வியாழன், 11 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி இரண்டு – மனதில் ஒருவித பயம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கை என்பது நாம் போட்டுவைத்த ப்ளூ ப்ரிண்ட் படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், எல்லா வகையான திருப்பங்களுக்கும் தயாராக இருங்கள்.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி அறுபத்தி இரண்டு மனதில் ஒருவித பயம்!


 

இவளுக்கு இந்தியத் தலைநகரில் தான் தலையெழுத்து முடிவாகி இருந்தது! ஆம்! திருமணத்திற்குப் பிறகு அவள் செல்ல வேண்டிய இடம் டெல்லி! கணவனுக்கு அங்கு தான் மத்திய அரசில் பணி! தமிழகத்துக்குள்ளேயே அதுவும் பெரும்பாலும் கோவையிலேயே வசித்த பெண்ணான இவள் இனி நெடுந்தொலைவு பயணிக்கணும்!

 

அப்பா சுற்றுலாத் தலங்களை விட கோவில்களுக்கு தான் அழைத்துச் செல்வார். சிதம்பரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருப்பதி, காளஹஸ்தி இப்படி! கோவைக்கு அடுத்துள்ள ஊட்டிக்கே அப்பா இவர்களை அழைத்துச் சென்றதில்லை! 12ரூ டிக்கெட்! ஒருநாளாவது அழைச்சிண்டு போனாரா இந்த மனுஷன்! என்று அம்மா அப்பாவை குற்றம் சொல்வாள்!

 

வாஸ்தவம் தான்! இவள் ஒன்றாம் வகுப்பில் பள்ளிச் சுற்றுலாவில் ஊட்டிக்கு சென்று வந்தாள் என்றால் தம்பி அவன் கல்லூரி பருவத்தில்! அப்பா தன் அலுவலக ட்ரெய்னிங்கில் சென்று வந்தார்! பாவம்! அம்மா தான் அங்கு சென்றதே இல்லை! அம்மா எதற்கும் கொடுத்து வைக்காத மனுஷி! சேர்ந்தாற் போன்று பத்தாயிரம் ரூபாயைக் கூட அவள் வைத்திருந்ததில்லை!

 

இப்படியிருக்க திருமணத்தின் மறுநாள் முதலில் புகுந்த வீடான திருச்சிக்கு இவள் கிளம்பணும்! பின் பத்து நாட்கள் கழித்து அங்கிருந்து தனிக் குடித்தனம் செய்ய டெல்லிக்கு கிளம்பணும்! மனதுக்குள் பலவிதமான சிந்தனைகளும், கனவுகளும் கூடவே பயமும்!! எல்லோரும் புதிய மனிதர்கள்! அவர்களிடம் பழகி ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ள வேண்டும்!

 

புகுந்த வீட்டுக்கு கிளம்பும் போது பணப் பொறுப்பை ஒப்படைத்திருந்த மாமா இவளை தனியே அழைத்து திருமணத்தில் வந்த அன்பளிப்புகளைப் பற்றியும் தற்சமயம் இருப்பு இவ்வளவு இருப்பதாகவும் கணக்கு வழக்குகளைச் சொல்லவும், 'அப்பாவை முதலில் இந்த தொகையை குடுத்துடச் சொல்லிடுங்கோ! மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்!' என விவரங்களைச் சொன்னாள்.

 

அப்படியே! தனக்காக 1000 ரூபாயை தருமாறும் அதை கணக்கெழுதிக் கொள்ளுமாறும் வாங்கி தன் கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள்! இதுவரை தனக்காக தனியே எந்த பணமும் அவள் வைத்துக் கொள்ளவில்லை! சம்பாதித்த பணமும் அவளின் சேமிப்புகளும் குடும்பத்துக்காகவும், திருமணத்திற்காகவும் என செலவு செய்தாயிற்று! 

 

கணவன் அருகில் இருக்கும் போது தனியே எதற்காக பணம் கேட்கிறாள்!! டெல்லியிலிருந்து ஊருக்கு வர 3rd sleeper டிக்கெட் எவ்வளவு என விசாரித்து வைத்திருந்தாள்! மனதில் பல குழப்பங்களும், பயமும்! நாளை ஒரு பிரச்சினை என்றால் டிக்கெட் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடலாம் அல்லவா! இல்லையென்றால் வழியில் அவளே தொலைந்து விட்டால் என்ன செய்வது!! என பலவாறு மனது கணக்கு போட்டது!!

 

சிறிய வயது தான் என்றாலும் இப்படியெல்லாம் அவள் யோசிக்க அவள் வாழ்வில் இதுவரை சந்தித்த சவால்களும், கடந்து வந்த அனுபவங்களும், பொறுப்புகளும்  தான் காரணமாக இருந்தது! வாழ்வு அவளுக்கு கற்றுக் கொடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும் என்று கூட இதைச் சொல்லலாம்! 

 

இனி வரும் வாழ்வை எப்படி சந்திக்கப் போகிறாள்? அந்த பணத்திற்கான தேவை அதன் பின்பு ஏற்பட்டதா? கணவனோடு புரிதல் உண்டானதா? தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

11 கருத்துகள்:

  1. இருந்தாலும் டெல்லியிலிருந்து வருவதற்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்து வைத்தது ஓவர்தான். ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் ரூபாய் தான் எடுத்துக் கொண்டேன் சார். டெல்லிக்கு ஸ்லீப்பர் டிக்கெட் அப்போது 538ரூ.. அதனால் தான் 1000 ரூபாய்... அப்போது நானும் பத்தாயிரம் ரூபாயை முழுதாக பார்த்ததில்லை.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  2. உண்மையில் அந்த ஜாக்கிரதை உணர்ச்சி எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலுக்கு நன்றிகள் சார். அப்போது அந்த எண்ணம் தான் இருந்தது.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பல அவசியமான எண்ணங்களையும் சிந்தித்து உள்ளீர்கள்... ஆனால் அவை தேவையில்லை - காரணம் தல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தல'யை பற்றி அப்போது எனக்குத் தெரியாததால் இந்த எண்ணம் உண்டானது. பின்பு இந்த பயம் தேவையில்லை என்பது புரிந்தது.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. பதில்கள்
    1. உண்மை தான் ஐயா. புரிதலுக்கு பின் பயம் தேவையற்றது என்பது தெரிந்தது.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. தில்லி ராஜாவுடன் ஆன வாழ்க்கை தொடங்குகிறது! அது சரி அவரோடு திருமணத்திற்கு முன்பு பேசியும், நிச்சயதார்த்தம் பற்றி எல்லாம் எழுதியிருந்தீங்களே அதிலும் தில்லி ராஜா பத்தி வருமே... அவரும் நானும் தொடரில்!

    அப்படியும் கொஞ்சம் பயம் இருந்ததோ?!!!!! ஹாஹாஹா.... ஓகே ஓகே....பயத்தை விடுங்கள் கையில் ரூபாய் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம். எப்போதுமே....இப்படி நான் சொல்வேனே தவிர, எங்கள் வீட்டு நிதி மந்திரி நான் இல்லையாக்கும்!!!!! கையில் பைசா வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் அனுபவம் திருமணமான புதிதில்...

    கிட்டத்தட்ட நிறைய உங்கள் அனுபவங்கள் என் அனுபவங்களை நினைவுபடுத்துகிறது, ஆதி!

    வாசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் தொடரை அங்கும் வாசித்துவிடுகிறேன். இதன் பிற்பகுதியும் வாசித்துவிட்டேன் அங்கு. உங்கள் திருமண வாழ்க்கையின் தொடக்கம். அனுபவங்கள். இனிதே தொடங்குகிறது இனிய வாழ்க்கை. திருமணம் ஆகும் போது பெண்ணிற்கே உரித்தான பயங்கள். அப்போதெல்லாம் இப்போது போன்று திருமணத்திற்கு முன்பு பழகும் வாய்ப்பு குறைவுதானே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. கணவனை புரிந்து கொள்ளமுன் , முன் யோசனை வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....