ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி எட்டு – விதி வலியது!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி எட்டு விதி வலியது!


 

சுட்டிப்பெண்ணாக இருந்த போது ஆறாம் வகுப்பில் பள்ளியில் மூக்குத்தி உடைந்த கதையைச் சொன்ன நினைவிருக்கிறதா! அதன் பிறகு அம்மா எவ்வளவோ முறை சொல்லியும் மீண்டும் குத்திக் கொள்ள மறுத்து விட்டாள். 'மூக்கணாங்கயிறு' போட்டா தான்  சரி வரும்! என்று அப்பா அடிக்கடி சொல்வார்! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அப்பா மேல் கோபமாக வரும்!

 

இப்படியிருக்க எதிர் ப்ளாக்கில் இருந்த சின்னஞ்சிறிய குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது. அந்தக் குழந்தை பெரும்பாலும் இவர்கள் வீட்டில் தான் இருக்கும். அவர்கள் வீட்டு நிகழ்வுக்கு எல்லோருமாகச் சென்றிருந்தார்கள். அந்தக் குழந்தையின் காது குத்தும் வைபவம் முடிந்ததும் இவளுக்கே தெரியாமல் அம்மா தான் கொண்டு வந்திருந்த மூக்குத்தியைக் கொடுத்து குத்தி விடச் சொல்லி விட்டாள்! விதி வலியது!!

 

ஒருபுறம் அந்தக் குழந்தை அழுது கொண்டிருக்க, இன்னொரு புறம் இவள் வந்த அழுகையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்! இந்த மாட்டுக்கும் இப்போது  மூக்கணாங்கயிறு போட்டாச்சு! இப்போது குத்தாமல் விட்டாலும் திருமணத்திற்கு முன்பு குத்தி விடணுமாம்! ஆனால் அப்போது முத்தி விட்டால் கடினமாம்! 

 

ஆக! எதை நோக்கிச் செல்கிறது இவளது வாழ்க்கை! அந்த ஒன்றே ஒன்று தான் வாழ்வின் இலக்கா! அதற்காக தான் இந்த தயார்படுத்தலா! என்று பலவாறாக சிந்தித்தாள். இல்லவே இல்லை! என்னுடைய இலக்கு வேறாயிற்றே! நான் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன். 

 

இந்த மூன்றாண்டுகளை முடித்து விட்டால் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளலாம்! பின்பு வேலை பார்த்துக் கொண்டே பார்ட் டைம் பி பண்ணலாம். எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! அவளின் கனவில் தெரிந்த பெண் உருவத்தை நினைத்து பார்த்துக் கொண்டாள். ஏறக்குறைய இவளும் அப்படித்தான் இருந்தாள். ஆம்! இப்போது இவள் புடவையும் உடுத்திக் கொள்ள துவங்கி விட்டாள்!

 

இயந்திரவியல் துறை என்பதால் பணிமனைக்குச் செல்ல வேண்டும். பாவாடை தாவணியோ புடவையோ அதற்கேற்ற உடை அல்ல! சுடிதார், கட் ஷூ, தலையில் கொண்டை என்று தான் அங்கு செல்ல வேண்டிருக்கும்! கல்லூரி நாட்களில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே புடவை உடுத்தி சென்றிருப்பாள். மற்றபடி பண்டிகை மற்றும் குடும்ப விழாக்களுக்கு தாவணியோ, புடவையோ உடுத்தத் துவங்கினாள்!

 

அடக்கமான, எளிமையான பெண்ணாக தான் வளர்ந்திருந்தாள். வாழ்வில் இதுவரை சந்தித்த தருணங்களும் கடந்து வந்த பாதையும் அவளை பொறுப்பான பெண்ணாக மாற்றியிருந்தது. குழந்தைத்தனத்தை விட்டுவிட்டு பெரிய மனுஷியாக தன்னை உணர்ந்தாள். அவளின் கனவுகள் பலிக்கணும்! அவளுக்கான பாதையும் தெரியணும்!

 

இன்னும் என்னென்ன அனுபவங்களை அவள் கடந்தாள்! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. தங்களது எண்ணம் சிறப்பாக நிறைவேறியதா ? தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. "இதை நோக்கிதான் வாழ்க்கையா?" என்கிற ஆரம்ப கால கேள்வி நல்ல வாழ்க்கை அமைந்தபின் மறைந்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
  3. பொறுப்பான பெண் மனம் கவர்கிறாள்.

    பதிலளிநீக்கு
  4. ஆக! எதை நோக்கிச் செல்கிறது இவளது வாழ்க்கை! அந்த ஒன்றே ஒன்று தான் வாழ்வின் இலக்கா! அதற்காக தான் இந்த தயார்படுத்தலா! என்று பலவாறாக சிந்தித்தாள். //

    ஆதி! அந்த வயதில் எனக்கும் வந்தது.

    ஆமா இதேதான் எனக்கும் இருந்தது. என் இலக்கு நிறைவேறாமல் அதற்கு இப்பவும் அவ்வப்போது வருத்தம் வரத்தான் செய்கிறது.

    நீங்கள் பொறுப்பான பெண்ணாக வளர்ந்து வந்தது இப்போதும் உதவுகிறது இல்லையா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பெரிய மனுஷியின் பாதை
    ........தொடர்கிறேன் .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....