தொகுப்புகள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

கதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…



தில்லி chசலோ – 21 ஏப்ரல் 2019

திருவரங்கம் இரயில் நிலையம்...

ஏழு வருடங்களுக்குப் பிறகு தில்லி chசலோ!!! முதலில் சென்னை நோக்கி பயணம்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

என்ன அடிக்காதீங்க…


என்ன அடிக்காதீங்க… என்ன அடிக்காதீங்க….

ஐயோ என்ன அடிக்காதீங்க… தலையில ரத்தம் வருது…

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிழற்பட உலா – பகுதி ஒன்று




கரையோரக் கவிதைகள் நிழற்பட உலா வரிசையில் ஐந்து பகுதிகளாக வாராணாசி நகரில் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரத்திலிருந்து 2019-ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா சமயத்தில் நாங்கள் அலஹாபாத் [எ] ப்ரயாக்ராஜ் நகருக்குச் சென்ற போது எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

சனி, 27 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்



காஃபி வித் கிட்டு – பகுதி – 30

முகநூலிலிருந்து ஒரு வாசகம்:



தோல்வியால் அழும்போது உங்கள் கண்ணீர்த் துளிகளை துடைத்துத் தெளிக்கும் ஒரு விரல், உங்கள் வெற்றியின் போது ஒன்றாகச் சேர்ந்து கரகோஷம் எழுப்பும் பத்து விரல்களை விட மேலானாது! [ஹிந்தி வாசகத்தின் தமிழாக்கம்….]

படித்ததில் பிடித்தது – இது யார் எழுதியது?

வாழ்க்கையில் என் லக்ஷியம் என்னவென்றால் – ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்கு கால்நடையாய் ஊர்களைச் சுற்ற வேண்டுமென்று ஆசை. மூட்டையில்லாமல் முடிச்சில்லாமல் கண்டவிடத்தில் அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு…

மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடங்குடமாய் மழை கொட்டும் மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும் மாடுகளைப் போல் மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்கவேண்டும். அசைவற்ற மனதில் அமைதி நிறைந்ததாய் பார்த்தவர்கள் சொல்லிக்கொள்ளும் கன்யாகுமரியின் கடற்கரையில் ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு சூர்யாஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை.

நான் மொத்தத்தில் வேண்டுவது ஒன்றும் வேண்டாம் என்பதே.

இதனால் எனக்கு உலகத்தில் எனக்கு வெறுப்பு அல்லது ஞானப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்தான் பற்று. அதைவிட்டால் வேறு நம்பிக்கையில்லை. கண்கண்டதில் நம்பிக்கையில்லை.  அதைத் தள்ளிவிட்டு காணாததைத் தேடி எப்படிப்போவேன்?

படித்ததில் பிடித்ததாக இங்கே எழுதி இருப்பது என்னைப் பற்றிய வாசகங்கள் அல்ல! இப்படி எழுதியது எந்த எழுத்தாளர் எனச் சொல்ல முடியுமா?

இந்த வாரத்தில் ஒரு பாடல் – உயிரில் தொடும்:

இசைக்கு மொழி அவசியமல்ல! எந்த மொழியாக இருந்தாலும் இனிய இசை இருந்தால் நீங்கள் இரசிக்க முடியும்! அப்படி சமீபத்தில் ரசித்த ஒரு மலையாளப் பாடல் – உயிரில் தொடும்…. கேட்டுப் பாருங்களேன்.


ரசித்த நிழற்படமும் ஒரு புதிரும்:



சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம் – எத்தனை அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் படத்தை எடுத்தவர்! அது சரி இது என்ன என்று சொல்ல முடியுமா?

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

நிஜத்தில் இப்படியானவர்கள் இருப்பது குறைவே என்றாலும் விளம்பரத்திலாவது இப்படி ஒருவர் இருப்பது போல காண்பிப்பது மனதுக்கு மகிழ்ச்சி. மனதைத் தொட்ட ஒரு விளம்பரம் – பாருங்களேன்.



பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே வாரத்தில் 2010-ல்:

இதே வாரத்தில் எழுதிய ஒரு பகிர்வு. அப்போது நிறைய பேரால் வாசிக்கப்படாத ஒரு பதிவு! படிக்காதவர்கள் படிக்க வசதியாக, இங்கே அதன் சுட்டி…


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்


மலையுச்சிக்குப் போகும் பாதை...


ராஞ்சி நகருக்கு நாங்கள் சென்று சேர்ந்த போது மதியம் ஆகிவிட்டது. இரயிலில் ஒன்றுமே சாப்பிடாமல் ராஞ்சி நகரில் தோசா பாயிண்ட் சென்று சாப்பிட்ட பிறகு தான் எங்களுக்கான தங்குமிடத்திற்குச் சென்றோம். தங்குமிடம் பற்றிய விவரங்களை இங்கே விரிவாக சொல்ல முடியாது!

வியாழன், 25 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி



தஹி வாலே அர்பி...

அர்பி – அரேபிய மனிதன் பற்றியோ, ‘தஹி’க்கும் சூழல் பற்றியோ ஏதோ சொல்லப் போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். அர்பி என்பது நாம் பயன்படுத்தும் ஒரு காய்கறியின் ஹிந்தி பெயர் தான்! தஹி என்றால் தயிர்! சாப்பிட வாங்க என்று அழைத்து விட்டு ஒரேடியா ஹிந்தி பாடம் நடத்துகிறேன் என்ற கோபம் வேண்டாம்! கூடுதலாக ஒரு மொழியை அறிந்து கொள்வதில் தவறில்லை! தமிழகத்தினை விட அதிக வருடங்கள் தலைநகர் தில்லியில் இருந்ததால் நிறைய ஹிந்தி வார்த்தைகள் எனது பதிவுகளில் தலைகாட்டலாம்! போலவே உணவிலும் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இல்லை எனக்கு! வட இந்திய உணவும் எனக்குப் பிடித்தவை! கேட்கும், பார்க்கும் பல உணவுகளை நானே வீட்டில் செய்து சுவைப்பது உண்டு! அப்படி செய்த ஒரு உணவு பற்றி தான் இன்றைக்கு “சாப்பிட வாங்க” என்ற பதிவாக பார்க்கப் போகிறோம்.

புதன், 24 ஏப்ரல், 2019

என் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…



என்னது உங்க அலுவலகத்திற்கு காத்தாடி இராமமூர்த்தி வந்து இருக்காரா? அது எப்போ? என்று தலைப்புப் பார்த்து நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்து இருக்கலாம். உங்களுக்குத் தெரியாதா என்ன? தலைநகரில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலைஅரங்கில் அவரது பல நாடகங்கள் அரங்கேறியது உண்டு. அப்படி வரும்போது எங்கள் அலுவலகத்திற்கும் வர, நானும் அவரைச் சந்தித்தேன்…..

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கதம்பம் – நரஹரி – விடுமுறை - கதம்பத்துள் கதம்பம்



கோடையில் இதமாய் – 8 ஏப்ரல் 2019



கொளுத்தும் வெயிலுக்கு வயிற்றுக்கு இதமாய்!!!

திங்கள், 22 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…



”யாராவது டாக்டர் இந்தப் பெட்டியில இருக்கீங்களா?” என்ற பதட்டமான குரலில் கேட்டுக் கொண்டே ஒரு இளைஞர் வருகிறார். ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய இரயில் பத்து மணிக்குப் புறப்பட்டதால், இரயிலில் ஏறிய உடனேயே படுக்கைகளை விரித்து தூங்க ஆரம்பித்துக் கொண்டிருந்தனர் பெரும்பாலான பயணிகள். இந்த மருத்துவருக்கான அபயக் குரலை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து



கரையோரக் கவிதைகள் நிழற்பட உலா வரிசையில் இது கடைசி பகுதி! நான் வாரணாசி சென்ற போது எடுத்த படங்களை, கடந்த ஐந்து வாரங்களாக உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. அடுத்த வாரம் வேறு ஒரு புகைப்படப் பகிர்வாக இருக்கும். இந்த வாரணாசி உலாவின் கடைசி பகுதியில் இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

சனி, 20 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி



காஃபி வித் கிட்டு – பகுதி – 29

முகநூலிலிருந்து ஒரு வாசகம்:



உயரத்தில் இருக்கிறோம் என ஆட்டம் போடாதே. தவறி விழ நேர்ந்தால், தரையில் இருப்பவனை விட உனக்கே பாதிப்பு அதிகம்!

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

நள்ளிரவில் ஒரு திக் திக் பயணம் – நிர்மலா ரங்கராஜன்


எனது முதல் பதிவான உப்பு நார்த்தங்காயில் ஒரு ரெசிப்பி பதிவிற்கு வரவேற்பும் ஊக்கமும் கொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துகொண்டு மேலும் ஒரு சுவாரஸ்யமான பதிவினை தங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

வியாழன், 18 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – பஞ்சாபி ஸ்டைல் ஆலூ மேத்தி




பஞ்சாபிகள் அசைவம் என்றால் சிக்கனும் சைவம் என்றால் ஆலூ என அழைக்கப்படும் உருளையும் இல்லாமல் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் இந்த ஆலூ சேர்ப்பது உண்டு! மேத்தி என்பது என்ன என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன். வெந்தயக் கீரையை தான் மேத்தி எனச் சொல்கிறார்கள். வெந்தயத்தை எப்படிச் சொல்வார்கள் என்பதையும் சொல்லி விடுகிறேன் – அதன் பெயர் மேத்தி dhதாணா!

புதன், 17 ஏப்ரல், 2019

ஜார்க்கண்ட் உலா – தோசா ப்ளாசா – விளையாட்டுப் பிள்ளை


கயாவிலிருந்து ராஞ்சி வந்த இரயிலில் அவதிப் பட்ட பிறகு ராஞ்சி நகர் வந்த உடன் தங்குமிடம் செல்லாமல் நேரடியே ஏதாவது உணவகத்திற்குச் சென்று மதிய உணவை சாப்பிட்ட பிறகு தான் தங்குமிடம் செல்வது என்ற முடிவுடன் இருந்தது. காலையிலிருந்து முறையாக சாப்பிடாமல் இருந்தது கொஞ்சம் படுத்தியது! இரயில் நிலையத்தில் பெரிதாக உணவக வசதிகள் இருக்காது என்ற எண்ணத்துடன் எங்களுக்கான வாகனம் வந்த பிறகு ஏதாவது உணவகத்தில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திங்கள், 15 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – இப்ப நிறுத்தப் போறியா இல்லையா…


படம்: இணையத்திலிருந்து...

”இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?” என்ற கோபமான பெண் குரல் அரைகுறை தூக்கத்தில் இருந்த என்னை விழிக்க வைத்தது. யாரை சொல்றாங்க? எதை நிறுத்தச் சொல்றாங்க என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி நான்கு



வாரணாசி சென்ற போது நாங்கள் சில இடங்களுக்கெல்லாம் சென்று வர வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைக்கும் என்பது எங்கள் விஷயத்தில் சரியாக இருந்தது.

சனி, 13 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – தாயின் புலம்பல் – வள்ளுவன் – ஹிந்தி – ஆலு டிக்கி


காஃபி வித் கிட்டு – பகுதி – 28

படித்ததில் பிடித்தது – ஒரு தாயின் புலம்பல்:

சமீபத்தில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்ட கவிதை. எழுதியவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.



வெள்ளி, 12 ஏப்ரல், 2019

சக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி இரண்டு - பத்மநாபன்…



அக்கா வீட்டிற்கு சக்கைப் பழம் எடுத்துக் கொண்டு போன கதையை சென்ற பகுதியில் பாதியில் நிறுத்தினேன்! படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்! வாங்க மேலே பயணிக்கலாம்!

வியாழன், 11 ஏப்ரல், 2019

வேணி தானம் – கதை மாந்தர்கள்


படம்: எங்கள் பிளாக் நண்பர்களுக்கு நன்றியுடன்...

”ஐயா பெரியவரே, உங்க சமையல் நல்லா இருந்தது. நீங்க சமைச்சு நாங்க சாப்பிடணும்னு இருக்கு. அதனால தான் இங்கே தங்க வேண்டியிருந்தது. இவ்வளவு சுவையா சமைச்சு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று சொன்னபோது பெரியவரிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலுக்குக் கிடைத்தது. அவரிடம் இப்படிப் பேசிக் கொண்டே அவர் குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு! ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்னர் திரிவேணி சங்கமத்தில் செய்ய வேண்டிய வேணி தானம் பற்றிய தகவல்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

புதன், 10 ஏப்ரல், 2019

சக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி ஒன்று - பத்மநாபன்…


வெங்கட் "நினைவுகளைத் தேடி" நெய்வேலி போனதும் எனக்கு நெய்வேலி பக்கத்தில் உள்ள பண்ருட்டியின் பலாப்பழ வாசனையும் கூடவே வந்தது. பலாப்பழத்தை நாங்கள் சக்கைப்பழம் என்றே கூறுவோம். இந்த சக்கைப் பழத்தை மட்டும் ரகசியமாக வாங்கி வீட்டுல வைக்க முடியாது. அதன் வாசனை ஊருக்கே காட்டி கொடுத்து விடும். இந்த சக்கைக் கொட்டையை வைத்து அவியல் செய்வார்கள்.  அருமையாக இருக்கும். நிறைய பேருக்கு இந்த சக்கைக் கொட்டையை அனலில் சுட்டு சாப்பிடவும் பிடிக்கும். சக்கைக்கொட்டை சாப்பிட்டவன் மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் வச்சிருந்தா தேசத்திற்கும் நல்லது. பக்கத்தில் இருப்பவன் சுவாசத்திற்கும் நல்லது. அவ்வளவுதான்!

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கதம்பம் – நரஹரி - இந்த வாரம் கொஞ்சம் அதிகமோ? – கழுத்தணி – இட்லி தினம்


அன்பு சூழ் உலகு - இரட்டிப்பு மகிழ்ச்சி – 25 மார்ச் 2019



பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல தம்பதி சமேதராய் Rishaban Srinivasan சாரின் வருகை. அன்பளிப்பாக அவருடைய நரஹரி புத்தகம்!!


திங்கள், 8 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – எனக்கு ஜன்னல் சீட் வேணும்




பயணங்கள் எப்போதுமே பிடித்தமானது – அது சாலை வழிப் பயணமாக இருந்தாலும் சரி, இரயில் பயணமாக இருந்தாலும் சரி இல்லை ஆகாய மார்க்கமாக இருந்தாலும் சரி எல்லாமே பிடித்தது – ஏனெனில் பயணம் செய்வது மட்டுமே முக்கியம்! பயணிக்கும்போது கிடைக்கும் நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களை நமக்கு ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள முடியும்!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி மூன்று



வாரணாசி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? காசி விஸ்வநாதர் கோவில், காசி விசாலாட்சி கோவில் மற்றும் அன்னபூரணி கோவில்! இந்த அன்னபூரணி கோவில் சென்றபோது அன்னபூரணியின் மிக அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தது – அவள் காலடியில் சில நிமிடங்கள் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடிந்தது. அன்னபூரணி கோயிலில் இருந்து பிராசாதமாக கொஞ்சம் அக்ஷதையும் கிடைத்தது. வாரணாசியில் இருந்த ஒரு வேளை உணவும் அவள் அருளாலேயே கிடைத்தது – சுவையான உணவு எங்கே என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!

சனி, 6 ஏப்ரல், 2019

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

பீஹார் டைரி – கயாவில் ஒரு அன்னதாதா…


லச்சா பராட்டா-லபாப்தார் பனீர்

பீஹார் பயணத்தின் போது Gகயா நகரில் இரு இரவும் ஒரு பகலும் இருக்க நேர்ந்தது. Gகயா மற்றும் Bபோத் Gகயா இரண்டு இடங்களும் சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் ஒரு நாளாவது அங்கே தங்க வேண்டியிருக்கும் என்பதால் நண்பர் மூலம் அங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தேன். 

மகளுக்கு ஒரு கடிதம்....


அன்பு மகள் ரோஷ்ணிக்கு,

இன்று தான் நான் உன்னை பிரசவித்தது போல் உள்ளது. வருடங்கள் அதிவேகமாக கடந்து செல்கிறது. உன் குறும்புத்தனங்கள் ஒவ்வொன்றும் இன்றும் என் கண்முன்னே. குழந்தை போன்ற மனநிலையில் இருந்த நானும் உன்னை வளர்த்தே பெரிய மனுஷியாக வளர்ந்துள்ளேன்.

புதன், 3 ஏப்ரல், 2019

பீஹார் டைரி – விஷ்ணுபாத், கயா – பித்ரு கார்யங்களுக்கான இடம்


 

படம்: இணையத்திலிருந்து....

சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பீஹார் டைரி பதிவு! பீஹார் டைரி வரிசையில் இது கடைசி பதிவாகக் கூட இருக்கலாம்! இல்லாமலும் தொடரலாம்! விஷ்ணுவே அறிவார்! சரி இன்றைக்கு பீஹார் மாநிலத்தின் கயா பகுதியில் இருக்கும் ஒரு பிரபலமான விஷ்ணு கோவில் பற்றி பார்க்கலாம்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – விதம் விதமாய் பப்பு ரொட்டை – சுதா த்வாரகநாதன்


மூன்று வித பப்பு ரொட்டை...

என் மாமியார் சொல்லிக் கொடுத்த தெல்லத் தொக்கு பற்றி இரண்டு வாரங்கள் முன்னர் பார்த்தோம். இந்த வாரமும் மாமியார் சொல்லிக் கொடுத்த ஒரு குறிப்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது பப்பு ரொட்டை என்று அழைக்கப்படும் ஒரு உணவு வகை.

திங்கள், 1 ஏப்ரல், 2019

பதிவர் சந்திப்பும் கல்லூரியும் – நினைவுகளைத் தேடி – நான்கு



சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி கீழே.

நினைவுகளைத் தேடி – ஒன்று இரண்டு மூன்று