எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 3, 2011

கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி16]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15) 


ஷிவ்புரிக்கு வந்ததிலிருந்தே நாங்கள் தங்கியிருந்த சுற்றுலா கிராமத்தின் [டூரிஸ்ட் வில்லேஜ்] நிர்வாகி எங்களை ஒரு இடத்திற்குக் கண்டிப்பாக செல்லும்படி சொன்னார்அந்த இடத்தின் பெயர்பதையா குண்ட்” [Bhadaiya Kund].

தங்குமிடத்தில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் ஒரு சந்தில் 20 மீட்டர் உள்ளே சென்றால் பதையா குண்ட் செல்வதற்கான படிக்கட்டுகள் தென்படுகின்றனபாறைகளில் அமைந்துள்ள 50 படிக்கட்டுகள் மூலமாக இறங்கி உள்ளே சென்றால் கீழே ஒரு குகை போன்ற அமைப்பு தெரிகிறது.


அழகிய தூண்கள் கட்டப்பட்டு அதன் கீழே ஒரு சிறிய கோவில் இருக்கிறதுகோவிலில் சிவன் லிங்க ரூபமாக காட்சி தருகிறார்கோவிலின் மேலே இருந்து தண்ணீர் அருவிபோல பொழிந்து கொண்diருக்கிறதுசிவலிங்கம் இருக்கும் இடத்திலும் தண்ணீர் ஊற்று எடுத்து வருகிறதுஇந்த தண்ணீர் நிறைய மருத்துவ குணம் உடையது என்றும், நிறைய கனிமங்கள் நிறைந்தது என்றும் கூறுகின்றனர்.

நாங்கள் சென்றிருந்தபோது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கே குளித்து விட்டு சிவபிரானை தங்கள்   கைகளாலேயே பூஜித்து விட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்


எல்லாம் துறந்த முனிவர் போல கொட்டும் தண்ணீருக்குக் கீழே அமர்ந்து இருந்த ஒரு இளைஞர் சிறிது நேரத்திற்குப் பின் தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்பிறகு ஒரு துண்டினை அணிந்து நேராக சிவனை தரிசிக்கச் சென்று விட்டார்

கனிஅட கனிமம் என்று சொல்ல வந்தேன்கனிமம் நிறைந்த அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு அங்கே சில புகைப்படங்களையும் கிளிக்கிவிட்டு அறைக்குத் திரும்பினோம். காலை உணவு முடித்து ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்த இடம் என்ன எனக் கேட்பவர்களுக்கு, அடுத்த பகுதி வரை காத்திருங்கள்….

மீண்டும் சந்திப்போம்..
வெங்கட்.


57 comments:

 1. கனி… அட கனிமம் என்று சொல்ல வந்தேன். கனிமம் நிறைந்த அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு அங்கே சில புகைப்படங்களையும் கிளிக்கிவிட்டு அறைக்குத் திரும்பினோம்./

  கனிபோல் இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. அருமையான இடமா இருக்கே! எப்பவும் தண்ணீர் கொட்டுவதால் ரொம்ப குளுமையாக்கூட இருக்கும்தானே?

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. அழகான இடம்.படங்கள் அருமையாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. //கனிமம் நிறைந்த அந்த தண்ணீரை//
  வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரண்டு பெண்கள் தங்கள் ஊரினால் தான் ஆற்று நீர் சுவையாக இருப்பதாக வாதாடும் பொழுது, கவுண்ட(ர்) மணி இங்கே 5 ஹார்ஸ் பவர் மோட்டர் வைத்து தண்ணீர் விடுவதுதான் காரணம் என்று ஒரு சிறுவனைக் காட்டுவார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 6. கனி(மம்) போன்ற இனிமையான பகிர்வு. பாராட்டுக்கள். த.ம.: 3

  ReplyDelete
 7. ஆச்சர்யமான செய்திதான்,
  பொதுவாக நீரில் இருக்கும் வளங்கள் தவிர
  கனிமங்கள் நிறைந்த நீரில் நீராடுவது
  எத்தனை ஆரோக்கியமான சுகம்..
  பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 8. அடடே என்கிற மாதிரி விஷயங்கள்!

  ReplyDelete
 9. படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 10. படத்தைப் பார்க்கும்போதே மனம் குளிர்ந்து போகிறது.

  ReplyDelete
 11. படங்கள் அருமையாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. அடுத்த பதிவு வரையா? ஆர்வமா இருக்கே..

  ReplyDelete
 13. ஜிலீர்ன்னு குளுமையா இருக்கு..

  ReplyDelete
 14. புதிய இடமாக உள்ளது...அனுபவித்து உள்ளீர்கள்...என்ஜாய்..

  ReplyDelete
 15. // அந்த இடம் என்ன எனக் கேட்பவர்களுக்கு, அடுத்த பகுதி வரை காத்திருங்கள்…. //

  இருந்தாலும் டி.வி சீரியல் பாத்து பாத்து இப்படி சஸ்பென்ஸ் வெக்க ஆரம்பிச்சிட்டீங்களோ ?
  :-)

  ReplyDelete
 16. சுற்றுலா'வுக்கு எங்களையும் கூட அழைத்து சென்றமைக்கு நன்றி மக்கா...!!!

  ReplyDelete
 17. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நண்பரே...அந்த இடம் என்ன? -:)

  ReplyDelete
 18. கோவைக் குற்றாலத்தில் குளித்தபோது அப்படி ஒரு புத்துணர்ச்சி.. உங்கள் பதிவைப் பார்த்தபோது அந்தக் குளியல் நினைவில் வந்தது.

  ReplyDelete
 19. @ துளசி கோபால்: ஆமாம் டீச்சர், நல்ல குளிர்ச்சியாய் இருந்தது அந்த இடம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புகைப்படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை :) அது சரி, இதப்படிச்சு அது நினைவுக்கு வந்ததா? Bad Boy.... :)

  உனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 23. @ மகேந்திரன்: குளித்திருக்கலாம்.... ஆனால் அடுத்து செல்லவேண்டிய இடங்கள் இருந்தது என்பதால் நாங்கள் அங்கே குளிக்கவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 26. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ வேடந்தாங்கல் கருன்: அடுத்த பதிவு சீக்கிரம் போட்டுடுவோம்... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 29. @ அமைதிச் சாரல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ அப்பாஜி: எஞ்சாய்... :))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: டிவீ சீரியல் எல்லாம் பார்ப்பதே இல்லை நண்பரே.... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ MANO நாஞ்சில் மனோ: பதிவினைப் படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி மக்கா...

  ReplyDelete
 33. @ ரெவெரி: அந்த இடம் - அடுத்த பதிவில் தெரிந்து விடும் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ ரிஷபன்: கோவைக் குற்றாலம் - ஓ அங்கு நான் சென்றதில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. உண்மையிலேயே கனி (மம்) என்று தான் சொல்ல வந்தீர்களா :-) வீல் சேர் தாத்தா படித்தால் சந்தோஷப்படுவார்....

  ReplyDelete
 36. @ பால்ஹனுமான்: தங்களது முதல் வருகையோ? :) நிச்சயமா கனிமம் பற்றிதான் சொல்லவந்தேன் நண்பரே :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 37. அன்பு வெங்கட்!

  முக்கனி உண்டது போல தங்கள் சுற்றுலாப்
  பயணக் கட்டுரை இனிக்கிறது
  தொடர்க தொடர்வேன்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 38. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 39. பதைய் குண்டில் குளித்துத் துவட்டுவதற்குள் அடுத்த இடமா? படு வேகம் நெய்வேலியாரே.

  ReplyDelete
 40. போனதே இல்ல இங்கல்லாம்
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 41. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: அது சரி... :)

  ReplyDelete
 42. @ சுந்தர்ஜி: அடுத்த பதிவு... திங்கள்-செவ்வாயில்தான்... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. @ ஷைலஜா: வாய்ப்பு கிடைத்தால் போய் வாருங்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. செம கலக்கலான இடம், புகைப்படமும் அருமையாய் வந்திருக்கு சகோ. பொறாமைப்பட வைக்குறீங்க சகோ

  ReplyDelete
 45. @ ராஜி: தங்களுடைய வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 46. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 47. @ ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 48. கோவில் தரை மட்டத்திற்கு கீழ் உள்ளது என நினைக்கிறேன்
  படங்களும் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 13

  ReplyDelete
 49. .சுவாரசியமான இப் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .........

  ReplyDelete
 50. @ ரமணி: ஆமாம் சார் கோவில் நீர் விழும் இடத்திற்குப் பின் பக்கம் இருக்கிறது. அங்கு சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என்பதால் எடுக்கவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 51. @ அம்பாளடியாள்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 52. "கனிம ஊற்று" இயற்கை கொட்டுகின்றது.

  ReplyDelete
 53. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 54. அழகான படங்களுடன் பகிர்விற்கு நன்றி.கனிமத்தின் பெயர் ஏதாவது குறிப்பிட்டிருப்பிங்கலோனு நினைச்சேன் .

  ReplyDelete
 55. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: கனிமத்தின் பெயர் குறிப்பிடவில்லை... நீங்கள் சொன்னது போல குறிப்பிட்டிருக்கலாம்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....