சனி, 10 டிசம்பர், 2011

ராம் ராஜா மந்திர்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-23] 
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22) 


சாதாரணமான கணவன் – மனைவிக்குள் மட்டும்தான் கருத்து வேறுபாடு இருக்குமா?    சிவபெருமானுக்கும் பார்வதிக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றி நாமெல்லாம் திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது ராஜா – ராணி மட்டும் விதிவிலக்கா என்ன?  அப்படி ஒரு ராஜா-ராணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாய் தோன்றியது தான் இந்த ராம் ராஜா மந்திர்.

சென்ற பகுதியில் புந்தேலா ராஜாங்கம் பற்றி சொல்லியிருந்தேன்.  அந்த ராஜாங்கத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு ராஜா மதுகர் ஷா.  தீவிரமான கிருஷ்ண பக்தர்.  வருடா வருடம் மதுரா சென்று கிருஷ்ணபகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தவர்.  எது தவறினாலும் தவறும் ராஜா மதுகர் ஷா மதுரா செல்வது மட்டும் தவறாது.
ராணி கணேஷ் குவா[ன்]ரி ராம பக்தை.  வருடம் ஒருமுறையாவது அயோத்யா செல்ல வேண்டும் என நினைத்து அதைக் கடைப்பிடித்தும் வருபவர்.   மதுரா செல்வதை விட அயோத்யா செல்வதையே விரும்புபவரும் கூட. 

இப்படி ராஜா-ராணி இருவரும் இரு துருவங்களாக இருக்க, ஒரு முறை ராஜா மதுரா கிளம்ப யத்தனிக்கும்போது ராணியையும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார்.  எப்போதும் போலவே ராணி மறுத்து தான் ராஜாவுடன் மதுரா வர விரும்பவில்லையென்றும் அயோத்யா செல்ல விரும்புவதாகவும் சொல்கிறார். 

ராஜாவுக்கு பயங்கர கோபம். அவருடைய வார்த்தையை வேறு யாராவது கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார்.  ஆனால் சொன்னது பட்டத்து ராணியாயிற்றே.  இருந்தாலும் எதாவது தண்டனை தரவேண்டும் என்று நினைத்தவர் ”நான் மதுரா செல்கிறேன்.  நீ அயோத்யா செல்! திரும்ப வரவேண்டும் என நினைத்தால் உன்னுடைய ஆத்ம தெய்வம் ராமனுடன் திரும்பி வா!” என்று கோபமாக சொல்லிவிட்டு மதுரா சென்று விட்டார்.

ராணிக்கு தனது ராமனின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. நிச்சயம் தன்னுடன் அவர் ஓர்ச்சா வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தோழிகள் புடை சூழ தன்னுடைய மாளிகையிலிருந்து ரதத்தில் கிளம்பி அயோத்யா வந்து சேருகிறார்.  அங்கே ராமனை தரிசித்து தன்னுடன் ஓர்ச்சா வந்துவிடும்படி சொல்ல, அதற்கு பதிலேதுமில்லை.  ஆனாலும் துவண்டு போய்விடாமல் அயோத்யா நகரின் சரயு நதிக்கரையில் ராமனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.

நாட்கள் ஓடின .  ராமனின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நீண்ட காலம் தவமிருந்தும் ராமன் பிரத்யட்சமாய் தரிசனம் தராததால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் ராணி கணேஷ் குவா[ன்]ரி.  ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதியில் பாய்ந்து விட எத்தனிக்கும்போது ராமன் ஒரு சிறுவன் வேடம்பூண்டு ராணியின் முன் தரிசனம் தருகிறார். 

தரிசனம் தந்ததுடன் நில்லாமல் சிறுவன் உருவத்திலேயே ஓர்ச்சாவில் கோவில் கொள்ளவும் சம்மதிக்கிறார் – ஒரு சிறிய நிபந்தனையோடு.  அது – 'ஓர்ச்சா சென்றபின் எங்கு முதலில் அமர்கிறேனோ  அங்கேயே கோவில் கொள்வேன்' என்பது தான்.  ராமன் தன்னுடன் வரச் சம்மதம் சொன்னவுடன் ராஜா மதுகர் ஷாவிற்கு முன்தகவல் அனுப்பி ராம்ராஜாவிற்கான கோவிலை தயார் செய்யச் சொல்கிறார்.  ராஜாவும் “சதுர்புஜ் மந்திர்” என்ற கோவிலை நிர்மாணிக்கிறார். 

ராணி கணேஷ் குவா[ன்]ரி ஓர்ச்சா நகரத்தினை வந்தடையும் போது சதுர்புஜ் மந்திரில் இன்னும் ஒரு நாள் வேலை பாக்கி இருந்திருக்கிறது.  ஆகவே ராணி தன்னுடைய அரண்மனையிலேயே சிறுவன் ராமனை உட்கார வைக்கிறார் – அவரின் நிபந்தனையை மறந்து. அடுத்த நாள் சதுர்புஜ் மந்திர் தயாராகிவிடவே அவரை அங்கே பிரதிஷ்டை செய்ய நினைக்க, சிறுவன் ராமனை அசைக்கவே முடியவில்லை.

அதனால் தன்னுடைய அரண்மனையையே ராமனுக்கு ”ராம்ராஜா மந்திர்” என்ற கோவிலாக்கி விட்டு வேறு மாளிகைக்குக் குடியேறுகிறார் ராணி.  இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில்.  சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் இருந்து சாரிசாரியாக வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!

மீண்டும் ஒரு ஓவியப் பகிர்வில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்


52 கருத்துகள்:

 1. மிக அற்புதமான தகவல்கள்.இந்தியாவிற்கு எவ்வளவு சிறப்பான வரலாறு இருக்கு என்பது புரிகிறது உங்கள் பதிவுகளிலிருந்து.மிக்க நன்றி வெங்கட் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா.. ராணியின் பக்தி அதிசயமான கதை. ராம்ராஜாவிற்கு ஜே.

  பதிலளிநீக்கு
 3. @ ராம்வி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  நீங்கள் சொல்வது போல நிறைய விஷயங்கள் நம் தாய்திருநாட்டில் பொதிந்து கிடக்கிறதுதான்....

  பதிலளிநீக்கு
 4. @ ரிஷபன்: ஆமாம் அபரிமிதமான பக்தி தான் ராணிக்கு...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சுற்றுலா சுகமுடன், வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 6. @ MANO நாஞ்சில் மனோ: சரி நண்பரே... :)

  நாகராஜன் என் அப்பாவின் பெயர்.. என்னை வெங்கட் என்றே அழைக்கலாம்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. புதிய தகவல்.....இனிமையாய் கூறி உள்ளீர்கள்...நேரம் கிடைத்தால்....தரிசிக்கிறேன்....நன்றி..!!

  பதிலளிநீக்கு
 8. @ அப்பாஜி: நேரம் கிடைத்தால் பாருங்கள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாஜி!

  பதிலளிநீக்கு
 9. புதிய தகவல் அன்பரே, அருமையான சொல்நடையில் ரசித்தேன். நன்றி

  பதிலளிநீக்கு
 10. தமிழ்மணம் 4 இன்ட்லி 4 யூடன்ஸ் 6

  நல்ல அருமையான தகவல்கள் தான். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. தெரியாத புதிய தகவல்! தெரிவித்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. ஆகா அரண்மனையின் முகப்புத் தோற்றமும்
  அதன் வரலாற்றுக் கதையும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள் த.ம 6

  பதிலளிநீக்கு
 13. இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில்./

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 14. ராணியின் பக்தி வியப்பூட்டுகிறது. சுவாரஸ்யமான நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 15. @ A.R. ராஜகோபாலன்: தங்களது வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் வாக்குகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

  பதிலளிநீக்கு
 18. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 19. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @ கே.பி. ஜனா: உண்மை.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 22. நல்ல தகவல். நீங்கள் சொன்ன அனைத்து இடங்களையும் பார்க்க மனம் விழைகிறது. உடல் மறுக்கிறது. என் செய்வேன் பராபரமே?

  பதிலளிநீக்கு
 23. DrPKandaswamyPhD: ”என் செய்வேன் பராபரமே?” எப்போது முடியுமோ அப்போது செல்ல முயலுங்கள் ஐயா...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. மிக அருமையான வரலாற்றுக் கதை.சுவை படச் சொல்லியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 25. நீங்க கொடுத்து வச்சவர் சகோ. எல்லா இடங்களையும் சுத்தி பார்க்குறீங்க

  பதிலளிநீக்கு
 26. கோவிலுக்கு பின் இருக்கும் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 27. உங்கள் பதிவின் மூலம் எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது..
  பகிர்விற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 28. ராஜா ”கிருஷ்ணர்” போல பல மனைவியருடன் இருக்கலாம் என்று அவர் பக்தர் ஆகியிருப்பார். ராணியோ அவர் ராமராக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்த கோவில் கட்டினாரோ? -:)

  பதிலளிநீக்கு
 29. மஹாபாரதத்தில் முக்கிய நிகழ்வுகளோடு நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் அரிய தத்துவங்களோடு நிரவிக் கிடக்கும். அதுபோல, உங்கள் பயணக் கட்டுரை நிறைய தகவல்களை அழகாக அள்ளிக் கொடுக்கிறது. வாழ்க!

  பதிலளிநீக்கு
 30. ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!//

  ராம்ராஜாவின் அருள் பெற்றோம் மகிழ்ச்சி . நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 31. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  பதிலளிநீக்கு
 32. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி: கையைப் பிடித்துக் கொண்டு வருகிறீர்களா? சரி...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @ துரை டேனியல்: உண்மை நண்பரே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 34. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.....

  பதிலளிநீக்கு
 35. @ மோகன்குமார்: ஒவ்வொரு கோவிலுக்குப் பின்னரும் எத்தனை எத்தனை கதைகள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்....

  பதிலளிநீக்கு
 36. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....

  பதிலளிநீக்கு
 37. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //ராணியோ அவர் ராமராக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்த கோவில் கட்டினாரோ? -:)// இருக்கலாம்...

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா....

  பதிலளிநீக்கு
 38. @ திண்டுக்கல் தனபாலன்: உங்களது கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 39. @ ஈஸ்வரன்: ஆஹா சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை....

  ரொம்ப புகழாதீங்க அண்ணாச்சி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  பதிலளிநீக்கு
 40. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 41. அப்பாடி இப்படியொரு பக்தியா?அந்த படத்தில் வாயிலில் ஒரு காவலாளி முதுகுக்கு பின்னாலே அறிவால உருவுற மாதிரி செய்றாரே !

  பதிலளிநீக்கு
 42. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: படத்தில் இருப்பவர் ஒரு போலீஸ்காரர். பின்னால் துப்பாக்கி மாட்டி இருக்கிறார்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. அன்புள்ள வெங்கடிற்கு,

  மத்திய பிரதேசம் -இருபத்திமூன்றில், "ராம் ராஜா மந்திர்" உடைய பூர்வீகக் கதையை எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி, நம் நாட்டில்
  இப்படி ஓவ்வொரு, மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்திற்கும் ஒரு கதை இருக்கிறது போலிருக்கிறது, ஆனால் நாம் தெரிந்து கொள்ளும்
  வாய்ப்பு தான் மிகக்குறைவு, இதை போன்ற சந்தர்பங்கள் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது.

  இப்படிக்கு

  கலை.

  பதிலளிநீக்கு
 44. @ கலையரசி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கலை...

  பதிலளிநீக்கு
 45. வித்தியாசமான வரலாறு தெரிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 46. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.....

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....