எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 21, 2011

ஓர்ச்சா என்றொரு நகரம்…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 20]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19)


மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம்.  இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

புந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது.  Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது.  1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன.  அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள், மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன. 


நாங்கள் சென்ற அன்று முதலில் பார்த்த இடம் ”ஷீஷ் மஹால்”.  இந்த இடம் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா ”உதைத் சிங்” அவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம்.  ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது.  மிச்சம் இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் இருக்கிறது.  நாங்கள் அனைவரும் அங்கு சென்று அறைகளையும், மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். 


இந்த மஹால், ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது.  இந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று நினைத்தால் அது முழுவதற்கும் இன்று நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று எங்களுடன் வந்த ரோஹித் பட்நாகர் அவர்கள் சொல்லவே இன்றைய பொழுதின் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று கேட்டோம்.

மாலை 07.00 மணிக்கு ஒலி-ஒளி மூலம் இந்த ஓர்ச்சா நகரத்தின் பழமையை விளக்கிச் சொல்லும் காட்சி இருக்கிறது என்று சொல்லி, அது வரை பக்கத்தில் இருக்கும் ராம் ராஜா மந்திர் சென்று பார்த்து விட்டு, அப்படியே அந்த ஊரின் முக்கிய கடை வீதியைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னார். 

கடை வீதி என்று சொன்னவுடன் ஏதோ பெரிய கடை வீதி, நிறைய கடைகள் இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம்.  இப்போது இந்த புந்தேலா தலைநகரத்தில் இருப்பது இந்த கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.  சில கடைகள் இருக்கின்றன.  ஜான்சியிலிருந்து கஜுராஹோ செல்லும் வழியில் இந்த இடம் இருப்பதால் நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  அதனால் இங்கு விற்கும் பொருட்களின் விலையும் டாலரின் அளவிற்குத் தான் இருக்கிறது. 

அப்படியே நடந்து சென்ற போது இந்த இடத்தின் பின்னடைவு கண் கூடாகத் தெரிந்தது.  மொத்த ஊரின் மக்கள் தொகையே இருபதாயிரத்திற்கு மேல் இருக்காது.   இருக்கும் எல்லா மக்களும் சுற்றுலா வரும் பயணிகளை நம்பியே இருக்கிறார்கள்.  எங்களுடன் வந்த வண்டி ஓட்டுனர் திரு ராஜு அவர்களின் ஊராம் இது. 


ஊர் பற்றிய நிறைய விஷயங்களை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார்.  இருக்கும் சிலரும் ஜான்சி, குவாலியர் போன்ற அடுத்த நகரங்களை நோக்கிச் சென்று விட்டதாகவும் சொன்னார்.  ராம் ராஜா மந்திர் சிறப்பு பற்றியும் சொன்னார்.  சரி கோவிலையும் பார்த்து விடலாம் என்று சென்றபோது கோவில் மூடியிருந்தது.  இரவு 08.30 மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொல்லவே அப்படியே நடந்து விட்டு திரும்பினோம். 

07.00 மணிக்கு நாங்கள் கண்ட ஒலியும்-ஒளியும் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகிர்வில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.


57 comments:

 1. இது போன்று சுற்றுலா பயணிகளையே நம்பி இருக்கும் இடங்களில் அனைத்து பொருட்களும் விலையும் மிகவும் அதிகமாகவே இருக்கும்....

  ReplyDelete
 2. @ R. கோபி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோபி....

  ReplyDelete
 3. ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன. /

  அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. சரித்திரமாகிப்போன ஊர்களையும் கட்டிடடங்களையும் நம் கண்ணால் பார்ப்பதே ஒரு அருமையான அனுபவம் இல்லையா!!!!!

  அந்த மூணாவது படம் மூச்சைப்பிடிச்சு நிறுத்துதே!

  ReplyDelete
 6. "" ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.""

  உண்மை இது ஒவ்வொரு வீட்டிற்கும் பொருந்தும், அருமையான வரிகள், எளிய நடையில் அமர்க்களமாக பயணிக்கிறது இந்த தொடர் கூடவே நாங்களும்.

  ReplyDelete
 7. அனுபவங்கள் சூப்பர்.. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 8. நல்லதொரு பகிர்வு.. படங்களெல்லாம் அசத்தல். நீங்க ஏன் பிட் போட்டிகளில் கலந்துக்கக் கூடாது??

  ReplyDelete
 9. அனுபவங்களின் பகிர்வு அருமையாக இருக்கிறது!!

  ReplyDelete
 10. அழகான வர்ணிப்பு யாத்திரையும் படங்களும் அருமை, எங்களையும் கூடவே கையை பிடித்து அழைத்து செல்வது போல இருக்கிறது...!!!

  ReplyDelete
 11. புராதனமான கட்டிடங்கள் மனதை இழுத்து நிற்கவைக்கின்றன.

  ReplyDelete
 12. அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 13. அருமை!
  த ம ஓ 6
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. @ துளசி கோபால்: //சரித்திரமாகிப்போன ஊர்களையும் கட்டிடடங்களையும் நம் கண்ணால் பார்ப்பதே ஒரு அருமையான அனுபவம் இல்லையா!!!!!// ஆமாம் டீச்சர்... நல்லதோர் அனுபவம்... அனுபவஸ்தரான நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. @ A.R. ராஜகோபாலன்: தங்களது வருகைக்கும் பயணத்தில் கூடவே வருவதற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 16. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் பதிவினைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. @ அமைதிச்சாரல்: // நீங்க ஏன் பிட் போட்டிகளில் கலந்துக்கக் கூடாது??//

  கலந்து கொள்ளலாம்தான்... ஒரு முறை தில்லி நண்பர்களோடு கலந்து கொண்டு பரிசு பெற்றோம்....

  தனியாகக் கலந்து கொள்ளணும்... பார்க்கலாம்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. @ மனோ சாமிநாதன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 19. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது தொடர் வருகைக்கும், கூடவே வருவதற்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 21. @ DrPKandaswamyPhD: பதிவினை ரசித்தமைக்கு நன்றி :)

  ReplyDelete
 22. @ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும், தமிழ்மணம் வாக்கிற்கும் நன்றி புலவரே.....

  ReplyDelete
 24. அருமையான பகிர்வு.ஒலி-ஒளிக் காட்சி பற்றி அறியக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 25. புராதன கட்டிட படங்களும் பதிவும் சுவாரசியமா இருக்கு.

  ReplyDelete
 26. படங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன.

  ReplyDelete
 27. //ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது. // வருத்தமாக இருக்கிறது...

  ReplyDelete
 28. சரளமான உங்கள் நடையின் மூலம் எங்களையும் கூடவே கையை பிடித்து அழைத்துச் செல்வது போல உணர்கிறோம். நன்றி நண்பரே...

  ReplyDelete
 29. உங்க தளத்துக்கு வந்தாலே பொறாமை உணர்ச்சி தலை தூக்குது சகோ. பின்னே இவ்வளவு இடங்களை சுத்தி பார்த்தால் பொறாமை வராதா? ஆனால், நேரில் பார்க்காத குறையை உங்கள் பகிர்வு தீர்த்துவிடுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 30. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 31. @ லக்ஷ்மி: உங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 32. @ ரிஷபன்: தங்களது தொடர் ஆதரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. @ கே.பி. ஜனா: வருத்தம் தான் எனக்கும். உங்களது தொடர் ஆதரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ பால்ஹனுமான்: என்னுடன் தொடர்ந்து வந்து பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 35. @ ராஜி: //உங்க தளத்துக்கு வந்தாலே பொறாமை உணர்ச்சி தலை தூக்குது சகோ. பின்னே இவ்வளவு இடங்களை சுத்தி பார்த்தால் பொறாமை வராதா? ஆனால், நேரில் பார்க்காத குறையை உங்கள் பகிர்வு தீர்த்துவிடுகிறது.// அடாடா... பொறாமை எல்லாம் வரக்கூடாது.... :)

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. அரிதான ஊர்களை பார்த்து எங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.இப்படிலாம் ஒன்று இருப்பதே உங்க பதிவை பார்த்துதானே தெரிந்துகொள்கிறோம்.

  ReplyDelete
 37. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன. //

  பழைய கட்டிங்கள் வனப்பு மனதை வசீகரிக்கிறது.
  நீங்கள் சொன்ன மாதிரி எத்தனை ரகசியங்கள் புதைந்து இருக்கிறதோ!

  பகிர்வு அருமை.

  ReplyDelete
 39. ஒர்ச்சா பற்றி தெரிந்து கொண்டேன்.
  500 வருடங்களுக்கு மேலான சரித்திர பிரசித்தி உள்ள இடம். மேலும் அழகாக பராமரிக்கலாம். என்ன செய்வது வருத்தப்படதான் முடிகிறது.

  படங்கள் அழகாக இருக்கு
  அருமையான தகவல்கள் நிறைந்த பதிவுக்கு நன்றி, வெங்கட்.

  ReplyDelete
 40. மண்வாசம் வீசும் பதிவு...

  ReplyDelete
 41. அருமையான கட்டிடங்கள்.. புகைப்படங்கள் அழகாக இருக்கிறது...

  மூன்றாவது படம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு துளசியைப்போலவே..

  என்னவோ ஒரு பழைய தங்கநகையைப்போல இருக்கு :)

  ReplyDelete
 42. @ கோமதி அரசு: பழைய கட்டிடங்கள் வனப்பாகத் தான் இருக்கிறது.. அவற்றை கொஞ்சம் பாதுகாத்து பராமரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 43. @ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 44. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 45. @ முத்துலெட்சுமி: //மூன்றாவது படம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு துளசியைப்போலவே..

  என்னவோ ஒரு பழைய தங்கநகையைப்போல இருக்கு :)//

  அதானே... பழைய தங்கத்திற்கு என்றுமே மதிப்பு அதிகம் தானே.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 46. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 47. ஓர்ச்சாவைப் பற்றி அறிந்தேன். பயணக்கட்டுரைகள் சுவாரஸ்யமானவை. எதாவது சுவையான சம்பவங்கள் இருப்பின் அவற்றையும் பதியுங்களேன். பகிர்வுக்கு நன்றி. :-)

  ReplyDelete
 48. @ RVS: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்கள் கருத்து! :) மகிழ்ச்சி மைனரே....

  //சுவையான சம்பவங்கள் இருப்பின் அவற்றையும் பதியுங்களேன்.// முயற்சி செய்கிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. அங்கு ஏதும் மசூதிகளுக்கு போய் பார்க்கவில்லையா?

  ReplyDelete
 50. @ Ibnu Shakir: தங்களது வருகைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 51. படங்களும் விபரங்களும் அருமை. வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்கெல்லாம் வர முடியுமா தெரியாது. உங்கள் புண்ணியத்தில் , வலையிலேயே தரிசித்து விடுகிறேன்.

  ReplyDelete
 52. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முழுமையும் உங்கள் பயணத்தைப் படித்துவிட்டு எழுதுகிறேன். ஒர்ச்சா மனதை ஈர்க்கிறது. படங்களும் எழுத்து நடையும் பாந்தமாக உள்ளது.

  ReplyDelete
 53. @ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... பார்த்த இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் தான் இல்லையா....

  ReplyDelete
 54. @ ஹரணி: உங்கள் வருகையும் கருத்தும் என்னை மகிழ்வித்தது.... மற்ற பகுதிகளையும் படியுங்கள்... என் எழுத்தினை மேம்படுத்த உங்கள் கருத்துகள் நிச்சயம் உதவும்...

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....