தொகுப்புகள்

வியாழன், 8 அக்டோபர், 2015

ராஜ விருந்தும் மற்ற உபசாரங்களும்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 11

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10



சென்ற பகுதியில் ஸ்னான் [Bh]போக்[G], ஷ்ருங்கார் [Bh]போக்[G], [G]க்வால் [Bh]போக்[G], ராஜ் [Bh]போக்[G], உத்தப்பன் [Bh]போக்[G], சந்த்யா [Bh]போக்[G], ஷயன் [Bh]போக்[G], [B]பண்டா [Bh]போக்[G] என்று எழுதி இருந்தது சிலருக்கு புரிந்து கொள்வதில் கடினமாக இருந்திருக்கும். [Bh]போக்[G] என்று சொல்வது இறைவனுக்கு நைவேத்தியம்/படையல் செய்வது. ஆனால் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு படையல். இப்படி நாள் முழுவதும் நடந்து கொண்டிருக்கும்.  சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்!


[B]பண்டா [Bh]போக்[G]:

முதலில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை த்வாரகாநாதனுக்கு படையல்.  அதன் பிறகு த்வாரகநாதனின் முகத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வார்கள்.  ஒரு குழந்தைக்குப் பல் தேய்த்து விடுவது போல த்வாரகாநாதனுக்கும் பல் தேய்க்கும் படலம் நடக்கும்! அதன் பிறகு மங்கள ஆரத்தி.  இந்த சமயத்திலிருந்து பக்தர்கள் தரிசிக்கலாம்!

ஸ்னான் [Bh]போக்[G]:

அதன் பிறகு குளிப்பாட்டும் படலம்! அதாவது அபிஷேகம். நமது ஊரில் நடப்பது போலவே இங்கேயும் விதம் விதமாக அபிஷேகம். அது முடிந்த பிறகு கொஞ்சம் நைவேத்யம்.

ஷ்ருங்கார் [Bh]போக்[G]:


படம்: இணையத்திலிருந்து..

அபிஷேகம் முடிந்த பிறகு அலங்காரம். ஆஹா எத்தனை எத்தனை விதமான பட்டாடைகள், வைரம், வைடூரியம், கோமேதகம் என விதம் விதமான நகைகளால் அலங்காரம் செய்வார்கள்.  துளசி மற்றும் சந்தனம் கொண்டு அர்ச்சனை. தங்க நகைகள் மட்டுமன்றி, துளசி மாலை, பாக்கு மாலை, மலர் மாலை என எல்லா மாலைகளும் சாற்றி, தலைக்கு “குவேஎன அழைக்கப்படும் க்ரீடம், சங்கு, சக்கரம் என விதம் விதமான அலங்காரங்கள் செய்வார்கள்.  அந்த வேளையில் த்வாரகாநாதனுக்கு நடக்கும் படையலுக்குப் பெயர் ஷ்ருங்கார்  [Bh]போக்[G].

ராஜ் [Bh]போக்[G]:

மதிய வேளையில் படைக்கப்படும் பிரசாதம். இதில் மட்டும் தான் முழு உணவு – அதாவது ராஜ உணவு. கூடவே இனிப்புகளும். சில நாட்களில் [ch]சப்பன் [Bh]போக்[G] – அதாவது 56 வகையான உணவுகள். அதிலும் ஏராளமான அளவில்.  அத்தனையும் த்வாரகாநாதன் உண்ணப்போவதில்லை – சூட்சுமமாக ஒரு படையல். அதன் பிறகு அவற்றை வரும் பக்தர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்து விடுவார்கள்.

உத்தப்பன் [Bh]போக்[G]:

ராஜ உணவு உண்டால் தூக்கம் வருவது இயல்பு தானே... அதனால் அதன் பிறகு கோவில் நடை சாற்றப்பட்டு மாலையில் தான் திறப்பார்கள். மாலை வேளையில் மணி ஒலிக்கச் செய்து த்வாரகாநாதனை எழுப்பி, சந்தனம்/ஜவ்வாது ஆகியவற்றை பூசி, வாசனை திரவியங்களையும் பயன்படுத்தி அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறப்பார்கள். இந்த வேளையில் அந்தந்த நாட்களில் என்ன விதமான பழங்கள் கிடைக்கிறதோ அவற்றையும், உலர் பழங்களையும் படைப்பார்கள். இது உத்தப்பன் [Bh]போக்[G].

ஷயன் [Bh]போக்[G]:

இரவு கோவில் நடை சாற்றப்படும் நேரத்தில் த்வாரகாநாதனுக்கு பூஜைகள் முடித்து, அன்றைய தினத்திற்கான கடைசி நைவேத்தியமாக பாலும் பழமும் நைவேத்தியம் செய்வார்கள். இது ஷயன் [Bh]போக்[G].

இப்படி விதம் விதமாக படையல்களும், பூஜைகளும் ஒவ்வொரு தினமும் நடந்து கொண்டிருக்கும். இதைத் தவிர ஜன்மாஷ்டமி சமயங்களில் நடத்தப்படும் பூஜைகள் அலங்காரங்கள் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே இத்தனை கொண்டாட்டங்கள் எனில் விழாக்காலங்கள் என்றால் எத்தனை கோலாகலமான விழாவாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த அலங்காரங்கள், நைவேத்தியங்கள், த்வாரகாநாதன் என பேச ஆரம்பித்தாலே துவாரகா வாசிகளும், அவருடைய பக்தர்களும் மிகவும் பரவசம் அடைந்து கண்ணனைக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். கோவிலில் நாங்கள் சென்றிருந்த நேரத்தில், வந்திருந்த பக்தர்கள் ஆடல், பாடலில் தன்னை மறந்து கண்ணனின் நினைப்பில் மயங்கி இருந்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களை மிதிப்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மக்களின் எண்ணிக்கை அப்படி! இத்தனை கும்பல் சாதாரண நாளிலேயே இருக்கிறது என்றால் விழாக்காலங்களில் எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது!

கோவிலில் இப்படி நடக்கும் விஷயங்களைப் பேசிய படியே கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே நிறைய கடைகள் – எல்லா முக்கியமான கோவில்களின் வாசல்களிலும் இப்படி கடைகள் வைத்து இருப்பது போலவே இங்கேயும். அலங்காரப் பொருட்கள், த்வாரகாநாதனின் படங்கள், ஓவியங்கள் என பலதும் இங்கே கிடைக்கின்றன.  கடையைப் பார்த்த நண்பரும், அவரது மனைவியும் உள்ளே நுழைய நான் என் காமிராவிற்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தேன்!

எடுத்த சில அலங்காரப் பொருட்களின் படங்களையும் வேறு சில விஷயங்களையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

நட்புடன்



24 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு. இறைவனிடம் அன்பு செலுத்தும்விதம் மகிழச் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. ஆஹா! ராஜ விருந்து அருமையான பதிவு. உடனே சென்று தரிசிக்க மனம் விழைகிறது.

    சுதா த்வாரகநாதன், புது தில்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

      நீக்கு
  3. விருந்துன்னதும் ஓடோடி வந்துட்டேன். அங்கே விற்கப்படும் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டீர்களா? உண்மையான பிரசாதம்! அதைத் தவிரவும் பக்தர்களும் கொடுப்பார்கள். எல்லாத்திலும் பாலும், வெண்ணெயும், நெய்யும், வெல்லமும் மிதக்கும். வெண்ணெயோடு சர்க்கரை கலந்து கொடுப்பார்கள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  4. ரசித்தேன். கொஞ்சம் ஸ்வீட் அனுப்ப முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்ப முடியும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  5. த்வாரகா நாதனுக்கு செய்யப்படும் விதவிதமான அலங்காரங்களும் நைவேத்தியங்களும் கண்ணை மட்டுமல்ல மனதையும் கவர்ந்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  6. விதம் விதமாக படையல்களும், பூஜைகளும்
    வியப்புதான் தோன்றுகிறது ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.

      தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 5
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  7. ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம் என எல்லாமும் மனதைக் கவர்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

      நீக்கு
  9. நிறைய தகவல்கள் ...பூஜை க்ரமங்கள் கிட்டத்தட்ட இங்கு தென்னகத்தில் செய்வது போலத்தான் இருக்கின்றது இல்லையா...கேரளக் கோயில்கள் தவிர..குறிப்பாகத் தமிழகத்தில்...

    வட இந்தியர்கள் இனிப்புகள் நிறைய கொடுப்பார்கள் கோயில்களில்..இல்லையா...வட இந்தியக் கோயில்களில் பெரும்பாலும், மக்கள் விக்ரகத்தின் அருகில் சென்று தொட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றார்கள் இல்லையோ? தென்னகத்தில் தமிழகமாவது பரவாயில்லை ஆனால் கேரளத்துக் கோயில்களில் கெடுபிடிகள் ரொம்பவே...

    தொடர்கின்றோம் வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் இனிப்புகள் நிறைய. அதுவும் குறிப்பாக பால் பொருட்கள் பயன்படுத்தி செய்யும் இனிப்புகள்..

      குஜராத்திலும் இறைவனைத் தொட்டு வழிபட அனுமதிப்பதில்லை. வடக்கில் இறைவனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் கூட செய்யலாம்.... தவறில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  10. அடுத்த பதிவு ஒரே வண்ண மயமாய் இருக்கும் அப்படித்தானே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....