தொகுப்புகள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினெட்டு – மர ஸ்கேல் ஐடியா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF YOU WANT TO HEAR THE SOUND OF THE BIRD, DON’T BUY A CAGE; PLANT A TREE

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

யாரிவள்! பகுதி பதினெட்டு - மர ஸ்கேல் ஐடியா



 

பள்ளியில் மூக்குத்தி உடைந்து ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வந்ததால் இவள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்! அழுது கொண்டே வந்ததும் அம்மா என்னவென்று பார்த்தாள்..! மூக்குத்தி  முழுவதுமாக உடைந்து போகாமல் சுற்றி வர ரத்தமாக இருக்கவே அதை எப்படி எடுப்பதென்று அம்மாவுக்கும் புரியலை!

 

எதிர் வீட்டு அத்தை தான் இவளை சமாதானப்படுத்தியபடி மூக்கில் பொருத்திய நிலையிலேயே முழுவதுமாக உடைத்து எடுத்தார். அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டு, ஓட்டை அடைந்து விடக்கூடாதென்று வேப்பங்குச்சியும் சொருகி விட்டார். இவளும் சமாதானமானாள்!

 

மறுநாள் தூங்கி எழுந்ததும் பார்த்தால் வேப்பங்குச்சி எங்கோ விழுந்து விட்டது. மீண்டும் சொருகி பார்த்ததில் மூக்கில் நுழையலை!  மூக்கு குத்தி பத்து நாட்கள் தான் ஆனதால் ஓட்டை சட்டென்று அடைந்து விட்டது!

 

இவள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று வருவதும் பாடங்களை படிப்பதுமாக நாட்கள் சென்றன. ஒவ்வொரு தடவையும் அம்மா கடைத்தெருவுக்கு செல்லும் போதெல்லாம் இவளை மீண்டும் மூக்கு குத்திக் கொள்ள அழைத்துப் பார்த்தார். இவள் வர மறுத்து விட்டாள்! 'என்னோட இப்ப வரலைன்னா வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியது தான்! பூட்டிண்டு போயிடுவேன்'! என்று பயமுறுத்திப் பார்ப்பாள்..🙂

 

ஏனோ! மீண்டும் குத்திக் கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டாள்! அம்மா அப்படி வீட்டை பூட்டிக் கொண்டு சென்ற போதெல்லாம், பீரோவிலிருந்து அம்மாவின் புடவைகளை எடுத்து கட்டிப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம் இவளுக்கு ஏற்பட்டது! போட்டுக் கொண்டிருக்கும் ஸ்கர்ட்டோ, ஃப்ராக்கோ அதன் மேலே ஒரு ரிப்பனை கட்டி அதில் புடவை கட்டிக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள்!!

 

மீண்டும் பழைய படி பீரோவில் இருந்தவாறு புடவையை மடித்து வைக்கத் தெரியாது..🙂 அதற்கு ஒரு ஐடியாவை கண்டுபிடித்தாள்! வீட்டிலிருக்கும் ஒரு அடி மர ஸ்கேலில் புடவையை வைத்து பிடித்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக திருப்பி ஒருவாறு மடித்து வைப்பாள்...🙂 அம்மா வந்தால் உதை கிடைக்குமே..🙂

 

இது போன்று தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில்  அம்மா ஒளித்து வைத்திருக்கும் தின்பண்டங்களை தேடிப் பார்ப்பாள்..🙂 மாலை நேரங்களில் மட்டும் தான் நொறுக்குத் தீனி கிடைக்கும்! அதுவும் அம்மா கொடுப்பது தான்! இன்னும் வேண்டும் என்று கேட்டாலும் கிடைக்காது..🙂

 

இவளின் வீடோ சிறிய வீடு தான் என்றாலும் எத்தனைத் தேடினாலும் தின்பண்டங்களை அம்மா எங்கு வைத்திருப்பாள் என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது...🙂 அம்மா என்னும் புதிரை புரிந்து கொள்ள சில வருடங்கள் ஆனது! அவளை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது!

 

இப்படி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஒரு ரெசிபியை முயற்சி செய்து பார்க்கவும் துவங்கினாள். திரி ஸ்டவ்வை ஹாலில் வைத்துக் கொண்டு மீனாட்சியம்மாள் புத்தகத்தைப் பார்த்து உருளைக்கிழங்கு போளி(ஆலு பராட்டா) கூட செய்து பார்த்திருக்கிறாள்! கொஞ்சம் கொஞ்சமாக சமையலில் ஆர்வம் ஏற்பட்டது இவளுக்கு!

இன்னும் என்னென்ன செய்தாள் இந்தப் பெண்!!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றாய் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான பதிவு தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. ஹாஹாஹா நிறைய சிரித்துவிட்டேன் ஆதி. நல்ல குறும்பு செஞ்சுருக்கீங்க.

    இதே இதே தான். சமையல் செய்து பார்ப்பது, தின்பண்டம் தேடுவது...எங்கள் சிறு வயதில்..

    சுவாரசியம். தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளை தொடர்ந்து வாசிப்பதோடு உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அந்த வயதிலேயே புதுவிதமான சமையல் செய்முறைகள் செய்து பார்க்கும் ஆர்வமும் வந்திருக்கிறதே! அதுவும் ஸ்டவ்வில். நிறைய கற்றிருக்கிறீர்கள் சிறிய வயதிலேயே. மர ஸ்கேல் என்பதைப் பார்த்ததும் ஐடியா என்பது அடியா என்று வாசித்து ஸ்கேலால் அடி கிடைத்த விஷயமோ என்று பார்த்தால் அதன் பின் புரிந்தது உங்கள் ஐடியா. அருமை. தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. வாசகம் மிக மிக மிக ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. //மீனாட்சியம்மாள் புத்தகத்தைப் பார்த்து உருளைக்கிழங்கு போளி(ஆலு பராட்டா) கூட செய்து பார்த்திருக்கிறாள்! கொஞ்சம் கொஞ்சமாக சமையலில் ஆர்வம் ஏற்பட்டது இவளுக்கு!//

    சமையல் ஆர்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது, இப்போதும் தொடர்கிறது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. நல்ல சூட்டிப் பெண்தான்.:) அப்போது இவைதானே மகிழ்ச்சி தந்தன.

    நான்அம்மாவுக்கு உதவியாக இட்லி,தோசைக்கு ஆட்டிக் கொடுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....