அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நானும் குற்றவாளி தானே பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
EVERY PERSON WHO GOES
TO THE TEMPLE IN A SPIRIT OF SINCERITY AND FAITH, LEAVES THE HOUSE OF LORD A
BETTER PERSON.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே!
யாரிவள்! பகுதி நாற்பத்தி நான்கு - Fancy dress!
சுட்டிப்பெண் உறவுகளிடத்திலும் நட்புகளிடத்திலும் சற்றே சிரித்துப் பழகத் துவங்கிய அந்த பருவத்தில் நடைபெற்ற விழாக்களில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு வரவேற்பில் நின்று பன்னீர் தெளிப்பது, சந்தனம் குங்குமம் கொடுப்பது, பந்தியில் பரிமாறுவது, தன் வயதை ஒத்தவர்களுடன் சேர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது என்று ஈடுபடுவாள்.
அப்படி ஒருநாள் கோவையில் இருந்த உறவினர் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து கொண்டு ஃபேன்சி டிரெஸ் போல் சிறுவர்கள் சிறுமிகளின் உடையணிந்து கொண்டும், சிறுமிகள் சிறுவர்களின் உடையணிந்து கொண்டும் வெட்கமும், சிரிப்பும், கலாட்டாவுமாய் பொழுதுகள் கழிய விதவிதமாய் ஃபோட்டோக்களும் எடுத்துக் கொண்டார்கள்.
அப்போது இவளுக்கு அமைந்த வட்டமும் தலைமுறைகளைத் தாண்டியதாக இருந்தது. இரண்டு நாட்கள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு உறவினர் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து சமைத்துப் பரிமாறி, திரிந்த பாலில் ரசகுல்லா செய்து, பேசிக் கொண்டே கழிந்த இரவுகள் என என்றும் நினைத்துப் பார்த்து மகிழ இனிமையான தருணங்களாக அமைந்தது!
அப்போது இவளின் வயது பதினான்கு தான்! உறவினர் வட்டத்தில் இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க அண்ணாக்களின் உடை கூட இவளுக்கு சரியாக இருந்தது! 'தான் மடக்கி மடக்கி அணியும் பேண்ட் இவளுக்கு மிகச் சரியாக இருக்கிறதே' என்று புலம்பித் தவிப்பார்கள் அந்த அண்ணாக்கள்! புடவையணிந்து கொண்டால் பொறுப்புள்ள இல்லத்தரசி போல் தெரிந்தாள். பருவத்துக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இருந்தது இவளிடம்.
அமைதியான பெண்ணாகவும், பொறுப்புகள் அமையப் பெற்றும், திறமைகளை மெருகேற்றிக் கொண்டும் வளர்ந்து கொண்டிருந்தாள் இவள்! வீட்டின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தாலும் அது குறித்து கவலை கொள்ளும் சூழல் எதுவும் பெரிதாக இல்லாததால் தன் படிப்பில் மட்டும் ஆழ்ந்து போவதும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளோடு மட்டும் இருந்தாள்.
வாழ்க்கைப் பாதை இவளை இப்படியே மென்மையாகவும், இனிமையாகவும், கனவுப்பாதையில் பயணிக்க வைத்தால் நன்றாக இருக்கும். அப்பா அம்மா தம்பி என சின்னஞ்சிறிய உலகில் பாதுகாப்போடு ஒரு ராணி போல் வளர்ந்தாள். அவளுக்கான தேவைகளும் பெரிதாக ஏதும் இல்லை.
எளிமையாகவும், ஆடம்பரத்திற்கு ஆசைப்படாத மனம் கொண்டவளாகவும் இருந்த இவளின் வாழ்வில் அடுத்தடுத்த பருவத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றிப் தொடர்ந்து பார்க்கலாம்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இனிமையான பொழுதுகள்.. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குமுகநூலில் படித்தேன். மிக அருமையான இளமைகால நினைவுகள்.
பதிலளிநீக்குபழைய நினைவுகள் சுகமானவை.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஇனிய நினைவலைகள் படமும் நன்று.
பதிலளிநீக்குஇனிய நினைவுகள். புகைப்படத்தில் இடப்புறம் கண்ணாடி அணிந்து இருப்பவர்தானே நீங்கள் தெரிகிறது. அசந்துவிட்டேன் இப்போதைய ஆதி போலவே - உயரத்தில். ஜாடையும் அப்படியே....இதே நேர்வகிடு...பளிச்சென்று....
பதிலளிநீக்குகீதா
இப்போதும் நம் உறவுகளை அறிவது பார்ப்பது எல்லாம் இருந்தாலும், அந்த வயதில் உறவுகளுடன் பழகுவது, தெரிந்து கொள்வது எல்லாமே ஒரு வகையான சுவாரசியமாக இருக்கும். புதிய அனுபவமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
இடையில் பதிவுகளை வாசித்திருந்தாலும் கருத்து பதிய இயலவில்லை. (கீதாவும் பிசியாக இருந்ததால்) அதன் பின் மலேஷியப் பயண ஏற்பாட்டிலும் வந்த பின் உடல் நலக்குறைவாலும் வர இயலவில்லை. இன்றுதான் மீண்டும் வருகிறேன்.
துளசிதரன்
முகநூலிலும் படிச்சேன். எங்க வீட்டில் ஏனோ இம்மாதிரி உடைகளை மாற்றிப் போட்டுப் பார்க்கும் வழக்கம் இல்லை. திட்டு விழும். :) ஆனால் நிறையவே படிச்சிருக்கேன். கணவன் உடையை மனைவியும் மனைவியின் உடையைக் கணவனும் அணிந்து கொள்வதாக. ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் கூட வந்திருக்கு. :)))) ஆதிக்கு இந்த உடையும் பொருத்தமாகவே இருக்கிறது.
பதிலளிநீக்கு