வியாழன், 7 ஜூலை, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பத்தி ஐந்து – திருச்செந்தூரின் கடலோரத்தில்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட Fancy Dress பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WHEN THE RIGHT TIME COMES, EVERY KICK BECOMES A GOAL. 

 

******

 


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே!

 

யாரிவள்! பகுதி நாற்பத்தி ஐந்து - திருச்செந்தூரின் கடலோரத்தில்! 

சுட்டிப்பெண் ஒருமுறை கோடை விடுமுறைக்கு அவளது பிறந்த ஊரான சிவகங்கைக்குச் சென்ற போது அங்கேயிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையில் உள்ள தன் இன்னொரு மாமா வீட்டில் உள்ள எல்லோருமாக சேர்ந்து திருச்செந்தூருக்கு செல்வதாகச் சொல்லி இவளையும் அவர்களுடன்  அனுப்பி விட அம்மாவிடம் கேட்க அம்மாவும் சம்மதித்தாள்!

 

மாமா, மாமி, மாமாவின் மகள், மகன், உறவினர் வட்டத்தில் இவளின் செட்டில் ஒருவள் என எல்லோருமாக இரவு நேரத்தில் சிவகங்கையிலிருந்து புறப்பட்டு காலை திருச்செந்தூருக்கு சென்று விடுவதாக பயணத் திட்டம் ஏற்பாடாகி இருந்தது. அவர்களோடு இவளும் கிளம்பினாள். அது ஒரு விழாக்காலமாக இருந்த சூழல்!

 

அந்த நேரத்தில் எங்கும் கும்பலாக இருந்தபடியால் கிடைக்கும் பேருந்துகளில் மாற்றி மாற்றி இடம்பிடித்து தான் அங்கு சென்றாகணும்! முதலில் சென்று பிடித்த பேருந்தில் எல்லோரும் அருகருகே அமர்ந்து கொள்ள இடம் கிடைத்தது! இவளும் தன் செட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்பா அம்மாவுக்குத் தெரியாத ரகசியக் கதைகள் பல பேசிக் கொண்டு சிரித்தபடி சென்றார்கள்..🙂

 

அடுத்ததாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடித்தார்கள். நடு இரவில் கூட அந்தப் பேருந்தில் நல்ல கும்பலாக இருந்தது. ஆங்காங்கே கிடைத்த இருக்கைகளில் தான் அமர்ந்து கொண்டார்கள். இம்முறை இவளின் செட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு புறம்!

 

பயணமும் துவங்கியது! இவளுக்கு தூக்கமும் கண்களை சுழட்டியது! தூக்கத்தில் ஆடியாடி அருகில் அமர்ந்திருந்த பெண்மணியின் தோளில் சாய்ந்து கொள்ள அந்தப் பெண்மணிக்கு கடும் எரிச்சல் உண்டாகியுள்ளது! அந்தக் கடுப்பில் இவளைத் தள்ளி விட்டு விட்டார். நிலை தடுமாறும் போது தான் இவளுக்கு தான் யாரோ ஒருவரின் அருகில் அமர்ந்திருக்கிறோம் என்பதே புரிந்தது!

 

ஒரு வழியாக அதிகாலையில் திருச்செந்தூருக்கு சென்று சேர்ந்தார்கள். தங்கும் இடமொன்றில் இடம் பிடித்து தங்கள் உடமைகளை அங்கு வைத்து விட்டு கடலில் நீராடி விட்டு செந்தில்நாதனை தரிசிப்பதாக திட்டம்! எல்லோரும் கடலை நோக்கி நடக்க, இவளுக்கு கடலைப் பார்த்ததும் மனதில் ஒரு பரவசமும், பதட்டமும் ஒருங்கே வந்தது!!

 

எல்லோரும் கடலில் முதலில் காலை நனைத்து பின்பு முங்கி எழுந்திருக்கவும், இவள் கரையோரத்தில் நின்று கொண்டே அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள். இவள் மட்டும் பயத்தின் காரணமாக அங்கே நீராட மறுத்து விட்டாள்! ஆனால்! திடீரென்று அங்கே வந்த மாமா இவளை கடலுக்கு நீராட இழுத்துச் சென்றார்.

 

இவளுக்கோ பயத்தின் உச்சம்! கால்களோ நீரில் பிடிப்பில்லாமல் நடுங்கத் துவங்க, திருச்செந்தூரின் முரட்டு அலைகள் இவளை ஆரத்தழுவி பாறைகள் இருக்கும் இடத்துக்கு இழுத்துக் கொண்டு சென்று விட்டது! அப்போது அங்கே ஒரு பதட்டமான சூழல் உருவாகியது! சில நிமிடங்களில் அந்தப் பகுதியில் இருந்த சிலரும் மாமாவும் சேர்ந்து இவளை கரைக்கு இழுத்து வந்தார்கள்!

 

பின்பு தங்கும் விடுதிக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு,  செந்தில்நாதனை தரிசித்து மீண்டும் பேருந்தில் பயணித்து ஊர் திரும்பியது, மாமி அவளிடம் 'இது பண்ணித் தரவா! அது தரட்டுமா! என வரிசையாக ஆசையுடன் கேட்டு  செய்து தந்த உணவு என எதுவும் அவளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வில்லை..🙂 மனது முழுதும் கடலில் தான் இருந்தது! அப்பாவையும் அம்மாவையும் தான் மனது தேடியது! இது ஒரு மறக்க முடியாத பயணமாக மாறிப் போனது அவளுக்கு!

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

9 கருத்துகள்:

 1. கடலில் மாட்டிய அனுபவம் திகில்.  அதுதான் மனம் அப்பா அம்மாவைத் தேடியதோ...

  பதிலளிநீக்கு
 2. கடல் என்பது ஓர் அதிசய விடயம் தான் இதனோடு ஒன்றி வாழ்வது சிலருக்கே அமையும்.

  பதிலளிநீக்கு
 3. கடல் அலையிடம் சிக்கிய அனுபவம் மறக்க இயலாததுதான்.

  பதிலளிநீக்கு
 4. அந்த வயதில் அலையில் சிக்கி பாறையில் ஒதுங்கியது...அதுவும் ஏற்கனவே நீங்கள் பயத்துடன் இருந்ததால் கால் தடுமாறியும் இருக்கும்...நிலை தடுமாறியதால் இல்லையா. நல்ல காலம் பாறைகள் அருகில் கொண்டுவிட்டதே...கண்டிப்பாகப் .பயம் ஏற்பட்டிருக்கும்.
  பயம் விலக நாள் எடுத்திருக்கும், இப்போதும் பயம் நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்

  இவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்தான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கடல் அலையில் சிக்கியது , மாமாவும் சிலரும் காப்பாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
  முருகன் காப்பாற்றி இருக்கிறார்.
  கஷ்டம் வரும் போது மனம் அம்மா, அப்பாவைதான் தேடும்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. தொடர் நன்றாக செல்கிறது. சிறு வயது அனுபவங்களை நினைவில் வைத்திருப்பது அருமை. கடலில் நீராடப்போய் அலைகள் இழுத்துச் சென்றது பயங்கரமான அனுபவம். அதை நினைக்கும் போதெல்லாம் ஒரு வித பய உணர்வு வந்து கொண்டேதான் இருக்கும். நல்ல வேளை முருகன்தான் எவ்வித சிரமமின்றி காப்பாற்றினார். அந்த நேரத்தில் அம்மா அருகில் இருந்தால் அரவணைத்து தேறுதல்கள் சொல்லியிருப்பார். ஊருக்குச் சென்ற பின்தான் தங்களுக்கு அந்த அன்பு கிடைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. விபரீதமான அனுபவம். இறை அருளால் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். மனம் வேதனையில் இருக்கும் போது குறிப்பாகப் பெண்களுக்குப் பெற்றோர் அருகில் இருக்க வேண்டும் என்று தோன்றும்தான்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 8. கடல் அனுபவம் திகிலாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....