எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 17, 2011

என்ன விலை அழகே…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறதுபகுதி 19]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18)


இப்போதெல்லாம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களும், மருந்துகளும் நமக்கு கடைகளில் கிடைக்கின்றன. இவையெல்லாம் எப்படி தயாரிக்கப்படுகின்றன, இவற்றுக்கு என்ன மூலப் பொருள் என்று என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா நாம்? இதற்கான உங்களின் பதில்"நிச்சயமாக இல்லை" என்பதாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் நிறைய மருந்துகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுகிறது.   Herbal Products என்ற பெயரில் விற்கும் மருந்துகளை, வெளிநாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்களையும், மருந்துகளையும் வாங்குபவர்கள் நம்மில் எத்தனை எத்தனை பேர்இவற்றுக்கெல்லாம் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?


நம் நாட்டில் நிறைய மூலப் பொருட்களை   தயார் செய்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம்அந்த மூலப் பொருட்களைக் கொண்டு மருந்துகள், பொருட்கள் தயாரித்து அவற்றினை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்கிறார்கள்அதை நாமும் வாங்கிஎன்ன இருந்தாலும் வெளி நாட்டுக் காரன் வெளிநாட்டுக்காரன் தான்அவன் திறமையே திறமைஎன்று மெச்சிக் கொள்கிறோம்.

ஷிவ்புரி மாநிலத்தில் இப்படி மூலிகைகளிலிருந்து, மரங்களின் பட்டைகளிலிருந்து, பூக்களில் இருந்து என்று  இயற்கையாக நம் வனங்களில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையினை நாங்கள் பார்வையிட்டோம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்து அவற்றினை எப்படி பதப்படுத்துகின்றனர், அதில் என்னென்ன விஞ்ஞான முறையில் கலந்து பொடிகள் செய்கிறார்கள் என்பதையெல்லாம் எங்களால் பார்க்க முடிந்ததுநம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் நிறைய மூலிகைப் பொருட்கள் தயார் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இவர்களின் தயாரிப்பு பல மருந்துகளின், அழகுப் பொருட்களின் மூலப் பொருள்அஷ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி இன்னும் பலப்பல மூலிகை மரங்கள்/செடிகளின் வேர்கள், பழங்கள், மரப்பட்டைகள், இலைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் மருந்து செய்வதற்கான பொருட்களை பிரித்தெடுத்து, அவற்றை பொடியாக்குகிறார்கள்

அவற்றையெல்லாம் பார்த்த போதுஇந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும்பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்என்று எனக்கு மனதில் தோன்றியதுஅதற்கு பதிலும் உடனே தோன்றியது

நமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம்ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்

தொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது

இந்த எண்ணங்களுடனே அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து எங்களுடைய அடுத்த இலக்கானஓர்ச்சாஎனும் இடத்திற்கு வந்தோம்ஓர்ச்சா எனும் மிகவும் பழமையான நகரம், அங்கிருக்கும் கோட்டைகள், ராம்ராஜா கோவில், வித்தியாசமான ஒரு படையெடுப்பு போன்ற விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் நாம் காண இருக்கிறோம்காத்திருங்கள்….

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.  


46 comments:

 1. பாரதி சொன்னது போல் ....என்ன வளங்கள் இல்லை...நம் நாட்டில்...?...இருந்து என்ன பயன்....நாம் சரியாய் பயன் படுத்தாமல்......வெளி நாடு மோகத்தில் இருப்பது...நிஜம் தான்.....!! ஆதங்கமாகத்தான் உள்ளது.....என்ன செய்வது?

  ReplyDelete
 2. தொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது.

  மணம் மிக்க மனம் கவர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அருமையான கருத்துக்கள்..
  ஏன்.. ஏன் நாம் நமது இயற்கை வளங்களால் பயன் பெறாமல் வெளிநாட்டு மோகத்தால் சீரழிகிறோம் ?
  அப்பட்டமான் உண்மை.

  அடுத்த பதிவு விறுவிறுப்போடதான ?

  ReplyDelete
 4. இப்பவும் நம்ம ஊருல நாட்டு மருந்துக்கடையில் பலவிசயம் கிடைக்குது எங்கம்மா மாமியாரெல்லாம் ..எதாசும்ன்னா ஒரு பொடிய கொண்டுவந்து இதை குழைச்சு சாப்பிடுன்னு சொல்லிட்டிருக்காங்க.. ஆனா எல்லா மருந்துக்கடையிலும் ஹெர்பல்ன்னு போட்ட வெளிநாட்டு பொருட்களுக்கு கிடைக்கிற அந்தஸ்துக்கு இதுக்கு இல்லயே..

  ReplyDelete
 5. இயற்கை மூலிகைகளின் உபயோகம் தெரிஞ்சுக்க முடிந்தது. நம்ம பாக்கங்களிலும் இன்னும் மூலிகை மருந்து சாப்பிட்டே வியாதிகளை குணப்படுத்திக்கொள்பவர்களும் இருக்காங்க,

  ReplyDelete
 6. @ அப்பாஜி: ஆதங்கம் தான்.. எனக்கும்....

  தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாஜி!

  ReplyDelete
 7. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 8. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 9. @ முத்துலெட்சுமி: வெகுசிலரே இப்படி நமது நாட்டு மருந்துகளை உபயோகிக்கின்றனர்... ஆனால் வெளிநாட்டு முத்திரை இருந்தால் தான் அதற்கும் மதிப்பு இப்போது... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

  ReplyDelete
 10. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா. நீங்கள் சொல்வது போல வெகுசிலரே இருக்கின்றனர் இல்லையாம்மா...

  ReplyDelete
 11. அழகிய பூப்போன்ற வாசம் மிகுந்த பதிவு.
  தமிழ்மணம் 3 vgk

  ReplyDelete
 12. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. ஆயுர்வேதம், யோகா எல்லாம் நம்ம பாரம்பரியம். அதை வெளிநாட்டுக்காரன் எடுத்துச் சொன்னால் தான் ஏத்துக்கறோம். அப்படி இருக்க மூலிகை எல்லாம் ஒத்துப்போமா. நீங்க சொன்னது போல வெளிநாட்டு மோகம் தான் காரணம்.

  ReplyDelete
 14. @ புதுகை தென்றல்: //வெளிநாட்டு மோகம் தான் காரணம்.// உண்மை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. அருமை, சரி இது மாதிரியான பதிவுகளுக்கு உங்களுக்கு எங்கே மூலக்கரு கிடைக்கிறது நண்பரே.
  அசத்துறிங்க................

  ReplyDelete
 16. @ A.R. ராஜகோபாலன்: //சரி இது மாதிரியான பதிவுகளுக்கு உங்களுக்கு எங்கே மூலக்கரு கிடைக்கிறது நண்பரே.//

  நீங்கள் சில காலம் கழித்து வந்திருப்பதால் சொல்கிறேன், இது ஒரு பயணத் தொடர்... மத்தியப் பிரதேசம் சென்று வந்தது பற்றி எழுதிக் கொண்டு இருக்கிறேன். அங்கு பார்த்தது, உணர்ந்தது பற்றி எழுதுவதில் இது பகுதி - 19... மற்ற பகுதிகள் படிக்க ட்ராப் டவுன் மெனு இருக்கிறது பக்கத்தில் பாருங்கள்... நேரம் இருந்தால் படித்துப் பாருங்களேன்....

  ReplyDelete
 17. சரியான ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்
  நம்முடைய மூலப் பொருட்களே மதிப்புக் கூட்டல் என்கிற
  முறையில் விலையும் கூட்டப்பட்டு நம்மிடையே
  விற்பனை செய்யப்படுவதை என்னவென்று சொல்வது
  அருமையான பதிவு.வாழ்த்துக்கள் த.ம 6

  ReplyDelete
 18. @ ரமணி: ஆதங்கம்தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. ரமணி அவர்கள் சொன்னது போல் மதிப்புக் கூட்டல் என்று நம் பையில் கைவைப்பது மட்டுமா? நாளை அவற்றின் Patent-களையும் வைத்துக் கொண்டு நாம் பயிரிடவே அவர்களை எதிர்பார்க்கும் நிலைக்குக் கூட ஆகும். இந்த சமயத்தில் தேவையான நல்ல பதிவு.

  ReplyDelete
 20. இந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்” //

  ’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் ’என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

  அந்த காலத்திலிருந்தே நம் நாட்டிலிருந்து மூலப் பொருடகளை கொண்டு போய் மறுபடியும் நம்மிடம் அதிக விலைக்கு விற்றவர்கள் தானே!

  நல்ல பகிர்வு வெங்கட்.

  ReplyDelete
 21. பாஸ் உங்கள் பதிவின் மூலம் இந்தியாவின் பல பிரதேசங்களை அறிந்து கொள்ளமுடிகின்றது நன்றி

  ReplyDelete
 22. நல்லாச் சொன்னீங்க! நம்ம ஊர் ”காயத்திருமேனி” எண்ணெயை விட்டு விட்டு ‘Frenchoil‘ வாங்குங்கன்னு TV - ல் சொன்னா விழுந்தடிச்சு வாங்கறாங்கப்பு. என்னத்த சொல்லி, என்னத்த செய்ய?

  ReplyDelete
 23. ஜப்பான் மற்றும் சீனா நாடுகள் இன்று
  இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
  நாமும் மூலப்பொருட்களை கொடுத்து விட்டு
  விளைபொருட்களை அதிக விலை கொடுத்து
  வாங்கிகொண்டிருக்கிறோம்.
  அருமையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே..

  ReplyDelete
 24. இங்கேயே மணக்கிறதே!நல்ல பகிர்வு!

  ReplyDelete
 25. நேத்தும் இன்னிக்கும்தான் உக்காந்து இதன் முன்னாடி பகுதிகள் எல்லாம் சேர்த்து வச்சு படிச்சேன்.உபயோகமான தகவல் பகிர்வு.இனி நானும் இந்த பகுதிக்கு தொடர்ந்து வந்துடுவேன்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 26. ஊர்ல கிடைக்கும் அதே ஆயிட்டம்தான் வெளிநாட்டுளையும் இருக்கு, ஆனாலும் அதே பொருள் வெளி நாட்டில் இருந்துதான் கொண்டு வரணும்னு கடுப்பெத்துற குடும்பத்தாரை என்ன சொல்ல முடியல...!!!

  ReplyDelete
 27. அன்பரே!
  உள்ளூர் சரக்கு விலை போகாது என்பது
  முது மொழி
  அதன் விளைவே இந்நிலை
  தங்கள் ஆதங்கம் உண்மையானதே!

  த ம ஓ 10

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. நமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம். ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்.

  மிகச் சரியாகச் சொன்னீர்கள். இப்போதும் கூட அயல் நாட்டு பொருள் மோகம் சிலரிடையே இருக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 29. புலவர் சா இராமாநுசம் said...
  அன்பரே!
  உள்ளூர் சரக்கு விலை போகாது என்பது
  முது மொழி
  அதன் விளைவே இந்நிலை
  தங்கள் ஆதங்கம் உண்மையானதே!
  //

  Amen.

  ReplyDelete
 30. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: // நாளை அவற்றின் Patent-களையும் வைத்துக் கொண்டு நாம் பயிரிடவே அவர்களை எதிர்பார்க்கும் நிலைக்குக் கூட ஆகும். // உண்மை... ஏற்கனவே மஞ்சள் Patent வாங்கி இருக்கிறார்களே... :(

  உனது கருத்திற்கும் தொடர் வருகைக்கும் நன்றி சீனு.

  ReplyDelete
 31. @ கோமதி அரசு: ஆமாம் அம்மா... பல காலமாக இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது...

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ K.s.s. Rajh: தங்களது ஆதரவிற்கும், தொடர் வருகைக்கும் நன்றி நண்பரே....

  ReplyDelete
 33. @ ஈஸ்வரன்: ஆமாம் அண்ணாச்சி, அந்த Franch Oil என்னா போடு போடுது மார்கெட்ல... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

  ReplyDelete
 34. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும், நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 35. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா......

  ReplyDelete
 36. @ ராஜி: ஓ எல்லாப் பகுதிகளையும் ஒன்றாகப் படித்தீர்களா... நல்லது... நன்றி...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. @ MANO நாஞ்சில் மனோ: //அதே பொருள் வெளி நாட்டில் இருந்துதான் கொண்டு வரணும்னு கடுப்பெத்துற குடும்பத்தாரை என்ன சொல்ல... //

  உண்மை நண்பரே... என்ன சொல்ல...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. @ புலவர் சா இராமாநுசம்: //உள்ளூர் சரக்கு விலை போகாது என்பது முது மொழி // ஆமாம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ ரிஷபன்: // இப்போதும் கூட அயல் நாட்டு பொருள் மோகம் சிலரிடையே இருக்கத்தான் செய்கிறது.// அதுதான் கஷ்டம்...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 41. நல்ல க‌ருத்துக்கள்!
  அருமையான பதிவு!
  இன்றைக்கும் நம் நாட்டில் அருமையான மூலிகை மருந்துகளும் நாட்டு மருந்துகளும் புழக்கத்தில் இருந்து கொன்டு தான் இருக்கின்றன. அதை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவும் அவற்றின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும் தான் ஆட்கள் இல்லை. சொல்லிக் கொடுத்த பெரியவர்கள் மறைந்து விட்டார்கள். இன்றைய அவசரத் தலைமுறைக்கு இது போன்ற அருமையான நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள‌ நேரமிருப்பதில்லை.

  ReplyDelete
 42. @ மனோ சாமிநாதன்: //இன்றைக்கும் நம் நாட்டில் அருமையான மூலிகை மருந்துகளும் நாட்டு மருந்துகளும் புழக்கத்தில் இருந்து கொன்டு தான் இருக்கின்றன. அதை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவும் அவற்றின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும் தான் ஆட்கள் இல்லை. // உண்மை... நிறைய விஷயங்களை சொல்லாமலே சென்று விட்டார்கள்... சொன்ன சில விஷயங்களையும் பழமைபேசி என நினைத்து விட்டுவிட்டோம்.... :(

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. இவ்ளோ நாளா ஏற்றுமதி பண்றவங்க இங்கே தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்தாங்கலானு தெரியல.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 44. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நாங்கள் சென்ற இடத்தில் அவர்கள் முயற்சிப்பதாய்த் தெரியவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. அன்பு வெங்கட்,நம்மூரிலிருந்து சுரண்டுவதில் அவர்கள் வல்லவர்கள் என்று தெரியும்.நம்மூர் மூளை பலம், வேர்பலம்,ஆன்ம பலம் என்று எல்லாமே ஏற்றுமதியாகின்றன. பணம் பணம் பணம் இது ஒன்றே மூல காரணம்.
  எத்தனையோ பெற்றோர்கள் வளர்த்த செடிகள் மற்ற நாடுகளுக்குத் தங்கள் சேவையைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
  அதன் அடிப்படை இந்த மூலிகைப் பதிவு.பல எண்ணங்களை என்னுள் எழுப்பிவிட்டது. மிகவும் நன்றி.

  ReplyDelete
 46. @ வல்லிசிம்ஹன்: //பணம் பணம் பணம் இது ஒன்றே மூல காரணம். // உண்மை....

  தங்களது வருகைக்கும் நல்லதோர் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....