இன்றைய இரண்டாம் பதிவாக...
இல்லத்தரசியின் முதலாம் மின்புத்தகம் - அவரது வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மின்புத்தக வடிவில் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது. அத்தளத்தினை நிர்வகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இதோ புத்தகம் பற்றிய ஒரு சிறு முன்னுரை....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
ஒவ்வொரு
பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக
அமைகிறது! மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின்
ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான
தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்! மனதிற்குள்
ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர்
தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.