொன்னார், “எனக்கு உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வரக்கூடாது என்ற “Intention” கிடையாது, “In Tension” வர முடியவில்லை. எனக்கு சில பிரச்சனைகள், அந்த Tension-ல் வர முடியவில்லை என்பதை அழகாய் இப்படி சொல்லலாமே….”””””

  மிகவும் ரசித்தேன் நண்பரே
  உங்கள் நல்ல மனம் வாழ்க
  நாடு போற்ற வாழ்க.......

  ReplyDelete
 13. வித்தியாசமான புது பதிவர் அறிமுகம்.மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. நன்றி வெங்கட் ஒரு நல்ல வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு.இப்பொழுதே போய் படிக்கிறேன்.

  ReplyDelete
 15. sub-treasuryக்கு இதான் தமிழா? உங்கள் தமிழறிவும் எத்தனையோ உயரத்தில் இருக்கிறதே வெங்கட் நாகராஜ்!

  ReplyDelete
 16. அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 17. நல்ல தொரு வலைப்பூ அறிமுகம் செய்ததற்கு நன்றி

  ReplyDelete
 18. அறிமுகத்திற்கு நன்றி. நானும் விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும் போது ' ஒரு வலைப்பூ ஆரம்பியுங்களேன்" என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 19. நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க...நல்லா எழுத தெரிந்தவர்கள் இன்னும் வெளிப்படாமல் இருக்கிறார்கள்...நமக்கு தெரிந்திருந்தால் அவர்களையும் பிளாக்கில் எழுத வைக்க வேண்டும்...

  உங்களின் இத்தகைய செயலுக்கு என் பாராட்டுகள்.

  அவசியம் அவர் பிளாக் சென்று படிக்கிறேன்...தொடருகிறேன். நன்றிகள்.

  ReplyDelete
 20. அறிமுகத்திற்கு நன்றி வெங்கட்.

  அவரை எழுத தூண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  அவரது எண்ணங்கள் ரோஜா மலர் போல் மணம் பரப்பட்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. மோகன் குமார் [மின்னஞ்சல் மூலம்] புது வலை பதிவரை ஊக்குவித்து வலைபூ ஒன்றை துவங்க வைத்தமைக்கு வாழ்த்துகள் வெங்கட்

  (அலுவலகத்தில் இருந்து உங்கள் ப்ளாகில் கமன்ட் போட முடியலை )

  ReplyDelete
 22. புதிய வலைப்பூ பிறக்கக் காரணமாக இருந்திருக்கிறீர்கள்.
  போய்ப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 23. நல்ல வலைப்பூவை அறிமுகம் செய்யும் உங்கள் பூ மனதிற்கு நன்றி

  ReplyDelete
 24. @ உயிரோடை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் வலைப்பூவில் உங்களது கருத்துரை.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லாவண்யா...

  ReplyDelete
 25. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், புதிய வலைப்பதிவரை ஆதரிப்பதற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. @ முத்துலெட்சுமி: //இப்படித்தான் பிடிச்சுப் போடணும்...// :) ஏதோ நம்மால ஆனது!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 27. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், திரு கணக்காயன் அவர்களை தொடர்வதற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ RVS: வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மைனரே....

  ReplyDelete
 29. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 30. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ AR ராஜகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  //நல்ல மனம் வாழ்க!// :)

  ReplyDelete
 32. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 33. @ திண்டுக்கல் தனபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 34. @ ராம்வி: தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

  ReplyDelete
 35. @ அப்பாதுரை: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 36. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.. அவரது வலைப்பூவினை தொடர்வது கண்டு மகிழ்ச்சி...

  ReplyDelete
 38. @ ரூஃபினா ராஜ்குமார்: தங்களது முதல் வருகை? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ கௌசல்யா: உண்மை...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 41. @ DrPKandasamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...

  ReplyDelete
 42. @ மோகன்குமார்: மின்னஞ்சல் மூலம் கருத்தினைச் சொன்னதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 43. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 44. @ ஷைலஜா: //நல்ல வலைப்பூவை அறிமுகம் செய்யும் உங்கள் பூ மனதிற்கு நன்றி// :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.....

  ReplyDelete
 45. நல்லதொரு வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 46. @ ராஜி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி...

  ReplyDelete
 47. ஆர்வமூட்டும் பதிவு..
  இதோ அவரது வலைமனையில் 'தொடரன்'(follower) ஆகிவிட்டுத்தான் மறுவேலை.. .

  ReplyDelete
 48. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: ஆர்வமூட்டும் பக்கம்தான். தொடருங்கள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 49. அன்பு சகோ...

  நலம்.

  அப்பா,அம்மா, ஆதி, ரோஷிணி மற்றும் தங்கள் நலனுக்கு எமது பிரார்த்தனை நேரத்தில் இடமுண்டு.
  தங்கள் அறிமுகத்தில் 'கணக்காயன்' வலைப்பூ நுகரக் கிடைத்தது. தங்கள் வலைப்பூக்கள் போலவே அதிலும் எனது கருத்துரைகளை பதிவிட முடியவில்லை.

  ரோஷிணியின் வலைப்பூவில் உள்ள வரைபடங்கள் பிரமாதம்! சமீபத்திய கசின் படம் வெகு அழகு. பந்தும், குடையும், பிறந்தநாள் விழா படமும் கூட ரசித்தேன். கசின் படத்தில் அந்தக் கண்களும் தலை அமைப்பும் அசத்தலாக இருந்தது.

  ReplyDelete
 50. புதியதோர் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி..

  ReplyDelete
 51. நல்ல அறிமுகம். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 52. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 53. @ நிலாமகள்: மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தங்களது கருத்திற்கு மிக்க நன்றி சகோ. உங்களால் என் வலைப்பூவில் கருத்திட ஏன் முடியவில்லை எனப் புரியவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 54. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 55. @ கே.பி.ஜனா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 56. @ ரத்னவேல்: மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 57. நன்றி நண்பரே...நான் அவர் வலைப்பூவில் தொடர்பவர் "கணக்கைத்" துவங்கிவிட்டேன்.

  ReplyDelete
 58. @ கலாநேசன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை.. எல்லாம் நலம்தானே சரவணன்...

  அவரது வலைப்பூவினையும் தொடர்வர்தற்கு நன்றி.

  ReplyDelete
 59. நன்றி! நன்றி! நன்றி!

  www.esseshadri.blogspot.com இந்த வலைப்பூவினையும் பாருங்களேன்-இதுவும் ஒரு புது வரவு!
  கணக்காயன்

  ReplyDelete
 60. நன்றி! நன்றி! நன்றி!

  www.esseshadri.blogspot.com இந்த வலைப்பூவினையும் பாருங்களேன்-இதுவும் ஒரு புது வரவு!
  கணக்காயன்

  ReplyDelete
 61. @ இராமன் இ.சே.: தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

  நீங்கள் சொன்ன வலைப்பூவினைத் தொடர ஆரம்பித்தேன்... மிக நன்றாக இருக்கிறது அவர் கவிதைகள்.... அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 62. புதிய பதிவர் அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 63. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 64. நன்றி வெங்கட்.
  வெகு அபூர்வமான நபரைத் தேடி பிடித்து அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 65. eppadi thamizhil ezhudhuvadhu aatrupaduthungal srinidhi

  ReplyDelete
 66. தமிழ் சுவையாற இன்னொரு தளம்
  நன்றி அறிமுகத்திற்கு

  ReplyDelete
 67. வாழ்த்துக்கள் சகோதரம் நானும் பார்க்கிறேன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

  ReplyDelete
 68. @ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிவகுமாரன்....

  ReplyDelete
 69. @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: படித்தேன் - படி தேன்... ஆஹா.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 70. @ தழலன்: தங்களது முதல் வருகை? தமிழில் எழுத அழகி, NHM writer போன்ற மென்பொருட்கள் இருக்கின்றன. உதவி தேவையெனில் சொல்லுங்கள்....

  தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 71. @ அ. வேல்முருகன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 72. @ ம.தி. சுதா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 73. அறிமுகத்துக்கு நன்றி

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....