எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 28, 2011

ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது... பகுதி-21]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20)


ஓர்ச்சா நகரம் முழுவதுமே பழமை குடிகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அரண்மணைகள், மஹால்கள், சத்ரி என்றழைக்கப்படும் குடைகள்.  அவற்றின் பின்னே பெரும் கதைகள் இருக்க வேண்டும்.  அதையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாய் அங்கே மாலையில் மத்தியப்பிரதேச சுற்றுலாத்துறை ஒலி-ஒளி மூலம் தினமும் இந்த ஊரின் பின்னே இருக்கும் கதைகளை நமக்குத் தருகிறார்கள். 

ஓர்ச்சா என்றால் ”மறைந்திருக்கும் இடம்” என்ற பொருள்.  ராஜா ருத்ர பிரதாப் ஒரு முறை வனத்தில் வேட்டையாட வந்திருக்கும்போது வழி தவறி, தட்டுத் தடுமாறி வருகிறார்.  தண்ணீர் வேட்கையுடனும் சோர்வுடனும் வந்த போது அவருக்கு வழியிலே ஒரு முனிவரின் இருப்பிடம் தெரிய, அங்கே வந்து அடைக்கலம் ஆகிறார். அந்த இடத்தினைப் பார்த்ததில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.  


பக்கத்தில் கரை புரண்டு ஓடும் ”பேத்வா” [BETWA] நதி.  சுற்றிலும் நல்ல மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடம்.  இந்த இடத்திலேயே ஒரு நகரத்தினை நிர்மாணிக்க வேண்டும் என நினைத்து, அந்த நகரத்திற்கு ஒரு பெயரைச் சூட்டும்படி முனிவரிடம் வேண்ட, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இன்று படுத்து உறங்குங்கள்” எனச் சொல்லி விட்டாராம். 

அடுத்த நாளை காலையில், திரும்பவும் பெயர் சூட்டல் பற்றி நினைவு படுத்த, " நான் பெயர் வைக்க மாட்டேன், ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், இன்று நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள், செல்லும் வழியில் உங்கள் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையை மூலமாக வைத்து நீங்கள் நிர்மாணிக்கும் நகரத்தின் பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ” என்றாராம். 

அப்படிச் செல்லும் போது வழியில் ஒரு மான் தென்பட, அதைப் பிடிக்க தன்னுடைய வேட்டை நாயை “ஊர்ச்” என்று ஏவினார்.   அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை.  அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா…  அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது. 


ராஜா ருத்ர பிரதாப் சிங் காலத்தில் உருவாக ஆரம்பித்த நகரம், அது முடியும் முன்னரே அவரின் எதிர்பாராத இறப்பினால் சற்று தடைப்பட்டாலும் தொடர்ந்தது.  ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க அடுத்தடுத்த ராஜாக்கள் காலத்தில் நகரம் உருவானது.  பல ராஜாக்கள் நிறைய கட்டிடங்களை நிர்மாணித்தனர். 


ராஜா பீர் சிங் தியோ காலத்தில் நிறைய மாளிகைகள் உருவாக்கப்பட்டன.  ஷீஷ் மஹால் [முந்தைய பகுதியில் பார்த்தது], ஜான்சி கோட்டை என பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.  ஜஹாங்கீர் மஹால் என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீர் இந்த இடத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்று தங்க வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒன்று.  இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் பிரம்மாண்டமான மரக் கதவுகளின் மேல் இருக்கும் இடத்தில் இரண்டு யானைகளின் சிலைகள் அழகாய் இருக்கின்றன. 


புந்தேல்கண்ட் ராஜா-ராணிகளின் சத்ரிகள் [குடைகள்] என சொல்லப்படும் சமாதிகள் நகரம் முழுவதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன.  எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் கதைகள் நிறைய.  அவற்றை எல்லாம் சொல்ல இன்னும் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.   


சொல்லிக் கொண்டு வந்த கதைகளில் ஒரு முக்கிய விஷயமாக ராய் ப்ரவீன் மஹால் உருவான கதையை எல்லோரும் ரசித்தார்கள்.  இந்த மஹால் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் “எப்படி இருந்த நீ்  இப்படி ஆயிட்டேயே” என்று தோன்றியது உண்மை.  அப்படி என்ன அதற்குப் பெருமை என்று கேட்பவர்களுக்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்.  நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும். 

ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம். 

நன்றாக இருந்த அந்த காட்சிகளை ரசித்து முடித்து அங்கிருந்து கிளம்பினோம்.  ஒலி-ஒளி மூலம் சொல்லப்பட்ட கதையில், ராய் ப்ரவீன் மஹால் உருவான கதை, ராம் ராஜா மந்திர் உருவான கதை ஆகியவற்றை மட்டும் அடுத்த இரு பகுதிகளில் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.

45 comments:

 1. அருமையான தகவல்கள். ‘ஊர்ச்’ ‘ஓர்ச்சா’ ஆன கதை அருமை.
  படங்கள் மிக அழகாக எடுத்துக் கொடுத்திருக்கீங்க வெங்கட்.
  அடுத்த பதிவுகளில் நீங்க சொல்லப்போகும் கதைகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. @ ராம்வி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 3. ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம். /

  nice..

  ReplyDelete
 4. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. அருமையான தகவல்கள்... அழகான படங்கள் ...நன்றி வெங்கட்...

  ReplyDelete
 6. படங்கள் தேர்ந்த புகைப்படக்காரர் எடுத்தது போல் உள்ளது. அசத்துறீங்க வெங்கட்

  ReplyDelete
 7. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 8. @ மோகன்குமார்: தங்களது பாராட்டுதல்களுக்கு நன்றி மோகன். ஏதோ தெரிந்த அளவுக்கு எடுக்கிறேன்.. :) டிஜிட்டல் கேமராவின் கைவண்ணம்....

  ReplyDelete
 9. //ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம். //

  நான் இதுபோலவே ஹைதராபாத்தில், [கோபண்ணா என்ற இராமதாஸரை சிறைவைத்த நிஜாம் அரண்மனையில்], காட்டப்பட்ட ஒளி-ஒலி கண்காட்சியைக் கண்டு அசந்து போனேன்.

  அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  தமிழ்மணம் 3, இண்ட்லி 3, யுடான்ஸ் 3 vgk

  ReplyDelete
 10. // வெங்கட் நாகராஜ் said...

  @ மோகன்குமார்: தங்களது பாராட்டுதல்களுக்கு நன்றி மோகன். ஏதோ தெரிந்த அளவுக்கு எடுக்கிறேன்.. :) டிஜிட்டல் கேமராவின் கைவண்ணம்.... //

  கேமராவுக்கு கை இருக்குதா ?
  இல்லை நீங்க சொல்ல வந்தது 'கேமரா வண்ணம்' ?

  ReplyDelete
 11. @ வை. கோபாலகிருஷ்ணன்: அட நீங்க ஹைதையில் பார்த்து இருக்கீங்களா? இங்கே தில்லியில் கூட இரண்டு இடங்களில் இருக்கிறது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: கைவண்ணம், கேமரா வண்ணம் - மை வண்ணம் என்ன வேணும்னா வைச்சுக்கலாம் :))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்...

  ReplyDelete
 13. """ ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க "" அந்த கால ராஜாக்களின் காருண்யம் கண்டு மெய் சிலிர்த்து போனேன் நண்பரே, நீங்கள் எடுத்த வாட்ய பியுட்டி படம் அபாரம், கட்டிடமே சாய்ந்திருப்பது போலான கோணம் அருமை.

  ReplyDelete
 14. @ A.R. ராஜகோபாலன்: சிலருக்குக் காருண்யம் - பல ராஜாக்கள் வேட்டையில் கொன்று குவித்திருக்கிறார்களே....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 15. நீலவிளக்கோடு மஹால் மிக அழகு..

  வாய்க்கு வந்தபடி பேருவைக்கிறதுங்கரது இதுதான் போல :)

  ReplyDelete
 16. @ முத்துலெட்சுமி: //வாய்க்கு வந்தபடி பேருவைக்கிறதுங்கரது இதுதான் போல :)// அதானே... :))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

  ReplyDelete
 17. எழுத்துக்கள் மருவி
  பல ஊர்களின் பெயர் மாறிப்போயிருக்கிறது...

  நீங்கள் ஒர்ச்சா விளைந்த விதம் கூறியது
  அருமையா இருந்துச்சு நண்பரே...

  ReplyDelete
 18. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 19. தில்லியில் ஒலியும் ஒளியும் பார்த்தேன்.. ஸ்வாமி நாராயண் மந்திரில்.
  படங்களும் தகவல்களும் அருமை.

  ReplyDelete
 20. @ ரிஷபன்: தில்லியில் பழைய கோட்டையில் கூட இருக்கின்றது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. எங்களையும் கையை பிடிச்சுட்டே கூட்டிட்டு போன ஃபீலிங், தொடர் அருமையா போயிட்டு, இருக்கு அடுத்து நான் ஊருக்கு லீவில் வரும்போது ஒரு பதிவர் டீம் கெளம்பி டெல்லி வருவோம்...!!!

  ReplyDelete
 22. @ MANO நாஞ்சில் மனோ: பதிவர் டீம்! :)))) வாங்க! ஒரு சந்திப்பு நடத்திருவோம்!!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே....

  ReplyDelete
 23. தங்கள் பதிவின் மூலம் பல தகவல்கள் அறிய முடிகிறது.ஒவ்வொன்றுக்கும் உண்டான விளக்கங்களை தெளிவாகக் கூறி இருக்கிறீர்கள்.நன்றி

  ReplyDelete
 24. @ ராஜி: தங்களது வருகைக்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி!

  ReplyDelete
 25. அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை. அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா… அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது.//

  ஓர்ச்சா பெயர் காரணம் தெரிந்து விட்டது.

  அடுத்து மஹால், மந்திர்கள் வரலாறூ அறிய ஆவல்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது வெங்கட்.

  ReplyDelete
 26. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 27. அருமையான விளக்கங்களோடு பதிவு..

  ReplyDelete
 28. இந்த மாதிரி இடங்களில் ஒலியும் ஒளியும் மூலம் பழைய பெருமையை விளக்குவது மிக நல்ல செயல்.
  அருமையான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 29. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  ReplyDelete
 30. அருமையானதொரு பெயர்க்காரணம்.. படங்களும் ரொம்ப அழகாருக்கு.

  ReplyDelete
 31. @ அமுதா கிருஷ்ணா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை என் பக்கத்தில். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ சென்னை பித்தன்: ஆமாம் ஐயா...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. @ திண்டுக்கல் தனபாலன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.. உங்களது பக்கத்திற்கு நானும் வருகிறேன்.....

  ReplyDelete
 34. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 35. @ அப்பாவி தங்கமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாவி....

  ReplyDelete
 36. அருமையான தகவல்கள்... அழகான படங்கள் ...நன்றி

  ReplyDelete
 37. ஒரிசாவின் பழைய கட்டிடங்கள் வியக்கவைக்கின்றது.

  ReplyDelete
 38. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.....

  ReplyDelete
 39. @ மாதேவி: //ஒரிசாவின் பழைய கட்டிடங்கள் // அது ஒரிசா அல்ல... ஓர்ச்சா! மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிறது.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 40. நேரில் பார்த்த வர்ணனையுடனும், படங்களுடனும் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 41. @ ராஜி: தங்களது தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 42. தவறைக் கண்டுகொண்டேன்.

  ReplyDelete
 43. @ மாதேவி: தவறு எனச் சுட்டிக் காட்டுவது எனது நோக்கமல்ல சகோ! தங்களது இரண்டாவது வருகைக்கு நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....