தொகுப்புகள்

வியாழன், 16 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி எட்டு – பாக்கு மட்டை

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சிரமமில்லாத உழைப்பு சிம்மாசனம் ஏறாது; உரமில்லாத வார்த்தைகள் உயிர் பெறாது.

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

யாரிவள்! பகுதி முப்பத்தி எட்டு - பாக்கு மட்டை

 

சுட்டிப்பெண்ணின் அப்பா அலுவலக வேலையாக ஈரோட்டிற்குச் செல்கிறார் என்றால் உடனே அம்மா அங்கிருந்து அப்பாவை வெண்ணெய் தான் வாங்கிக் கொண்டு வரச் சொல்வார். தரமாகவும், மணமாகவும் இருக்கும் என்பதால் நெய்யாக காய்ச்சவும், பட்சணங்கள் செய்யவும் அந்த வெண்ணெய் தான் பயன்படும்! 

 

அந்த வெண்ணெய் பாக்கு மட்டையில் தான் கட்டித் தரப்படும். ஈரோட்டிலிருந்து கோவை வரை பயணித்தும் அந்த வெண்ணெய் என்றுமே உருகினதில்லை! ஏனென்றால் குளுகுளு கோவையாச்சே! காலையில் ஈரோட்டிற்குச் சென்றால் இரவு தான் அப்பா திரும்புவார். அந்த வெண்ணெயை அடுத்த நாள் காலை தான் அம்மா காய்ச்சுவார்.

 

பாக்கு மட்டையில் கட்டி வந்த அந்த வெண்ணெயை பிரித்து அம்மா எடுப்பதை இவள் ஆவலுடன் வேடிக்கை பார்ப்பாள். மட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயை அம்மா விரல்களால் நீவி எடுப்பாள். இவளுக்கு தான் வேடிக்கை பார்ப்பது பிடித்த விஷயமாச்சே! 

 

நெய் காய்ச்சியதும் முருங்கை இலை மணமும் சேர வீடே மணக்கும்! நெய்யை விட்டு வைக்க இவர்கள் வீட்டில் அதற்கென்றே ஒரு எவர்சில்வர் ஜாடி இருக்கும். அதை 'நெய்க் கூண்டு' என்று சொல்வார்கள். கூண்டில் விட்ட நெய் ஆறியதும் அதை தலைகீழாக திருப்பினாலும் கீழே சிந்தாது. மணல் மணலாகவும் கட்டியாகவும் இருக்கும். அந்த நெய்யை சாப்பிட இவளுக்கு மிகவும் பிடிக்கும்!

 

நெய் காய்ச்சின வாணலியில் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கசட்டில் அரிசிமாவும் சர்க்கரையும் சேர்த்து பிரட்டித் தருவார் அம்மா. அது அத்தனை சுவையானதாக இருக்கும். தம்பியும் இவளும் அதை பங்கீடு செய்து கொள்ளச் சண்டையிட்டுக் கொள்வார்கள்..🙂

 

பாக்கு மட்டை என்றவுடன் இவளின் நினைவுக்கு சட்டென்று வருபவர் ஒரு பிச்சைக்காரர் தான்! வயதான தோற்றத்தில் இடையில் ஒரு துண்டும் கையில் பாக்கு மட்டையும் தான் வைத்திருப்பார் அவர். இவர்கள் குடியிருப்புக்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருப்பார். யார் உணவு தந்தாலும் அதை அந்த பாக்கு மட்டையில் தான் வாங்கிக் கொண்டு சாப்பிடுவார். பின்பு அதை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்வார்.

 

ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டு நினைவடுக்குகளில் படர்ந்திருக்கும் நினைவுகளில் இன்னும் நிறைய விஷயங்கள் குமிந்து கிடக்கின்றன. 

 

சில நாட்களில் அம்மாவே வெண்ணெய் எடுக்க முற்படுவாள். மத்தால் சிலுப்பி 'சலக் சலக்' என்ற சப்தம் கேட்க ஆரம்பித்ததும் அம்மா எனக்கு இன்னிக்கு _____ பண்ணித் தரயா?? என்று இவள் கேட்பாள்!!!

 

அது என்னவென்றும், அது தொடர்பான கதைகளும் அடுத்த பகுதியில்..

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!!! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

13 கருத்துகள்:

  1. நாங்கள் எப்போதும் ஊத்துக்குளி வெண்ணெய் தான் உபயோகிப்போம்.  ணெய் காய்ச்சிய வாணலியில் கோதுமை மாவு சர்க்கரை பிரட்டி சாப்பிடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊத்துக்குளி வெண்ணெய் - ஆஹா... கோதுமை மாவு சர்க்கரை பிரட்டி - ஆஹா... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. இனிமையான நினைவுகள் தான் தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நினைவலைகள் நன்று தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. இனிய நினைவுகள்.

    பாக்கு மட்டை என்பதும் எனது நினைவுக்கு வருவது எமதுவீட்டு கிணற்றடியில் ஓலையுடன் விழும் மட்டையில் விளையாடுவதுஒருவர் அமர்ந்திருக்க மற்றவர் ஓலையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுவது சிறுவயது விளையாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கு மட்டை குறித்த தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. மிக அருமையான நினைவுகள். கோவையில் எல்லோரும் பாக்கு மட்டையில் பள்ளிக்கு உணவு பொட்டலம் எடுத்து வருவார்கள்.
    ஊருகளுக்கு போனால் கட்டி கொண்டு போவோம். இப்போது பாக்கு மட்டை தட்டு டம்ளார் கிடைக்கிறது பாக்கு மட்டை தொன்னை கிடைக்கிறது.

    நெய் காய்ச்சும் போது போதும் முருங்கை இலைக்கு வீட்டில் எல்லோரும் போட்டி போடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கு மட்டை குறித்த தங்கள் நினைவுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ஆஹா நல்ல நினைவுகள் ஆதி. அதுவும் வெண்ணை எடுப்பது. ------- அடைதானே கேட்டீங்க?!! ஹாஹாஹா பாக்கு மட்டை இப்போது பல வடிவங்களில் கிடைக்கிறதே. அப்போது ஊரில் இருந்ததால் தென்னம் பாளை இருக்குமே அதில் உணவு சாப்பிட்டதுண்டு. பாளைகளைச் சேர்த்து வைப்பதுண்டு.

    நம் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் முன் பெரிய ஜாடியில் தயிர் கடைந்து வெண்ணை எடுப்பது என் பணி. சுவற்றோடு இருக்கும் சங்கிலியில் மத்தை நுழைத்து கயிறால் இரு புறமும் இழுத்துக் கடைய வேண்டும்.

    பல நினைவுகள் வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....