புதன், 10 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி ஒன்று – புதிய பரிமாணம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நடக்கும் முன் நல்லதே நடக்கும் என நினைப்போம் நடந்த பின்னர் நல்லதே நடந்தது என்று நினைப்போம்

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! 

 

யாரிவள்! பகுதி அறுபத்தி ஒன்று புதிய பரிமாணம்!


 

குடும்பத்தில் மூத்தவளாக பிறந்து பொறுப்புகளும் தானாகவே வந்து விட்ட இவளின் திருமணம் என்றால் இவளால் சும்மா இருந்து விடத் தோணுமா! அப்பாவும், அம்மாவும், நெருங்கிய உறவுகளும், நட்பும் என எல்லோரின் அறிவுரைகளையும், உதவிகளையும் கருத்தில் கொண்டு செயலில் இறங்கினாள்! அம்மாவின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது!

 

பெண் பார்க்கும் வைபவமும், அடுத்து மாப்பிள்ளை வீட்டில் நிச்சயதார்த்தமும் ஆயிற்று! குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்வதாக உறுதியாச்சு! அடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யணுமே என்று ஒரு டைரியை எடுத்து எழுதத் துவங்கினாள்! என்னென்ன ஏற்பாடுகள் செய்யணும்! அப்பாவின் சேமிப்பு என்ன! அம்மாவின் சேமிப்பு என்ன! என்றெல்லாம் கேட்டுக் கொண்டாள்!

 

இன்னும் மண்டப ஏற்பாடு! சமையல் காண்ட்ராக்ட்! வாங்க வேண்டிய பொருட்கள்! துணிமணிகள்! திருமணத்திற்கு எத்தனை பேர் வரலாம்! அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு! ஃபோட்டோகிராஃபர்! பத்திரிக்கை அச்சடித்தல்! ஏற்பாடு செய்ய வேண்டிய தொகை! என்று அனைத்தும் எழுதத் துவங்கினாள்! 

 

பெண் பார்த்து முடித்த நாளிலிருந்து திருமணம் வரை செய்த ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு எழுதி வைத்து அவ்வப்போது இருப்பை சரி பார்த்துக் கொண்டாள்! அப்பாவும் அம்மாவும் இவளின் பொறுப்பில் அனைத்தையும் ஒப்படைத்ததால் சற்றே பலமுடன் காணப்பட்டார்கள். இவளும் அவர்கள் இருவரும் துணையாயிருக்க துணிவுடன் செயல்படலானாள்!

 

எல்லா ஏற்பாடுகளும் சரிவர செய்த பின் குறிப்பிட்ட நாளும் அருகே வந்தது! திருமண மண்டபத்திற்கு செல்லும் போது எடுத்துக் கொள்ள வேண்டிய பெட்டிகளும், பொருட்களும் என்னென்ன! அங்கேயிருந்து இவள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டிகள்! என சகலத்திற்கும் நம்பர் போட்டு வைத்து வேனில் ஏற்றி சரி பார்த்துக் கொண்டாள்! அங்கு சென்று எல்லாவற்றையும் அடுக்கி வைத்து பொறுப்புகளை உறவுகளிடம் ஒப்படைத்த பின் தான் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்!

 

இப்படியாக ஒரு சுபயோக சுபதினத்தில் உற்றாரும் சுற்றத்தாரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க  அப்பாவின் மடியில் அமர்ந்து கணவனின் கையால் தாலி கட்டிக் கொண்டு அவரின் மனைவியாக பரிமாணம் கொள்ளத் துவங்கினாள். இந்த தருணத்திலிருந்து இவளின் வாழ்க்கைப் பாதை வேறு ஒரு கோணத்தில் திரும்பி விட்டது!

 

இனி! அந்தப் பாதையில் உள்ள ஏற்றங்களோ, இறக்கங்களோ, கரடுமுரடான பாதைகளோ எதுவாக இருந்தாலும் அவளே தான் அதை கையாள வேண்டும். புதிதாக இணைந்திருக்கும் இந்த மனிதரை பற்றி முதலில் புரிந்து கொள்ளணும்! பார்க்க நல்ல உயரமாகவும், அடர்வான சுருளான தலைமுடியும், கனத்த மீசையுமாக இருக்கிறார்!

 

இவரிடத்தில் அதிகார தோரணையும் தெரிகிறது! என்னை மிரட்டி உட்கார வைத்து விடுவாரோ! மனைவி என்பவளுக்கு மதிப்பு கொடுப்பாரா! இவருடன் தான் என் வாழ்க்கை இனி பயணம் செய்யப் போகிறது! வாழ்க்கை மட்டுமல்ல நானும் நெடுந்தொலைவு பயணம் செய்யப் போகிறேன்! என பலவாறு சிந்திக்கத் துவங்கினாள்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

 1. தானே எல்லாவற்றையும் திட்டமிட்டு நடத்திக் கொண்டது பிரமிப்பு, வியப்பு.  அப்பா அம்மாவுக்கு வாய்த்த பொறுப்பான பொண்ணு இப்போது ஒரு பொறுப்பான மனைவி.  வாழ்த்துகள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. திருமணம் வரை சுபமாக நிகழ்ந்து விட்டது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. வாசகம் அருமை.
  பகிர்வு அருமை.
  நல்லதே நடந்தது மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆதி அருமை. நீங்களே உங்கள் திருமணத்திற்குப் பொறுப்பாக எல்லாம் செய்தது....பாராட்டுகள்!

  அப்படியே டிட்டோ, என் திருமணத்தின் போது பொறுப்புகள் எடுத்துக் கொண்டு, சமையல் கான்ட்ராக்ட் இல்லை அப்போது, கடைசி நிமிடம் வரை சொன்ன அளவு அரிசி வராமல் அதற்குக் கடைக்காரரிடம் சென்றது, அதன் பின் மண்டபத்திற்கு அருகில் இருந்த தோழி வீட்டிலிருந்து பெஞ்ச் எடுத்துக் கொண்டு வருவது என்று கடைசி நிமிட எதிர்பாரா வேலைகள் என்று அரக்கப்பரக்க ஓடி எல்லாம் நினைத்துப் பார்க்க ....எப்படி இருந்த நான் இப்படி என்று விவேக் டயாக்குடன் ஓடுகிறது இப்போது!!!! ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. பொறுப்பான பெண்ணாக அப்பா அம்மாவுக்கு உதவியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....