திங்கள், 7 நவம்பர், 2011

ராஜா-ராணி குடைகள்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி17]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16) 


இத்தொடரின் பகுதி-14-ல் பூங்கொத்துடன் வரவேற்பு எனும் தலைப்பில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாநிலத்தில் இருக்கும் சத்ரி பற்றி சொல்லியிருந்தேன்.  முதல் நாள்  மாலை பெய்த மழையின் காரணமாய் அங்கு செல்ல இயலவில்லை. எப்படியும் சென்று விடுவது என முடிவு செய்து, "மாதவ் தேசிய பூங்கா" மற்றும் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund] ஆகியவைகளை பார்த்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு  10 மணிக்கு அங்கு செல்ல கிளம்பினோம்


மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்கள் இருவருக்குமான குடைகள் இவை.  ”சத்ரிஎன்பது இவ்வுலகில் நல்ல விஷயங்களைச் செய்தவர்களுக்கான சமாதி்இந்த குடைகள் பொதுவாக போரில் வீர மரணம் எய்திய மராட்டிய மஹாராஜாக்களுக்காக கட்டப்பட்டு வந்தனசிந்தியா ராஜா-ராணிக்காகக் கட்டப்பட்டவையே இந்த மிக அழகிய குடைகள்.

இந்த இடத்தினை நிர்வாகம் செய்துவரும் அறக்கட்டளையின் திரு மோஹிதே அவர்கள் இந்த இடம் முழுதும் எங்களுடன் வந்து அதன் சிறப்பினை விளக்கிச் சொன்னார்அவர் சொன்ன நிறைய விஷயங்கள் அந்த இடத்தின் பெருமையை உணர்த்தியது.

மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவச் சிலை இருக்கிறதுஅந்த இடத்தின் எதிரே ஒரு பெரிய மண்டபம்அதில் தினமும் காலை நேரத்தில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றனமாலையில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்களை  இசைக்கிறார்கள்


மஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றனஅவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்புஇன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் .சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளதுஇப்போதும் இயங்குகிறது என்று திரு மோஹிதே அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

இந்தக் குடைகளுக்கு நடுவே அழகாய் வடிவமைக்கப்பட்ட குளம் இருக்கிறதுகுளத்திற்கு நீர் பக்கத்தில் இருக்கும் ஆற்றிலிருந்து வருகிறதுஇந்தக் குடைகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள்  குளத்தில் நிறைய குப்பைகளைப் போட்டுச் சென்றிருக்கிறார்கள்திரு மோஹிதே அவர்கள் இதைப் பற்றி சொல்லும்போது தினமும் குளத்தினை சுத்தம் செய்தாலும், அடுத்து வருபவர்கள் போட்டு விடுகிறார்கள் என்று எங்களிடம் குறைபட்டார்இங்கேகதம்என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது.  125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால்மஹாவ்ருக்ஷ் புரஸ்கார்வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறதுஇந்த மரத்தின் உயரம் 20.7 மீட்டர்.
குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரு கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றனஒரு கோவிலில் கருப்பு நிற இராமரும், பக்கத்தில் சீதாதேவி மற்றும் இலக்குவனும் இருக்க, வெளியே கைகளை கூப்பியபடி ஹனுமனும் நின்று கொண்டு இருக்கிறார்மற்ற பக்கத்தில் இருக்கும் கோவிலில் புல்லாங்குழல் ஊதியபடி கருமை நிற கண்ணனும், ராதையும் இருக்கிறார்கள்.குளத்தின் நடுவே இருக்கும் ஒரு மேடையில் சிவலிங்கமும் அதன் எதிரே ஸ்படிகத்தினால் ஆன ஒரு நந்தியும் இருக்கிறதுசிவலிங்கத்தின் மேலே இயற்கையிலேயே பல விஷயங்கள் இருக்கின்றனசிவலிங்கத்தின் ஒரு பகுதியில் நந்தியின் உருவம் தெரிகிறதுஇன்னொரு பக்கத்தில் சிவனின் உடுக்கையும் தெரிகிறதுஎங்களுக்கு திரு மோஹிதே அவர்கள் சமய சார்பான பல விஷயங்களை விளக்கினார்

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.  அவற்றினை அடுத்த பகுதியில் பார்ப்போம்

மீண்டும் சந்திப்போம்

வெங்கட்.

54 கருத்துகள்:

 1. தமிழ்மணம்: 2
  படங்களும் பதிவும் பார்க்கவும் படிக்கவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களுடைய வருகைக்கும் பதிவினையும் புகைப்படங்களையும் ரசித்தமைக்கு எனது பணிவான நன்றி...

  இன்றிலிருந்து உங்கள் தமிழ்மண நட்சத்திர வாரம் - பிரகாசமாய் ஜொலிக்க வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 3. கதம்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. 125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால் ”மஹாவ்ருக்‌ஷ் புரஸ்கார்” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறது/

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. //மஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்பு. இன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் ஏ.சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளது. இப்போதும் இயங்குகிறது என்று திரு மோஹிதே அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.//ஆச்சரியம் தான்!

  பதிலளிநீக்கு
 6. @ கே.பி.ஜனா: இப்பவும் ஆச்சரியம்தான்... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 7. //மஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்பு. இன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் ஏ.சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளது. இப்போதும் இயங்குகிறது//
  அட!

  பதிலளிநீக்கு
 8. இன்று விடுமுறை போல் உள்ளது...பதிவுகளுக்கு உடன் பதில் போடுகிறீர்கள்..!! <<>>> மரங்களே அரிதாக போய் கொண்டிருக்கும் இந்த காலத்தில்...."கதம்" ல்லாம் தெய்வம் தான்.:))

  பதிலளிநீக்கு
 9. @ அன்புடன் அருணா: அட.... :) ஆமாம் அட சொல்லத்தான் வைத்தது....

  தங்களுடைய வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 10. அற்புதமான பயணம் அருமையான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 11. @ அப்பாஜி: ஆமாம் அப்பாஜி... இன்று விடுமுறை... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 12. @ MANO நாஞ்சில் மனோ: தகவல்கள் பயனுள்ளதாக இருப்பது தானே நல்லது....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மக்கா.....

  பதிலளிநீக்கு
 13. அழகிய படங்களுடன் அருமையான தகவல்கள்.
  மின்விசிறி பற்றிய தகவல் அருமை.பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 14. @ ராம்வி: தங்களுடைய வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. @ ராமலக்ஷ்மி: படங்களுக்கு உங்கள் பாராட்டு... மிக்க மகிழ்ச்சி சகோ...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கதம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. 125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால் ”மஹாவ்ருக்‌ஷ் புரஸ்கார்” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறது//

  ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது தெரியாத விஷயம்...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 17. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 18. படங்களும் பதிவும் பார்க்கவும் படிக்கவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 20. @ லக்ஷ்மி: தங்களுடைய தொடர் வருகைக்கும் மகிழ்ச்சி தரும் கருத்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 21. மரத்தினால் ஆன இறக்கைகள் கொண்டதா? பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.நல்லதொரு பயணக்கட்டுரை.ரசித்தேன் மிகவும்

  பதிலளிநீக்கு
 22. @ ஷைலஜா: ஆமாம் மரத்தினால் ஆன இறக்கைகள் தான்... அடுத்த பகுதியிலும் இன்னும் சில சிறப்புத் தகவல்கள் இருக்கின்றன இந்த சத்ரி பற்றி....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. இடுகைக்கு எவ்வளவு முனைந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாய்ப் புரிகிறது வெங்கட்ஜீ! பாராட்டுக்கள்! புகைப்படங்கள் படுஜோர்! :-)

  பதிலளிநீக்கு
 24. புகைப்படங்கள் அத்தனையும் அழகு! பதிவும் சுவாரஸ்யமாக செல்கிற‌து!

  பதிலளிநீக்கு
 25. @ சேட்டைக்காரன்: தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி சேட்டை....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புகைப்படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. தெரியாத பல தகவல்களை அழகாக
  சொல்லிவருவது தங்களின் தனிச்சிறப்பு.

  பதிலளிநீக்கு
 28. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 29. ரொம்ப அருமையான படங்கள். அந்த 'கதம்' மரம் என்ன வகை? கடம்ப மரமா இருக்குமோ?

  இந்த சத்ரிகள் ஒவ்வொன்னும் ஒரு அழகுதான். 'ஆண்டவர்'கள் மீது மக்கள் வைத்த மரியாதைக்குத் தகுந்தபடிதான் அழகும் அலங்காரமும் இல்லே?
  இதுவரை ம.பி. பார்க்காத குறையை நீங்கள்தான் தீர்த்து வச்சுக்கிட்டு இருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 30. @ பால்ஹனுமான்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 31. @ துளசி கோபால்: கதம் மரம் என்ன வகை என்று தெரியவில்லை. கதம்ப மரம் இல்லை... ஆங்கிலத்தில் ஏதோ பெரிசா நீட்டி முழக்கி பேர் சொன்னார் அந்த மோஹிதே..... நம்ம அறிவுக்கு ஏறவில்லை, நினைவும் இல்லை... :))))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. மத்தியப் பிரதேசம் அழைக்கிறது இன்னும் 10-12 பகுதிகள் இருக்கு... தொடர்ந்து வாங்க... அடுத்து இந்திய வருகை போது நீங்க போக உதவும்...

  பதிலளிநீக்கு
 32. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 33. படங்கள் அருமை, சிவலிங்கத்தில் நந்தி மிக அருமை

  பதிலளிநீக்கு
 34. மர விசிறி வித்தியாசமான புதுத் தகவல்.. இன்னும் ஓடுதுங்கறதும் ஆச்சரியமானதுதான் :-)

  பதிலளிநீக்கு
 35. மரத்திலான விசிறி கேட்க
  கொஞ்சம் வித்தியாசமானதாக உள்ளது
  சுற்றுலா தலங்கள் என்றாலே குப்பையை
  போடுவதற்கான இடம் என்கிற மனோபாவம் ஏனோ
  இந்தியர்களிடம் பெருத்துப்போனது
  படங்களுடன் பதிவு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. உங்க பதிவை பார்க்கும்போது பொறாமையா இருக்குங்க சகோ

  பதிலளிநீக்கு
 37. @ புதுகைத்தென்றல்: சிவலிங்கத்தின் மற்றொரு பகுதியில் அவரின் உடுக்கை கூட இருந்தது.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 38. @ அமைதிச்சாரல்: ஆமாங்க இன்னும் வேலை செய்யுது அந்த ஃபேன்...

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @ ரமணி: //சுற்றுலா தலங்கள் என்றாலே குப்பையை
  போடுவதற்கான இடம் என்கிற மனோபாவம் ஏனோ
  இந்தியர்களிடம் பெருத்துப்போனது// உண்மை தான் சார். எப்போதுதான் மாறுவார்களோ....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. @ ராஜி: அடப் பொறாமையா எதுக்குங்க....

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. எங்காத்துக் காரரும் கச்சேரிக்குப் போனாருங்கற கதையா நானுந்தேன் ஊர் சுத்திப் பாக்கப் போனேன். யாருக்கு என்ன பிரயோசனம்? அழகா நச்சுன்னு நீங்க சுத்திப் பார்த்தத எல்லோருக்கும் சுத்திக் காட்டறீங்களே, அங்கதான் நீங்க நிக்கிறீங்க!

  பதிலளிநீக்கு
 42. @ ஈஸ்வரன்: அண்ணாச்சி இருபது நாளா உங்க கருத்து இல்லாம ஒரு குறையா இருந்தது... இப்ப அது தீர்ந்தது. உங்களையும் ஒரு பிளாக் ஆரம்பிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே... என்ன விட நல்லாவே எழுதுவீங்க!

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. சிவலிங்கத்தின் மேலே இயற்கையிலேயே பல விஷயங்கள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் ஒரு பகுதியில் நந்தியின் உருவம் தெரிகிறது. இன்னொரு பக்கத்தில் சிவனின் உடுக்கையும் தெரிகிறது.

  ஆச்சர்யமாய் இருக்கிறது அதன் வடிவமைப்பு. திருச்சி மலைக்கோட்டை சுற்றி வந்தால் ஒவ்வொரு புறம் ஒவ்வொரு வித தோற்றம் தரும். வெறுமே ஊர் சுற்றாமல் தகவல்கள் சேகரித்து ரசனையுடன் பார்த்து வந்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.

  பதிலளிநீக்கு
 44. @ ரிஷபன்: ஆச்சரியமாகத் தான் இருந்தது... அந்த சிவலிங்கம் பற்றியும் ஆன்மீகம் பற்றிய பல விஷயங்களையும் அங்கே தெரிந்து கொண்டேன்... ஒரு சில விஷயங்கள் மட்டுமே இங்கே பகிர்கிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 45. //அண்ணாச்சி இருபது நாளா உங்க கருத்து இல்லாம ஒரு குறையா இருந்தது... இப்ப அது தீர்ந்தது. உங்களையும் ஒரு பிளாக் ஆரம்பிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே//

  இதை நானும் கன்னாபின்னா வென்று வழி மொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 46. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //இதை நானும் கன்னாபின்னா வென்று வழி மொழிகிறேன்.//

  அதானே.. இரண்டு பேர் சேர்ந்து சொன்னாலாவது கேட்கிறாரா பார்க்கலாம்....

  உனது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 47. இவ்ளோ நினைவுகளுடன் பார்த்ததை பகிர்வது சிறப்பான விசியம்.

  பதிலளிநீக்கு
 48. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நினைவில் இருந்தவரை உடனேயே எழுதி வைத்து விட்டேன்... :) சில விடுபட்டு இருக்கலாம்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....