தொகுப்புகள்
▼
வியாழன், 30 நவம்பர், 2017
புதன், 29 நவம்பர், 2017
இரண்டாம் நாள் – மலைச்சிகரம் நோக்கி – மாமா மருமான் உணவகம்
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 13
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம்
தலைநகரம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down
Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
தங்குமிட ஜன்னல் வழியே தௌலாதார் மலைச்சிகரங்கள்....
வழியில் பார்த்த ஒரு ஆறு....
முதல்
நாள் ஆட்டங்களில் கலந்து கொள்ளாத நானும் நண்பர் பிரமோத்-உம் காலையில் எழுந்து எங்கள்
வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானோம். மற்ற அறையில் இருந்த மூன்று நண்பர்களும் ஒரு
வழியாகத் தயாரானார்கள். முதல் நாள் எங்களுக்கு வாகனம் அளித்த சர்தார்ஜியிடம் பேசியதில்
CHசம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு மூன்று இடங்களைப் பற்றிச் சொல்லி அங்கே சென்று வாருங்கள்
– மிக அழகிய இடம் என்று சொல்ல, அந்த இடங்களை நோக்கித் தான் எங்கள் இரண்டாம் நாள் பயணம்
இருந்தது. மற்றவர்கள் தயாராகும் வரை அறையின் ஜன்னல் வழியே தெரியும் தரம்ஷாலா நகரின்
பனிபடர்ந்த தௌலாதார் மலைகளையும், மலைகள் முழுவதும் கட்டியிருந்த வீடுகளையும் படம் பிடித்துக்
கொண்டிருந்தேன். மலையே தெரியாத அளவிற்கு வீடுகள் கட்டி இருக்கிறார்கள்!
செவ்வாய், 28 நவம்பர், 2017
திங்கள், 27 நவம்பர், 2017
ஞாயிறு, 26 நவம்பர், 2017
சனி, 25 நவம்பர், 2017
வெள்ளி, 24 நவம்பர், 2017
இரவினில் ஆட்டம் - தங்கும்விடுதி - தரம்ஷாலா
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 12
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம்
தலைநகரம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down
Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
டான்ஸ் பார்ட்டி!
அருங்காட்சியகத்தினைப்
பார்த்த பிறகு வாகன ஓட்டிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினைக் கொடுத்து அடுத்த நாள் எங்கே
செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து சொல்கிறோம் என அனுப்பி வைத்தோம். தரம்ஷாலாவின்
பிரதான சாலைகளில் அப்படியே நடக்க, ஒரு மால் - அந்த ஊருக்கு அது பெரிய மால்! – தில்லியில்
இருந்தால் ஒரு சிறு காம்ப்ளெக்ஸ் தென்பட்டது.
அங்கே நுழைந்து கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் – கொஞ்சம் கொறிக்க, சுவைக்க! இப்படியாக
நடந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் கடை! டீக் கடை! கொஞ்சம் தேநீர் அருந்தினோம்.
சுவையான தேநீர் – மிதமான குளிருக்கு இதமாய் இருந்தது. வேடிக்கை பார்த்தபடியே நடக்க
இன்னுமொரு கடை – அது நண்பர்களுக்குத் தேவையான கடை!
இம்முறை
வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் எனக்குப் பழக்கமில்லாதவர். மற்ற இருவரும் பழக்கமானவர்கள்
– என்னுடன் சில பயணங்கள் மேற்கொண்டவர்கள். அவர்களுக்கும் மதுப் பழக்கம் உண்டு என்றாலும்
கொஞ்சம் நிதானமாகவே இருப்பவர்கள். புதியவர் கடையைப் பார்த்ததும் உடனே உள்ளே புகுந்து
விட்டார். மூன்று பேருக்குத் தேவையான சரக்கை வாங்கிக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடந்தோம்.
பொதுவாக புதிய இடங்களில் இருக்கும்போது இப்படி சரக்கு அடிப்பதில் சில சிக்கல்கள் உண்டு.
அங்கே அனுமதி உண்டா இல்லையா? அப்படி அனுமதி இல்லை எனில் எங்கே சரக்கடிக்க? என்ற கவலை
ஏதுமில்லாமல் கைகளில் சரக்கோடு உள்ளே நுழைய அங்கே பார்த்த காட்சி – தங்கும்விடுதியின்
உள்ளே தங்கி இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கனவே கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள்! சில
அறைவாசிகள் கச்சேரி முடிந்து வாசலில் பாட்டில்களும் எலும்புத்துண்டுகள் நிறைந்த தட்டுகளும்
வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு
அறைகள் எடுத்திருந்தோம் என்பதால் நானும் நண்பரும் [என்னைப் போல சரக்கடிக்காதவர்!] ஒரு
அறைக்குச் செல்ல, மற்ற மூவரும் அவர்களது அறைக்குச் சென்றார்கள். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து,
அரை மணி நேரம் கழித்து மற்றவர்கள் அறைக்குச் சென்றால் “வெள்ளம் அடி!” துவங்கி இருந்தது
– ஏற்கனவே இரண்டு ரவுண்டு உள்ளே போயாச்சாம்! சைட் டிஷ்-உம் சரக்கும் மாற்றி மாற்றி
உள்ளே போய்க்கொண்டிருந்தது. சரி இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குப் போகலாம் என புறப்பட்டோம்.
பக்கத்திலேயே பிரதான சாலையிலிருந்த ஒரு உணவகத்தில் சைவம்-அசைவம் என இரண்டும் இருக்க
அங்கே சென்றோம். சப்பாத்தி, சப்ஜி, ராய்த்தா, சலாட் என நான் சொல்ல, அவர்கள் சிக்கன்,
மட்டன் என சொல்லிக் கொண்டு, கால்களை – அதாங்க கோழியின் கால்களை கடித்து இழுத்தார்கள்.
இரவு
உணவிற்குப் பிறகு நானும் என் அறை நண்பரும் கொஞ்சம் நடக்க, மற்ற மூவரும் இன்னும் கொஞ்சம்
சரக்கு வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்! நாங்கள் தங்குமிடம் திரும்பியபோது
மூவரில் ஒருவருக்கு பயங்கர போதை! கைலியை மடக்கிக் கட்டி – ஸ்வெட்டர் கழற்றி இருந்தார்
– உள்ளே போன சரக்கு குளிரை மறக்கடிக்கவிட்டது போலும்! முதல் முறை குளிர் பிரதேசத்தில்
வந்திருந்த அவருக்கு இது நல்லதல்ல எனச் சொல்ல, “ஹா… இதெல்லாம் பெரிய குளிரா?” என்று
சத்தமாக பேசிக்கொண்டும், மற்றவர்களை வம்புக்கிழுத்தும் கொண்டிருந்தார். தள்ளாடியபடியே,
மொட்டைமாடிக்குச் சென்று சிறிது நேரம் இருக்கலாம் என மூவரும் செல்ல நானும் என் நண்பரும்
எங்கள் அறைக்குத் திரும்பினோம் – நண்பர் அவர்களிடம் சீக்கிரமா தூங்குங்க, நாளைக்கு
காலையில் சுற்ற வேண்டும் என்று சொன்ன பிறகு.
தூங்கலாம்
என நாங்கள் நினைத்தாலும் தூங்க இயலவில்லை. மேலே சென்றவர்கள் ஒரே ஆட்டம். இருவர் தன்
நிலையில் இருக்க, பயங்கர போதையில் இருந்தவர் ஆடிக்கொண்டும், சத்தமிட்டபடியும் இருக்க,
வேறு வழியில்லாமல் நண்பர் கதவைத் திறந்து கொண்டு மாடிக்குச் சென்று அனைவரையும் திட்டி,
வெளியூர் வந்திருக்கும் சமயத்தில் பிரச்சனையை இழுத்து விட்டுக் கொள்ளாதீர்கள் என அறைக்குள்
அடைத்தார். போதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாத அளவிற்கு போதை! அவருக்கு வீட்டில்
சரக்கு அடிக்க அத்தனை வாய்பில்லை என்பதால் இப்படி வெளியே வரும்போது நிறைய சரக்கு அடிப்பவராம்!
என்னதான் வாய்ப்பு கிடைக்கிறது என்றாலும் தன் நிலை மறக்கும் அளவிற்கு சரக்கடிப்பது
என்ன பழக்கமோ? அறைக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது.
தங்கும் விடுதியில் இருந்த பல அறைகளில், இரண்டு அல்லது மூன்று அறைகளிலிருந்து இப்படி
சத்தம்!
காலையில்
நாங்கள் எழுந்து தயாராக, அவர்கள் அறையில் நிசப்தம்! இரவு ஒன்றரை மணி வரை போதையில் பேச்சு
தொடர்ந்திருக்கிறது – மற்ற இருவரும் அமைதியாக இருக்க, இவர் மட்டும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அனைவரையும் தயாராகச் சொல்லிவிட்டு கீழே செல்ல, தங்கும் விடுதியின் உரிமையாளர் எங்களைப்
பார்த்து புன்னகைத்து – “ராத்திரி கொஞ்சம் ஓவரோ?” எனக்கேட்க,
”நேரம்டா டேய்!” என நினைத்து, ”எங்களுக்கல்ல, மற்ற நண்பர் ஒருவருக்கு” எனச் சொல்லி
சிரித்தோம். ”இரண்டு மணி வரை புலம்பிக் கொண்டே இருந்தாரே” என்று சொல்லி, ‘இன்னிக்கு
காலி பண்ணிடுவீங்கதானே?” என்று கேட்டார்! முதல் நாள் வண்டி அனுப்பிய சர்தார்ஜியிடம்
பேசினோம். அன்றைக்கு எங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்து வண்டி அனுப்பச் சொல்லி
தேநீர் அருந்திய பிறகு அறைக்குத் திரும்பி தயாரானோம்.
இரவு
முழுவதும் ஆடிய நண்பர், குளித்து முடித்து தயாராக இருந்தார். பார்க்கும்போதே தெரிந்தது
அவருக்கு போதை தெளியவில்லை என. எதற்காக இப்படி
குடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, கேரளாவில் சரக்கு விலை அதிகம், இங்கே குறைவாக இருக்கிறதே,
”காசுக்குக் காசு
மிச்சம், ஜாலிக்கு ஜாலி” என்பதால் அடிக்கிறார்களாம்! நல்ல சாக்கு தான்!
இரவு அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தோன்றியது! நான் நினைத்தது சரியாகவே
இருந்தது – அன்றைக்கு முழுவதும் அவர் Off! எல்லோரும் அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தோம்.
அவர் கேட்ட கேள்வி அப்படி – ”ராத்திரி ஏதும் ரொம்பவே பேசினேனோ?”
தொடர்ந்து
பயணிப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
வியாழன், 23 நவம்பர், 2017
சாமைசோறு – தினை வடை – சிக்கன் தாய் பூ - ஆதி மஹோத்ஸவம் 2017
சிக்கன் தாய் பூ
விற்பனைக்கு ஒரு ஓவியம்!
தில்லியில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து
கொண்டே இருக்கும் என சில பதிவுகள் முன்னர் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.
இப்போதும் தலைநகர் தில்லியில் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று
தில்லியின் பிரகதி மைதானில் நடக்கும் Trade Fair – நவம்பர் 14 முதல் 27 வரை எல்லா
வருடங்களிலும் நடக்கும் நிகழ்வு இது. தில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
இருந்து இந்த நிகழ்வுக்கு செல்பவர்கள் ஏராளம். இந்த வருடமும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் செல்லவில்லை. நான் சென்றது இரண்டாம் நிகழ்வான ஆதி மஹோத்ஸவம். இந்தியா
முழுவதிலும் இருந்து ஆதிவாசிகளை வரவழைத்து தில்லியின் INA பகுதியில் இருக்கும்
Delhi Haat-ல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதம் [நவம்பர்] 16-30 வரை
நிகழ்வு உண்டு.
புதன், 22 நவம்பர், 2017
செவ்வாய், 21 நவம்பர், 2017
மோகன்ஜியின் பொன்வீதி – வாட்ஸ் அப் அலப்பறைகள் - கதம்பம்
அன்பின் நண்பர்களுக்கு,
எனது கோவை2தில்லி
வலைப்பூவில் அவ்வப்போது சில விஷயங்களைக் கதம்பமாகத் தொகுத்து பகிர்வது வழக்கம்.
அங்கே எழுதுவதே இல்லை! முகநூலில் சமீபத்தில் எழுதிய சில விஷயங்கள் இங்கே
கதம்பமாக….
திங்கள், 20 நவம்பர், 2017
எழில் கொஞ்சும் கிரிக்கெட் ஸ்டேடியம் - தரம்ஷாலா
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 10
பின்புலத்தில் பனிச்சிகரங்களும் அழகிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கும்...
நெய்வேலியில்
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. ரேடியோ
– அதுவும் வால்வு ரேடியோ மட்டும் தான். அதில் தான் பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்களின்
வசனங்களை ஒலி பரப்புவார்கள். கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும்
Running Commentary கேட்பதுண்டு. சென்னையில் போட்டிகள் நடக்கும் போது மட்டும் தமிழில்
ஒலிபரப்புவார்கள். அப்படி தெரிந்து கொண்டது தான் கிரிக்கெட் விளையாட்டு. வெளியே சென்று
விளையாடியது கிடையாது. பள்ளியில் Hand Cricket என வகுப்புக்குள்ளேயே விளையாடி இருக்கிறோம்.
ஞாயிறு, 19 நவம்பர், 2017
வரகூர் – ஒரு புகைப்பட உலா
சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது
விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பர் குடும்பம், நான் மற்றும் பெரியம்மா ஒரு
வாடகைக் கார் எடுத்துக் கொண்டு காவிரிக் கரையோர ஊர்கள் சிலவற்றுக்குச்
சென்றிருந்தோம். நண்பர் குடும்பத்திற்கு குல தெய்வம் வரகூர் தான். வரகூர் ஸ்ரீ
வெங்கடேச பெருமாள் கோவில் வீடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும். கோவிலை அடுத்த சில
வீடுகள் நண்பரின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தவை. அவர் அப்பா காலத்திலேயே
மற்ற உறவினர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டார் என்று சொல்லிக் கொண்டு
வந்தார். திண்ணை வைத்த வீடுகள், சாலையின்
நடுவே கிணறு, அதே தெருவில் இருக்கும் சிவன் கோவில் என பார்த்து வந்தேன்.
சனி, 18 நவம்பர், 2017
மை ஃபிரண்ட் கணேஷா – ரோஷ்ணி வெங்கட்
ஹாய்…..
"வெளிச்சக்கீற்றுகள்"
நு எனக்கு ஒரு பிளாக் அப்பா திறந்து கொடுத்தார். அதுல, நான் வரைஞ்ச சில ஓவியங்களை சேமித்துக்
கொண்டிருந்தேன். இப்பல்லாம், ஒண்ணுமே அங்க பகிர முடியல! அம்மா/அப்பாவே ஃபேஸ்புக்-ல
போட்டுடறாங்க. நான் என்னோட பிளாக் திறக்கறதே
இல்லை! அதுனால, இனிமே, வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவையோ, நான் வரையற
படம் எங்கப்பாவோட பிளாக்-லையே வரும்.
இன்னிக்கு
முதல் படமா, எனக்கு ரொம்ப பிடிச்ச மை ஃபிரண்ட் கணேஷா...... பென்சில் ஓவியம் தான்......
கூகிள்-ல தேடி இந்த கணேஷா பிடிச்சதால, அப்படியே வரைஞ்சு இருக்கேன்.
நான்
வரைஞ்ச இந்த ஓவியம் பிடிச்சுதாந்னு சொல்லுங்களேன்....
பை
பை....
வெள்ளி, 17 நவம்பர், 2017
மூன்றிலிருந்து ஒன்று – வலைப்பூக்கள் – மாற்றம்…
எங்கள் வீட்டில் மூவரும் பதிவர்கள்
என்பதால், “வலைப்பதிவர் குடும்பம்” என்று சொல்வது வலைப்பூ நண்பர்களுக்கு
வழக்கம். நான் “சந்தித்ததும்,
சிந்தித்ததும்” எனும் இந்த வலைப்பூவில் எழுதி வர, இல்லத்தரசி “கோவை2தில்லி”
என்ற வலைப்பூவில் எழுதி வந்தார். எங்கள் இளவரசியின் ஓவியங்களை “வெளிச்சக்கீற்றுகள்”
என்ற வலைப்பூவில் வெளியிட்டுக் கொண்டிருந்தோம். கோவை2தில்லியில் இப்போதெல்லாம்
பதிவுகள் எழுதுவதே இல்லை – எழுதுவது அனைத்தும் அவரது முகநூலில்! மகளின்
ஓவியங்களும் அப்படியே! முகநூலில் பகிர்ந்து கொள்வதோடு சரி. அந்த இரண்டு
வலைப்பூக்களில் கடைசியாக வந்த பதிவுகள்…..
கோவை2தில்லி – வண்ணங்களின் சங்கமம்
– ஜனவரி 9, 2017.
வெளிச்சக்கீற்றுகள் – க்ருஷ் – மே 9,
2016
இடையிடையே இல்லத்தரசியின் பதிவுகளை
எனது பக்கத்தில் வெளியிட்டிருந்தாலும், மகளின் ஓவியங்கள் பகிர்ந்து கொண்டது
மிகவும் குறைவே. அதனால் இனிமேல் எனது வலைப்பூவிலேயே அவர்களது பதிவுகளும்
வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். அதனால் தான் முகப்பிலும் சில மாற்றங்கள்.
நாளை மகளின் ஒரு ஓவியம் வெளியிட இருக்கிறேன். அவ்வப்போது அவர்களின் பதிவுகள்
இங்கேயே வெளி வரும்!
எப்போதும் போல, பதிவுகளை வாசித்து,
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…. தொடர்ந்து நட்பில் இருப்போம்! சகோ தேனம்மை
அவர்கள் சொல்வது போல,
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி. ஜெய் மாதா குணால் பத்ரி – வற்றாத பாறை - தரம்ஷாலா
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 9
மாதா குணால் [P]பத்ரி கோவில் - வெளிப்புறத் தோற்றம்
தேயிலைத்
தோட்டங்கள், இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்த பிறகு கொஞ்சம் தேநீர் குடித்தால்
நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அந்தப் பகுதியில் தேநீர் குடிக்க எந்த வசதியும்
இல்லை! எங்கே சுற்றிப் பார்த்தாலும் தேயிலை, ஆனால் தேநீர் குடிக்க வசதி இல்லை! ”Water,
water everywhere! But not a drop to drink!!” கதை தான். சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம்
என அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். தேயிலைத் தோட்டங்களுக்கு வெகு அருகிலேயே ஒரு சக்தி
ஸ்தலம் இருக்கிறது அதற்குப் போகலாம் என்று சொன்னார் எங்கள் வாகன ஓட்டி.
வியாழன், 16 நவம்பர், 2017
திருவையாறு கோவிலும் நயன்தாராவும்!
ஐயாரப்பர் கோவில் பிரதான கோபுரம், திருவையாறு
சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது
விஜயவாடாவிலிருந்து வந்திருந்த குடும்ப நண்பர்களை அழைத்துக் கொண்டு, தஞ்சாவூர்
காவிரி கரையோர கோவில்கள் சிலவற்றிற்குச் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் நான்கு
பேர் மட்டுமே என்பதால் ஒரு சிறிய வாகனத்தினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு,
நண்பருடைய குலதெய்வ கோவிலான வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரது
வழிபாடுகளை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் திருவையாறு. திருவையாறு
கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்பது எனது பெரியம்மாவின் ஆசை. மதியம்
பன்னிரெண்டு மணிக்குள் நடை சாற்றிவிடுவார்கள் என்பதால் வேகவேகமாக அங்கே சென்று
சேர்ந்தோம்.
புதன், 15 நவம்பர், 2017
விதம் விதமாய் தேநீர் – ஹிமாச்சல் தேநீர்
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 8
தரம்ஷாலா - தேயிலைத் தோட்டங்கள்....
தரம்ஷாலா - தேயிலைத் தோட்டம் ஒன்றில் நான்....
படம்: நண்பர் பிரமோத்!
ஹிமாச்சலப்
பிரதேசத்தின் பாலம்பூர், காங்க்ரா பகுதிகள் தேயிலைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவை.
பல வருடங்களாகவே இங்கே தேநீர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்திலேயே
இங்கே தேநீர் பயிரிட ஏதுவாக இருக்கும் என்று உணர்ந்து 1800-களில் தேநீர் பயிரிட ஆரம்பித்தார்களாம்.
Black Tea, Green Tea என இரண்டுமே பயிரிடுகிறார்கள் என்றாலும் முதல் வகை தான் அதிகம்
பயிரிடப் படுகிறது. எனது நண்பருக்கு பாலம்பூர் சென்று, அங்கே உள்ள தேயிலைத் தோட்டங்களைப்
பார்த்து வர வேண்டும் என்பது ஆசை. அதற்கு பாலம்பூர் வரை ஏன் செல்ல வேண்டும், தரம்ஷாலா,
மெக்லாட்கஞ்ச் பகுதியிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டங்கள் உண்டு – மிகவும் பழமையான
தேயிலை நிறுவனமான ஹிமாச்சல் தேநீர் நிறுவனம் இங்கே தான் இருக்கிறது என்று சொன்னார்
எங்கள் ஓட்டுனர்.
செவ்வாய், 14 நவம்பர், 2017
சாப்பிட வாங்க: கொள்ளு இட்லி – கத்திரிக்காய் கொத்ஸு
கொள்ளு இட்லி - கொத்ஸு
இந்த கொள்ளு
இருக்கே, இதை குதிரை மட்டும்தான் சாப்பிடும்னு தான் சின்ன வயசுல எனக்கு ஒரு
நினைப்பு. வீட்டில் அம்மா பயன்படுத்தியதே இல்லை என்று சொல்லலாம்! தீபாவளி
சமயத்தில் அப்பா Member-ஆக இருந்த Thrift Society-இல் கூப்பன் கொடுப்பார்கள் – அதற்கு ஒரு ஸ்வீட் பாக்கெட், ஒரு மிக்ஸர்
பாக்கெட் கிடைக்கும் – அதை வாங்க நானும் மூத்த சகோதரியும் சைக்கிளில் போய் வாங்கி
வருவோம்! அப்படி வாங்கிக் கொண்டு வரும் மிக்சரில் கொள்ளு பார்த்து, “அய்ய குதிரை
சாப்பிடற கொள்ளு மிக்சரில் போட்டு இருக்காங்களே!” என்று அருவருப்பாய் சொன்னதுண்டு
[ஆனாலும் அதை மட்டும் ஒதுக்கி விட்டு மிக்சர் சாப்பிட்டு விடுவேன்!]. அதைச்
சாப்பிட்டால் குதிரை மாதிரி கனைக்க வேண்டி வருமோ என்ற பயம் கூட இருந்தது! கொஞ்சம்
விவரம் தெரிந்த பிறகு கொள்ளு மனிதனும் சாப்பிடத் தக்கதே என்று புரிந்தது.
திங்கள், 13 நவம்பர், 2017
தலாய்லாமா – புத்தர் கோவில் – மெக்லாட்கஞ்ச்
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 7
புத்தர் பிரான்.....
St.
John’s Church in the wilderness, Bபாக்சுநாக் ஆலயம் தொடர்ந்து நாங்கள் அடுத்ததாய்
சென்றது ஒரு புத்தர் கோவில் – ஆம் தலாய் லாமா அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பித்து
வந்து அமைத்த முக்கியமான வழிபாட்டுத் தலம் – The Dalai Lama Temple Complex –
Tsuglhakhang Complex என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். மிகவும் பெரிய இடம்.
அந்த இடத்தில் பல புத்த பிக்குகள் வசிக்கிறார்கள். திபெத்தியர்கள் பெரும்பாலானோர் இங்கே தான் தங்கி
தங்களது புத்த மதக் கோட்பாடுகளை கற்றுக் கொள்கிறார்கள்.
ஞாயிறு, 12 நவம்பர், 2017
திருவரங்கம் கோவில் கொலு 2017 – புகைப்பட உலா
சமீபத்தில் தமிழகத்தில் சில நாட்கள்
இருந்த போது நவராத்ரி கொலு/தீபாவளி சமயம். பார்க்கச் சென்ற கொலு ரொம்பவே குறைவு
என்றாலும் பார்த்த கொலு காட்சிகளை ஒரு புகைப்பட உலாவாக பகிர்ந்து கொண்டிருந்தேன்.
அப்படி பகிர்ந்து கொண்டபோது திருவரங்கம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவினை நான்
எடுத்த புகைப்படங்கள் தனியாக பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன். இதோ இந்த வார ஞாயிறில் திருவரங்கம் கோவில் கொலு
– 2017 புகைப்படங்கள் உங்கள் ரசனைக்கு!
சனி, 11 நவம்பர், 2017
காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் – ஒரு முக்கோணக் காதல்
சமீபத்தில் ஒரு இளைஞரை சந்திக்க
நேர்ந்தது. குருத்வாரா ஒன்றில் "கர் சேவா" [குருத்வாராக்களில்,
பொதுப்பணியை, எந்த வித சம்பளமும் பெறாமல், குருவிற்கு ஒரு தொண்டாகச் செய்வது]
செய்து கொண்டிருந்தார். பரவாயில்லையே, இந்த வயதில் சேவை செய்யும் மனப்பாங்கு
இருக்கிறதே என மகிழ்ந்தேன். அவரை நோக்கி ஒரு சிநேகப் புன்னகை வீச, அவரும் நகைத்து
"சத் ஸ்ரீ அகால்" என்று சொல்ல, தலை அசைத்து, வாழ்த்தினேன். "இந்த
வயதில் இப்படி சேவை செய்வது பெரிய விஷயம், உங்கள் மக்கள் தொண்டு தொடரட்டும்"
என்று சொல்ல, மறுத்து தலையை ஆட்டி, கொஞ்சம் புன்னகைத்து, இது எனக்குக்
கொண்டுக்கப்பட்ட தண்டனை என்றார். "கொஞ்சம் பொறுங்கள், எனது இன்றைய பணி பத்து
நிமிடத்தில் முடிந்து விடும், பிறகு பேசலாம்" எனச் சொல்ல, காத்திருந்தேன்.
வெள்ளி, 10 நவம்பர், 2017
தண்ணீருக்கு சண்டை – பாக்சுநாக் - தரம்ஷாலா!
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 6
Bபாக்சுநாக் கோவில் அருகே இருக்கும் குளம்
St.
John’s Church in the Wilderness என அழைக்கப்படும் தேவாலயத்திற்குச் சென்று அங்கே இருந்த
அமைதியை ரசித்தபிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக நாங்கள் சென்றதும் ஒரு வழிபாட்டுத்
தலம் என முந்தைய பகுதியை முடிக்கும் போது சொல்லி இருந்தேன். நாங்கள் அப்படிச் சென்ற
வழிபாட்டுத் தலம் “பாக்சுநாக் கோவில்”! இங்கே என்ன கோவில் இருக்கிறது, எப்படி வந்தது,
யார் கட்டினார்கள் என்ற விவரங்களையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்! முதலில் கதை!
வியாழன், 9 நவம்பர், 2017
புகை மண்டலத்தில் வாழ்க்கை – சுவாசம் முட்டும் தலைநகர்!
இந்தப் படத்தில் இருப்பது இந்தியா கேட் பகுதி!
நிஜமாத்தாங்க!
இரண்டு
நாட்கள் முன்னர் தான் தலைநகரில் பல நிகழ்வுகள் நடப்பது ஒரு வசதி என பதிவிட்டு இருந்தேன்.
ஆனால் வசதிகள் மட்டுமே நிறைந்தது வாழ்க்கை அல்லவே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது
தலைநகரம் – ஒரு நகரமே மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கிறது! பெரும்பாலும் இந்த மாதங்களில்
தலைநகர் தில்லியை ஒரு போர்வை போல போற்றியிருக்கிறது புகை மண்டலம்! பனிமூட்டம் என்று
நினைத்தாலும், இது பனி அல்ல! புகை! Visibility ரொம்பவே குறைவாக இருக்க, எங்கே பார்த்தாலும்
விபத்துகள். நேற்று காலை தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் யமுனா எக்ஸ்ப்ரெஸ்வேயில்
நடந்த ஒரு விபத்தில் பல வாகனங்கள் முட்டிகொண்ட காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது.
பார்க்காதவர்கள் பார்க்க இங்கே ஒரு காணொளி!
புதன், 8 நவம்பர், 2017
தேவதாரு காட்டுக்குள்ளே தேவாலயம் - தரம்ஷாலா!
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 5
St. John's Church in the wilderness!
தரம்ஷாலா....
தேவாலயம் செல்லும் பாதையில்...
நட்டி
என்கிற அழகிய கிராமத்திலிருந்து, பனிபடர்ந்த தௌலாதார் மலைச்சிகரங்களை ரசித்து, காலை
உணவை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு தேவாலயம். மிகவும் பழமையான ஒரு
தேவாலயம் இருக்கும் இடத்திற்குத் தான் எங்கள் அடுத்த பயணம். Church of St. John in
the Wilderness என அழைக்கப்படும் இந்த தேவாலயம் அடர்ந்த தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள்
இருக்கின்றது. சாலையில் வாகனத்தினை நிறுத்தி விட்டு, கற்கள் பதித்த பாதையில் உள்ளே
செல்லும் வேளையில் உங்களுக்கு இந்த இடம் பற்றிய சில தகவல்களையும் சொல்லிக்கொண்டே செல்கிறேன்.
1852-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தேவாலயம் வட இந்தியாவில் இருக்கும் பழமையான தேவாலயங்களில்
முதன்மையானது.
செவ்வாய், 7 நவம்பர், 2017
சாப்பிட வாங்க – சாக்லேட் தோசா – கோவா இட்லி – கிச்சடி - கோகுர் கேசர் சாய், இன்னும் பல!
சாக்லேட் தோசா
தலைநகர்
தில்லியில் ஒரு வசதி – இரண்டு அரசாங்கம் – அட தில்லி அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம்
என்கிற இரண்டும் தாங்க! மாற்றி மாற்றி ஏதாவது விழா நடத்திக் கொண்டே இருப்பார்கள். சமீபத்தில்
பர்யாடன் பர்வ் [சுற்றுலா பருவம்!] என்று ஒரு நிகழ்வு இருந்தது. சென்ற வாரக் கடைசியில்
[3-5, நவம்பர், 2017] World Food India 2017 எனும் நிகழ்வு இந்தியா கேட் பகுதியில்
நடந்தது. அதே சமயம் ஜன்பத் அருகே வடகிழக்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு.
INA எனும் பகுதிக்கு அருகே இருக்கும் Dilli Haat சிற்பங்கள் சம்பந்தமான ஒரு நிகழ்வு
நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஏதாவது நடந்தபடியே இருப்பது வழக்கம். பர்யாடன் பர்வ்
சென்று வந்தாலும் அது பற்றி இன்னும் ஒன்றும் எழுதவில்லை – அலுவலகத்திலிருந்து மாலையில்
சென்றதால் கையில் கேமரா/அலைபேசி இரண்டுமே இல்லை. படங்கள் இல்லை என்றாலும் எழுத வேண்டும்.
திங்கள், 6 நவம்பர், 2017
நட்டி என்றொரு ரம்யமான கிராமம் - தரம்ஷாலா!
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 4
மலைப்பாதையும், மலைத்தொடரும்...
பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்.....
தங்குமிடம்
கிடைத்ததும், ஒவ்வொருவராகத் தயாராவதற்குள் தங்குமிட உரிமையாளரிடம் பேசி அன்றைய தினத்தின்
பயணத்திற்காக வண்டி தேவை என்றோம். அவர் தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு அலைபேசியில்
அழைத்தார். என்னதான் ஹிமாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கேயும் நிறைய சர்தார்ஜிகள்
உண்டு. ஹிமாச்சல பிரதேசத்தில் பேசும் மொழிகளில் பஞ்சாபியும் உண்டு! பகாடி என அழைக்கப்படும்
மலைப்பகுதி மொழியும் உண்டு. அன்றைய தினம் வேண்டிய வாகனத்தினை அந்த நண்பர் அனுப்பி வைப்பதாகச்
சொல்லி விட்டார். வாடகையும் சரியாகவே தோன்ற வண்டியை காலை ஒன்பது மணிக்குள் அனுப்பி
வைக்கச் சொன்னோம். அதற்குள் அனைவரும் குளித்து தயாராகி விட எங்கள் சுற்றிப் பார்க்கும்
படலம் ஆரம்பித்தது! நீங்களும் சுற்றிப் பார்க்க ரெடி தானே?