வெள்ளி, 29 ஜூலை, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பது – வாக்கை காப்பாற்றிய அப்பா!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பது - வாக்கை காப்பாற்றிய அப்பா!




 

வசதி வாய்ப்புகள் இல்லையென்றாலும் பரவாயில்லை! ஒவ்வொருவருக்கும் தனக்காக என்று சிலரும் அவர்களின் ஆரோக்கியமும் தான் அத்தியாவசியமானது. இதுவரை சுட்டிப்பெண் கவலைகள் ஏதுமற்ற அடக்கமான பெண்ணாகவும், தன்னைப் பற்றிய கனவுகளுடனும், இலக்குடனும் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு தான் பக்கபலமாக இரு தூண்களைப் போல அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்களே! என்ற நினைப்பு உறுதியாக மனதில் இருந்தது. ஆனால் இப்போது அம்மாவுக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு வந்துள்ளது. அந்த கட்டியை அறுவை சிகிச்சையில் அகற்றி விட்டால் அம்மாவுக்கு சரியாகி விடும் என்று மட்டும் தான் நினைத்தாள்.

 

அந்தக் கட்டியை பரிசோதித்ததில் அம்மாவுக்கு வந்த நோய் பற்றி அப்பாவுக்கு தெரிய வந்தது. ஆழ்கடலென பொங்கிய துக்கத்தை வெளியே காண்பித்துக் கொள்ளாத அப்பா, அம்மாவுக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென சொன்னார். அப்பாவிடம் இவள் ஏன் என்று கேட்டதற்கு முதல் முறை சரியாக செய்யாததால் அதை மீண்டும் செய்யப் போவதாக மட்டும் சொன்னார். இவளுக்கும் ஒன்றும் தெரியாததால் அப்பாவின் வார்த்தையை நம்பினாள்.

 

உறவினர்களும், நண்பர்களும் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து விதமான உதவிகளை செய்து, பிரார்த்தித்துக் கொண்டார்கள். இம்முறை அம்மாவின் ஒரு பக்க மார்பகம் முழுவதும் நீக்கப்பட்டது. அம்மா வீட்டிற்கு வந்த பின் ஒருநாள் அத்தை இவளை தனியே அழைத்து அம்மாவுக்கு வந்த நோய் பற்றி சொன்னதும் இடிந்து போனாள். அவளால் நம்ப இயலவில்லை. இப்படியொன்றைப் பற்றி அவள் நினைத்தும் பார்த்ததில்லை. அந்த சமயத்தில் அவளின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

 

பொதுவாக அம்மாவின் மேல் காலை தூக்கி போட்டுக் கொண்டு படுத்தால் தான் அவளுக்கு தூக்கமே வரும்! ஆனால் இந்த விஷயம் கேள்விப்பட்டது முதல் இப்போது அம்மாவை நசுக்கி விடுவோமோ! என்று அவளுக்கு தோன்றியது! அம்மாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்து விடக்கூடாது! நம்முடன் அம்மா இருந்தால் அதுவே போதும்! இனி நான் தான் என் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மனதிலிருத்திக் கொண்டாள்!

 

மனதில் கவலைகளும், வேதனைகளும், வலிகளும் அழுத்திக் கொண்டிருக்க அலுவலக வேலையுடன் பிள்ளைகளின் நலனையும் அப்பா கவனித்துக் கொண்டார். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அரை பவுனில் மோதிரம் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார் அல்லவா! இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இவளுக்காக அப்பா தன் உண்டியல் சேமிப்பில் ¼ பவுனில் மோதிரமும் வாங்கித் தந்தார்.

 

அடுத்து இவள் என்ன செய்யப் போகிறாள்?? அம்மா மீண்டு வந்த கதை?? தொடர்ந்து பார்க்கலாம். 

 

பின் குறிப்பு - இந்தத் தொடர் எழுதத் துவங்கி 50 பகுதிகளாகி விட்டது. இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. கடினமான சூழ்நிலை. அந்நேரத்து மன உணர்வுகளை சொல்ல முடியாது.  அந்நிலையிலும் நல்ல மார்க் எடுத்தது பாராட்டுக்குரிய செயல்.  ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இக்கட்டான நிலையில் இருந்திருக்கின்றீர்கள்.

    எல்லாம் நலமாக நிகழட்டும்.

    பதிலளிநீக்கு
  3. மனம் வருந்தித் தவிக்கும் சூழல். அம்மாவைப் பற்றிய கவலை, அம்மா மீண்டு வர வேண்டும் என்ற தவிப்பு எல்லாம் உங்களை எப்படிப் பாடாய்ப்படுத்தியிருக்கும். அச்சூழலை எப்படிக் கடந்து வந்தீர்கள் ஆதி? அதுவும் அந்த வயதில்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஆதி, தாங்கள் கூறியது போல, வேறு எந்த கஷ்டம் வந்தாலும், அனைவரும் சேர்ந்து மீண்டு வந்துவிடலாம். அப்பாவின் நிலை எப்படி இருந்திருக்கும்...உற்ற துணையின் நலம் பேண வேண்டும். பிள்ளைகளின் கல்வி, மன நலனையும் காக்க வேண்டும். படிக்க படிக்க கண்கள் நிறைந்தது...மனதும் பாரமானது. என் பெரியம்மாவிற்கும், கான்சர் வந்து பட்ட கஷ்டங்கள் அறிவேன்...இத்தகைய சூழலிலும் நன்கு படித்து நல்ல மார்க் வாங்கிய ஆதிக்கு வாழ்த்துக்கள். பெற்றவர்களின் ஆசிகள் என்றென்றும் உண்டு...

    பதிலளிநீக்கு
  5. அப்பாவின் அன்பான அன்பளிப்பு கிடைத்தது மகிழ்வான விஷயம் அதே சமயம் அம்மாவின் நிலை. மிகவும் வேதனையான சூழல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. இக் கட்டுமான குடும்ப சூழ்நிலையில் படித்து வந்ததே பெரிய விடையம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....