தொகுப்புகள்
▼
வெள்ளி, 29 ஜூன், 2018
சனி, 23 ஜூன், 2018
செவ்வாய், 19 ஜூன், 2018
திங்கள், 18 ஜூன், 2018
கதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை
மார்க்கரெட் ஆயாம்மா:
கோவையின் அவினாசி சாலையில் உள்ள
YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும்
காணப்படும் இந்த ஆயாம்மாவிடம் எல்லா குழந்தைகளுமே அன்போடு வளைய வருவார்கள். சாப்பிட
மறுப்பவர்களுக்கு அன்போடு ஊட்டி விட்டு, கைகளை சுத்தம் செய்து வகுப்புக்கு அனுப்பி
வைப்பார். எங்களை சைக்கிளில் காலையில் கொண்டு விடும் அப்பா பணம் தந்து மதியம் எதிர்
சாலையில் கொட்டி கிடக்கும் தர்பூசணி பழக்கடைக்காரரிடம் எனக்கும் தம்பிக்கும் வாங்கி
தரும்படி சொல்லிவிட்டு செல்வார். மதியம் எங்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு ஆயாம்மா
வாங்கி வந்து தருவார். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு செல்வோம்.
ஞாயிறு, 17 ஜூன், 2018
செவ்வாய், 12 ஜூன், 2018
திங்கள், 11 ஜூன், 2018
கதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி
ஓலா ஆட்டோ:
ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச்
சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் "ஆகாச கருடன்
கிழங்கு" என்ற கிழங்கினை விற்றுக் கொண்டிருந்தார்கள். குண்டு குண்டாக வால்
போன்ற நுனியுடன் இருந்தது. யாரேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா???
ஞாயிறு, 10 ஜூன், 2018
ஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!
Photo of the Day Series-1
புகைப்படங்கள் எடுப்பது எனக்குப்
பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பயணக்கட்டுரைகளிலும்
மற்ற பதிவுகளிலும் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வதை
வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் எடுக்கும் படங்கள் அனைத்தையுமே
வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது முடியாததாக இருக்கிறது. புகைப்படங்களை Flickr
அல்லது Google Photos-ல் சேமித்து வைக்கலாம் என்றாலும் அதனைப் பார்க்க ஒருவரும்
வருவதில்லை. இந்த வலைப்பூவிலேயே தினம் தினம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால்
இப்போது வருகின்ற சிலர் கூட வருவதை நிறுத்தி விடலாம்! தனியாக
புகைப்படங்களுக்கென்று வலைப்பூ தொடங்கும் எண்ணம் வந்தாலும் செயல்படுத்த விருப்பம்
இல்லை!
சனி, 9 ஜூன், 2018
புதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்புகளுடன் சந்திப்பு
முத்தமிழ் வாயில் - வரவேற்கும் புதுச்சேரி.....
சென்ற மாதத்தின் மூன்றாம் வாரம் –
என்னவரின் கல்லூரி நட்புகளைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது – சந்திப்பு நடந்த
இடம் புதுச்சேரி. போவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து பிறகு போவதென
முடிவு செய்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். காலையில் தெரிந்த ஓட்டுனருடன்
வாகனத்தில் சொகுசான பயணம் ஆரம்பித்தது. திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக
புதுச்சேரி செல்லப் போகிறோம். காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டதால் காலை உணவு
வழியில் தான்! திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்
தாண்டியபிறகு இருக்கும் A2B உணவகத்தில் தான் காலை உணவு. இட்லி, தோசை, என
அவரவருக்குத் தேவையானதை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து பயணம். பாண்டிச்சேரி எங்களை வருக
வருகவென வரவேற்றது.
வெள்ளி, 8 ஜூன், 2018
குஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மனம் வாழ்க
இரு மாநில பயணம் –
பகுதி – 49
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
அழகிய விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்ட ஆற்றங்கரையில் [Riverfront, Ahmedabad] சில மணித்துளிகள் இருந்து
இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது
இரவு மணி 10.30-க்கு மேல். அடுத்த நாள் காலையில் அஹமதாபாத் நகரிலிருந்து நான்
தலைநகர் தில்லிக்கும் கேரள நண்பர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டும்.
எங்கள் விமான நேரங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் என்பதால் நான் முதலில்
புறப்பட வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்படுவார்கள். காலை
நேரத்தில் அறையைக் காலி செய்யும் போது கணக்கு வழக்கு பார்க்க முடியாது என்பதால்
முதல் நாள் இரவிலேயே அறை வாடகை பாக்கியும் கொடுத்து, பயணத்திற்கான எங்கள்
பங்கினையும் கணக்கிட்டு கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டோம்.
வியாழன், 7 ஜூன், 2018
சிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்
சமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான
சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான
S MalarVizhi Amudhan அவர்களின் நினைவு தானே வந்தது! திருச்சியிலிருந்து ரயிலில்
தான் பயணம் – கொஞ்சம் தூரம் தான் என்றாலும் ரயில் பயணம் தான் எனக்குச் சரிப்பட்டு
வரும் என்பதால் Passenger இரயிலில் ஒரு பயணம்!
புதன், 6 ஜூன், 2018
குஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் – நதியை நோக்கியபடி
இரு மாநில பயணம் –
பகுதி – 48
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நண்பர் குரு காலையில் சொன்னபடியே,
சரியாக எட்டு மணிக்கு மேல் அழைத்தார். ”தயாராக இருங்கள், இதோ வந்து
கொண்டிருக்கிறேன் – தங்குமிடம் பெயர் மட்டும் இன்னுமொரு முறை சொல்லுங்கள்” என்று
கேட்டுக் கொள்ள பெயரையும் முகவரியும் சொல்ல, நாங்கள் தயார் ஆகியவுடன் வந்து
சேர்ந்தார். நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரது வாகனத்திலேயே எங்களை
உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த உணவகம் – சைவமா அசைவமா என்ன சாப்பிட்டோம்
என்பதையெல்லாம் சொல்லத் தான் போகிறேன்! கொஞ்சம் காத்திருங்கள்! அதற்கு முன்னர் எந்த
உணவகம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
செவ்வாய், 5 ஜூன், 2018
திங்கள், 4 ஜூன், 2018
குஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசு
இரு மாநில பயணம் –
பகுதி – 47
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சர்தார் வல்லபாய் படேல்
அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வரும்போதே ஓட்டுனர் முகேஷ் கொஞ்சம் படபடப்புடன்
தான் இருந்தார் – ஒரு வாரமாக எங்களுடனேயே பயணித்து அவரும் கொஞ்சம்
தளர்ந்திருந்தார். எங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, ரிலையன்ஸ் மெகா மார்ட்
அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டோம். அவரது படபடப்பு என்னை உறுத்திக் கொண்டே
இருந்தது. மெகா மார்ட் சென்று வாகன நிறுத்துமிடத்தில் இறக்கிவிட நண்பர்கள் முன்னே
சென்றார்கள். நான் கொஞ்சம் பின் தங்கி, முகேஷிடம் என்ன விஷயம் சொல்லுங்க, என்று
கேட்க, “இல்லை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் அதான்!” என்று
சொல்லி காரணத்தினையும் சொன்னார் – அவரது மகன்களுக்கு – இரட்டைக் குழந்தைகள் –
அன்று பிறந்த நாள் – அதனால் கொஞ்சம் சீக்கிரம் போனால் கொண்டாட வசதியாக இருக்கும்
என்று சொன்னார்.
ஞாயிறு, 3 ஜூன், 2018
தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3
தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு
அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ
நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும்
மாலையிலும் வீதி உலா, உற்சவங்கள், ஹோமங்கள், வீதி உலாவில் கோலாட்டம் என உற்சாகக்
கொண்டாட்டம் தான். திருவிழா முழுவதிலும் கலந்து கொள்வது முடியாத விஷயம். மாலை
நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலை நேர வீதி உலாவில் மட்டும் பங்கு கொள்ள
முடிந்தது. கோலாட்டம் ஆடுவதற்காகவே
குழுவாக ஆந்திராவிலிருந்து தலைநகருக்கு வந்திருந்தார்கள்.
சனி, 2 ஜூன், 2018
தமிழகத்திலிருந்து தஹிக்கும் தலைநகருக்கு……
சூரிய அஸ்தமனக் காட்சி - திருவரங்கத்திலிருந்து....
மூன்று வாரங்கள் தலைநகரிலிருந்தும்
வேலைப்பளுவிலிருந்தும் தப்பித்து குடும்பத்துடன் தமிழகத்தில் இருந்த பின்னர் இந்த
வாரம் தலைநகர் திரும்பி இருக்கிறேன். கடைசி ஒரு வாரம் தமிழகத்தில் தினம் தினம் மழை
கொஞ்சம் பெய்ததால் வெய்யிலின் கொடுமை அவ்வளவு தெரியவில்லை - தலைநகரின் சூடு அனுபவித்த எனக்கு தமிழகத்தின்
வெய்யில் அவ்வளவு அதிகமாகத் தெரியவில்லை. மூன்று வாரங்கள் தமிழகத்தில் –
விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய
இடங்களுக்குச் சென்று வர முடிந்தது இந்தப் பயணத்தில். தலைநகரிலிருந்து நேரே
விழுப்புரம் – அப்பாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பின்னர் திருச்சி. நடுவே
சிவகங்கை பயணம் – இரண்டு நாட்களுக்கு!
வெள்ளி, 1 ஜூன், 2018
குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்
இரு மாநில பயணம் –
பகுதி – 46
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
Dastan Auto World – விண்டேஜ்
வில்லேஜ் கார்கள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான விண்டேஜ் வில்லேஜ்-லியே
சாப்பிடலாம் எனச் சொன்னதற்கு “விலை அதிகம்” என்று கேரள நண்பர்கள் சொல்ல, மீண்டும்
நகரத்திற்குள் வந்து முதல் நாள் சாப்பிட்ட அதே உணவகத்திலேயே சாப்பிட்டோம். தொடர்ந்து
ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கே வந்து விட்டதால், சிப்பந்திகளுக்குக் கூட
எங்களை அடையாளம் தெரிந்து விட்டது! ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா,
சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது –
விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம்!
கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே
சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள்! சரி பரவாயில்லை – அடுத்து எங்கே!