எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 30, 2011

எங்கெங்கு காணினும் பூச்சியடா!


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-25]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24) 


ஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம்.  ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது. 

உத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம்.  கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல்.  அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன.  அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான்.  தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.ஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு.  நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது.  ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள்.  இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.

அதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள்.  அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல.  நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது.  அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். 

அப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார்.  இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார்.  நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.  நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார்.  அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம். 

நிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள்.  அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை.  மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார்.  நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம்.  நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது.  அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம். 

மறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள்.  அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்... தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா!  இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள்.  மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம். 

வெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள்.  மேலும்  பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…

நாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம்.  அவை பற்றி அடுத்த பகிர்வில்…..

மீண்டும் சந்திப்போம்….

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி-1: பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை :)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


32 comments:

 1. பூச்சிகளும் புனிதமானவை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.............
  நல்ல பகிர்வு அன்பரே

  ReplyDelete
 2. @ A.R. ராஜகோபாலன்: இருக்கலாம் நண்பரே.... தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 3. பூச்சி தொல்லை ஜாஸ்தி இங்கேயும்...அதனால தான் மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு இதையே படிச்சேன்னாக்கும்!

  ReplyDelete
 4. @ ”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி: அட ஓர்ச்சா நகரத்து பூச்சிகள் திருவானைக்கோவில் வரை வந்தாச்சா!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. மழைக் காலத்தில் எங்கள் ஊரிலும் இருக்கும் .. ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கில்லை..

  ReplyDelete
 6. பூச்சிகள் இல்லாத இடம் பூலோகத்தில் ஏது?

  சீட்டாட்ட ரம்மியில் மட்டும் பூச்சிகள் வந்தால் அதை நாம் மிகவும் ரஸித்து வரவேற்கிறோமே! அது ஏன்? ;)

  நல்ல பதிவு. பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 7. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அனைத்து ஊர்களிலும் இருக்கும்தான்.... ஆனால் இந்த ஊரில் ரொம்ப அதிகம்.... லட்சக்கணக்கில் வந்துவிடுகிறது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 8. @ வை. கோபாலகிருஷ்ணன்: உண்மை தான்... சீட்டாட்டத்தில் வந்தால் சந்தோஷம்.... சாப்பாட்டில் வந்தால்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. அறியாத தகவல்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 10. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. பூச்சிகளைப் பற்றி அறியாத தகவல் நன்றி....!!!!

  ReplyDelete
 12. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 13. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கும் தான் மனோ.....

  ReplyDelete
 14. வித்தியாசமான தகவல்கள் தருகிறீர்கள் நண்பரே.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 17. நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 18. எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 19. ஆயிரக்கணக்குல பூச்சிகளா.. அங்கே இருக்கறவங்க பாடு கஷ்டம்தான்..

  ReplyDelete
 20. [புத்தாண்டு வாழ்த்துக்கள்]

  ReplyDelete
 21. புதிய மற்றும் நான் அறியாத தகவல்...புத்தாண்டுவாழ்த்துகள் தங்களுக்கு!

  ReplyDelete
 22. @ இராஜராஜேஸ்வரி:

  வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 23. @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 24. @ அமைதிச்சாரல்: ஆயிரக்கணக்கில் அல்ல... பல்லாயிரக்கணக்கில் பூச்சிகள்...

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 25. @ அப்பாதுரை: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 26. @ ஷைலஜா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 27. மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

  ReplyDelete
 28. ஜபல்பூரில் இருந்தப்போ சாயங்காலம் ஆனா இப்படி பூச்சிகள் தொல்லை நிறையவே இருந்தது. உங்க பதிவு படித்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. //பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை//

  நீங்கள் ஆடிய(?) கிராமிய நடன புகைப்படம் போடாததும் அதே காரணம் தானோ?

  ReplyDelete
 30. @ மஞ்சுபாஷிணி: தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.....

  ReplyDelete
 31. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 32. @ ஈஸ்வரன்: //நீங்கள் ஆடிய(?) கிராமிய நடன புகைப்படம் போடாததும் அதே காரணம் தானோ?//

  அட சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே.... ஒரு உண்மை சொல்றேன் - புகைப்படம் எடுத்தா காமிராவே பழுதாயிடும்னு யாரும் எடுக்கல :))))

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....