அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட குலசாமி சாட்சியாக பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கையில் உயிருக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக்கூடிய ஒப்பற்ற பரிசு - நம்பிக்கை.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே!
யாரிவள்! பகுதி நாற்பத்தி ஏழு - இலக்கும் கனவும்!
சுட்டிப்பெண் பத்தாம் வகுப்பு துவக்கத்திலிருந்தே மிகவும் கவனமுடன் சிந்தனைகளை ஒருங்கிணைத்து படிக்கத் துவங்கினாள். வகுப்பில் வைக்கும் தேர்வுகள் போக அன்றாடம் தனக்குத் தானே தேர்வுகள் வைத்துக் கொண்டு திருத்தம் செய்து கொள்வாள்.
ஃபார்முலாக்கள், தியரம் என்று முக்கியமானவற்றை எல்லாம் காகிதங்களில் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்துக் கொண்டிருப்பாள். அவற்றை சுவற்றில் ஒட்டி வைக்க அப்பா அனுமதிக்க மாட்டார். அரசுக் குடியிருப்பே ஆனாலும் அப்பாவுக்கு சுவற்றில் படங்களை ஒட்டுவதும், திசைக்கொரு காலண்டராக மாட்டி வைப்பதும் , ஆணியடிப்பதும் பிடிக்காத விஷயமாக இருந்தது!
சின்னஞ்சிறிய வீடு, தனியே அறை என்று எதுவும் இல்லை, அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் பாட்டுக்களின், பேச்சுகளின் அலறல்கள், பள்ளிக்கு கிளம்பும் முன் அன்றாடம் செய்து விட்டு செல்ல வேண்டிய வேலைகள், அம்மாவின் வடாம்/வத்தல் , ஊறுகாய் வேலைகள், உணவகத்துக்கு மாவரைத்து கொடுக்க வேண்டிய வேலைகள் என்று இப்படிப்பட்ட சூழலில் தான் இவள் தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள்.
அப்பா அரசுப் பணியில் இருந்தாலும் வருமானம் பெரிதாக இல்லாத காலம். அம்மாவின் உழைப்பும் சற்று உறுதுணையாக இருக்க, இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள். இப்படியான சூழலில் தான் இவளும், தம்பியும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது.
மாதக் கட்டணத்தை யோசித்து டியூஷனுக்கு முதலிலிருந்தே அனுப்பவும் இல்லை. காலை ஷிஃப்ட்டில் பள்ளிக்குச் சென்று விட்டு மதிய உணவுக்கு திரும்பி விடுவாள். தம்பிக்கு அப்போது மதிய ஷிஃப்ட்டாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் உடை மாற்றிக் கொண்டு மதிய உணவை அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவாள். சாப்பிட்டதும் அம்மா சற்று கண்ணயர, ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தவாறே இவள் படிக்கத் துவங்கி விடுவாள்.
தனக்குத் தானே வரையறையிட்டுக் கொண்டு தனது இலக்கையும், கனவையும் நோக்கி பயணிக்கத் துவங்கி விடுவாள். இவளை 'படி' என்று அப்பாவோ, அம்மாவோ சொல்ல வேண்டிய தேவையே ஏற்படவில்லை. கிடைத்த நேரங்களை எல்லாம் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டாள்.
பொதுத்தேர்வுக்கு முந்தைய மூன்று மாதங்கள் மட்டும் ட்யூஷன் வைக்கலாம் என்று அந்தக் குடியிருப்பில் வசித்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் அம்மா இவளை அழைத்துச் சென்றாள். 'கடைசி நேரத்தில் எல்லாம் சேர்த்துக் கொள்ள முடியாது' என்று அந்த ஆசிரியை சொல்ல, 'நீங்க வேணும்னா இவளுக்கு டெஸ்ட் வெச்சுப் பாருங்க! நல்லா எழுதினா எடுத்துக்கோங்க!' என்று அம்மா திடமாகச் சொன்னார்.
ஆசிரியை டெஸ்ட்டும் வைத்தார். இவளை சேர்த்துக் கொண்டாரா??
உங்க செல்ல பொண்ணு நல்ல மார்க் எடுத்தா அவளுக்கு என்ன வாங்கித் தரப் போறேள்?? அம்மா அப்பாவிடம் கேட்ட கேள்வி இது.
அவளின் கனவுப் பாதை மாறியது எதனால்??
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
கனவும் பாதை என்ன என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குபதிலை அறிய ஆவலுடன் உள்ளேன்...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை பதிவும் நன்றாக உள்ளது. உங்கள் பதிவுகளையே கொஞ்ச நாட்களாக என் தளத்தில் காட்டவில்லை. உங்கள் தளத்திற்கும் எவ்வளவு முயற்சித்தும் வர இயலவில்லை.
தாங்கள் மறுபடியும் கொஞ்ச நாட்கள் கழித்து வந்து இப்படி பதிவுகளையும், தொடர் பதிவுகளையும் வழங்குவது மனதிற்கு மகிழ்வாக உள்ளது.
இன்றைய பதிவும் சுவாரஸ்யமாக இருந்தது. படிப்பில் படுசுட்டியாக இருந்து வரும் தங்களுக்கு பொது தேர்வு ஒன்றும் கடினமானதில்லையே... . சுலபமாகத்தானே இருந்திருக்கும்.
/ஆசிரியை டெஸ்ட்டும் வைத்தார். இவளை சேர்த்துக் கொண்டாரா?? / மேலும் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்க வளம்
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தொடரில் இப்போதுதான் டிவிஸ்ட்!
பதிலளிநீக்குஅடுத்து என்னாச்சு?
கீதா
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகனவுப் பாதை மாறிய காரணம் நீங்கள் ஒரு தடவை முன்பு கூறியிருந்தீர்கள் என நினைக்கிறேன்.