வெள்ளி, 22 ஜூலை, 2022

குலசாமி சாட்சியாக - சிறுகதை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே; அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய்.

 

******



 

மயிலே மயிலே உன் தோகை எங்கே!!

 

மயிலே மயிலே உன் தோகை எங்கே!

 

மலையடிவாரத்தில் வீசும் சிலுசிலுவென்ற காற்றும் பச்சை பசேல் என்ற இயற்கையும் எல்லோரையும் கவிஞர்களாக்கி விடும்!

 

ரங்கன் என்ற இந்த துடிப்புள்ள  இளைஞன் தன்னிலை மறந்து பாட்டில் ஆழ்ந்து போயிருந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குப் பிடித்த பாடல்களை பாடிக் கொண்டிருப்பான்.

 

இவன் பாடும் பாடல்களை ரசித்துக் கேட்பாள் ஆண்டாள். அப்படி உண்டானது தான் அவன் மீது அவள் கொண்ட காதல்!!

 

புள்ள! எப்ப வந்த? அப்படியே நின்னுகிட்டு இருக்க?

 

இல்ல ரங்கா! நீ அப்படியே மெய்மறந்து பாடிகிட்டு இருந்தியா! அதான் நானும் அப்படியே ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்!

 

அட போ புள்ள! விவசாயம் பார்த்த நேரம் போக நான் எதோ உளறிகிட்டு இருக்கேன்!

 

எத! உளறிகிட்டு இருந்தியா! போய்யா! எவ்வளவு அழகா பாடற தெரியுமா!

 

சரி! வந்த விஷயத்த முதல்ல சொல்லு புள்ள! என்ன எதுக்கு இன்னிக்கு நேர்ல பார்க்கணும்னு சொன்ன?

 

சொல்றேன் ரங்கா!

 

நீயும் நானும் காதலிக்க ஆரம்பிச்சு அஞ்சு வருஷமாச்சு! தெரியுமா?

 

அட!!! நம்ம காதலுக்கு அஞ்சு வயசாச்சா!!!

 

ஆமா ரங்கா! அஞ்சு வருஷத்துக்கு முன்ன நம்ம ஊரு சாமியாடி நம்ம குலசாமி ரங்கநாதர் கிட்ட உத்தரவு கேட்டதுக்கு பொறவு போன தடவ நம்ம ஊருசனம் எல்லாம் கூடி நேர்த்திக் கடன் செலுத்த சீரங்கத்துக்கு வண்டி கட்டிகிட்டு போனோமே! ஞாபகம் இருக்கா!

 

ஆமா புள்ள! அங்கன உன்னப் பார்த்த பிறகு தான எனக்குள்ள எதோ பண்ணுச்சு! அப்போ எனக்கு ஒரு 20 வயசிருக்கும்! நீ அப்போ அவ்ளோ அழகா இருந்த தெரியுமா!

 

ஏன் இப்போ நான் அழகா இல்லையா??

 

அப்படியில்ல புள்ள!!

 

இதே ஊருல தான நாம ரெண்டு பேரும் வளந்தோம்! ஆனாலும் அந்தத் திருவிழா சமயத்துல அலங்காரம் பண்ணிகிட்டு என் கண்ணுக்கு நீ தனியா தெரிஞ்ச!! அப்ப வந்தது தான் காதல்!

 

சரி புள்ள! என்ன உனக்கு எப்ப பிடிச்சது!

 

அதுவா!!!! வெட்கப்பட்டுக் கொண்டாள் ஆண்டாள்.

 

அட சொல்லு புள்ள!

 

அதே திருவிழா தாய்யா! நேர்த்திக் கடன்லாம் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புற ஜோர்ல எல்லாரும் பாடிகிட்டும் ஆடிகிட்டும் இருந்தாங்கல்ல!

 

ஆமா!!

 

அப்போ நீ பாடின பாட்டுல தாய்யா விளுந்துட்டேன்!

 

அப்போ நான் பாடுன பாட்டு தான் பிடிச்சிருந்தது இல்ல! என்ன புடிக்கல! அப்படித் தான!

 

நீ பாடுனதால தான் எனக்கு அந்தப் பாட்டே பிடிச்சிருந்தது தெரியுமா!! என்று சிரித்துக் கொண்டாள்.

 

சரி! நம்ம கதய வுட்டுட்டு நடப்புக் கதைக்கு வருவோம்! சொல்லு புள்ள!

 

அதுவா! ஆமா ரங்கா! நம்ம அஞ்சு வருஷ காதல்ல ஒரு முடிவுக்கு வருவோமா??

 

என்ன புள்ள! எதுக்காக முறிச்சுக்கணும்னு சொல்ற! என்று திடுக்கிட்டான் ரங்கன்.

 

அட வாயக் கழுவுய்யா! நம்ம காதலிச்சிட்டே இருந்தா போதுமா? கல்யாணம் செய்துக்கிட வேண்டாமா? என்று புன்னகைத்துக் கொண்டாள்.

 

! அப்படி சொல்றியா! ஆமா! ஒளிஞ்சு மறைஞ்சு பார்த்து பேசிகிட்டதெல்லாம் போதும்! என் பொண்டாட்டியா உன் கைய பிடிச்சுட்டு சுத்தணும் புள்ள!

 

ஆமாய்யா! அதுக்கு இது தான் சரியான நேரம்! இந்த தடவ உத்தரவும் கிடைச்சிடுச்சாம்! நம்ம ஊருசனம் எல்லாம் கூடி சீரங்கத்துக்கு போனதும் எல்லார் முன்னாடியும் வெச்சு நம்ம காதல சொல்லி கல்யாணம் செய்துகிடுவோம்! என்ன!

 

சரி தான் புள்ள! அந்த ஆண்டாளும் ரங்கனும் சீரங்கத்துல இரண்டறக் கலந்த மாதிரி நாமும் நம்ம உயர்வான காதல நம்ம குலசாமியான ரங்கநாதர் முன்னாடியே சொல்லி உத்தரவு வாங்கி கல்யாணம் பண்ணிப்போம்

 

உன்ன என் உசிரா வெச்சு பார்த்துப்பேன் புள்ள!

 

நானும் தாய்யா! போன தடவ ஏற்பட்ட முடிச்ச இன்னும் பலமாக்கிக்க போறேன்! எத்தன ஜென்மம் எடுத்தாலும் நீ தாய்யா என்னோட புருஷனா இருக்கணும்னு வேண்டிக்கப் போறேன்!

 

இருவரும் கரங்களை பற்றிக் கொண்டு உறுதியான எண்ணத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

 

இருவரின் எண்ணமும் பலிக்கட்டும் என நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. வருடத்துக்கொருமுறையோ என்னவோ சில கிராம மக்கள் வண்டி கட்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் வருவார்கள் என்று வெங்கட் எழுதி இருந்தாரே.. அதிலிருந்து பிறந்த கதையா? நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அதிலிருந்து பிறந்த கதை தான். ஐந்து வருடங்களுக்கொரு முறை தான் உத்தரவு கிடைக்கும்.

      தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா சார்.

      நீக்கு
  3. குட்டிக்கதை சிறப்பாக இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. கதை அருமை.

    இருவரின் எண்ணமும் பலிக்கட்டும் என நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம்!//

    பிரார்த்தனை செய்வோம். இருவர் எண்ணமும் பலிக்கும். ரங்கன் அருள்செய்வான்.


    முகநூலில் வாசித்து மகிழ்ந்தேன். இங்கும் படித்து வாழ்த்தி விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. கதை நன்றாக இருக்கின்றது..

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. கதை நன்றாக இருக்கிறது, சகோதரி. அவர்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழட்டும்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. 5 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்விலிருந்து வந்த கதை அருமை, ஆதி.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு அவர்கள் எண்ணம் நிறைவேறட்டும் . இப்போதெல்லாம் இப்படி பொறுமையாக இருப்பவர்களை காண்பது அரிது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....