சனி, 6 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி ஏழு – அம்மா ஒரு தீர்க்கதரிசி!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி ஏழு அம்மா ஒரு தீர்க்கதரிசி!
 

"அப்புறம் போற இடத்துல மொத்து தான் வாங்குவ!"

 

அம்மா ஏதாவது வேலை சொல்லும் போது இவள் சுணங்கினால் அம்மா இப்படித்தான் சொல்வாள்.

 

அய்யய்ய! எப்பப் பாரு  உங்க அம்மா என்னடா இப்படிச் சொல்றா! என்று தம்பியிடம் வம்பிழுப்பாள்.

 

அதென்னடி! உங்கம்மா? ஏன் உனக்கும் அம்மா தானே!

 

நான் அப்பா செல்லம்! இல்லப்பா!

 

ஆமாண்டா செல்லம்! ஆனா அம்மா சொல்றத கேட்டுக்கணும்! நல்லதத் தானே சொல்றா! வேலைகள தெரிஞ்சு வெச்சுக்கணும்! என்பார் அப்பா.

 

ஏம்மா! போற இடம்! போற இடம்!னு சொல்றியே அது எவ்வளவு தூரம்:)

 

அது போக அங்க போயும் நான் இந்த வேலை தான் செய்வேனா! நான் நிறைய படிக்கணும்! வேலை பார்க்கணும்! சம்பாதிக்கணும்! என்ன பேக் பண்ணி அனுப்பலாம்னு பார்க்கிறியா:) 

 

நான் இங்கேயே தான் இருப்பேன்! உன்ன படுத்தத் தான் போறேன்..🙂 என்று அம்மாவிடம் வம்பிழுப்பாள்!

 

பார்க்கலாம்! பார்க்கலாம்! என்று சிரித்துக் கொள்வாள் அம்மா.

 

இவள் அப்பாவுக்கு செல்லம் மட்டுமல்ல! அப்பாவின் சாயல் மற்றும் குணாதிசயங்களும் கொண்டவள்! அப்பா மென்மையானவர்! சட்டென கலங்கி விடுவார்! குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ அவருக்குத் தெரியாது! மிகவும் பொறுமையிழந்ததால் இருமுறை தலையில் குட்டு வாங்கியிருக்கிறாள்! அது தான் அப்பாவை பொறுத்தவரை மிகப்பெரிய தண்டனை! 

 

பேருந்து பயணத்தில் பஸ் டிக்கட்டை கசக்கி வைத்துக் கொள்ளாமல் அதை மெலிதாக மடித்து வாட்ச்சில் சொருகிக் கொள்வது முதல் எதையும் நேர்த்தியாக செய்யணும் என்று நினைப்பார் அப்பா. இது இந்த இடத்தில் தான் இருக்கணும்! இப்படித்தான் மடிக்கணும்! என்று தனக்கான நியதிகளை வகுத்துக் கொண்டு அதை தன் வாழ்நாளில் பின்பற்றுபவர்!

 

அம்மா மிகவும் தைரியசாலி! எதற்கும் கலங்க மாட்டாள்! குழந்தைகள் விஷயத்தில் முதலில் கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்து விட்டு தான் என்ன நடந்ததென்றே கேட்பாள்! தம்பி அம்மாவைப் போல தான் வளர்ந்தான்! அம்மாவின் குணாதிசயங்கள் அவனுக்கு இருந்தன.

 

கல்லூரியில் சேர்ந்து விட்ட அவனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு பேப்பரும், பாலும் போடும் வேலையில் சேர்த்து விட்டாள். கல்லூரிக்கு பேருந்தில் சென்று வர ஆகும் செலவுக்கு அந்த ஊதியத்தை வைத்துக் கொள்ளச் சொன்னாள்! அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் ஏஜெண்ட்டிடம் செல்ல வேண்டும்!

 

இப்படியாக வாழ்க்கைப் பாடங்களை அம்மாவிடமும் அப்பாவிடமும் கற்றுக் கொண்டு வந்தாள். உடல்நலக் குறைபாடு வந்த பின்னும் அம்மா தன் உழைப்பை நிறுத்தவில்லை. குடும்பத்துக்கான வருவாயை ஈட்டிக் கொண்டு தான் இருந்தாள். உழைப்பின் அருமையை உணர வைக்க இவர்களையும் அதில் ஈடுபடுத்தினாள்.

 

இப்போது இவளின் வயது 16! இன்னும் நான்கே வருடங்களில் இவளுக்கு திருமணம்  நிகழப் போகிறது என்று யாராவது சொன்னால் நிச்சயம்  சிரித்து விடுவாள்!! ஆனால்! அம்மா ஒரு தீர்க்கதரிசி! என்று அவளுக்கு தான் அப்போது தெரியவில்லை!!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

 1. வாழ்க்கைப் பாடங்களை அழகாக கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்.

  பதிலளிநீக்கு
 2. //பேருந்து பயணத்தில் பஸ் டிக்கட்டை கசக்கி வைத்துக் கொள்ளாமல் அதை மெலிதாக மடித்து வைத்துக் கொள்வது//

  நானும் இப்படித்தான்...

  பதிலளிநீக்கு
 3. அருமையான நினைவுகள்.
  வாழ்க்கை பாடத்தை அருமையாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பாடங்கள். நல்ல வழி நடத்தல். இவை கடைசி வரை துணை நிற்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. பொறுப்பான பிள்ளைகளாக வர பழக்கி உள்ளார்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....