தொகுப்புகள்

வியாழன், 31 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று


தேயிலை தோட்டத்தில்:








சென்ற பகுதியில் Tea factoryஇல் அமைத்திருந்த மலர்த்தோட்டம் பற்றிய கதைகளைச் சொல்லியிருந்தேன்! அதற்கு அடுத்ததாக நண்பர் மோகன் எங்களை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்! அங்கு ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு எங்களை இறங்கி நடக்கச் சொன்னார்! அந்த சாலையில் எங்களைத் தவிர யாருமே இல்லை! எங்கும் நிசப்தம்! 


சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள்! பச்சை பசேலென்று பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்தது! சரிவான சாலை என்பதால் பேலன்ஸ் இருக்காது என்று மகளின் கையை பற்றிக் கொண்டு நடக்கத் துவங்கினேன்! எங்களுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த என்னவர் நான் ஒரு திருப்பத்தில் திரும்ப யத்தனிக்கும் போது பதறிக் கொண்டு என்னிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார்! 


மலைப்பாதையில் சற்று சுற்றிப் போனாலும் பரவாயில்லை! அந்தப் பக்கமா போ! இப்படிப் போனா skid ஆயிடும் என்று! அவர் சொன்ன பிறகு தான் எனக்கும் தெரிந்தது! உண்மை தான்! அந்த இடத்தில் அப்படியொரு சரிவாக இருந்தது! வாகனங்களும் கூட விபத்தாகவும் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது! ஓரிடத்தில் தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே நண்பர் மோகன் எங்களை அழைத்துச் சென்றார்! அப்படிச் செல்லும் போது தேயிலையைப் பற்றிய சில தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்!


தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே நின்று கொண்டு சுற்றிலும் நம் பார்வையை செலுத்தினால் அந்தக் காட்சியை வர்ணிக்க வார்த்தையில்லை! அவ்வளவு அழகு! தூரத்தில் தெரிந்த மலைகளின் அழகு ஒருபுறம் என்றால் நம்மைச் சுற்றிலும் பசுமை போர்த்திய அழகு மறுபுறம்! இயற்கைக்கு முன்னே நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது ஒவ்வொரு முறையும் உணர்த்துகிறது! இயற்கையை ரசிக்க இன்னும் சற்று தூரம் கூட மேலே ஏறலாம் என்றார் நண்பர் மோகன்!


ஓரளவு ஏறிய பின்னர் நான் நின்றுவிட்டேன்! என்னவரும் மகளும் பாறை மீது ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்! நான் அதை எட்ட நின்று ரசித்ததோடு சரி…:) தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே ஒரு மரத்தை பூஜை செய்வார்கள் போலிருந்தது! அதற்கு நண்பர் மோகன் இங்குள்ள மக்கள் இயற்கையை கடவுளாக பூஜிப்பார்கள் என்று சொன்னார். நாங்கள் கோத்தகிரியை நன்கு சுற்றி பார்த்தாச்சு! அடுத்து என்ன! கோவைக்கு பஸ் ஏற வேண்டியது தான்!


அதற்கு முன்னே ஒரு கஃபேவுக்குச் சென்றோம்! காலையிலிருந்து குளிரில் சுற்றுகிறோமே! அடுத்து பேருந்தில் வேறு பயணிக்க வேண்டுமே! வாஷ்ரூம் வசதிகளும் இந்த கஃபேயில் சுத்தமாகவே இருந்தது! கஃபேயில் அமர்ந்திருந்த நேரத்தில் என்னவர் அங்கிருந்த பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் அவர்கள் அஸ்ஸாமிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது! அவர்கள் தயாரித்து தந்த தேநீரையும் பாராட்டி விட்டு அங்கிருந்து நாங்களும் கிளம்பிவிட்டோம்!


காந்திபுரம்! காந்திபுரம்!:



இரண்டு நாட்கள் கோத்தகிரியிலும் ஊட்டியிலுமாக நன்கு சுத்தியாச்சு! இப்போது கோவைக்கு கிளம்பணும்! கோத்தகிரி பேருந்து நிலையத்தில் எங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டார் நண்பர் மோகன்! எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கிய நேரம் அங்கே ஒரு பேருந்தும் ரெடியாக இருந்தது!


கோவை காந்திபுரம்! காந்திபுரம் காந்திபுரம்! என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர்! இந்த பஸ் தான் ஏறிடும்மா! என்றார் என்னவர்! பெட்டி backpack என்று எல்லாவற்றையும் எடுத்தும் வைத்தாயிற்று! மகளும், நானும் அவருமாக அமர்ந்து கொள்ள மூன்று இருக்கைகள் கொண்ட சீட்டும் இருந்தது! பேருந்தும் புறப்படப் போகிறது! அப்போது தான் ஒரு விஷயம் தோன்றியது!


நண்பர் மோகனைக் காணலையே! நம்மள இறக்கி விட்டுட்டு அப்படியே கிளம்பிட்டாரா!?? பஸ் ஏறப் போகும் பரபரப்பில் அவர் கிட்ட சொல்லிக் கொள்ளலையே!! என்று என்னவரிடம் கவலையுடன் நான் சொன்னதும், இல்ல! இல்ல! காரை எங்கேயாவது பார்க் பண்ணிட்டு வருவார்! நான் இறங்கி பார்க்கிறேன்! என்று சொல்லி விட்டுச் சென்றார்! 


சில நிமிடங்களில் மோகனும் பேருந்தின் ஜன்னலருகில் தென்பட்டதும், ரெண்டு நாள் ரொம்ப ஜாலியாக எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்தோம்! ரொம்ப சந்தோஷம்! நீங்களும் எங்க ஊருக்கு வாங்க!’ என்று அவரிடம் சொல்லிக் கொண்டு கையசைத்ததும் தான் மனதுக்கு சற்று நிம்மதியா ஆச்சு! எங்கள் பேருந்தும் கோவையை நோக்கி புறப்பட்டது!


அன்பு சூழ் உலகில் எங்கள் நலனிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை காட்டும் மனிதர்கள்! இந்த சிறு பயணத்திலும் நேரத்தை திட்டமிட்டுக் கொண்டு முடிந்தவரை எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறார் அல்லவா! அப்போதே அமுதாக்காவுக்கும் அலைபேசியில் அழைத்து நாங்கள் கோத்தகிரியிலிருந்து கிளம்பி விட்டோம் என்பதைச் சொல்லிக் கொண்டேன்! அப்புறம் வாங்க ஆதி! ரிலாக்ஸா தங்கிட்டு போகலாம்! என்றார் அமுதாக்கா.


இனி! கோவைக்குச் சென்று மாலை நடைபெறவிருக்கும் உறவினர் திருமண ரிசப்ஷனில் கலந்து கொள்ளணும்! நேரே தங்குமிடத்துக்கே எங்களை வந்து விடச் சொல்லி மாமாவும் அலைபேசியில் அழைத்துச் சொல்லிவிட்டார்! மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் பேருந்துடன் வழியெங்கும் தென்பட்ட பல வண்ண மலர்களை பார்த்துக் கொண்டே மனதும் சற்று பயண அனுபவங்களை அசைப் போட்டுக் கொண்டிருந்தது!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

31 ஜூலை 2025


8 கருத்துகள்:

  1. நேரில் பார்க்கும்போது நீங்கள் பார்த்த அழகு படத்தில் அவ்வளவு வராது என்பதற்கு இரண்டாவது படம் ஒரு உதாரணம்!  அதே மூன்றாவது படம் நன்றாய் இருக்கிறது.

    இது மாதிரி தனிமையான சாலையில் சுற்றிலும் தேயிலைச் செடிகள் இருக்க சரிவான பாதையில் நானும் முடிஸ் எஸ்டேட்டில் நடந்திருக்கிறேன்.  அப்போது பார்க்க அழகாயிருந்தாலும், அங்கு இன்டர்வியூவில் வென்றபோது அங்கேயே அந்த தனி சாலையில் / ஊரில் தொடர்ந்து இருக்க முடியாது என்று நான் நினைத்ததற்கு வேறு காரணமும் இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், நம் மொபியலில் கேமரா ஆப்ஷன்களில் HDR ஆப்ஷன் நாம் எடுத்திருந்தால், லைட்டிங்க் இருக்கும் பகுதியில் ஹெச் டி ஆரும் சேர்ந்து படங்களில் குறிப்பாகப் பச்சையில் இப்படி மஞ்சள் கொஞ்சம் தெரியும். அது இயற்கையாக போதுமான லைட்டிங்க். கூடவே ஹெச் டி ஆர்.

      அடுத்த படத்தில் வெளிச்சம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும்னு நினைக்கிறேன் ஸோ ஹெச் டி ஆர் ஓப்பனாக இருந்தாலும் நன்றாகவே வரும்.

      என் மொபைலில் இந்த ஹெச் டி ஆர் ஆப்ஷனை ஓப்பன் செய்துவிட்டு வேண்டாத இடங்களில் அதை ஆஃப் செய்யாமல் எடுத்துவிடுவேன். ஒவ்வொரு படமும் எடுக்கறப்ப இதை நோட் செய்வது மறந்துவிடும்! இதை மொபைலில் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயம்.

      நான் சொல்வது சரியான்னு எனக்குத் தெரியாது. என் மொபைலில் இப்படிச் செய்தப்ப தெரிந்து கொண்டது.

      கீதா

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    3. இத்தனை விவரங்கள் ஏதும் எனக்குத் தெரியாது! தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  2. படங்கள் சூப்பர்!

    மலைச் சரிவில், தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் நடப்பது என்பது அருமையான அனுபவம் தான். குளு குளு பயணம் சூப்பர் பயணம். உங்கள் அனுபவங்களும் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். தேயிலை தோட்டங்களுக்கு நடுவே சென்ற அந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. படங்களும் அனுபவங்களும் மிக நன்றாக இருந்தன.வார்த்தைக்கு வார்த்தை என்னவர் என்னவர் என்று நீங்கள் எழுதியது உங்களவர் மீதிருக்கும் உங்கள் பிரேமையை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி.
    இதேபோல் மேன் மேலும் பல இன்பச் சுற்றுலாக்கள், குடும்பப் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மட்டுமேயான அவரல்லவா...:) பதிவுகளில் எங்கேயாவது என் கணவர் என்று எழுதினால் கூட எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிகிறது..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜி அக்கா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....