அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்; எல்லாப்படிகளும்
கடக்கக் கூடியவையே. உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே செயலில் வெற்றியைத் தருகிறது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே!
யாரிவள்! பகுதி நாற்பத்தி மூன்று - அன்று ஏற்பட்ட
அனுபவம்!
சுட்டிப்பெண்ணுக்கு அப்பா தான் சில விஷயங்களை செய்து
கொடுக்க வேண்டும் என்று நினைப்பாள். அவள் நினைத்ததை விட அப்பாவும் அதை கடமையாக
நினையாமல் ஆசையாக செய்து தருவார். பெரிய பெண்ணாக ஆன பின்னும் அப்பா தான் அவளுக்கு
நகம் வெட்டி விடுவார்! பொறுமையாக வெட்டி விட்டு ஓரங்களை தேய்த்து விட்டு என்று
சின்ன விஷயத்தையும் நிதானத்துடனும், பக்குவமாகவும் செய்து விடுவார்.
அதே போல பேனாவுக்கு இங்க் போடுவது, நோட்டு
புத்தகங்களுக்கு அட்டை போட்டு தருவது பள்ளிச்சீருடைகளை பளிச்சென துவைத்து அயர்ன்
செய்து தருவது என்று அப்பா செய்து தரும் விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டு
செல்லும். அப்பா புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுத்தால் அந்த வருடமே
முடிந்தாலும் அட்டைகள் பிரிந்து போகாது! மைதா பசை கிளறி அதை ஒட்டி டிரங்க்
பெட்டியின் கீழ் வைத்து தருவார்! நோட்டில் உள்ள எழுதாத பக்கங்களையும் பிரித்து
அடுத்த வருடத்துக்கான Rough note ஆக தைத்து தருவார்.
பள்ளிச்சீருடை என்றதும் அவளின் நினைவில் நிற்கும்
விஷயம் என்னவென்றால் சுடிதார் அணிந்து செல்வது அவளுக்கு வசதியாகவும்,
பாதுகாப்பாகவும், அதேசமயம் சங்கடம் தராததாகவும் இருந்தது என்று சொல்லலாம்.
தாவணியாக இருந்திருந்தால் ஆங்காங்கே இழுத்து விட்டுக் கொண்டு இருக்க வேண்டுமல்லவா!
ஆனால்!!!
நிறம் தான் இடைஞ்சலாக போயிற்று! முழுமையாக வெள்ளை நிற
டாப்ஸ் அது! ஒருமுறை ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு கையைத் தூக்கிக் கொண்டு
எழுந்து எழுந்து பதில் சொல்லும் போது சற்றே அஜாக்கிரதையாக இருந்ததால்
உதிரப்போக்கில் சீருடையில் ஏற்பட்ட கறை பெரிய வட்டமாக ஆனது! என்ன செய்வதென்று
தெரியலை! பரபரப்பான அவினாசி சாலையில் நடந்து சென்று வீட்டுக்கு எப்படி போவதென்று
தெரியலை!
பெருத்த அவமானமாக இருந்தது அவளுக்கு! என்ன
செய்வதென்றே தெரியலை! வகுப்புத் தோழிகள் தான் சமாதானம் சொல்லி துப்பட்டாவால்
மறைத்து பிடித்துக் கொண்டு செல்லும் படி சொல்லி அனுப்பி வைத்தார்கள். துப்பட்டா
தாவணி போலவோ, புடவை போலவோ அகலமானதும் அல்ல! அவளுக்கு வெட்கமும் அவமானமும்
அழுகையும் சேர்ந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து
சேர்ந்தாள். அந்த ஊரே திரண்டு அவளைப் பார்த்ததாக உணர்ந்தாள்!
அதன் பின் அந்தச் சீருடையை பலமுறை துவைத்தும் ஏனோ
அவளுக்கு அதை அணிந்து கொள்ள மனமே இல்லை! அன்று ஏற்பட்ட அனுபவம் தான் நினைவுக்கு
வந்தது! இரண்டு செட் உடைகளில் ஒன்றையே மீண்டும் மீண்டும் துவைத்து அணிந்து
சென்றாள். அவ்வளவு எளிதாக எந்த விஷயத்தினையும் மறக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ அவளால்
முடியவில்லை!
எப்போதும் அமைதியாக இருக்கும் சுட்டிப்பெண் இந்த
பருவத்தில் சற்றே பிடித்தவர்களுடன் பேசிப் பழக ஆரம்பித்தாள். உறவினர்கள்
வட்டத்தில் நட்புவட்டத்தில் என தன் வயதை ஒத்தவர்கள், தனக்கு ஏற்றாற்
போன்றவர்களுடன் சிரித்து பேச ஆரம்பித்தாள். இருந்தாலும் அவள் கலகலப்பான பெண் அல்ல
என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
உறவினர் வட்டத்தில் செய்த கலாட்டாக்கள், சென்ற பயணம்
போன்ற சில விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம். இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த
சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சங்கடமான தருணங்களை வாழ்வில் மறக்க முடிவதில்லை. பேஸ்புக்கிலும் படிக்கிறேன் என்றாலும், இங்கேயே இதை ஏற்கெனவே படித்திருக்கிறேனோ என்கிற ஐயமும் வந்ததது.
பதிலளிநீக்குஆமாம் ஆதி பெண்களுக்கு இப்படியான தருணங்கள் அந்தச் சமயத்தில் ஏற்படும். கஷ்டமான நேரம்.
பதிலளிநீக்குஎங்களுக்குப் பச்சை, வெள்ளைச் சட்டை. அதன் பின் பாவாடை தாவணி பச்சை, ரவிக்கை வெள்ளை. அப்போது சுடிதார் இல்லை. பச்சைதான் என்றாலும் இந்த அனுபவங்கள் உண்டு. ரொம்ப அவதிப்பட்ட நேரங்கள். அதற்கும் தயாராகச் சென்றதுண்டு.
கீதா
நலம் வாழ்க..
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதை நாகரிகம் என்றாக்கி விட்டார்கள்..
பதிலளிநீக்குஅதன் வழியே நீங்களும்!..
பதிலளிநீக்குஇலை மறைவு காய் மறைவு என்று சொல்லி வைத்தார்கள்..
பதிலளிநீக்குதுன்பம் தான்...
பதிலளிநீக்குமனத்தை சங்கடப்படுத்தும் தருணம்தான்
பதிலளிநீக்குஎமக்கு வெள்ளை யூனிபோம்தான் . முழங்காலுக்கு மேல் குட்டை அந்நாட்களில் ஒருவித பயத்துடன் கவனமாகவேதான் இருப்பார்கள்.
நினைவலைகள் தொடரட்டும்...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபெண்களுக்கான சிரமங்களின் அடிப்படைகள் இதுதானே.. . கஸ்டமான நேரங்களையும் தொடரில் சொல்லி வருகிறீர்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.