அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி..!
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
யாரிவள்! பகுதி அறுபது – அம்மாவின் பிடிவாதம்!
வாழ்க்கைப் பாதை நம்மால் வகுக்கப்பட்டது அல்ல! ஏற்றங்களும் இறக்கங்களும் கொண்ட அந்த பாதையில் பயணித்து அனுபவங்களை பெற வேண்டியது மட்டுமே நம் கடமை! ஒவ்வொருவரின் வாழ்விலும் கிடைக்கும் அனுபவங்களும் வேறுபட்டவை! இதை எப்படி கடந்து வருகிறோம் என்பதே இறைவன் நமக்கு தரும் சோதனை!
அப்பா இவளுக்கு நல்லதொரு வேலை கிடைக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அம்மாவோ இவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்! அம்மாவுக்கு உடல்நலக் குறைபாடு வந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இனி! எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று தான் இவள் நினைத்துக் கொண்டிருந்தாள்!
இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து எடுத்து வந்த மாத்திரைகளும், வருடத்துக்கு ஒருமுறை மருத்துவரிடம் செய்து கொண்ட பரிசோதனையும் அம்மாவை நலமோடு வைத்திருக்க உதவியது! ஆனால் ஏனோ சமீபகாலங்களில் அம்மா மிகவும் சோர்ந்து போயிருந்தாள்! மருத்துவரிடம் செல்லலாம் என்ற போதும் தவிர்த்து வந்தாள்!
அம்மாவின் ஒரே பிடிவாதம் இவளின் திருமணமாக இருந்தது! இவளின் எண்ணங்களோ தன் கனவுப் பாதையை நோக்கியே இருந்தது. தனக்கான அடையாளத்தை இன்னும் இவள் உருவாக்கிக் கொள்ளவில்லையே! தன்னுடைய துறை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பணியில் சேர்ந்து விடவே அவள் மனம் துடித்தது!
இதுவரை திருமணம் குறித்த எண்ணங்களோ, கனவுகளோ அவளுக்கு தோன்றியதே இல்லையே! படிப்பு, வேலை என்று மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தாள்! வீட்டு பொறுப்புகளும், வேலைகளும் சந்தர்ப்ப சூழலால் மிகச்சிறிய வயதிலேயே அவளுக்கு வந்து விட்டாலும் 'மனைவி' என்னும் பொறுப்பை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருந்தது!
இந்த சூழலில் தான் அவளுக்கு பணிபுரிந்த இடத்தில் ஒரு வாழ்நாள் நட்பும் கிடைத்தது. உரிமையாக பழகவும், சமயத்தில் உதவவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் அந்த நட்பு அப்போது அமைந்தது என்று சொல்லலாம்! வயது வித்தியாசம் இருந்தாலும் அக்கா, அண்ணா என்றே அழைத்தாலும் இவளுக்கு நெருங்கிய நட்பில் இணைந்தார்கள்.
அம்மா, அப்பா, தம்பி என அவளின் குடும்பத்தோடும் ஒன்றிப் பழகி உதவி செய்தார்கள். இவளின் திருமணத்திற்கு பிறகு அம்மாவையும் பார்த்துக் கொண்டார்கள்! இதுவே அவளுக்கு வாழ்நாளில் கிடைத்த பெரும் பலமாக கருதினாள்!
இவளின் வாழ்க்கைப் பாதை குறித்த சிந்தனையில் இறுதியில் அம்மா தான் தன் பிடியில் வெற்றி கண்டாள்! அதன் பின் இவளும் குடும்பச் சூழலை உணர்ந்து கொண்டதால் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டாள். இந்தப் பெண்ணும் இப்போது மணப்பெண் ஆனாள்!
இவளின் வாழ்வில் புதிதாக ஒரு மனிதர் இணைய இருக்கிறார்! இதுவரை இவளின் சிந்தனைகளுக்கு அவளே எஜமானியாக இருந்தாள்! இனி அப்படியிருக்க இயலுமா? அவர் எப்படிப்பட்டவர்? திருமணம் என்கிற பந்தத்தால் இவளின் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது? எதுவும் இவளுக்கு தெரியாது!!!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
முதல் பாரா படிக்கும்போதே தலை தானாய் ஆமோதிப்பாய் மேலும் கீழுமாய் அசைகிறது.
பதிலளிநீக்குமுதல் தொடரோடு இணையும் நேரம் இப்போது...தொடர்கிறேன்.
தொடர்கிறேன்
பதிலளிநீக்குநட்பு சிறப்பு...
பதிலளிநீக்குதிருமண பந்தம் வரை வந்தாச்சு தொடர்கிறேன்...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. நடுவில் அம்மா, அப்பா, தம்பி என அனைவருக்கும் ஏற்பட்ட சோதனையான துன்பங்களை கண்டு அதைக் கடந்து வெளிவந்த தங்களது மனதிடத்தையும், கடவுள் தங்களுக்கு அளித்த மன தைரியத்தையும் படித்துக் கொண்டேன். அவை மிகவும் சோதனையான காலகட்டங்கள். இப்போது அலுவலக நட்புறவுகள் நல்லபடியாக வாழ்வில் இணைந்து தங்களுக்கு உதவி வருகிறார்கள். அடுத்து வாழ்க்கைப் பந்தந்தில் இணையப்போகும் தங்களது அனுபவங்களை படிக்க ஆவலாக உள்ளேன். தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குநட்புகள் அருமை. அம்மாவின் கவலை தான் இருக்கும் போதே திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்பது. அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
காலத்தின் ஓட்டத்தில் அம்மாவின் பிடிவாதம் வெற்றி பெற்றது' இவளும் மணப் பெண்ணானாள் . '
பதிலளிநீக்கு'அவரும் நானும் ' தொடர் நினைவில்.
உங்கள் நட்புகள் உங்கலுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் திருமணத்திற்குப் பிறகும் அம்மாவைப் பார்த்துக் கொண்ட விஷயம் மிகவும் சிறப்பான விஷயம், ஆதி. இப்படியான நட்புகள் அமைவது என்பது அரிது.
பதிலளிநீக்குஅம்மா என்பவள் அப்படித்தான் பெரும்பாலும். தங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் போதே திருமணம் செய்து கொடுத்துப் பிரசவமும் பார்த்துவிடத் துடிக்கும் தான். ஒரு வகையில் அவரும் சரியே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் கனவு கண்டதும் தவறில்லை ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுதான் ஆம்...அதுதானே வாழ்க்கை..
நானும் அவரும் பகுதியில் இணையும் புள்ளி நெருங்கிவிட்டதே....
கீதா