அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
கண்டிப்பு இல்லாத
குடும்பம் கடையாணி இல்லாத சக்கரம்; பாசம் இல்லாத குடும்பம் சக்கரமே இல்லாத வண்டி.
******
யாரிவள் - பகுதி ஒன்று
இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
யாரிவள்! பகுதி
முப்பத்தி ஆறு - கண்டிப்பும் அன்பும்
சுட்டிப்பெண்ணின்
பெரிய மாமா உள்ளூரிலேயே இருந்தார். அம்மாவின் அண்ணா. அம்மாவை பொறுத்தவரை அண்ணாவின்
பேச்சுக்கு மறு பேச்சில்லை! எதிலும் perfect ஆக இருக்கணும்! யாரும் நெறி தவறி
நடந்துடக்கூடாது! என்பதில் மாமா மிகவும் கவனமாக இருப்பார். அவரிடத்தில் எல்லோருமே
மரியாதையுடன் கூடிய பயம் கொண்டிருந்தனர்! இவளுக்கும் பெரிய மாமா என்றால் சற்றே
பயம் தான்.
மன்னி கிராம
செவிலியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். மிகவும் பொறுமைசாலி! எல்லோரிடத்தும் அன்பை
மட்டுமே செலுத்துபவர். அம்மாவுக்கு மன்னியிடம் அத்தனை பிரியம். மன்னி தனக்காக பால்
வாங்கி வந்து டிகாஷன் இறக்கி காஃபி போட்டுத் தந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்
கொள்வாள்.
மன்னிக்கு
நேரமிருக்காது! அண்ணாவுக்கு இது ரொம்ப பிடிக்கும்! நீங்க போய் குடுத்துட்டு
வாங்கோ! என்று எதையாவது அப்பாவிடம் கொடுத்து விடுவாள் அல்லது தானே சென்று பார்த்து
கொடுத்து வருவாள்.
ஒரு சமயம் வீட்டுல
ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்ப வந்த பொங்கலுக்கு மன்னி அரிசி, பருப்பு, வெல்லம்னு
பொங்கச் சீர் கொண்டு வந்து குடுத்தா! மன்னியோட கைராசி அதிலிருந்து அரிசிக்கு
கஷ்டமே இல்ல! வருஷாவருஷம் அண்ணாவும், மன்னியும் வந்து பொங்கல் சீர் குடுத்துட்டு
போவா! என்று அம்மா இவளிடம் சொல்வாள்.
விடுமுறை நாட்களிலும்,
பண்டிகை நாட்களிலும் மாமா வீட்டுக்குச் செல்வதும் அங்கே எல்லோருமாக ஒன்றாக
சேர்ந்து நேரத்தை செலவிடுவதுமாக நாட்கள் இனிமையாகச் செல்லும். அப்பாவும் அங்கே
வேலைகளில் எல்லோருக்கும் ஒத்தாசையாக இருப்பார்.
பாட்டி அங்கே
இருக்கும் நாட்களில் வேடிக்கையாக இருக்கும். மாமா காலை பணிக்கு கிளம்பும் வரை
பாட்டி அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார். மாமா கிளம்பியதும்
பின்கட்டில் அமர்ந்து கல்லுரலில் குழம்பு வடாத்துக்கு அரைத்து, அதை மாடியில்
காயவைத்து மாலை மாமா வீட்டுக்கு திரும்புவதற்குள் அதை பத்திரப்படுத்தி விடுவார்..🙂 எதுக்காக சிரமப்படணும்! என்று மாமா திட்டுவார் என்ற பயம் பாட்டிக்கு..🙂
இப்படியாக இருந்தன அவள் வளர்ந்த சூழல்! இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த
சுட்டிப்பெண்! தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பாட்டியின் சுறுசுறுப்பும், அன்பும் அக்கறையும்... மாமாவின் அன்புக் கோபத்துக்கு பயப்படுவது போல காட்டுவதும்.. அருமை.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஇப்படியான பாட்டிகள் இப்பொழுது கிடையாது.
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் சரி தான் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குஅருமையான பாட்டி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
நீக்கு'கண்டிப்பும் அன்பும் உள்ள குடும்பம் 'எங்கள் அப்பாவும் இவ்வாறு தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு