எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 30, 2013

தில்லியில் திருப்பதி

[தலைநகரிலிருந்து பகுதி – 21]
கோவில் ஒரு தோற்றம்திருமலா திருப்பதி தேவஸ்தானம் தலைநகர் தில்லியில், கடந்த பல வருடங்களாக கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த வருடம் கூட வரும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தில்லியில் உள்ள வேங்கடேஸ்வரா கல்லூரியில் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்ய முடிந்த தில்லிவாசிகளின் சௌகரியத்திற்காக தில்லியிலேயே ஏழுமலையானுக்கு ஒரு கோவில் கட்ட சில வருடங்களுக்கு முன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.திரு நிர்மல் சேதியா எனும் பக்தர் இக்கோவிலுக்காக இடத்தினையும் பொருளுதவியையும் செய்ய, செய்த முடிவினை செயல்படுத்தி 1.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் கோவிலும் மற்ற வசதிகளும் கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் செலவில் இப்போது தயாராகி இருக்கிறது.  கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜே-ப்ளாக், உத்யான் மார்க் [மந்திர் மார்க் அருகே], கோல் மார்க்கெட், புது தில்லி.
சயனாதி வாசத்தில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள்

தாயார்
ஆண்டாள்

கருடாழ்வார்
 
வேங்கடேச பெருமாள் [பாலாஜி], தாயார் மற்றும் ஆண்டாளுக்கு தனி சன்னதிகளும், பெருமாளுக்கு நேர் எதிரே பெரிய திருவடி என அழைக்கப்படும் அவரது வாகனமான கருடாழ்வாருக்கு தனி சன்னதியும் அமைத்து மிகச் சிறப்பாக கோவில் கட்டி, நேற்றைய தினம் [29.05.2013] மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 25-ஆம் தேதி முதல் மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.ராஜகோபுரம்


திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்திருந்த ஆகம சாஸ்திர நிபுணர்கள் பலரும் சேர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி வைத்தார்கள். கோவில் மட்டுமல்லாது தியானமந்திரம்எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப் பெரிய தியானமண்டபமும் இங்கே கட்டப்பட்டிருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லும் நூலகம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனை நிலையம், இளைஞர்களுக்கு பாரம்பரிய நடனம் மற்றும் சங்கீதம் கற்றுத்தரும் வசதிகள் என அனைத்து வசதிகளும் இந்த தியான மண்டபத்தின் முதல் மாடியில் அமைக்க இருக்கிறார்கள். இரண்டாவது மாடியில் தியானம் செய்ய வசதிகள் இருக்கும்.உற்சவ மூர்த்திகள்


வேங்கடேச பெருமாள் சன்னதியில் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் ஜலாதி வாசம், தான்யாதி வாசம், [ச்]சாயாதி வாசம், க்ஷீராதி வாசம், சயனாதி வாசம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் யாஹங்களையும் ஆகம முறைப்படி நடத்தினார்கள்.கும்பத்திற்கு அபிஷேகம்


கும்பாபிஷேகம் அன்று திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவர் திரு எல்.வி. சுப்ரமணியம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு Kanumuri Bapi Raju அவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரம் பேருக்கு மேல் இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வேங்கடேச பெருமாளின் ஆசியைப் பெற்றனர். தில்லியில் வசிக்கும் பலருக்கு இந்தக் கோவில் பற்றிய விஷயம் இன்னும் தெரியாததாலோ என்னமோ கும்பாபிஷேகம் அன்று திரளான மக்கள் வரவில்லை. எனினும், வரும் நாட்களில் இக்கோவில் மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.திருப்பதி என்றதுமே நம் எல்லோருக்கும் அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு வித பயத்தையும், வரும் பக்தர்களின் அதீத எண்ணிக்கையின் காரணமாக ஒரு நிமிடம் கூட ஆண்டவனைக் கண்ணாரக் காண முடியவில்லையே எனும் ஏக்கத்தினையும் அளிக்கும். திருப்பதியில் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா கோஷத்திற்கு இணையாக “ஜருகண்டிகோஷமும் கேட்கிறதோ என எனக்குத் தோன்றும். சிறு வயதில் பல முறை சென்றிருந்தாலும், கல்லூரி காலத்திற்குப் பிறகு இது வரை செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!  இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது! அதுவும் எனது இல்லத்திலிருந்து பத்து நிமிட நடையில் ஆலயம் அமைந்திருப்பதால் தினமுமே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஆண்டவனை தரிசிக்க செல்ல ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஒருவேளை இதற்காகவே தான் திருப்பதி செல்ல வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டதோ!தில்லி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் லக்ஷ்மி நாராயண் மந்திர் எனப்படும் பிர்லா மந்திர் வருவது வழக்கம். இனி அவர்கள் இக்கோவிலின் வெகு அருகிலேயே இருக்கும் இந்த வேங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சென்று அவரது அருளுக்குப் பாத்திரர் ஆகப்போவது நிச்சயம்.மீண்டும் தலைநகர் பற்றிய வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

இதற்கு முந்தைய பதிவு - அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும். இப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்கலாமே!

32 comments:

 1. படங்களும், தகவல்களும் அருமை.

  பெருமாளை இங்கிருந்தே நன்றாக சேவித்துக் கொண்டோம்...ஜருகண்டி இல்லாமலே....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதி!

   Delete
 2. அழகான படங்கள்.இனி திருப்பதி உங்கள் அருகில்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 3. இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது!

  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. பதிவும் படங்களும் அருமை. பாராட்டுக்கள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. நல்ல பகிர்வு. பெங்களூர் மல்லேஷ்வரத்திலும் தேவஸ்தானத்தின் இதே போன்றதொரு கோவில் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   வெகு விரைவில் குருக்ஷேத்திரத்திலும் இவர்களீன் கோவில் வர இருக்கிறது.

   Delete
 6. தில்லி திருப்பதி கோவிலைப் பற்றிய தகவல்கள் படிக்கப் படிக்க ஆனந்தமாக இருக்கிறது. எங்கே ஸ்ரீநிவாசனுக்கு கோவில் கட்டினாலும் கும்பல் கும்பலாக மக்கள் வருவார்கள். எத்தனை இடத்தில் ஸ்ரீனிவாசனை சேவித்தாலும், திருப்பதி போய் அந்தக் கும்பலில் நெறிப்பட்டு பெருமாளை சேவிப்பது தொடரும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   //கும்பலில் நெறிபட்டு பெருமாளை சேவிப்பது தொடரும்..... // :))))

   Delete
 7. பத்து நிமிட நடையில் பக்தராகிய உங்களுக்கு தரிசனம் கிடைப்பதில் மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. புதிய தகவலும், அருமையான படங்ளும்.. நன்றி வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 9. திருப்பதி பெருமாளைச் சந்திச்சா திருப்பம் ஏற்படும்னு சொல்வாங்க. வீட்டுக்கு அருகில இருக்கறதால அடிக்கடி பாக்கப் ‌போறேன்னு சொல்றீங்க அப்ப லைஃப் இனிமே ஏகப்பட்ட திருப்பங்களோட இருக்குமோ? ஹி... ஹி... கோயில் பத்தின பகிர்வோட படங்கள் எல்லாமே அருமை (சாமி சிலைகளை எப்படி படம் எடுக்க அலவ் பண்ணினாங்க?)

  ReplyDelete
  Replies
  1. திருப்பங்கள் ஏற்படும்..... :) பார்க்கலாம்!

   கும்பாபிஷேகம் ஆவதற்கு முன்னர் எடுத்த படங்கள். முடிந்த பின்னர் அனுமதி கிடையாது என்பதால் முன்னரே எடுத்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 10. இலட்சுமி நாராயணர் பக்கத்தில் ஸ்ரீபதி குடிவந்தார். ஸ்ரீபதி வீட்டுப் பக்கத்தில் வெங்கடராமன் குடிவந்தார். இப்போ வெங்கடராமன் வீட்டுப் பக்கத்திலே வேங்கடேசனும் குடிவந்து விட்டார். இதையெல்லாம் இந்த பத்மநாபன் சந்தோஷமாகப் பார்க்கிறேன். இறையருளால் இனியவையே என்றும் எங்கும் தழைக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்களும் வந்து பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.... :)


   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   Delete
 11. !
  மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.
  more click http://vitrustu.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி பால சுப்ரமணியன்.

   Delete
 12. தில்லியிலும் திருப்பதியா... பெருமாள் இருக்கும் இடமெலாம் திருப்பதியாகிவிடும் போல.. சிறப்பான படங்களுடனான பகிர்வுங்க.

  இன்று வெள்ளிக்கிழமை ஆயிற்றே... ஃப்ருட் சாலட் தேடி வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா. மாலை [வெள்ளி] வெளியிட்டேன். இப்பகிர்வு வியாழன் மாலை வெளியிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. தில்லியிலும் எம் பெருமானுக்கு கோயில் என்ற செய்தி பேனாக இனிக்கிறது ! படங்க் அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தேனாக இனிக்கிறது எனச் சரியாகவே படித்து இன்புற்றேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா!

   Delete
 14. டில்லி செல்பவர்களுக்கு பார்க்க வேண்டிய இன்னொரு அருமையான கோவில் தயாராகிவிட்டது.
  புகைப்படங்களும் தகவல்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 15. படங்கள் அற்புதம்... தகவல்களுக்கு நன்றி...

  எனது dashboard-லும் இன்றைய பகிர்வு மட்டுமே வந்தது... இன்றைய பகிர்வில் (http://venkatnagaraj.blogspot.com/2013/05/48.html) நீங்கள் குறிப்பிட்டதால் தான் தெரிந்தது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. தில்லி வெங்கடேசப் பெருமாளை கண்குளிர கண்டு தர்சித்தோம்.

  உங்களுக்கு தினந்தோறும் தர்சிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....