தொகுப்புகள்

புதன், 27 ஜூலை, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பத்தி ஒன்பது – மாறிப் போன வாழ்வு முறை!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட புரிதல் - சிறுகதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே, பல திறமைகளும் வெளிப்படுகின்றன - அப்துல்கலாம்

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி நாற்பத்தி ஒன்பது - மாறிப் போன வாழ்வு முறை!


 

சுட்டிப்பெண் பத்தாம் வகுப்புத் தேர்வை சிறப்பாக செய்திருந்தாள். தேர்வு முடிந்ததும் விடுமுறை நாட்களை நிதானமாக கடந்து கொண்டிருந்தாள். முடிவுகள் வெளி வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. காலை நேரத்தில் சற்றே தாமதமாக எழுந்திருப்பதும், அம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடுவதும், கதை புத்தகங்கள் கிடைத்தால் வாசிப்பதும் என நாட்கள் கடந்தன. இதை விட வேறு என்ன வேண்டும்!!!

 

ஒருநாள் அம்மா கிராம செவிலியராக இருந்த தன் மன்னியிடம், மார்பகத்தில் கொஞ்ச நாட்களாக சிறு உருண்டை போல் இருப்பதாகவும், இப்போது அது சற்றே பெரிதாக மாறி இருப்பதாகவும் ஆனால் வலி எதுவும் இல்லை! அதனால பயப்பட வேணாம் இல்லையா மன்னி! என்றும் சொல்லிக் கொண்டு  அவரிடம் காண்பித்தார். அப்படியெல்லாம் இருந்துடக் கூடாது டாக்டரைப் போய் பார்த்துடுங்கோ! உடனே காண்பிப்பது நல்லது! என்று மன்னி சொல்லிச் சென்றார்.

 

அப்பாவிடம் இதை எப்படி சொல்வது என்று அம்மாவுக்கு முதலில் தயக்கமும், பிறகு மனதில் பயமும், குழப்பங்களும் என்று பலவாறு யோசித்து பிறகு அப்பாவுடன் மருத்துவரிடம் செல்ல அன்று முதல்  மாறிப் போனது அவர்களின் வாழ்க்கை..! தொடர்ந்து மருத்துவமனையுடன் கடந்த நாட்கள், மருந்துகளும், மாத்திரைகளும், வீடு நிறைய ஆப்பிளும், மாதுளையும், ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளானுமாக சென்ற நாட்கள்!!

 

அம்மாவுக்கு அதுவரை சளி, ஜூரம் என்று படுத்து அவள் பார்த்ததே இல்லை! என்றாவது அம்மாவுக்கு அரிதாக சளி பிடித்து விட்டால் இவளுக்கும் இவள் தம்பிக்கும் கொண்டாட்டம் தான்! ஏனென்றால் காட்டு வைத்தியமாக சளியை முறிக்குமென்று ஐஸ்க்ரீம் வாங்கி குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிடுவாள்! சளியும் சரியாகி விடும் அம்மாவுக்கு!

 

ஆனால்! இப்போது நிலைமை தலைகீழாக மாறிப் போனது! அம்மா வீட்டில் இருக்க மாட்டாளா! ரசனையுடன் சமைத்து நமக்கு  பரிமாற மாட்டாளா! எனும் படியாக அம்மாவுக்கும் மருத்துவமனைக்குமான தொடர்பு இணை பிரியாதிருந்தது!

 

இவளின் பொதுத் தேர்வு முடிவினை தெரிந்து கொண்ட பின் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்வேன் என்று அம்மா உறுதியாகச் சொல்ல, அதற்கேற்ற வாறு தேதி முடிவு செய்யப்பட்டது! இவள் எழுதிய வருடம் தான் இணையத்தில் பார்த்து  மதிப்பெண்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வசதி துவங்கியது!

 

அப்பா கலெக்டர் அலுவலகத்தில் மணிக்கணக்காக வரிசையில் நின்று பார்த்து துண்டு சீட்டில் எழுதி வந்திருந்தார். மகிழ்வுடன் இவள் 500 க்கு 437 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாக சொன்னார். கணக்கில் 99 மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். ஒரு மார்க் வித்தியாசத்தில் பள்ளியில் மூன்றாம் இடமும் பிடித்திருந்தாள்.

 

இப்படியாக இவளின் பத்தாம் வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. அடுத்து என்ன செய்தாள்! அவளின் சுட்டித்தனங்கள் தொடர்ந்ததா! வரும் பகுதியில் பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

13 கருத்துகள்:

  1. மார்க் எடுத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதா?  அம்மாவின் உடல்நிலையால் ஏற்பட்ட கவலையில் இருப்பதா என்று கலவையான எண்ணங்கள் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அன்றைய நிலையை இப்போது நினைத்தாலும் கலங்கச் செய்யும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. வீட்டின் நிலைப்பாடு கவலையில் ஆனால் தேர்வில் வெற்றியை கொண்டாட முடியாத நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.

    பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். ஆனால் அந்த சமயத்தில் தங்கள் அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போன நிகழ்வை விவரித்திருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இறைவன் சந்தோஷத்தை தரும் போது வருத்தத்தையும் கூடவே தருவான் போலிருக்கிறது. பதிவை மேலும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்பமும் துன்பமும் இணைபிரியாத நண்பர்கள் போல தான் வாழ்வில்..

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  5. ஆதி மனம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அம்மாவுக்குப் புற்று நோய் வந்து மரணம் என்று. அது உங்களின் பத்தாம் வகுப்பு முடிவில் தொடங்கியிருப்பது மிகவும் வேதனை. வாழ்க்கை என்பதே இன்மபும் துன்பமும் கலந்ததுதான் என்றாலும் இப்படியான துன்பம் யார் வாழ்விலும் வரக்கூடாது என்று நான் அடிக்கடி மனதில் நினைப்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. அம்மாவை பற்றி படித்தவுடன் என் அக்காவின் நினைவு வந்து மனதை வாட்டுகிறது.
    என் அக்கா 25 வயதில் இரண்டு குழந்தைகளை(மூன்று, நாலு வயது)விட்டு விட்டு இறைவனிடம் போக காரணம் இந்த மார்பக புற்று நோய்.
    முன்பும் இதை சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன்.
    உங்கள் அம்மா உங்கள் திருமணத்தை பார்த்து மகள் நன்றாக இருக்கிறார் கணவன் வீட்டில் என்று ஆறுதல் அடைந்து இருப்பார்கள். எத்தனை வயது ஆனாலும் அம்மாவின் பிரிவு வேதனை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை வயதானாலும் அம்மாவின் பிரிவை ஏற்றுக் கொள்வது கடினமே.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. திடீரென்று முளைக்கும் துன்பங்களும் வந்த மகிழ்ச்சியை கெடுத்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....