திங்கள், 14 நவம்பர், 2011

பளிங்கினால் ஒரு மாளிகை…[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-18]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17)சென்ற பகுதியில் குடைகள் பற்றி சொல்லும் போது, மஹாராணியின் குடை, 125 வயதான ”கதம்” மரம், சிவலிங்கத்தின் சிறப்புகள் பற்றி பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப் போவது பளிங்கினால் ஒரு மாளிகை…  கொஞ்சம் பொறுங்க நான் சொல்லப்போவது ”வல்லவன் ஒருவன்” படத்தில் வரும் பாடலைப் பற்றியது அல்ல.


மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா அவர்களுக்கான குடை தான் இந்த ”பளிங்கினால் ஒரு மாளிகை….”  அப்பப்பா..  எத்தனை கலை நுணுக்கத்தோடு கூடிய வேலைப்பாடுகள்.  பளிங்குக் கற்களில் கட்டப்பட்ட தூண்கள், அத்தூண்களின் நடுநடுவே வேறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட பறவை, வண்ணத்துப்பூச்சி, பூக்கள் என எல்லாமே அருமை. 


பூக்களின் வடிவங்கள், வேலைப்பாடுகள் எல்லாமே விலை மதிப்புள்ள கற்கள், படிமங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  கைவிளக்கு கொண்டு அக்கற்கள் மேல் ஒளிபாய்ச்ச, ஒளி கற்களை ஊடுருவி செல்லும் விதமாய் இருக்கிறது. எத்தனை விதமான வேலைப்பாடுகள்… ஆச்சரியமளிக்கும் விதமாகக் கட்டப்பட்டு இருக்கிறது.  அங்கிருந்து வெளியே வரவே மனமில்லை. 


இந்த மாளிகைக்குள் செல்ல நிறைய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளிக் கதவுகள் இருக்கின்றன.  மேலும் பளிங்குக் கற்களால் ஆன கதவுகளும், ஜன்னல்களும் இருக்கின்றன.  பளிங்கு கதவுகள் எனும் போது நிச்சயம் அதன் எடை அதிகமாகத்தான் இருக்கும்.  “எப்படி திறந்து மூடுவது?” என்ற கேள்வி எங்கள் அனைவரின் மனதிலும். அதற்கும் பதில் இருந்தது திரு மோஹிதே அவர்களிடம். 


இந்த கதவுகள் பிணைக்கப்பட்டிருப்பது வெள்ளியால் ஆன பிணைப்புகளால் [HINGES].  இரண்டு  வயதே ஆன சிறுவனால் கூட இதனை சுலபமாகத் திறந்து விட முடியும் என்று கூறிய அவர் அதை இரண்டு விரல்களாலேயே திறந்தும் காட்டினார். 
குடைக்குள்ளே திரு மாதோ ராவ் சிந்தியா அவர்களின் முழு உருவச் சிலை இருக்கிறது.  அவரின் சிலைக்கு முன்னே ஒரு சிவலிங்கமும், அதற்கு முன் ஒரு கரு வண்ண நந்தியின் சிலையும் இருக்கிறது.  எதிரே இருக்கும் அரங்கத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த பளிங்குக் கல் தூண்கள் தவிர, இரண்டு அலங்கார விளக்குகளும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கூரைகளும் இருக்கின்றன.  இங்கும் மரத்தினால் ஆன இறக்கைகள் கொண்ட மின்விசிறிகள் இருக்கின்றன. 


மஹாராணி குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் மஹாராஜா குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் இருந்த வித்தியாசம் – மஹாராஜாவின் குடையில் இருந்த மின்விசிறிகளில் தங்கத்தினால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது.  அந்தக் காலத்தில் ஆண்களுக்கும் தங்கத்தின் மேல் மோகம் இருந்திருக்கிறது போல!  உடனே இப்போதிருக்கும் ஆண்களுக்கு தங்கத்தின் மீது மோகம் இல்லையா என்று கேட்கும் சக பதிவர்களுக்கு, ”இது என்னுடைய கருத்து அல்ல, என்னுடன் வந்த மிசோ மாநில பெண்மணியின் கருத்து” என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்… [அப்பாடா நான் தப்பித்தேன்….]

சுற்றிச் சுற்றி இருக்கும் பலவித அதிசயங்களையும் பார்த்து ”நமக்கும் யாராவது இப்படி குடை கட்டுவார்களா?” என்று யோசித்தபடிதான் நாங்கள் எல்லோரும் இருந்தோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.  

இந்த இரண்டு குடைகளும் அமைந்திருக்கும் இடத்தில் நிறைய மரங்களும், பூச்செடிகளும் அமைத்திருக்கிறார்கள்.  வெளியே வர மனமில்லையெனிலும் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்பதால் வெளியே வந்தோம். 


வரும்போது கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரே ஒரு நீண்ட நான்கு பேர் அமரக்கூடிய கல்லால் ஆன இருக்கை ஒன்று இருந்தது.  நீண்ட நேரம் கால்கடுக்க சுற்றியதற்கு இதமாய் இருந்தது.  ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இந்த இருக்கையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தோம். 

மதிய உணவு எடுத்துக் கொண்டபின் நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.  நம் வனங்களில், நாட்டில் இருக்கும் பல விதமான மரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் சில பொருட்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றி பார்க்கலாம் அடுத்த பகிர்வில்.

மீண்டும் சந்திப்போம்…..

வெங்கட்

65 கருத்துகள்:

 1. ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இந்த இருக்கையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. /

  அருமையான பளிங்கான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  குழந்தைகள் தின வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. @ இராஜராஜேஸ்வரி: பளிங்கான பகிர்வு... :)

  தங்களது உடனடி வருகைக்கும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. படங்களும் பகிர்வும் மிக நன்று. முதல் படத்தின் கோணம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  உங்களிடமிருந்து புகைப்படத்தினைப் பற்றிய நற்கருத்து பெற்று மகிழ்ச்சி.....

  பதிலளிநீக்கு
 5. படங்களும் தகவல்களும் மிகவும் ஈர்த்தன..

  பதிலளிநீக்கு
 6. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. பகிர்வும் படங்களும் ரொம்ப அருமையாயிருக்கு..

  முதல் படம் ஜூப்பர்.

  அந்த பெஞ்சும் அசத்துது.. நல்ல லைட்டிங் மற்றும் கோணம்.

  பதிலளிநீக்கு
 8. மத்திய பிரதேசத்திற்கு tour programme வைக்கும்போது நிச்சயம் உங்களின் அனைத்துப்பதிவுகளையும் மறுபடியும் ஒரு முறை படித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

  அந்தக் கல்லிலான இருக்கை, அதன் வேலைப்பாடுகள் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 9. தமிழ்மணம் 4

  அருமையான பளிங்கு போன்ற பளிச் பதிவு. பாராட்டுக்கள். vgk

  பதிலளிநீக்கு
 10. //நமக்கும் யாராவது இப்படி குடை கட்டுவார்களா?”//

  பின்னாலிருந்து, மழைக்கு எடுத்து போகும் குடையை ஒழுங்கா மறக்காமல் திருப்பி கொண்டு வரச் சொல்வது இங்கு வரைக் கேட்கிறது.

  பதிலளிநீக்கு
 11. <<<>>>>>>>>>இதற்கு இணை .....வேறு எதுவும் இல்லை...!!!நுணுக்கமான வேலைப்பாடு..:((

  பதிலளிநீக்கு
 12. பதிவும் படங்களும் அருமை உங்கள் பதிவுகள் மூலம் எனக்குத்தெரியாத பல இடங்களை அறிந்து கொள்ள முடிகின்றது நன்றி பாஸ்
  தமிழ்மணம்-7

  பதிலளிநீக்கு
 13. ”வல்லவன் ஒருவன்” படத்தில் வரும் பாடலைப் போலவே அருமையாய் இருக்கிறது பதிவு.

  பளிங்கினால் மாளிகை அருமை.

  படங்கள் எல்லாம் பார்த்து நேரே பார்த்தது போல் அனுபவத்தை கொடுத்து விட்டது.

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 14. படங்களும் பகிர்வும் மிக நன்று நண்பரே,


  குழந்தைகள் தின வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. எல்லாம் பளபளன்னு தகதகக்குது....!!! அருமையான பயணம், நான் வரும்போது இதையெல்லாம் எனக்கும் சுற்றி காட்டனும் ஓகே...?

  பதிலளிநீக்கு
 16. என்று பார்க்க போகிறோம் என்ற அவா எழுகிறது.. இந்த படங்களுடன் பதிவைப் பார்க்கும் பொது..

  பதிலளிநீக்கு
 17. வியப்பாக இருக்கிறது சகோ!
  எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்!
  பளிங்கு போல் படங்களும் அருமை

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 18. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. @ சிநேகிதி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இந்த இருக்கையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. /

  தலைப்புக்கு ஏற்ற பதிவு

  பதிலளிநீக்கு
 21. @ அமைதிச் சாரல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //பின்னாலிருந்து, மழைக்கு எடுத்து போகும் குடையை ஒழுங்கா மறக்காமல் திருப்பி கொண்டு வரச் சொல்வது இங்கு வரைக் கேட்கிறது.// என்னா ஒரு வில்லத்தனம்... :)

  உனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

  பதிலளிநீக்கு
 25. @ அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் பாராட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 29. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  உங்களுக்கும் எனது வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 30. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா! சுத்திக் காட்டிடுவோம்ல... :)

  பதிலளிநீக்கு
 31. @ வேடந்தாங்கல் கருன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 32. @ புலவர் சா. இராமாநுசம்: உண்மைதான் புலவரே.... வாழ்க்கையை நன்கு அனுபவித்து இருக்கிறார்கள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 34. @ அ. வேல்முருகன்: நிபுணர் என்றெல்லாம் இல்லை... ஏதோ தெரிந்த அளவுக்கு எடுத்துப் பகிர்கிறேன்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. மின் விசிறியில் தங்கமா?!
  அருமையாச் சொல்லியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 36. @ சென்னை பித்தன்: ஆமாம்... தங்கத்தில் வேலைப்பாடுகள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 37. அருமை. குறிப்பாக படங்கள் அசத்துகிறது

  பதிலளிநீக்கு
 38. @ மோகன்குமார்: நன்றி மோகன்.... என்னால் முடிந்தவரை எடுத்த படங்களில் சிலவற்றைப் பகிர்ந்து இருக்கிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. அழகிய தகவல்களுடன் அருமையான பதிவு.படங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.

  பதிலளிநீக்கு
 40. @ ராம்வி: தாங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போதிலும், நேரம் எடுத்து எனது பகிர்வினைப் படித்து கருத்து வழங்கியமைக்கும் படங்களை பாராட்டியதற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  பதிலளிநீக்கு
 41. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  குழந்தைகள் தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 42. தங்கள் பயணத்தில் இடையிடையே வது தொற்றிக் கொள்கிறேன்.
  மத்தைப் பிரதேசம் வரண்ட பிரதேசம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இவ்வளவு செல்வச் செழிப்பா? மின்விசிறியில் தங்கம்.... என்னத்த சொல்றது. என்னால் ரசிக்க முடியவில்லை மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப் பட்டிருக்கிறது .

  பதிலளிநீக்கு
 43. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன், தங்களிடமும் தமிழிடமும் .

  பதிலளிநீக்கு
 44. முதல் படமும், கல்லினாலான இருக்கையும் ரசிக்கத் தக்கவையாய் இருந்தன. சுவாரஸ்யமான பயணக் கட்டுரை.

  பதிலளிநீக்கு
 45. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ரெவெரி....

  பதிலளிநீக்கு
 46. @ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. அரசர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்படித்தான் பணத்தினை, மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி வருகின்றனர்... :(

  பதிலளிநீக்கு
 47. @ ஸ்ரீராம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  பதிலளிநீக்கு
 48. பளிங்கினால் ஒரு மாளிகை! உங்கள் பதிவுகளின் மணிமண்டபம்.

  எங்கே போயின அந்த பளிங்கு கற்களும், கைவண்ணமும்?

  பளிங்கு கற்களெல்லாம் ஃபாரினுக்கு! உள்ளூர் வீடுகட்ட அனல் மின் நிலையங்களின் எஞ்சிய சாம்பல்கற்கள்.

  (அப்பப்ப சீரியஸாவும் கமெண்ட் போடுவோமில்ல.)

  பதிலளிநீக்கு
 49. @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... எஞ்சிய சாம்பல் கற்கள்... :( உண்மை தான் அண்ணாச்சி....

  தங்களது வருகைக்கும் சீரியஸ் கமெண்டுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 50. நல்ல பதிவு. சென்று பார்க்கத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 51. @ DrPKandaswamyPhD: சென்று வாருங்கள் ஐயா... நல்ல இடங்கள் இருக்கின்றன பார்ப்பதற்கு....
  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 52. பளிங்கினாலாயே கதவா? புதுசா இருக்கு சகோ. கதவுகள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 53. @ ராஜி: ஆமாம்... பளிங்குக் கதவுகள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 54. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ராஜபோக வாழ்க்கை.... உண்மை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 55. பளிங்கு மாளிகை சூப்பர்.

  ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இருக்கை ரொம்பப் பிடித்தது.

  பதிலளிநீக்கு
 56. @ மாதேவி: எனக்கும் அந்த இருக்கை ரொம்பவே பிடித்தது. சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் அங்கே...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 57. அருமையான பதிவு மற்றும் அருமையான தலைப்பு (ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?)

  பதிலளிநீக்கு
 58. @ BalHanuman: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே... ரூம் போட்டு எல்லாம் யோசிப்பதில்லை.... :)

  பதிலளிநீக்கு
 59. உங்கள் பளிங்கு மளிகை கட்டுரை மிக அருமை. வாழ்த்துகள்
  விஜயராகவன், டெல்லி

  பதிலளிநீக்கு
 60. @ விஜயராகவன், டெல்லி: இந்தப் பயணக் கட்டுரை படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி......

  பதிலளிநீக்கு
 61. அன்புடையீர்,

  வணக்கம்.
  தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

  blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

  நன்றி

  அன்புடன்,

  எஸ்.பி.செந்தில்குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....