புதன், 3 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி நான்கு – எதிர்பாராத சம்பவம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். இன்றைய நாள் கடினமாக இருக்கலாம். நாளைய நாள் மிகக் கடினமாக இருக்கலாம். ஆனால் நாளை மறுநாள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் விடியலாக இருக்கும் என்று நம்பிக்கை வையுங்கள். 

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி நான்கு எதிர்பாராத சம்பவம்!


 

இவள் வசித்த அரசுக் குடியிருப்பில் தனித்தனியே பால்கனி போன்று இல்லாததால் எல்லோருக்கும் பொதுவான இடத்தில் துவைத்த துணிகளை உலர்த்தியிருந்தாள். அன்றைய மதியப் பொழுதில் துணியெல்லாம் காய்ந்து விட்டதால் அதை எடுக்கப் போனவள் மின்சார வாரியத்திலிருந்து வந்த ஊழியர்கள் சொன்ன நிபந்தனையைக் கேட்டவுடன் அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருமே தேங்கி நின்றார்கள். 

 

மரத்தெல்லாம் வெட்டிட்டீங்கன்னா நா லைனை சரி பண்ணி விட்டுடறேன்! என்று அந்த ஊழியர் சொன்னதும்

 

'அப்பா! உனக்கு மரம் ஏறத் தெரியுமா??' என்று கேட்டாள்.

 

நான் வளர்ந்தது எல்லாம் கிராமத்துல தான்! ஆனா எனக்கு அதெல்லாம் ஏறத் தெரியாதுடா செல்லம்! என்று மழுப்பலான புன்னகையை சிந்திக் கொண்டே சொன்னார் அப்பா!

 

பதிலுக்கு இவளும் சிரித்துக் கொண்டே படியேறி முதல் தளத்தில் இருந்த அவர்கள் வீட்டுக்கு வந்த அடுத்த நொடி. 

 

அப்பா கீழே விழுந்து விட்டதாக எல்லோரும் அலற!! என்னாச்சு???

 

அம்மாவும் இவளும் பதறிக் கொண்டே கீழே சென்றார்கள். கான்க்ரீட் ப்ளாட்ஃபார்மில் விழுந்த நிலையில் தலையில் அடிபட்டு காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிய அப்பா கிடந்தார். சுற்றிலும் இருப்பவர்கள் சொல்லி தான் என்ன நிகழ்ந்ததென்று தெரிய வந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு மின்சாரம் இல்லாமல் இருப்பதென்று தானே செயலில் இறங்கியிருக்கிறார் அப்பா! 

 

அருகில் நின்றிருந்தவர்களிடம் அரிவாளை வாங்கிக் கொண்டு மரத்தில் ஏறி கிளைகளை வெட்ட முயன்ற போது கையிலிருந்த அரிவாள் நழுவி விழ, அப்பாவின் பின்னே ஏறியவரின் மேல் பட்டுவிட்டதோ என்ற பதட்டத்தில் அப்பா தன் பிடியை விட்டுவிட்டதால் மரத்திலிருந்து கான்க்ரீட் ப்ளாட்ஃபார்மில் விழுந்திருக்கிறார்!

 

அப்பாவின் வேஷ்டி, பனியன் என்று சகலமும் ரத்த வெள்ளமாக இருந்தது! எதிரே இருந்த போலீஸ் குவாட்டர்ஸில் உயரதிகாரியை ஜீப்பில் இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜீப் ஒருநிமிடம் நின்றது! 'சீக்கிரம் ஏத்துங்க! ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போகலாம்'' என்று அந்த டிரைவர் சொல்ல..

 

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவை தன் மடியில் கிடத்திக் கொண்டு அம்மா அந்த ஜீப்பில் கிளம்பினார். அருகில் இருந்த அந்த பிரபலமான ஆஸ்பத்திரிக்கு போகலாமா! என ட்ரைவர் கேட்க, 'என்னிடம் பெட்டி பெட்டியா பணமெல்லாம் இல்லப்பா! இவர் அரசு ஊழியர் தான்! அரசு மருத்துவமனையிலேயே வெச்சு பார்த்துக்கறேன்! அங்கே போப்பா! என்று அம்மா சொன்னார். அப்போது அம்மா தன் ரவிக்கையின் உள்ளே வைத்திருந்த பர்ஸில் இருந்தது ரூ 2 மட்டுமே!

 

அன்றைய பொழுதில் அவர்கள் எல்லோருக்குமே மனது முழுவதும் பயமும், பதட்டமும் கவ்விக் கொள்ள அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத நிலை!! விழுந்த வேகத்திலேயே அப்பா தன் சுயநினைவை இழந்திருந்தார். அப்பா மீண்டு வரணுமே என்ற பிரார்த்தனை தான் மனது முழுவதும் வியாப்பித்திருந்தது!

 

இன்னும் என்னென்ன நிகழ்வுகளை இவள் சந்திக்க வேண்டியிருந்தது!!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. தொடரும் சோதனைகளும், பதட்டமும்..

    பதிலளிநீக்கு
  2. சோதனையான காலக்கட்டங்கள்...
    நலமே விளையும்.

    பதிலளிநீக்கு
  3. இப்படியாகிவிட்டதே மிகுந்த கவலைதரும் சம்பவம்.

    பதிலளிநீக்கு
  4. முகநுலில் படித்து விட்டேன். அந்த காலக் கட்டத்தை கடந்து வந்தது இறைவன் கருணை.

    பதிலளிநீக்கு
  5. ஓ கடவுளே! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி அப்பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

    நேற்றைய கருத்தில் சொல்லியிருந்தது போல ஊழியர்கள் உங்களையே வெட்டச் சொல்லியிருக்காங்க பாருங்க. இதையும் கடந்து வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....